உச்சநீதிமன்றத்தின் அலுவலர்களுக்கு, ‘துவைப்பதற்கு அலவன்ஸ்’ என வருடம் தோறும் 21,000 ரூபாய் கொடுக்கப்படுகிறது. அதேவேளையில் நம் நாட்டின் 17 மாநிலங்களில் உள்ள விவசாயிகளின் வருடாந்திர வருமானம் வெறும் 20,000 ரூபாய்தான். நமது விவசாயிகளுக்கு துவைப்பதற்கு துணிகள் இல்லையா? என்று என்னை யோசிக்க வைக்கிறது. துவைப்பதற்கான அலவன்ஸ் மட்டுமல்ல; காண்டம் வாங்கும் காசு உட்பட குடும்பக் கட்டுப்பாடு அலவன்ஸ் என அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதார விலையில் குடும்பக் கட்டுப்பாடு அலவன்ஸ் வழங்கப்பட்டது என்று கேள்விப்பட்டுள்ளீர்களா?
சமூகத்தின் வெவ்வேறு படிநிலையில் வாழும் மக்களின் நிகர வருமானத்தில் நிலவும் வேறுபாடுகள் இத்துடன் முடிவடைவதில்லை. உதாரணமாக, 14 காரிப் பயிர்களுக்கு வழங்கப்பட்ட குறைந்தபட்ச ஆதாரவிலையை எடுத்துக்கொள்வோம். இதில், பயிர் உற்பத்திக்கு விவசாயி செலவளித்த பணம் (A2 cost) மற்றும் விவசாயின் குடும்ப உறுப்பினர்கள் செய்யும் வேலைக்கான கூலி, விவசாயின் கூலி ஆகியவற்றை உள்ளடக்கிய விவசாயி வேலைகளுக்கான கூலி ( farm labour FL) என அனைத்தும் குறைந்தபட்ச ஆதார விலையில் சேர்க்கப்படுகிறது. மேற்குறிப்பிடப்பட்ட A2+FL தவிர, குறைந்தபட்ச ஆதாரவிலையில் விவசாயி செலவு செய்த பணத்தை விட 50 சதவீதம் லாபம் கொடுப்பதாக அரசு கூறுகிறது.
குறைந்தபட்ச ஆதாரவிலையை கணக்கிடும் புதிய சூத்திரம் ‘கமிஷன் ஆப் அக்ரிகல்சுரல் காஸ்ட் அண்ட் பிரைசஸ்’ அமைப்பினால் பகுப்பாய்வு செய்யப்பட்டு உருவாக்கப்பட்டது. இது சுவாமிநாதன் கமிட்டி கொடுத்த பரிந்துரையின் பெயரில் உருவாக்கப்பட்டது. இந்த பரிந்துரையில், தேசிய அளவில் உயர்ந்த விலையை வரலாற்று நிகழ்வாகவும், அரசுக்கு இதனால் 15,000 கோடி கூடுதல் சுமை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை 45 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 50 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ள 7ஆவது சம்பள கமிஷனுடன் ஒப்பிட்டால், அரசுக்கு ஒவ்வொரு வருடமும் 1.02 லட்சம் கோடி ரூபாய் அதிக நிதிசுமை ஏற்படுகிறது.
சுவாமிநாதன் கமிட்டி அளித்த பரிந்துரையின் பேரில், வேளாண் செலவு மற்றும் விலை நிர்ணய கமிஷன் (கமிஷன் ஆப் அக்ரிகல்சுரல் காஸ்ட் அண்ட் பிரைசஸ்) அமைப்பு ஆய்வு செய்து குறைந்தப்பட்ச ஆதாரவிலையைக் கணக்கிடும் புதிய சூத்திரம் உருவாக்கப்பட்டது. இந்த ஆதார விலை உயர்த்தப்பட்டது வரலாற்று நிகழ்வாகக் குறிப்பிட்ட இந்தக் கமிட்டி, இதனால் அரசுக்கு இதனால் 15,000 கோடி கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளதாகவும் கூறியது. இதனை 45 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 50 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கான ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைப்படி, அரசுக்கு ஒவ்வொரு ஆண்டும் 1.02 லட்சம் கோடி ரூபாய் அதிக நிதிச்சுமை ஏற்படுகிறது. 7ஆவது ஊதியக் குழு பரிந்துரை நாடு முழுவதும் உள்ள மாநில அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்தப்பட்டால் ரூ.4.5 லட்சம் கோடியிலிருந்து ரூ.4.80 லட்சம் கோடிவரை நிதி சுமை ஏற்படும் என்று மற்றொரு ஆய்வு தெரிவித்துள்ளது.
அடிப்படை ஊதியத்தைத் திருத்தி அமைத்த ஏழாவது ஊதியக் குழு, வீட்டு வாடகை அலவன்ஸை மாநகரங்களின் வாழ்க்கைத் தரத்துக்கு ஏற்ப 24 சதவீதம் , 16சதவீதம், 8 சதவீதம் என உயர்த்தியுள்ளது.
ஆனால், இதற்கு எங்கிருந்து இவ்வளவு பணம் வரும் என்று ஒருவரும் கேள்வி எழுப்பவில்லை. நிதிப் பற்றாக்குறை மோசமடையும் எனக் கூறி எந்த பொருளாதார நிபுணரும் கொடிபிடிக்கவில்லை. ஆனால், காரீப் பருவப் பயிர்களுக்குக் கொடுக்கப்படும் 15,000 கோடி ரூபாய் மட்டும் எங்கிருந்து வரும் என கேள்வியெழுப்புகின்றனர். இந்த 15,000 கோடி ரூபாய் என்பது ஆண்டு முழுவதும் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் டிராவலிங் அலவன்சுக்கு சமமான தொகை. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் பயணப்படிக்கு (டிராவலிங் அலவனசுக்கு) வழங்கப்படும் பணம் மட்டும் எங்கிருந்து வரும் என்று யாரும் கேள்வி கேட்டதில்லை. இதிலிருந்து விவசாயிகளை பாரபட்சமாக நடத்துவது கண்கூடாக தெரிகிறது.
இதுமட்டுமில்லாமல் ஊழியர்களுக்கு மாதம்தோறும் மொத்தம் 108 அலவன்ஸ்கள் வழங்கப்படுகின்றன. அதில் பெரும்பான்மையான அலவன்ஸ் பாதுகாப்புத்துறை, துணை ராணுவம் மற்றும் ரயில்வே துறை ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு வழங்கப்படும் சலுகைகளால் 39,000 கோடி ரூபாயும் அலவன்ஸ் வகையில் 29,000 கோடி ரூபாயும் அரசுக்கு நிதி சுமை ஏற்படுகிறது. இந்த அலவன்ஸ்களுக்கு வழங்கப்படும் தொகை, மொத்த சம்பளத்தில் குறிப்பிடத்தக்க அளவுக்கான பெரிய தொகை.
அடிப்படை ஊதியத்தைத் திருத்தி அமைத்த ஏழாவது ஊதியக் குழு, வீட்டு வாடகை அலவன்ஸை மாநகரங்களின் வாழ்க்கைத் தரத்துக்கு ஏற்ப 24 சதவீதம் , 16சதவீதம், 8 சதவீதம் என உயர்த்தியுள்ளது. எப்போதாவது விவசாயிகளின் பயிர் உற்பத்தி விலை என்பது வீட்டு வாடகை, கல்வி அலவன்ஸ், மருத்துவ அலவன்ஸ், பயண அலவன்ஸ் என்று சேர்த்து கணக்கிடப்பட்டுள்ளதா? ஒரு சிறு விவசாயியின் குடும்பத்தில் ஒருவர் உடல் நலமில்லாமல் போனால், அக்குடும்பம் வறுமைக்கோட்டுக்கு கீழே தள்ளப்படுகிறது என்பதை பல்வேறு ஆய்வுகள் உறுதி செய்திருக்கின்றன. ஒரு விவசாயியின் வருமானத்தில், கிட்டத்தட்ட 40 சதவீதம் அவருடைய குடும்ப உறுப்பினர்களின் மருத்துவச் செலவுக்கு மட்டுமே செலவிடப்படுகிறது. இந்த நிலையில், ஒரு விவசாயி அவரது பிள்ளைகளுக்கு கண்ணியமான கல்வியை எப்படி கொடுக்க முடியும் என்று நாம் சிந்தித்ததுண்டா?
விவசாயிகளின் வருமானம் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியேதான் உள்ளது.
மகாராஷ்ட்ராவில் உள்ள யாவட்மால் என்ற கிராமத்தில் சிறு விவசாயின் மகனான கோபால் பாபாராவ் ரதோட் எனும் 22 வயது மாணவன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக எழுதிய கடிதத்தில் விவசாயிகளின் வருமானக் கொள்கை குறித்த கேள்விகளை எழுப்பியிருந்தார். நகரத்தில் வசிக்குக் இளைஞனுக்கு நிகராக விவசாயி மகனான என்னால் எப்படி போட்டிபோட முடியும்? என்பது அவரது கேள்வி. ‘’ஓர் ஆசிரியரின் மகன் 1 லட்சம் ரூபாய் செலவழித்து ஓர் என்ஜினியர் ஆக முடியும். ஆனால் ஒரு விவசாயின் மகன் அப்பெரிய தொகையை கல்விக்காகச் செலவழிக்க முடியுமா?’’ என்று கேட்ட அவர், “அரசு ஊழியர்களுக்கு அவர்கள் கேட்காமலேயே பயணப்படி (டிராவலிங் அலவனஸ்) வழங்கப்படுகிறது. ஆனால் விவசாயிக்கு அவர் உற்பத்தி செய்யும் பொருளுக்கேற்ற விலை மறுக்கப்படுவது ஏன் ? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.