Read in : English

தமிழ்நாட்டில் இயற்கை வேளாண் விவசாயிகளுக்கு, அவர்கள் விளைவித்த பொருட்களுக்கு நல்ல சந்தை (விற்பனை) விலை கிடைக்க சரியான நடவடிக்கைகள் இல்லை. இயற்கை வேளாண் பொருட்களுக்கு சந்தை விலையை நிர்ணயம் செய்ய அரசு முடிவு செய்தால் அதற்கு ஆதரவும் எதிர்ப்பும் பல முன்னணி இயற்கை விவசாயிகளிடமிருந்து வரும்.
இயற்கை வேளாண் பொருட்களுக்கு அரசு, விலை நிர்ணயம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், இன்னும் விலை நிர்ணயம் செய்யப்படவில்லை. இன்று வரை, எப்பொழுதும் போல் தெளிவான திட்டம் எதுவும் இயற்கை வேளாண் பொருட்களின் சந்தை விலை நிர்ணயம் குறித்து வகுக்கப்படவில்லை என்கிறார் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்துவரும் மருத்துவர் டாக்டர் எம்.ஜே. நரசிம்மன்.
“பாரம்பரிய முறையில் பல்வேறு ரக நெற்பயிர்களை பயிரிடுகிரோம். தெரிந்தவர்களிடமும் இயற்கை வேளாண் விவசாயிகளின் கூட்டமைப்பு மூலமாகவும் விற்பனைச் செய்கிறோம். இயற்கை வேளாண் விளை பொருள்களை அரசு கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும் என்று சொல்லி நீண்டகாலமாகக் கேட்டுக் கொண்டு வருகிறோம். அப்படியே அவை கொள்முதல் செய்யப்பட்டாலும் வழக்கமான முறையில் விளைவிக்கப்படும் பொருட்களுக்குக் கொடுக்கப்படும் விலையே கிடைக்கும்” என்று அவர் இன்மதி இணையதளத்திடம் பேசும்போது தெரிவித்தார்.

அரசு வழக்கமான முறையில் விவசாயம் மேற்கொள்பவர்களுக்கு எவ்வளவு மானியம் கொடுக்கிறதோ அதே அளவு இயற்கை வேளாண் விவசாயிகளுக்கும் தருவதற்கு உறுதியளிக்க வேண்டும்.

“மாநிலத்தில் உள்ள நகரங்களில் பல இடங்களில் இயற்கை வேளாண் பொருட்களின் விற்பனைக்காக சந்தைகள் உருவாக்கப்பட்டு,   விளை பொருட்களை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக  வாங்கும்படியாக இருக்கும்” என்று ஸேஃப் ஃபுட் அலையன்ஸ் ஒருங்கிணைப்பாளரான அனந்து நம்பிக்கை தெரிவித்தார். இயற்கை வேளாண் பொருட்களின் சந்தை விலை நிர்ணயம் தொடர்பாக அரசு மேற்கொண்டு இருக்கும் பேச்சுவார்த்தையை வரவேற்பதாக அவர் கூறுகிறார். அதே வேளையில் சந்தை விலையுடன் கூடுதலாக 20 சதவீத விலை என்ற தீர்மானம் நாடு முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் எப்படிப் பொருந்தும் என்றும் கேட்கிறார் அவர்.
விவசாயிகளைப் பொருத்தும் இடங்களைப் பொருத்தும் இயற்கை விவசாயத்துக்கான செலவுகள் வேறுபடும். இருந்தபோதிலும் அரசின் இந்தச் செயல்பாடு வரவேற்கத்தக்கது.  ஏனெனில் கடந்த காலகட்டங்களில் ஊக்கம் அளிக்கும் நடவடிக்கைகள் அரசு சார்பில் செயல்படுத்தப்படவில்லை.
“வட கிழக்கு, வடக்கு மற்றும் சில தென்னிந்திய மாநிலஙகளான கேரளா, தமிழ்நாடு ஆகியவற்றில் இயற்கை விவசாயத்தில் விருப்பம் உள்ளவர்களால் மட்டுமே இயற்கை விவசாயம் செய்யப்படுகின்றது. இது அவர்களின் சொந்த விருப்பம் சார்ந்தது. அவர்கள் தாங்கள் விளைவித்த பொருட்களை தனக்கு தெரிந்தவர்களிடமும் இயற்கை வேளாண் விவசாயிகளின் கூட்டமைப்பு மூலமாகவும் விற்பனை செய்கின்றனர். இயற்கை வேளாண் விவசாயிகளுக்கு தமிழக அரசு பெரிய அளவில் ஊக்கமளிக்கவில்லை.  தற்போது இயற்கை விவசாயத்தில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உற்பத்தியாளராகவும் நுகர்வோராகவும் இளைய தலைமுறையினரில் பலர் இதில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் சந்தைப்படுத்துவதில் பெருமளவு அவர்களே பார்த்துக்கொள்கின்றனர்” என்கிறார் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத மூத்த அதிகாரி ஒருவர்.
“இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் முடிவை அரசு அமல்படுத்தினால் வரவேற்பதாக மயிலாடுதுறையைச் சேர்ந்த  இயற்கை விவசாயி டி.பரணி கூறுகிறார். ஆனால், அரசு வழக்கமான முறையில் விவசாயம் மேற்கொள்பவர்களுக்கு எவ்வளவு மானியம் கொடுக்கிறதோ அதே அளவு இயற்கை வேளாண் விவசாயிகளுக்கும் தருவதற்கு உறுதியளிக்க வேண்டும். அத்துடன், 20 சதவீதம் கூடுதலாகச் சந்தை விலை என்பது புரியவில்லை” என்கிறார் அவர்.
“வந்தவாசி மற்றும் திருவாரூர் ஆகிய இடங்களில் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருபவர்களிடமிருந்து என்னுடைய நிலம், உழைப்பு வேறுபடும். நிலத்தின் விலை, தொழிலாளர் கூலி ஆகியவையும் வேறுபடும். ஆகையால் அனைவருக்கும் ஒரே சந்தை விலை என்பது எப்படி சாத்தியமாகும்” என்பது பரணியின் கேள்வி.
அரசாங்கம் இயற்கை விவசாயத்தை மேம்படுத்த எண்ணினால்   முதலில் செய்ய வேண்டியது இயற்கை விவசாயத்திற்கான சான்றிதழ் பெறுவதை எளிமையாக்க வேண்டும். தற்போது இயற்கை விவசாயப் பொருட்களின் விற்பனையானது தெரிந்தவர்களுக்குள் மட்டுமே நடக்கின்றது. நமக்கு இயற்கை விவசாயம் மேற்கொள்பவரைத் தெரிந்தால் நாமும் கவரப்படுவோம். அரசு இயற்கை விவசாயத்தில் கவனம் செலுத்தினால் இந்த நிலைமை மாறுபடும். இப்போதும் சான்றிதழ் பெற சில இயற்கை விவசாயிகள் என்.ஜி.ஓ.க்களுக்கு நிறைய பணம் கொடுக்க வேண்டியுள்ளது. அரசு சான்றிதழ் பெறும் நடைமுறையை எளிமைப் படுத்தவேண்டும். மூன்றாண்டுகள் வரை செல்லக்கூடிய சான்றிதழோடு அடையாள அட்டையை வழங்கினால் அதனைக் காண்பித்து விற்பனை நிலையங்களிலோ அல்லது அரசு அமைத்த கொள்முதல் நிலையங்களிலோ  பொருட்களை விற்பனைச் செய்துக்கொள்ளலாம்.
“தங்களது விளைப் பொருட்களை வாங்கி உதவிச் செய்ய அரசாங்கம் எப்படி தீர்மானித்துள்ளது என்று தெரியவில்லை. அரசின் எண்ணமும் இன்னமும் தெளிவாக இல்லை. என்னுடைய கணிப்பானது உள்ளூர் சமுதாய விற்பனை நிலையங்கள் மூலமாக  சேர்த்துக் கொள்வார்கள். இது எப்படி நடக்கிறது என்று  கவனிக்கவேண்டியது அவசியம். இப்போதும் ஒன்றும் தெளிவாகவில்லை” என்று டாக்டர் நரசிம்மன் வலியுறுத்துகிறார்.
இயற்கை விவசாயிகளில் பலர் அரசின் கருத்தை வரவேற்பதாகக் கூறியுள்ளனர். 20 சதவீதத்துக்குக் கூடுதலாக விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று அனைவரும் பொதுக் கருத்தைத் தெரிவித்துள்ளனர். அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச விலை தங்களுக்குச் சாதகமாக இருக்காது என்ற பொதுவான  எண்ணம் இயற்கை விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது.  இந்த புதிய திட்டம் அமலானால் நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்டு வந்த இயற்கை வேளாண் விவசாயத்தில் பெரிய மாற்றம் ஏற்படுகிறதோ இல்லையோ, மெல்லிய மாற்றம் ஏற்படும்.
மாநில வேளாண் அமைச்சரின் பதிலுக்காக அவரை தொடர்பு கொள்ள முயற்சித்தோம். அமைச்சர் வேலையாக இருக்கிறார் அதனால் திருப்பிக் கூப்பிடுகிறோம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னமும் பதில் கிடைக்கவில்லை.
Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival