Read in : English
அரசியல் என்ற வார்த்தையே அரிசியில் இருந்து வந்ததாக பெரியவர்கள் கூறுவார்கள். ஆம், அது உண்மைதான். அரிசி சில சாம்ராஜ்யங்களைப் புரட்டி போட்டுள்ளது என்பது கண்கூடு. 1967ஆம் ஆண்டு திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்ததன் மூலக்காரணம் அரிசி என்றால் அது மிகையாகாது.
(இந்த கட்டுரை முதலில் Sept 7,2018 அன்று வெளியிடப்பட்டது)
ஆட்சிக்கு வந்த திராவிடக் கட்சிகள் என்ன செய்தன என்று பார்த்தால், பொதுவிநியோகத் திட்டத்தில் அரிசியின் விலையை மிகவும் குறைத்தும் பின்பு, குடும்பத்திற்கு 20 கிலோ வரை இலவசமாக வழங்கியும் உழவர்களின் உற்பத்தி பொருளான நெல்லின் மதிப்பைக் குறைத்தது. அதன் காரணமாக, விவசாயிகளின் சமூக அந்தஸ்து மிகவும் மோசமான நிலைக்குத் தற்போது தள்ளப்பட்டு வருகிறது. மத்திய அரசும் தன் பங்குக்கு, வேளாண் தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தொழில்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவிட்டது.
கடந்த நான்கு ஆண்டுகளாக விவசாயிகளை சந்திக்காத பிரதமர், தற்போது விவசாயிகளின் மேல் காட்டும் அனுசரணைக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
தற்போது பாரத பிரதமர் நரேந்திர மோடி, நெல்லின் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தி அறிவித்துள்ளார். இது ஏதோ விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றியது போல் ஒரு பிம்பம் உருவாக்கப்படுகிறது. ஆனால், இது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் வருவதற்கு முன்பு நிகழ்த்தப்படும் ஒரு சம்பிரதாயமே. கடந்த நான்கு ஆண்டுகளாக விவசாயிகளை சந்திக்காத பிரதமர், தற்போது விவசாயிகளின் மேல் காட்டும் அனுசரணைக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
இன்று கூட உளுந்துக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்கவில்லை. தற்சமயம் கிலோ ரூ.36-க்கு விற்கப்படுகிறது. காஞ்சிபுரம் ஒழுங்குமுறை விறபனை கூடத்தில் நெல்லின் விலை ரூ.13.50/கிலோ என விற்கப்படுகிறது. ஒவ்வொரு விவசாயியும் Return on investment எவளவு என்பதைப் பார்ப்பார்கள். தற்சமயம் கேரளாவில் ஒரு ஏக்கர் நிலத்தின் மதிப்பு 50 லட்சம். தமிழ்நாட்டில் ஒரு ஏக்கர் நிலம் 15 லட்சம் ரூபாய். பீகாரில் 5 லட்சம் ரூபாய். மேலும் மாநிலத்த்துக்கு மாநிலம் விவசாய விளாஇபொருட்களின் உற்பத்தி செலவு மாறுபடுகிறது. கேரளாவில் தினக்கூலி ரூ.600, தமிழ்நாட்டில் ரூ.400, பீகாரில் ரூ.90. -இப்படியாக உற்பத்தி செலவு, கூலி உள்பட பல விஷயங்கள் இந்தியா முழுமைக்கும் ஒரே சிராக இருப்பதில்லை. அப்படியிருக்க மொத்த இந்தியாவுக்கும் Uniform price fixtation எப்படி சாத்தியமாகும்? இதற்கு பொருளாதார வல்லுநர்கள் தான் விளக்கமளிக்க வேண்டும்.
விவசாயிகளாகிய நாங்கள் தொடர்ந்து திரு.மாண்டேசிங் அலுவாலியாலி, திரு.ரங்கராஜன், திரு.ரகுராம், திரு.ராஜன் மற்றும் தற்போது பதவியை ராஜினாமா செய்த திரு.அரவிந்த் சுப்ரமணியன் என பல பொருளாதார மேதைகளை சந்தித்துவிட்டோம். ஆனால் அவர்கள் ஒருவரிடமும் எங்களது பிரச்சனைக்கு சரியான தீர்வு இல்லை. ஏனெனில் மத்திய, மாநில அரசுகளின் முக்கிய கடமையே உணவுப் பொருட்களின் விலை ஏறாமலும் ஒரே சீராகவும் இருக்கும்படி பார்த்துக்கொள்வதுதான். அப்படி இருக்கும்போது உணவுப்பொருட்களின் மூல பொருட்களான நெல், கோதுமை போன்ற அத்தியாவச பொருட்களுக்கு அவர்களிடம் விலை உயர்த்திக் கேட்கும் பரிதாப நிலையில் தான் விவசாயிகள் உள்ளோம்.
Read in : English