பஞ்சாப் மாநிலத்தில் அவதார் சிங் விவசாயக் கடனை கட்டமுடியாததால் பத்து ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். இப்போது அதே வழியை அவரது இரு மகன்களும் தேர்ந்தெடுத்து, உயிரை மாய்த்துக்கொண்டனர். அவரது மூத்த மகன் ரூப் சிங் (40 வயது), இளைய மகன் பசந்த் சிங் (32 வயது) பக்ரா கால்வாயில் குதித்து தற்கொலை செய்துகொண்டனர். விவசாயக் கடன் இரு தலைமுறைகளின் உயிரை காவு வாங்கியுள்ளது.
மகன்கள் 2017ஆம் ஆண்டு இறந்தனர். அதற்கு பத்தாண்டுகளுக்கு முன்பு, 2008இல் அவர்களது தந்தை இறந்தார். அவர்களுக்கு 2.5 ஏக்கர் நிலம் இருந்தது. அத்துடன், 30 ஏக்கர் நிலத்தில் குத்தகைக்கு விவசாயம் பார்த்த்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு லாபம் கிடைக்கவில்லை. அதேவேளையில் கடன் மட்டும் அதிகரித்துக்கொண்டே இருந்தது. ஒவ்வொரு நாளும் உயர்ந்துகொண்டே இருந்த கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டனர்.
பஞ்சாப் செய்திதாள்களில் விவசாயிகள் தற்கொலைச் செய்தி வெளிவராத நாட்கள அபூர்வம். இந்தியாவின் உணவுக் களஞ்சியமான பஞ்சாபும் இதற்கு விதிவிலக்கு இல்லை. நாடு முழுவதும் இதேநிலைமை தொடர்கிறது. விவசாயிகளின் குடும்பங்கள் துயரத்தில் மூழ்கிக் கிடக்கின்றன. கடந்த 21 ஆண்டுகளில் 3.20 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். நம் நாட்டில் ஒவ்வொரு 41 நிமிடத்துக்கும் ஓரு விவசாயி தற்கொலைச் செய்துகொள்கிறார். இதுமட்டுமில்லாமல் 58லிருந்து-62 சதவீதம் வரை உள்ள விவசாயிகள் பட்டினியுடன் தான் உறங்கச் செல்கிறார்கள்.
விவசாயிகளுக்கு போதிய அளவு வருவாய் இல்லாததே நாடு முழுவதும் உள்ள இநத நிலைமைக்குக் காரணம் என்கிறது அண்மையில் வெளிவந்த ’கிரிசில்’(CRISIL) அறிக்கை. 2009லிருந்து 2013 வரை குறைந்தபட்ச ஆதாரவிலை 3.6 சதவீதம் அளவுக்கே உயர்ந்துள்ளது என்பதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட அகவிலைப் படியுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவு. உணவுப் பற்றாக்குறையை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்கு விவசாயிகளுக்கு சரியான வருமானத்தை எந்த அரசும் கொடுப்பதில்லை. உணவுப்பொருட்களின் விலையை குறைவாக வைத்திருப்பதற்காக விவசாயிகள் அந்தச் சுமையை ஏற்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். நுகர்வோருக்கு மானிய விலையில் அரசு வழங்குவதும் அந்த சுமை விவசாயிகளின் தலையில் விழுகிறது.
‘கமிஷன் ஃபார் அக்ரிகல்சுரல் காஸ்ட் அண்ட் பிரைசஸ்’ நிகர வருமானத்தை பதிவிட்டு வருகிறது. மாகாராஷ்டிராவில் ஒரு ஹெக்டேர் நெல்லுக்கு கிடைக்கும் நிகர வருமானம் ரூ.966. அதாவது மாதத்துக்கு 300 ரூபாய். ராகி, ஒரு ஹெக்டருக்கு ரூ.10,674, உளுந்து பயிரின் நிகர வருமானம், இழப்பில் செல்கிறது. ஒரு ஹெக்டேரில் பருத்தியின் நிகர வருமானம் ரூ.2,949. பருத்தி சாகுபடி ஜூன் மாதத்தில் ஆரம்பித்து அக்டோபரில் பருத்தி எடுப்பது தொடங்குகிறது. அன்த விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு மாதம் வருமானமாக ரூ.700தான் கிடைக்கிறது.
கடந்த மூன்றாண்டுகளாக நெல், கரும்பு, மக்கச்சோளம், பருத்தி சாகுபடி மூலம் ஆகியவற்றின் நிகர வருமானம் குறைந்துகொண்டே வருகிறது. மானாவாரி நிலத்தில் விளையும் பயிர்கள் மூலம் கிடைக்கும் நிகர வருமானம் எதிர்மறையாக உள்ளது. விவசாயிகள் நஷ்டத்தை அறுவடை செய்ய வேண்டியநிலையில், எந்த வகையான தொழில்நுட்பங்களும் நிதி உதவியும் அவர்களை இந்த துன்பத்திலிருந்து மீட்க உதவும்? அவர்களுக்கு வங்கிகள் மூலம் கடன் கொடுப்பது அவர்களின் கடன் சுமையை அதிகரிக்கச் செய்கிறது. முன்னாள் பிரதமர் சரண்சிங் ஒரு முறை கூறியது போல் விவசாயிகள் கடனிலே பிறந்துகடனிலேயே இறக்கின்றனர்.
வேளாண் விலை கமிஷன் (சிஏசிபி), விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலையை நிர்ணயிக்கும்போது நியாயமான விலை நிர்ணயிக்க வேண்டும். பணவீக்கத்துக்குஇட்டுச் செல்லாமல் இருக்க வேண்டும். விளைபொருட்களின் விலை வேண்டுமென்றே குறைவாக வைக்கப்பட்டுள்ளது, அவற்றின் விலை உற்பத்தி விலையை விட குறைவாகவே உள்ளது. இது இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இவ்வாறே உள்ளது. ‘’நமது பொருளாதாரத்தில் விவசாயிகள் எல்லாவற்றையும் சில்லறை விலைக்கு வாங்கி, விளைபொருட்களை மொத்த விலைக்கு விற்கிறார்கள்’’ என்று அன்றைய அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி குறிப்பிட்டார். ஆனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் விவசாயிகளுக்கு பெருமளவில் மானியம் வழங்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் நேரடி வருமாத்துக்கு உதவியும் வழங்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் இடுபொருட்களுக்கு மட்டுமே விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. அதனால் இடுபொருட்கள் உற்பத்தியாளர்கள் மட்டுமே பயனடைகின்றனர்.
விளைபொருட்களுக்குக் குறைவான விலை கிடைப்பதால் சுமை விவசாயிகளின் மீது விழுகிறது. கடந்த 45 ஆண்டுகளில் ஆசிரியர்களின் சம்பளம் 280லிருந்து320 மடங்கு வரைஅதிகரித்துள்ளது. அரசு ஊழியர்களின் சம்பளம் 120லிருந்து -150 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால், விவசாயிகள் விளைவிக்கும் கோதுமையின் விலை வெறும் 19 மடங்கே அதிகரித்துள்ளது.
விவசாயத்தில் கிடைக்கும் வருமானம் அப்படியே ஸ்தம்பித்து உள்ளது. உணவுப் பொருட்களின் விலையை குறைவாக வைத்திருப்பதன் மூலம் விவசாயத்தில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை குறையும். இதைத்தான் உலகவங்கி கடந்த 1996இல் விரும்பியது. இந்தியாவில் 2015-க்குள் 400 மில்லியன் மக்கள் கிராமங்களிலிருந்து நகரத்துக்கு இடம்பெயர்வார்கள் என உலகவங்கி எதிர்பார்த்தது. விவசாயிகளை, வேளாண் தொழிலிருந்து அகற்றவே உலக வங்கி பல நிபந்தனைகளுடன் கடன் கொடுக்கிறது. 70 சதவீத விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கூறினார். ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் உள்கட்டமைப்பு தொழிலுக்கு குறைவான கூலிக்கு தொழிலாளர்கள் கிடைக்க வேண்டுமானால் அவர்கள் விவசாயத்திலிருந்து வெளிவர வேண்டும் என்றார். ‘நேஷனல் ஸ்கில் டெவலப்மெண்ட் கவுன்சில்’ 2022க்குள் தற்போது விவசாயத்தில் ஈடுபட்டு வரும் 52 சதவீத மகக்ளை 38 சதவீதமாகக் குறைக்க திட்டம் வகுத்து வருகிறது. சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. பசுமை புரட்சி நடைபெற்று 55 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்நிலையில் விவசாயிகளை வேளாண் தொழிலிருந்து துரத்துகிறது. இந்தியாவில், 17 மாநிலங்களில் விவசாயிகளின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.20,000. அதவாது மாதத்துக்கு 1,700 ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இந்த வருமானத்தை வைத்துக் கொண்டு எப்படி ஒரு விவசாயக் குடும்பம் வாழ முடியும்?
நீர்ப்பாசனத்தை அதிகரிப்பதன் மூலமாகவும் பயிர் உற்பத்தி திறனை அதிகரிப்பதன் மூலம் வருமானம் உயரும் என நம்புகிறார்கள். இதுதான் வழியென்றால், பஞ்சாப் ஏன் தற்கொலை மாநிலமாகிக் கொண்டுள்ளது? பஞ்சாபில் 98 சதவீத நிலம் பாசன வசதியை பெற்றுள்ளது. உலகளவில் அதிக உற்பத்தியைக் கொடுக்கிறது. ஒரு ஹெக்டருக்கு 45 குவிண்டால் கோதுமையும் 60 குவிண்டால் நெல்லும் உற்பத்தி செய்யும் பஞ்சாப், உலக நாடுகள் உற்பத்தி வரிசையில் முன்னணியில் உள்ளது. ஆனால் இன்னும் பஞ்சாப்பில் ஒவ்வொரு வாரத்திலும் தற்கொலை நடக்கிறது. கொள்கை வகுப்பவர்கள் உற்பத்தியை அதிகரிப்பதைத் தாண்டி விவசாயிகளின் கவலைக்குரிய நிலையை காண முற்படுவதில்லை.
இந்த நிலை மாற ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை. பொருளாதாரச் சிந்தனையில் மாற்றம் தேவை. அதற்கு இந்த மூன்று வழிகளைப் பின்பற்ற வேண்டும்:
1)கமிஷன் ஃபார் அக்ரிகல்சுரல் காஸ்ட் அண்ட் பிரைசஸ், பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலையை நிர்ணயிக்கும் போது நான்கு முக்கிய காரணிகளை வலியுறுத்த வேண்டும். வீட்டு அலவன்ஸ், மருத்துவ அலவன்ஸ், கல்வி மற்றும் பயணப்படி ஆகியவற்றையும் குறைந்த பட்ச ஆதார விலையில் சேர்க்க வேண்டும். இதனை 108 அலவன்ஸ் பெறும் அரசு ஊழியர்களுடன் ஒப்பீடு செய்து பார்க்க வேண்டும்.
2)காரணம், வெறும் 6 சதவீத விவசாயிகள் மட்டுமே குறைந்தபட்ச ஆதாரவிலையால் பயன் அடைகின்றனர். குறைந்தபட்ச ஆதாரவிலையுடன் 50 சதவீத லாபம் சேர்த்துக்கொடுக்க வேண்டும் என வலியுறுத்த வேண்டும். அதனால் 6 சதவீத விவசாயிகளே பயன் அடைகின்றனர் என்பதை புரிதுகொள்ள வேண்டும். மீதியுள்ள 94சதவீத விவசாயிகள் தங்களைச் சுரண்டும் சந்தைகளை நம்பித்தான் உள்ளார்கள். ஆகையால் சிஏசிபி, விவசாயிகள் வருமனம் மற்றும் நலனில் அக்கறை கொண்டுள்ள கமிஷன் மறுவடிமைப்பு செய்யப்பட வேண்டும். அது விவசாயக் குடும்பத்துக்கு மாதம் ரூ. 18,000 வருமானத்துக்கு உறுதி செய்ய வேண்டும்.
3) பொதுத் துறை நிறுவனங்கள் சந்தைகள் மற்றும் சேமிப்பு குடோன்களை அமைக்க முன்வர வேண்டும். தற்போது 7,700 அரசு சந்தைகள் உள்ளன. ஆனால் ஒவ்வொரு 5 கிலோ மீட்டர் சுற்றளவில்ம் ஒரு சந்தை வீதம் 42,000 சந்தைகள் தேவை. பிரேசில் நாட்டில் உள்ளது போல விவசாய விளைபொருட்களை விற்பதற்கான சந்தையை கொண்டுவர வேண்டும்.