Read in : English
சென்னையில் 1976ஆம் ஆண்டில் ஏற்பட்ட பெருவெள்ளத்தை அடுத்து, சென்னையில் வெள்ளத்தைத் தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளராக இருந்தவரும் அண்ணா பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தருமான பி. சிவலிங்கம் தமிழக அரசிடம் ஓர் அறிக்கை சமர்ப்பித்தார்.
ஆனால், 45 ஆண்டுகளுக்கு முன் சமர்ப்பிக்கப்பட்ட அந்த அறிக்கை பொதுவெளியில் இதுவரை வெளியிடப்படவில்லை.
சென்னையில் வெள்ளம் வந்ததற்கான காரணங்கள், எதிர்காலத்தில் வெள்ளம் வந்தால் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து சிவலிங்கம் 1976இல் அளித்த பரிந்துரைகள் இதுவரை வெளியிடப்படாமல் இருப்பது குறித்து 2015ஆம் ஆண்டு சென்னைப் பெருவெள்ளத்தையொட்டி ஒரு நேர்காணலில் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும (சிஎம்டிஏ) முன்னாள் சீப் பிளானர் என்.வி. ரகுநாத் கூறியுள்ளார்.
இதை நினைவுகூர்ந்த மருத்துவர் வீ. புகழேந்தி, அந்தக் கமிட்டியின் அறிக்கையை வெளியிட்டு அதில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
மத்திய தண்ணீர் ஆணையத்தின் 1975ஆம் ஆண்டு விதிமுறைகளின்படி ஆறுகளில் வெள்ளம் வந்தால் எந்தப் பகுதிகள் வரை அது பரவக்கூடும் என்பது குறித்து ஆராய்ந்து வரைபடத்தைத் தயாரிக்க வேண்டியது அவசியம். சென்னை மாஸ்டர் பிளான்-3இல் இதுகுறித்து சேர்க்க நடவடிக்கை வேண்டும்.
மத்திய தண்ணீர் ஆணையத்தின் 1975ஆம் ஆண்டு விதிமுறைகளின்படி ஆறுகளில் வெள்ளம் வந்தால் எந்தப் பகுதிகள் வரை அது பரவக்கூடும் என்பது குறித்து ஆராய்ந்து வரைபடத்தைத் தயாரிக்க வேண்டியது அவசியம்.
அப்போதுதான் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை முன்னதாகத் திட்டமிட்டு மேற்கொண்டு இழப்புகளைத் தடுக்க முடியும்” என்கிறார். “1970ஆம் ஆண்டில் சென்னையில் இருந்த நீர்நிலைகள் 650லிருது 35 ஆகக் குறைந்துவிட்டது. அதனால், தண்ணீர் சேகரிப்புக்கான இடங்கள் குறைந்துவிட்டன என்பதை ஐஐடி ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
சென்னை நகரில் பல இடங்களில் இருந்த ஏரிகளும் குளங்களும் தற்போது காணாமல் போய்விட்டன. பக்கிங்ஹாம் கால்வாய் பகுதியில்தான் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.அதனால் கால்வாயின் அகலம் மிகவும் குறைந்துவிட்டது.
1970ஆம் ஆண்டில் சென்னையில் இருந்த நீர்நிலைகள் 650லிருது 35 ஆகக் குறைந்துவிட்டது. அதனால், தண்ணீர் சேகரிப்புக்கான இடங்கள் குறைந்துவிட்டன என்பதை ஐஐடி ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது
தற்போதுள்ள நீர் வழித்தடங்களிலும் நீர்வழித் தடங்களைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நடைபெறும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு உறுதியான நடவடிக்கைகள் தேவை. அத்துடன் மழை நீர் கால்வாய்கள் பராமரிப்பு குறித்தும், அதிகத் தண்ணீரை ஏரிகளைத் தூர்வாருவதுடன் அதைப் பராமரிப்பது குறித்தும் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்கிறார்.
“நிலப்பரப்பு குறைவான ஜப்பானில் உள்ள டோக்கியோவில் சாலைகளின் கீழ்ப்புறம் நீர்தேக்கத் தொட்டிகளை அமைத்து, அந்தத் தண்ணீரைச் சேகரித்துப் பயன்படுத்துவதற்காக நீர்தேக்கங்களுக்குக் கொண்டு செல்கிறார்கள். நிபுணர்கள் கூறும் இதுபோன்ற முறைகளை இங்கும் செயல்படுத்துவது குறித்து ஆராயலாம்” என்கிறார்.
“வளிமண்ட சுழற்சியில் இருப்பிடம், நகரும் திசை மற்றும் மேலடுக்கு சுழற்சியைத் துல்லியமாகக் கணிக்க உதவும் ரேடியோசேன்ட் (Radisonde) கருவி மூலம் சாத்தியம். ஆனால் அந்தக் கருவி கடந்த ஆறுமாதங்களாக சென்னையில் செயல்படவில்லை.
எனவே சென்னையில் கடந்த சனிக்கிழமை இரவும் ஞாயிற்றுக்கிழமை காலையிலும் பெய்த கனமழையை இந்திய வானிலை கழகத்தால் சரியாகக் கணிக்க முடியாமல் போனது என்று சம்பந்தப்பட்ட வானிலைத் துறை அதிகாரியே கூறியிருக்கிறார்.
இந்த ரேடியோசேன்ட் கருவியை சரிவர செயல்பட வைத்து பராமரிப்பதற்கும் உரிய நடவடிக்கை தேவை. மழை காலத்தில் மட்டும் பெருவெள்ளம் குறித்து சிந்திக்காமல், நிரந்தரத் தீர்வு காண்பதற்காத் திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளில் அரசு கவனம் செலுத்த வேண்டும்” என்கிறார் மருத்தவர் வீ. புகழேந்தி.
சென்னையில் அதிக மழை பெய்யும் என்பதற்கான ரெட் அலர்ட் விலக்கிக் கொள்ளப்பட்டாலும்கூட, சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ள குடியிருப்புகளிலும் உள்ள மழை நீர் எப்போது வடியும் என்று அப்பகுதி மக்கள் காத்திருக்கிறார்கள். 2015ஆம் ஆண்டைப்போல பெருமழையின் பாதிப்பு இந்த முறை அதிகமில்லை என்றாலும்கூட, வழக்கமாக மழை வெள்ளத்தின் பாதிப்பு ஏற்படக்கூடிய முக்கிய சாலைகளிலும் குடியிருப்புப் பகுதிகளிலும் தற்போதும் மழை தேங்கியுள்ளது.
எதிர்காலத்தில் பெருமழையின் பாதிப்புகளைத் தவிர்க்க உடனடித் திட்டங்களையும் தொலைநோக்குத் திட்டங்களையும் அரசு உருவாக்கி செயல்படுத்த வேண்டும். அதற்கு, அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தரராக இருந்த சிவலிங்கம் தமிழக அரசிடம் கொடுத்த அறிக்கை உதவியாக இருக்கும்.
Read in : English