Read in :
English
தொழில்ரீதியாக எனக்கு இரண்டு முகங்கள்: என்னுடைய வருவாயில் பெரும்பகுதியை கப்பல் பொறியாளன் பணியின் மூலம் ஈட்டுகிறேன். விருப்பத்தின் காரணமாக பத்திரிகைத்துறையில் ஈடுபட்டிருக்கிறேன். அண்மையில் கப்பலில் பயணம் செய்த போது பிரகாஷ் முரளிதரன், முகமது நாசர் என்று இரு மலையாள பயிற்சி பொறியாளர்கள் பணியில் இருந்தார்கள்.
பிரகாஷ் ஒரு சங்கி. அவருடைய மாமா சொந்த ஊரான கொச்சியில் பாரதிய ஜனதா கட்சியில் இருக்கிறார். இந்தியாவுக்கு ஆபத்து இருக்கிறதென்றும், இசுலாமியர்கள் எப்படியெல்லாம் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்றும், இந்தியாவின் கலாசாரமும் விழுமியங்களும் பெரும் ஆபத்துக்குள்ளாகியிருப்பதாவும் அடிக்கடி முரளிதரன் பேசுவார். கேரளத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற போது அவர் மிகுந்த உற்சாகத்துடன் இருந்தார். தேர்தலில் பாஜக நன்றாக செயல்பட்டு குறைந்தபட்சம் 10 இடங்களையாவது வெல்லும் என்று நினைத்திருந்தார்.
பயிற்சி பொறியாளரின் பணி கடுமையானது. நீண்ட நேரம் பணியாற்ற வேண்டும். மிகவும் மோசமான பணிகளெல்லாம் தலையில் சுமத்தப்படும். எல்லோரும் பரிகாசமும் செய்வார்கள். இவை தொழில்ரீதியாக இருக்கும் சிக்கல்கள். அந்நேரத்தில் உடன் பணியாற்றுவர்தான் வாழ்க்கையை காப்பாற்ற முடியும்.
பிரகாஷ் முஸ்லிம்களை வெறுக்கலாம். ஆனால் பணியில் முகமது நாசருடன் இணைந்தே செயல்படுவார். இருவரும் ஒருவருக்கு ஒருவர் அனுசரணையாக நடந்து கொள்வர். மற்றவர்கள் இருக்கும் போது மலையாளத்தில் உரையாடிக் கொண்டிருப்பார்கள். நாசருடனான உறவில் பிரகாசின் அரசியல் எந்தத் தாக்கத்தையும் ஏற்படு்ததவில்லை.
கேரளத்துக்கு வெளியே வசிக்கும் மலையாளிகள் பிற மலையாளிகளுடன் எப்படி உறவாடி, மற்றவர்களை ஒதுக்கித் தங்களுக்கென இடத்தை உருவாக்கிக் கொள்வார்களோ, அது போலத்தான் பிராகசும் இருப்பார். எங்கே இருந்தாலும் ஒரு குழுமத்தை மலையாளி உருவாக்கிக் கொள்வார். முன்பின் தெரியாத சூழலில் அக்குழுவே அவருக்கான ஆறுதலையும் ஆதரவையும் தருவதாக அமையும். தூரத்து இடங்களிலும் மோசமான சூழல்களிலும் தாக்குப்பிடிப்பதற்கு இக்குழுவே உதவும்.
கேரளத்தில் நிலவும் தொழிற்சங்க நடவடிடக்கைகள் பல்லாண்டுகளாகவே தொழில் வளர்ச்சியையும் தனியார் முதலீட்டையும் தடுத்துவிட்டன. உள்ளூரில் எந்த வேலையும் இல்லை. வேலை தேடும் மலையாளிகள் வேறு மாநிலத்தையோ நாட்டையோ தங்கள் மாநிலமாகவும் வீடாகவும் பாவித்து வருகிறார்கள்.
தமிழ் நாடார் இன்னொரு நாடாருக்கு அனுசரணையாக இருப்பது போல, கட்சித் தோழரின் செயல்பாட்டை உதாரணமாக கொண்டு, கேரளத்துக்கு வெளியே வசிக்கும் மலையாளிக்கு இன்னொரு மலையாளி உதவுகிறார்.
ஒரு மலையாளி, இன்னொரு மலையாளியை தன்னுடைய பணியிடத்துக்கு அழைத்து வந்து, அவர்களுக்கு ஆதரவாக இருப்பார். ஆழமான கலாசார பிணைப்பு அவர்கள் வளர்வதற்கான ஒரு வாய்ப்பை உருவாக்குகிறது. ஓணம் பண்டிகையையொட்டி விருந்து, கூட்டு விருந்து ஆகியவை அவர்களுக்கிடையேயான பிணைப்பை பிரதிபலிக்கிறது. இப்பிணைப்பு சாதி மதங்களைத் தாண்டி இருக்கிறது.
தங்கள் மாநிலத்தை விட்டு அடுத்த மாநிலத்தில் வசிக்கும் போது சக மலையாளிகளிடம் இணக்கத்துடன் செயல்படுவதை எடுத்துக் கொண்டால், அது மலையாளிகளுக்கு மட்டுமே உரித்த குணமன்று. எல்லா மனிதர்களுமே ஏதோ ஒரு வகையில் அது போன்ற இணக்கத்துடன் செயல்படுகிறார்கள். நாம் எல்லோருமே நம்முடைய இனத்தாருடன் இருக்கையில் ஒரு சுகத்தை அனுபவித்து, ஒருவருக்கொருவர் உதவியாக இருக்கிறோம். இந்தியாவைப் பொறுத்தவரை அப்பிணைப்பு சொந்த சாதியாரிடம் இருப்பதாக எடுத்துக் கொண்டாலும், மலையாளிகளைப் பொறுத்தவரை சாதியைத் தாணடி அப்பிணைப்பு இருக்கிறது. எடுத்துக்காட்டாக, அமெரிக்காவில் வசிக்கும் தெலுங்கருக்கும் குஜராத்திக்கும் ஆதரவாக இருப்பவர்கள் அந்தந்த சார்ந்தவர் அடிப்படையில் அல்ல. மாறாக ஒரு ரெட்டிக்கு இன்னொரு ரெட்டியும் ஒரு பட்டேலுக்கு இன்னொரு பட்டேலும் ஆதரவு தருகிறார். ஒணத்தைப் பொறுத்தவரை அது ஹிந்து புராணங்களில் இருந்து தோன்றியிருக்கலாம். ஆனால் ஒரு விழா என்ற வகையில் அது மலையாள விழாவாகத்தான் இரு்க்கிறதே தவிர, நாயர், ஈழவா அல்லது ஹிந்து விழாவாக இல்லை. மலையாளிகள் தங்கள் மன்னரின் வரவை கொண்டாடுகிறார்கள்.
மொழி அடையாளமானது மலையாளிகளுக்கு மட்டும் உரித்தானதல்ல. மொழி என்று வந்து விட்டால், தமிழர்கள் தமிழ் மேல் ஒரு தீவிர பாசமும் பெருமிதமும் கொள்கிறார்கள். அதை வெளியிடங்களில் செயல்படுத்துவதில் மறறவர்களில் இருந்து மலையாளிகள் வேறுபடுகிறார்கள்.தமிழர்களில் நாடார்கள் ஒருவருக்கொருவர் வணிகத்தில் உதவியாக இருப்பார்கள். ஆனால் வெளியிடத்தில் வணிகம் செய்யும் வன்னியருக்கு நாடார் உதவ முன்வர மாட்டார்.
மலையாளிகளுக்கு அப் பிணைப்பும் அடையாளமும் நடைமுறையில் பெரும் பயனளிக்கின்றன. பணியில், தொழில் தொடங்குவதில் எல்லாம் அது வெளிப்படும். கேரளத்தில் கம்யூனிஸ்ட் தோழர் பிறருக்கு உதவுவதுபோல் அது இருக்கும்.
பிரகாசுக்கும் நாசருக்கும் அரசியலில் ஒத்தக்கருத்து கிடையாது. பாஜக தோல்வியடைந்த போது அவர் மனமுடைந்து போனார். நாசருக்கோ பெரும் மகிழ்ச்சி. ஆனால் அக்காரணத்தை உடனடியாக பிரகாசால் அறிய முடிந்தது. கேரளத்தின் சாதாரண வாக்காளார்கள் இன்னும் தோழர்களை மெச்சுபவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் சொல்வதையே கேட்கிறார்கள். அப் பிணைப்பு வலுவானது என்று அவருடைய மாமா விளக்கியிருக்கிறார்.
கேரளத்தின் தினசரி வாழ்க்கையின் முக்கிய அம்சமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸட்) ஊழியர் இருக்கிறார். 25 கேரளத்து மக்களுக்கு ஒரு கம்யூனிஸ்ட் தோழர் என்ற விகிதத்தில் அவர்களின் எண்ணி்ககை இருக்கிறது. பயிற்சி இல்லாவிட்டாலும், தோழராக செயல்படுவதற்கு அவர் தத்துவத்தின் பிடியில் இருக்கிறார். அவர் சமூக குழுக்களை உருவாக்குகிறார். மார்க்சியம் வர்க்க சமூகத்தை கட்டமைப்பது குறித்து பேசினாலும், கேரளத்தில் தொழிற்சாலை பணியாளர்கள் அதிகம் இல்லாததால், சாதாரண மக்களை அவர் ஒன்றிணைக்கிறார். ஈரோ 2020 கால்பந்தாட்டம் நடைபெற்ற போது மார்க்சிஸ்ட் கட்சிக் குழுக்குள் முகநூலில் மிகத் தீவிரமான விவாதத்தை நடத்தின. அதில் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர். அரசியலுக்கு வெளியேயும் ஒரு பிணைப்பை தோழர் உருவாக்குகிறார்.
எந்த ஒரு காரியத்தையும் முடிக்க தெரிந்தவராக தோழர் இருக்கிறார். சிறிய கடன் வேண்டுமா, தோழர் ஏற்பாடு செய்து தருவார். ஒருவருடைய மகனோ மகளோ தொழிற்கல்விக்கான நுழைவுத் தேர்வில் சிறப்பாக செயல்பட வேண்டுமா, கட்சி நடத்தும் பயற்சி மையத்தில் சேர்ந்து பலன் பெற முடியும்.
இதுதான் கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை செயல்பாடு என்கிறார் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் ஒருவர். பிறருக்கு உதவுவதற்காக தோழருக்கு பயிற்சியளிக்கப்படுகிறது. மக்களுக்காக பணி செய்து, மேலும் மேலும் அதிகமானவர்களை கட்சியை நோக்கி ஈர்த்து தக்க வைத்துக் கொள்கிறார். 2018-ம் ஆண்டு மாநில மாநாடு நடைபெறுவதற்கு முன்னதாக, கட்சி நிறுவனம் குறித்த அறிக்கை விவாதிக்கப்பட்டு, மேலும் எந்த வகையில் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் தோழர்கள் செயல்பட வேண்டும் என்று திட்டம் வகுக்கப்பட்டது.
வர்க்கம், பொருளாதாரம், அரசியல் செயல்பாடு, நியாயம், சமத்துவம் ஆகியவை குறித்து மார்க்சியம் பேசினாலும், நட்பு அரசியலில் அடிப்படையிலேயே தோழர் அடைய நினைக்கிறார். அதுவே. மக்களிடம் பிணைப்பை ஏற்படுத்துகிறது.
பிரஞ்சு தத்துவ ஆசிரியர் ஜேகுவஸ் டெரிடா, தன்னுடைய “நட்பின் அரசியல்” என்ற நூலில் நட்பின் அடிப்படையிலான அரசியலுக்கான எண்ண வரைவை தெரிவிக்கிறார். வளர்ச்சியடைந்த சமூகங்களில், சிறுதுளி போல் தனி மனிதர்கள் மாறி விட்ட நிலையில் நட்பின் அடிப்படையிலான அரசியல் ஒரு தீவிர நம்பிக்கையாக மட்டுமே இருக்க முடியும். ஆனால் கடினமான போரட்டமே வாழ்க்கையாக இருக்கும் இந்தியாவில் மார்க்சிய கட்சிகளுக்கு அத்தகைய அரசியல் இயல்பாகவே இருக்கிறது. கட்சி ஊழியரை பயிற்றுவிப்பதில் அவர்கள் லெனின் காட்டிய வழிமுறைகளைப் பின்பற்றுவார்கள்.
அரிஸ்டாட்டிலை மேற்கோள் காட்டி மூன்று விதமான நட்பு குறித்து டெரிடா பேசுகிறார். முதலாவதாக உயர்ந்த நட்பு. நல்லொழுக்கத்தின் அடிப்படையில் அமைந்த அந்த நட்புக்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை. இரண்டாவதாக பயன்பாடு, தேவையின் அடிப்படையில் அமைந்த நட்பு. அதுதான் அரசியல் நட்பு. மூன்றாவதாக கீழ் நிலையில் நிலவும் நட்பு. மகிழ்ச்சிக்காக இளைஞர்களுக்கிடைய நிலவும் நட்பு அது.
பயன்பாடு மற்றும் தேவையின் அடிப்படையில் அமைந்த நட்பைத்தான் கேரளத்தின் கம்யூனிஸ்ட் ஊழியர்கள் பின்பற்றுகிறார்கள். கட்சி ஊழியரைப் பொறுத்தவரை அவர் மலையாளிக்கு பயனுள்ளவராக இருக்கிறார். கடந்த 70 ஆண்டுகளாகவே இக்கொள்கையில் அடிப்படையில் உருவான வரைவுக்குள் வாழ்கிறார். அதுதான் இயற்கையாகவே மலையாளிகளின் வாழ்வில் ஊடுருவி, கலாசார பழக்கமாக மாறி விட்டது. தமிழ் நாடார் இன்னொரு நாடாருக்கு அனுசரணையாக இருப்பது போல, கட்சித் தோழரின் செயல்பாட்டை உதாரணமாக கொண்டு, கேரளத்துக்கு வெளியே வசிக்கும் மலையாளிக்கு இன்னொரு மலையாளி உதவுகிறார்.
அடுத்த முறை தாங்கள் பணி செய்யும் இடத்தில் மலையாளிகள் கூட்டமாக சேர்ந்து ஆதிக்கம் செய்தால், நீங்கள் கம்யூனிசத்தைதான் குற்றம் சொல்ல வேண்டும்.
Read in :
English