Read in : English
மன்னார் வளைகுடா குறுக்கே அமைந்துள்ள மணிபல்லவம் என அப்போது அழைக்கப்பட்ட சிறிய தீவில் உணவு, தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக கடும் பஞ்சம் நிலவியதை குறித்து கவிஞர் சாத்தனார் இயற்றிய காவிய படைப்பான மணிமேகலையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பஞ்சத்தில் தவித்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவ தனது அட்சய பாத்திரத்தோடு அங்கு சென்றார் மணிமேகலை. அழகிய நடனக் கலைஞரான இவர் புத்த மதத்தை தழுவி கன்னியாஸ்திரி (தேர்வதா) ஆனார்.
இந்த காலகட்டத்தில் இது எவ்வாறு பொருந்தும்? இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பஞ்சத்தின் காரணம் குறித்து அதிகம் எழுதப்பட்டுவிட்டது. ஆனால் இந்தியாவுடன் தொப்பிள் கொடி உறவு உள்ள இந்த நாட்டிற்கு உதவ போதிய நுண்ணறிவு இல்லை.
இதற்கான காரணத்தை குறித்து ஆராயும் அதே நேரத்தில், வரலாற்று பண்டைய இலக்கியங்கள் இதற்கான நிரந்தர தீர்வை அளிப்பதோடு, செழிப்பையும் மீட்டெடுக்கவும் உதவுகிறது.
பிரச்சனையை அறிந்து கொள்ளவும், அதற்கான தீர்வை அளிப்பதோடு அல்லாமல் வருங்காலத்தில் இது போன்ற சூழலை தடுக்கவும் சாத்தனாரின் காவிய நூலான மணிமேகல பெரிதும் உதவும்.
பசியாற்ற உதவும் குணம் குறித்து தெய்வ உருவான தீவா திலகை மணிமேகலைக்கு விளக்கிய இரண்டு சொற்றடொர்கள் தற்போதைய சூழலுக்கு மிகவும் பொருந்தும். “ஆற்றுநர்க்கு அளிப்போர் அறவிலை பகர்வோர்” ; “உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரே”

கடந்த வாரம் பாராளுமன்றத்தில் நிதி அமைச்சர் பாசில் ராஜபக்சா நாட்டின் செலவு, வரவை விட மிக அதிகமாக உள்ளதாக கூறியுள்ளார். சுங்கம், கலால் மற்றும் உள்நாட்டு வருவாய் மூலம் இலங்கை தன் வருவாயை ஈட்டுகிறது.
அறவிலை பகர்வோர்?
அதிகரித்து வரும் அன்னிய கடன் காரணமாக இலங்கையின் அந்நிய செலவாணி இருப்பு படிப்படியாக குறைந்து வருவது தற்போதைய நெருக்கடிக்கு முக்கிய காரணம். அரசு தரவின் படி, ஜூலை 2019 கால முடிவில் அந்நிய இருப்பு USD 7.5 பில்லியலன் என்பதிலிருந்து USD 2.8 பில்லியனாக குறைந்துள்ளது. சீனாவின் “Belt and Road Initiative” கீழ் நடைபெறும் ஹம்பந்தோட்டா மல்டி மோடல் துறைமுக கட்டுமான பணி போன்ற கட்டமைப்பு பணிகளே இதற்கு காரணம் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். வட்டியுடன் கூடிய கடன் தற்போது USD4 பில்லியன் என்ற அளவில் எகிறியுள்ள நிலையில், உள்ளூர் வருமானமும் மோசமான நிலையில் உள்ளது. இது விவாதிக்கக் கூடியதாக இருந்தாலும், உணவு மற்றும் விவசாய பொருட்களை இறக்குமதி செய்ததற்கான கட்டணத்தை திரும்ப செலுத்தவே இவற்றை அந்நாடு பயன்படுத்தியுள்ளது என்பதே நிதர்சன உண்மை. கொள்கை திட்டமிடல் இல்லாதது, வெளிப்படைத்தன்மையற்றல் மற்றும் நிறுவன பலவீனம் ஆகியவை சீன முதலீடுகளை செயல்படாத சொத்துக்களாக மாற்றியுள்ளது.
இதற்கு முரணாக, Belt and Road Initiative (BRI) தனது செயல்பாடுகளுக்காக கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. எதுவாக இருந்தாலும், சீனாவுடனான வர்த்தகத்தில் நம்பகத்தன்மையை இது கேள்விக்குறியாக்குகிறது. தானியங்கள், மாவுச்சத்து, பாலாடைக்கட்டி, வெண்ணெய், சாக்லேட்டுகள், மொபைல் போன்கள், மின்விசிறிகள், டிவி, ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, பீர் மற்றும் ஒயின் போன்றவற்றை இறக்குமதி செய்ய பெரும்பாலான அந்நிய செலவாணி பயன்படுத்தப்படுகிறது. இது தவிர, பருப்பு வகைகள், சக்கரை, வெங்காயம், உருளை கிழங்கு, மசாலா பொருட்கள், சமையல் எண்ணை போன்ற அத்தியாவசிய பொருட்களை மாதந்தோறும் இறக்குமதி செய்ய USD100 மில்லியன் தேவைப்படுகிறது. உதாரணமாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தானியங்களுக்கு USD33.4 மில்லியனும், தாய்லேந்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சக்கரைக்கு USD35 மில்லியனும் வருடந்தோறும் இலங்கை செலவழிக்கிறது. கடந்த வாரம் பாராளுமன்றத்தில் நிதி அமைச்சர் பாசில் ராஜபக்சா நாட்டின் செலவு, வரவை விட மிக அதிகமாக உள்ளதாக கூறியுள்ளார். சுங்கம், கலால் மற்றும் உள்நாட்டு வருவாய் மூலம் இலங்கை தன் வருவாயை ஈட்டுகிறது.
இலங்கையில் நெற் களஞ்சியம் என கூறப்படும் கிழக்கு மாகாணம் போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும், விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய உற்பத்தி குறித்த சரியான கொள்கை இல்லாதது, உரங்கள் மற்றும் தொழிலாளர் பற்றாக்குறை அல்லது நகர்ப்புறம் மற்றும் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்தல் போன்ற காரணங்கள் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு இந்தியா ஆறுதல் அளிக்க முடியும்
ஒவ்வொரு நெருக்கடியும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது என்று கூற்று உள்ளது, ஆனால் புத்திசாலிகளால் மட்டுமே அதைப் பார்க்க முடியும். இந்த நெருக்கடி ராஜபக்சா குடும்ப அரசியல் செயல்பாடுகளுக்கு கண்திறப்பாக மட்டுமின்றி இலங்கை மக்களுக்கும் இரண்டு முக்கிய பாடத்தை அளித்துள்ளது. முதலாவதாக, நாட்டின் வர்த்தகர்கள் நல்லொழுக்கத்தில் இல்லை என்றால் அவர்களுடன் வியாபாரம் செய்வது பொருளாதார சரிவுக்கு வழிவகுக்கும். சீனாவுடனான வெளிப்பதன்மையற்ற BRI திட்டங்களை, வர்த்தக உறவை இலங்கை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
ஐரோப்பிய மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளை அதிகம் சார்ந்திருக்காமல், ஒழுக்கமான வர்த்தக நடைமுறையை கடைப்பிடிக்கும் இந்தியாவுடனான வர்த்தக உறவை சீரமைக்க வேண்டும்
இரண்டாவதாக, இந்தியப் பெருங்கடல் பிராந்திய நாடுகளுக்கிடையேயான துணை பிராந்திய வர்த்தக ஒத்துழைப்புக்கான மிகப்பெரிய சாத்தியம் உள்ளது. ஆனால், இந்தியா, இலங்கை, மாலத்தீவு ஆகியவற்றிற்க்கிடையே போதிய பிராந்திய இணைப்பு மற்றும் நம்பகத்தன்மை இல்லாததால், இது வரை அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை இந்தியா – இலங்கை நாடுகளுக்கிடையே வலுவான இணைப்பை உருவாக்க தமிழகம் முக்கிய பங்காற்ற முடியும், கொழும்பு மற்றும் சென்னை இடையே பிராந்திய இணைப்பை பலப்படுத்த தமிழக அரசு அனைத்து வழிவகைகளையும் ஆராய வேண்டும். போரினால் பாதிப்படைந்த மாகாணங்கள் புத்துயிர் பெற, சென்னை மற்றும் கொழும்பு வர்த்தக சம்மேளனம் இணைந்து இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து பன்முக இணைப்பை மேம்படுத்த முடியும்.
தமிழகம், புது தில்லி மற்றும் கொழும்புவிற்கு இந்த துணை பிராந்திய இணைப்பு, பெரும் நன்மையை பயக்கும். இந்திய-இலங்கை உறவை இது மேம்படுத்துவதோடடு, Act East கொள்கையை முன்னெடுத்து செல்லவும் இது உதவும் என்பதால், புது தில்லிக்கு இது நன்மையை உண்டாக்கும். விவசாயம் சார்ந்த தொழில்களில் சீரான முதலீடுகளை இந்த இணைப்பின் மூலம் கொழும்பு பெற முடியும் என்பதால், உள்ளூர் வர்த்தக வருவாயை இது நிலையாக்கும். 2009 ஆண்டு மத்திய அரசில் திமுக அங்கம் வகித்த போதிலும், போரை தடுக்க முடியாமல், தமிழர்களுக்கு அநீதி இழைத்து விட்டதாக அவர்கள் மீது உள்ள குற்றச்சாட்டை மு.க.ஸ்டலின் தலைமையிலான திமுக அரசு சரி செய்துக்கொள்ள முடியும். இது போக, சென்னையை தெற்காசியாவின் ஷாங்காய் நகரமாக மாற்ற முடியும். புது தில்லி, சென்னை மற்றும் கொழும்புவில் அரசியல் ரீதியாக இதற்கு விருப்பம் உள்ளதால், இது எளிதாக சாத்தியமாகும்.
டாக்டர் ஜே.ஜெகநாதன் – ஜம்மு, ஜம்மு & காஷ்மீர், மத்திய பல்கலைக்கழகத்தில் தேசிய பாதுகாப்பு ஆய்வுகளின் மூத்த உதவிப் பேராசிரியர் ஆவார். (வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் அவரது தனிப்பட்ட கருத்தாகும்)
Read in : English