Read in : English
கர்நாடக சங்கீதத்தில் கிறிஸ்தவ பாடல்கள் பாடுவது குறித்த சர்ச்சைகள் இன்னும் ஓயாத நிலையில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் மறைந்த பிரபாகரனை, புகழ்ந்து பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் ஓராண்டுக்கு முன்னால் பாடிய பாட்டை வலதுசாரிகள் தோண்டி எடுத்து அதுகுறித்து சமூக ஊடகங்களில் தாக்குதல் தொடுத்தனர். டவிட்டரில் அதுகுறித்து பகிர்ந்தனர். உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் வழிபடப்படும் கடவுளான முருகனோடு பிரபாகரனை ஒப்பிட்டு அந்தப் பாட்டு எழுதப்பட்டிருந்தது.
அந்தப்பாடல் இடம் பெற்றுள்ள யூ டியூப் பக்கம் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பாடலை எடுத்து விடுவதில் நித்யஸ்ரீ வேகமாகச் செயல்பட்டார். அந்தப் பாடலுக்கு நித்யஸ்ரீ பதிப்புரிமை கோருவதால் அந்தப் பாடல் வீடியோ நீக்கப்பட்டது என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. கூகுள் தேடலிலும் அந்தப் பாடல் கிடைக்கவில்லை. அவர் தரப்பு காரணங்களைக் கேட்க நித்யஸ்ரீயை அணுகிய போது, இதுகுறித்து அவர் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை. `என் மனசாட்சி தெளிவாக இருக்கிறது என்பதை மட்டும் நான் சொல்ல முடியும்’ என்று அவர் முடித்துக் கொண்டார்.
இதுபோன்ற விஷயங்களில் பிரபலங்கள் மட்டும் இலக்காவதில்லை. சாதாரண மனிதர்கள் கூட சாதாரண விஷயங்களுக்காக மீம்ஸ் மூலம் பகடி செய்யப்படுகின்றனர். வட போச்சே என்பது என்பது பிரபலமான மீம். அது, சில நேரங்களில் மக்களின் அவதூறான கருத்துகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் வழிவகுத்தது.
“எப்பொழுதெல்லாம் திரைப்படப் பிரமுகர்கள் பற்றியோ, விளையாட்டு வீர்கள் பற்றியோ அல்லது அரசியல்வாதிகள் பற்றியோ குறிப்பிடப்படும்போது எரிச்சல் அடையும் சிலர், தாறுமாறாக விமர்சனம் செய்கிறார்கள். சிலர் அதற்கும் மேலே சென்று, அந்தப் பக்கத்தை முடக்குவதாகவும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்புகிறார்கள். நாங்கள் இந்த மாதிரியான அச்சுறுத்தல்களுக்குப் பயந்து எங்களது இடுகைகளை அகற்றியதில்லை. அவரது படைப்பு குறித்த விமர்சனத்தைத் தாங்காத பிரபல நடிகரும் இசை அமைப்பாளருமான ஒருவர் டிவிட்டர் பக்கங்களில், விமர்சனம் செய்தவர்களை தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தித் திட்டினார். அவரது நடவடிக்கையைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில், நாங்கள் அந்த ட்வீட்டை ஸ்கிரீன்ஷாட் எடுத்து எங்களது பக்கத்தில் பகிர்ந்தோம். எங்களது இடுகை வைரலாகி பலரது கவனத்தை ஈர்த்தது. சில மணி நேரத்துக்கெல்லாம், பேஸ் புக்கிலிருந்து எங்களுக்கு நோட்டீஸ் வந்தது. வேறு ஒருவடைய அறிவுசார் சொத்துரிமையை பயன்படுத்துவதாக அது கூறியது. அதைப் பார்த்ததும் எங்களுக்கு சிரிப்புதான் வந்தது” என்கிறார் தனது பெயர் குறிப்பிட விரும்பாத அந்தப்பக்கத்தை உருவாக்கியவர்.
யூ டியூப்பை பொருத்தவரை, நித்யஸ்ரீயின் பாடல் வீடியோவுடன், அந்த வீடியோவில் இணைக்கப்பட்டிருந்த அவரது வேறு பாடல்களும் நீக்கப்பட்டன. சேனல் ஒருங்கிணைப்பாளருக்கு வந்த காப்புரிமை கோரிக்கையின் விளைவுதான் இது என்று நம்பப்படுகிறது. யூ டியூப் தரப்பில் இதுகுறித்து விளக்கம் பெற முடியவில்லை.
முன்பு பிரபலங்களுக்காக இருந்த மக்கள் தொடர்பு பணிகள் தற்போது, ஆன்லைன் நன்மதிப்பு மேலாண்மை (Online Reputation Management) என்ற புதிய பணியாக உருவாகியுள்ளது. இணையவழி வம்புகள், அவதூறுகளே இதற்குக் காரணம். “இணைய தளத்தில் நன்மதிப்பைப் பெறுவதற்கு உதவும் வகையில் இந்தப் பணியாளர்களைப் பணியமர்த்த பன்னாட்டு நிறுவனங்களும், பிரபலங்களும் விரும்புகிறார்கள். தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்கள், இணையதளங்களில் வெளியாகும் செய்திகள் மற்றும் விமர்சனங்களைக் கையாளுவதுதான் அவர்களது பணி. தங்களது இணைய தள தகவல்களைக் கையாளுவதற்கு ஆன்லைன் நன்மதிப்பு மேலாண்மை நிறுவனங்களை பல நிறுவனங்கள் விரும்புகின்றன” என்கிறார் சென்னையில் உள்ள ஆன்லைன் நன்மதிப்பு மேலாண்மை நிறுவனமான மென்சகம் நிறுவனத்தின் நிறுவன இயக்குநர் ராஜேந்திர பிரசாத்.
வட இந்தியாவில் உள்ள ஒரு பாடகிக்கு (அவரது பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை) தாங்கள் உதவிய சம்பவத்தை நினைவுகூர்ந்தார் ராஜேந்திரா. “அது அவரது முதல்படம். ஓர் இயக்குநருடன் அவருக்குத் தொடர்பு இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. கூகுள் தேடலின் முதல் பக்கத்திலும் அது வெளிவந்தது. இவை அவரது நற்பெயரைக் குலைக்கும் வகையில் இருந்தது. அவர் எங்களை அணுகினார். அந்தப் பணியை நாங்கள் எடுத்துக் கொண்டோம். சமூக ஊடகங்களில் அவரைப் பற்றிய சுயவிவரப் பக்கத்தில் பாசிட்டிவான செய்திகளை உருவாக்கி, அதை இணையதள இணைப்புகளில் வெளியிட்டோம். எதிர்மறையான தகவல்களை கூகுளின் மூன்றாம் பக்கத்துக்குத் தள்ளினோம். அதன் மூலம் அவரைப் பற்றிய பாசிட்டிவான தகவல்கள் மூலம் எதிர்மறை தகவல்கள் மறைந்தன. இந்தச் செய்தி வெளியான இந்தியா டுடே போன்ற இணைய தளங்களை எதிர்கொள்வது பெரிய சவால். இதற்கு எங்களுக்கு ஓராண்டு கால அவகாசம் தேவைப்பட்டது” என்கிறார் அவர்.
இணைய தளத்தில் அவதூறுக்கும் பகடிக்கும் ஆளாகும் டாக்டர் போன்ற மற்றவர்களுக்கும் இந்த நிறுவனம் கை கொடுக்கிறது. “எங்களது வாடிக்கையாளராக உள்ள ஒரு மருத்துவர் மீது ஒரு நோயாளி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். 20 ஆண்டு அனுபவமிக்க அவர், தான் தவறு செய்யவில்லை என்பதை அறிந்திருந்தார். ஆனால், அந்த நோயாளி ஏன் இந்த நடவடிக்கையில் இறங்கினார் என்பது தெரியவில்லை. டாக்டருக்கு சாதகமாக நீதிமன்றத் தீர்ப்பு வந்தது. நாங்கள் இணைய தளத்தில் அவருக்கு எதிரான எதிர்மறை விமர்சனங்களை மாற்றினோம்” என்கிறார் அவர்.
இது எப்படி வேலை செய்கிறது என்று நீங்கள்ஆச்சரியப்பட்டால், ஆன்லைன் நன்மதிப்பு மேலாண்மை நிர்வாகிகளுக்கு உதவுவதற்கு மென்பொருள் கருவிகள் உள்ளன. “நாங்கள் Talkwalker, Social Mention, Trackur and Naymz போன்ற மென்பொருள் கருவிகளைப் பயன்படுத்துகிறோம், ஒரு குறிப்பிட்ட நபர் அல்லது பிராண்ட் குறித்த சமீபத்திய பதிவுகளையும் விமர்சனங்களையும் எங்களுக்குத் தெரிவிக்கும். எதிர்மறையான விமர்சனங்களை நாம் அகற்ற முடியாது. ஆனால், அந்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கலா. அல்லது நெகட்டிவ் அம்சங்களை மறைக்கும் வகையில் பாசிட்டிவான கருத்துகளை வெளியிடலாம்” என்கிறார் ஆன்லைன் நன்மதிப்பு மேலாண்மை நிறுவனமான சென்னையில் உள்ள ரன்கிரேஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ராஜா செல்லன்.
இதுபோன்ற பிரச்சினைகளை மட்டும் ஆன்லைன் நன்மதிப்பு மேலாண்மை நிறுவனங்கள் சமாளிப்பதில்லை. சில பிரபலங்களுக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த நிறுவனங்களுக்குப் பணிகளை வழங்குகிறார்கள். உலகில் மூன்று மிகப்பெரிய சமூகவலைத் தளங்கள் உள்ளன. அதனைப் பயன்படுத்துபவர்கள், அந்த சமூக வலைத் தளங்களில் ஆறு மணி நேரம வரை செலவிடுகின்றனர். இந்தப் பதிவுகளின் மூலம் எதிர்மறையான கருத்துகளைப் பார்த்து பிரச்சினை என்னவென்று கண்டுபிடித்து, வாடிக்கையாளர்களுடன் கலந்து விவாதித்து சிக்கல்களைச் சரிசெய்கிறார்கள். “ வீடியோக்களைப் பொருத்தவரை, பதிவிறக்கம் செய்யப்பட்டு பகிரப்பட்டால், யூ டியூபிலிருந்தால் தவிர, மற்ற வகையில் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. ஏற்படும பாதிப்பைக் கட்டுப்படுத்துவது விரிவாக இருக்கும்” என்கிறார் ராஜா.
“ஒரு சுயவிவர குறிப்பிலிருந்தோ அல்லது ஒரு நேர்காணல் மூலமோ விண்ணப்பதாரரைப் பற்றி புரிந்து கொள்ள முடியாத சில விஷயங்கள் உள்ளன. எனவே, வேலைக்கு தேர்வு செயப்படக்கூடிய விண்ணப்பதாரரின் சமூக வலை தள விவரங்களை சரிபார்க்கும்படி ஆன்லைன் நன்மதிப்பு மேலாண்மை நிறுவனங்களை நாடுகிறார்கள். அந்த விண்ணப்பதாரர் சமூக வலை தளங்களில் அவதூறாகவோ அல்லது தாறுமாறான வார்த்தைகளைப் பயன்படுத்துவது தெரியவந்தால், அந்த அமைப்பின் பண்பாட்டுக்கு அவர் பொருத்தமாக இருக்க மாட்டார். இதுகுறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்களைத் தகுந்த முறையில் கையாள வேண்டும். விண்ணப்பத்தில் நான்கு நிறுவனங்களில் வேலை பார்த்ததாக்க கூறியிருப்பார். ஆனால், லிங்ட்டின் சுயவிவரக் குறிப்பைப் பார்த்தால் ஐந்து நிறுவனங்களில் அவர் வேலை பார்த்தது தெரியவரும். எனவே, விண்ணப்பத்துக்கும் இணைய தளப் பதிவுக்கும் இடையே உள்ள தகவல் வேறுபாடு குறித்து சரிபார்க்க வேண்டியதுள்ளது. பொதுவாக, ஒருவரின் சுயவிவரக் குறிப்பைப் பார்க்கும்போது அவர் உண்மையிலேயே எந்த மாதிரியான நபர் என்பதை அறிந்து கொள்ள முடியும். அதை வைத்துக் கொண்டு உரையாடலைத் தொடங்க முடியும். எனவே, இந்த முறையில் சாதக பாதகங்கள் உள்ளன” என்கிறார் தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத மும்பையைச் சேர்ந்த மனித வள மேம்பாட்டு நிர்வாகி ஒருவர்.
Read in : English