Read in : English
இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டுமென்றால் இந்தக் கேள்வியால ஏற்படும் குழப்பம் எதனால் என்பதற்குப் பதில் சொல்லவ் வேண்டும். பிரிட்டிஷ் அரசால் ஏற்பட்ட மரபு சிந்தனை, நமது கல்வி முறை, இந்திய பாரம்பரியம், பண்பாட்டு வேர்கள் குறித்த புரிதல் இல்லாமை, வரலாற்று உண்மைகளுக்கு தவறான விளக்கம், உண்மைகளைத் தவறாகக் கையாள்வது ஆகியவற்றால் தமிழ் சமூகம் குறித்த உண்மைகளைப் பற்றிய குழ்பபங்கள் ஏற்பட்டுள்ளது.
ஆறு குருடர்கள் சேர்ந்து யானையைப் பார்த்த கதைபோல் இருக்கிறது. முத்ல் குருடன் யானையின் பக்கவாட்டைத் தடவிப் பார்த்தான். அது வழவழப்பாகவும் கெட்டியாகவும் சுவர் போல் தோன்றியது.
இரண்டாவது குருடன் துதிக்கையைத் தொட்டுப்பார்த்துவிட்டு அது பெரிய பாம்பைப் போல் இருக்கிறது என்றான். மூன்றாமவன் யானையின் தந்தத்தைத் தொட்டுப்பார்த்துவிட்டு ஈட்டி என்று நினைத்தான்.
இந்து மதம் பற்றிய கருத்துருவாக்கம் இந்த மண்ணைப் பற்றிய உண்மையான வரலாறு, பாரம்பர்யம், ஆன்மீகம் குறித்த ஆழ்ந்த அறிவு இலலாதவர்களால் தவறாக விளக்கப்படுகிறது.
அறிவு. பகுத்தறிவு, நாத்திகம் ஆகிய கருத்துகளே சனாதன தர்மத்தின் ஒருங்கிணைந்த பகுதி என்பதையும் சௌகரியம் கருதியோ வேறு தெரியாத காரணங்களாலோ அதற்கு இந்து மதம் என்று மறுபெயர் வைக்கப்பட்டுள்ளது என்பதையும் அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. சனாதனம் என்பது ஒரு மதமல்ல: அது மனிதர்களின் வாழ்க்கை முறையே.
இந்து மதம் பற்றிய கருத்துருவாக்கம் இந்த மண்ணைப் பற்றிய உண்மையான வரலாறு, பாரம்பர்யம், ஆன்மீகம் குறித்த ஆழ்ந்த அறிவு இலலாதவர்களால் தவறாக விளக்கப்படுகிறது.
சனாதனம் என்பதற்கு கடவுள் நம்பிக்கை தொடர்பாக இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒன்று ப்ராவ்ருதி மார்க்கம் (கடவுளை நம்பவது) மற்றொன்று நிவ்ருதி மார்க்கம் (நாத்திகம்). சனாதனம் நிவ்ருதி மார்க்க வாதங்களை சமப்படுத்தும் வகையில் பகுத்தறிவு திருத்தங்களையும் உரிய மாற்றங்களையும் கொண்டுள்ளது.
இந்தப் போக்கின் காரணமாக ஆதி சங்கரர், மத்வார்ச்சாரியார், ராமானுஜர் ஆகிய மகான்கள் அத்வைதம், துவைதம், விஷிஸ்டாத்வைதம் ஆகிய தத்துவங்கள் மூலமாக நாடெங்கும் பக்தியைப் பரப்பினர்.
பக்தி ஒரு இயக்கமாக இந்தியாவின் தெற்கில் இருந்து தொடங்கியது என்பது நன்றாகத் தெரிந்த விஷயமாகும். அன்றைய ‘மதராஸ் மாநிலம்’ இன்றைய மாநிலங்களின் பல நிலப்பரப்புகளும் அடங்கியது. எனவே, பழைய வரலாற்றைப் புறக்கணித்து சனாதன தர்மத்தை நமதல்ல என்று மறுப்பதால் இன்றைய பிரிவினைவாத சக்திகளால் எதிர்கால சந்ததியினர் குழப்பமான மனநிலையில் வாழும் நிலை உருவாகும்.
வரலாறு, இலக்கியம் மூலம் தமிழர்கள் ஐவகை நிலங்களில் மாயோன் (விஷ்ணு), சேயோன் (முருகன்) வருணன், கொற்றவை (மாகாளியின் ஒரு வடிவம்) ஆகிய தெய்வங்களை வணங்கினார்கள் என்பது தெரிகிறது. இந்த ஐந்து வகை நிலங்களில் வாழ்ந்த தமிழர்களுக்கு குறிப்பிட்ட சடங்குகளும் தெய்வங்களை வழிபடும் முறைகளும் இருந்தன என்பது ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
சங்கம் மருவிய காலம் இருண்ட காலம் என்று அழைக்கப்படுவதால் வரலாற்று உண்மைகள் தெளிவாக இல்லை. தமிழர் பாரம்பர்யத்தில் சனாதன தர்மம் ஒரு வாழ்க்கை முறையாகவே உள்ளது.
மொத்த தமிழ் நிலப்பரப்பில் வாழ்நத மக்களும், மன்னர்களும், புலவர்களும் பக்தி நெறியைப் பின்பற்றினர் என்பது கவனிக்கத்தக்கது. இன்றும்கூட இந்த பிராந்தியத்தின் பக்தி மற்றும் ஆன்மீக பாரம்பர்யத்துக்கு மெய்யான சான்று கூறும் வகையில் தமிழ்நாட்டின் கோயில்கள் உள்ளன.
அரசியல் கட்சிகள் கூறும் நாத்திகத்தையும் பகுத்தறிவையும் மீறி தமிழ்நாட்டில் பக்தி ஓங்கி வளர்ந்துகொண்டுதான் இருக்கிறது. பழனி உள்ளிட்ட நமது கோயில்கள் இந்தியாவிலேயே அதிகமானவர்கள் வரும் கோயில்களாகத் திகழ்கின்றன.
பிராந்தியக் கட்சிகளின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தால் தமிழ்நாட்டில் பல மோதல்களை தமிழர் பிராந்தியம் பார்த்தது. ஆனால், அண்மைக்காலமாக நிலைமை மாறிவிட்டது. மக்களின் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் தங்களை அந்த உணர்வுகளுடன் அடையாளப்படுத்திக்கொண்டாலும் தமிழ் மக்களில் பெரும்பாலோர் அந்த கருத்துகளை இப்போது ஏற்கவில்லை.
இந்தியை எதிர்த்து முழக்கமிடும் அரசியல் கட்சிகளே அவர்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளனர். இப்போது இந்தித் திணிப்பைத்தான் எதிர்ப்பதாக சொல்கின்றனர்.
அரசுப்பள்ளி மாணவர்கள் இந்தி படிக்க விரும்பினாலும் அதற்கான வாய்ப்பு அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. எந்த மொழியும் திணிக்கப்படக்கூடாது என்பதை எல்லாரும் ஏற்றுக்கொள்கின்றனர். அரசுப்பள்ளிகளில் பயிலும் வசதி வாய்ப்பில்லாத ஏழை மாணவர்களுக்கு இந்தி படிக்கும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே இதன் உண்மையான அர்த்தமாக இருக்கும். இந்தி படிக்க விரும்பாதவர்களைக் கட்டாயப்படுத்த வேண்டாம்.
பண்டைய பாரம்பர்யத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று இளைஞர்கள் மேற்கொண்ட உயர்வான முயற்சியாக ஜல்லிக்கட்டு போராட்டம் இருந்ததால் அதற்கு உலகம் முழுவதும் இருந்த மக்களின் ஆதரவு மட்டுமின்றி அன்றைய மத்திய, மாநில அரசுகளின் ஆதரவும் இருந்தது.
இந்தியா முழுவதும் பசு புனிதமான விலங்காக இருப்பதுபோல் காளையை மதிப்பதும் மரியாதை செய்வதும் சனாதன தர்மத்தில் அனைத்து படைப்புகளையும் மதிப்பது என்ற நடைமுறைக்கு உதாரணமாகும். ஸ்பெயின் போன்ற நாடுகளில் பெரும்பாலும் காளைச்சண்டையின் முடிவில் காளை கொல்லப்படுகிறது. ஜல்லிக்கட்டில் அதுபோன்று இல்லை.
தமிழ்நாட்டின் சமூக, அரசியல் சூழல் வேகமாக மாறிவிட்டது. ஆனால், தமிழ் நிலம் கோயில்களின் இருப்பிடமாகவும் பக்தி, புனிதம் ஆகிய அடையாளங்களையும் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டுள்ளது.
நேருக்கு நேர்
இந்து என்பது தமிழர்களின் மதமா? பூசப்பட்ட சாயமா?
இந்தியாவின் பெரும்பான்மை மாநிலங்களிலும் கம்யூனிசம் ஆட்சி செய்த மேற்கு வங்கத்திலும் தென் மாநிலமான கர்நாடகத்திலும் இந்துத்வா முழக்கத்தைக் கையில் எடுத்து வெற்றிகரமாகக் காலூன்றிய பாஜக தமிழ்நாட்டில் அதே அடையாளத்தை முன்னிறுத்தி வேல் யாத்திரை நடத்தியபோதும் வலுவாகக்...
Read in : English