Read in : English
விவசாயம் என்பது சூதாட்டம் போன்ற ஏற்ற தாழ்வுகள் கொண்டது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அது நிரந்தர வருமானத்தை உறுதி செய்யாது. இதை அறிந்த போதிலும் அல்லாடி மகாதேவன் போன்ற மனிதர்கள் ஒரு புதைமணல் என்று அறிந்தும் விவசாயத்தில் இறங்கி தாக்குப்பிடித்து வளர்ந்து வருகிறார்கள். . பன்னாட்டு நிறுவனத்தில் அதிக சம்பளம் தரும் வேலையை விட்டு விட்டு முழு நேர விவசாயி ஆனார். அத்துடன் அவரது பணி நின்றுவிட வில்லை.
அவரது பண்ணையைப் பார்வையிடும் பள்ளிக் குழந்தைகளுக்குபாடம் நடத்துகிறார். வளர்ந்து வரும் உணவுத் தேவையின் முக்கியத்துவம் குழந்தைகளுக்குக் கற்பிக்கப்படுகிறது. அவர்கள் வயலில் உள்ள சகதியில் மிதித்து விதைகள் நட்டனர். இந்த நேரடிக் களப்பணியை அவர்களால் மறக்கமுடியாது. இயற்கை வேளாண்மையில் இறங்கியது குறித்தும் விவசாயிகள் வெற்றிகரமாக இருப்பதற்கும் என்ன தேவை என்பதையும் அல்லாடி விளக்குகிறார்:
பயணம் தொடங்கியது
1995இல் எனது இயற்கை வேளாண்மைப் பயணம் தொடங்கியது. இயற்கை வேளாண்மை பயணம் மிகவும் எளிதாக இருந்தது என்பதை நீங்கள் நம்பமாட்டீர்கள். நோக்கம் எளிமையானது. யுநாம் சுத்தமான பசுமை உணவை எப்படி உற்பத்தி செய்வோம்?” என்பதுதான்.
நாம் நல்ல உணவினை சாப்பாட்டு மேசைக்குக் கொண்டு வரும் போது, அது நம்மைச் சுற்றி இருக்கும் உலகத்தைக் கவனித்துக் கொள்ளும் என்பது நமது சிந்தனை. நாம் தொடர்ந்து நல்ல உணவை உற்பத்தி செய்தோம். ஆனால், பண்ணையை தக்க வைத்துக் கொள்ளும் எந்த வருமானத்தையும் திரும்பப் பெறவில்லை.
2010இல், நாங்கள் தவித்தபோது எங்கள் நடைமுறையை மாற்றவேண்டும் என்பதை உணர்ந்தோம். எங்கள் பயிர்கள்ஆரோக்கியமான, சுவையான உணவை வழங்கின, ஆனால், செலவுக்கு ஏற்ற வருமானம் கிடைக்கவில்லை. செலவுக்கு ஏற்ற வருவாய் ஈட்டுவதற்கு பன்மய பயிர் சாகுபடி ஒரு வாய்ப்பாக அமைந்தது. இது மீண்டும் இயற்கை விவசாயத்துக்கு நமது பண்ணைகளில் இடமளித்தது.
எங்கள் பண்ணை
36 ஏக்கரில் அமைந்துள்ளது எங்களது பண்ணை. காய்கறிகள், பழங்கள், பூக்கள் ,மூலிகைகள், தானியங்கள், பருப்பு வகைகள், கீரைகள், மரங்கள் போன்றவை இருந்தன. பசுந்தாள் உரம் தயாரிப்பதற்கான நடைமுறைகளையும் பின்பற்றினோம் இரண்டாவது ஆண்டில் ஒரு ஏக்கரில் ரூ.1லட்சம் வீதம் வருவாய் ஈட்ட முடிந்தது. 5வது ஆண்டில் ஒரு ஏக்கருக்கு ரூ. 3லட்சம் வீதம் வருமானம் அதிகரித்தது. முதலாண்டில் நூறு வகையாக இருந்த பயிர்கள் நான்காவது ஆண்டில் 500க்கு மேற்பட்டதாக அதிகரித்தது.
பன்மய பயிர் சாகுபடி என்றால் என்ன?
பல்வேறு வகையான காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள், மூலிகைகள், கீரை வகைகளை ஒரே வயலில் வளர்த்து அத்துடன் பசுந்தாள் உர உற்பத்திக்கும் இடமளிக்கும் ஓர் எளிய நடைமுறை.
பன்மய சாகுபடி ஏன்?
இது இயற்கைப் பரிமாற்றத்துக்கான இயற்கை சூழலை உருவாக்குகிறது. அதன் மூலம், விவசாயச் செலவீனங்களை 40 முதல் 60 சதவீதம் வரை குறைக்கிறது.
நுகர்வோருக்கு நெருக்கமாக விவசாயி இருக்கிறார். இது, விவசாயப் பொருள்களைச் சந்தைப் படுத்துவதை மேம்படுத்துகிறது. பல்வேறு வகையான விவசாயப் பொருள்கள் இருப்பதால்,, வாடிக்கையாளர்களைத் திரும்பத் திரும்ப ஈர்க்க முடியும்.
பல்வேறு ரகங்கள் இருப்பதால் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் ஆண்டு முழுவதும் வருமானம் ஈட்டி அதை ஈடு செய்ய முடியும். அதனால், விவசாயிகளின் வருமானத்தை மேம்படும்.
பயிர்களைத் தாக்கும் நோய் மற்றும் பூச்சிகளை இயற்கை முறையில் சமாளிக்க முடியும். பல்லுயிர் பெருக்கம், மண்ணிலும் நுண்ணுயிர் கட்டமைப்புகளில் சமநிலையைஏற்படுத்துகிறது.
பாரம்பரிய ரகங்கள் எவை?
உள்ளூர் மக்களால் பயன்படுத்தப்படும் பயிர் வகைகள் பாரம்பரிய ரகங்களாகக் கருதப்படுகிறது.
ரகங்களைத் தேர்வு செய்வது எப்படி?
நமது சமையலறையிலும் நம்மைச் சுற்றியும் பயன்பாட்டில் உள்ள பயிர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும். சராசரியாக 83 வகையான ரகங்கள் வீடுகளில் பயன்படுத்தப்படுகின்றன என்பதை ஆய்வுகள் காட்டுகின்றன.
சாகுபடி மாதிரி என்றால் என்ன?
பயிர் சாகுபடி முறை 3 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரை குறுகிய காலம் கொண்டதாக இருக்கலாம். அல்லது 1 முதல் 2 ஆண்டுகள் வரை இருக்கலாம். 4 ஆண்டுகளும் அதற்கு மேலும் நீண்டகாலம் உள்ளதாகவும் இருக்கலாம். இதன் மூலம், குறிப்பிட்ட காலத்தில் வருமானம் அதிகரித்து வரும்.
இயற்கை வேளாண்மை என்பது ரசாயன உரங்களைப் பயன்படுத்தாமல் இருப்பது என்பது மட்டுமல்ல, இயற்கையின் ஒரு பகுதியாக சாகுபடி செய்தல் என்பதுதான். அதன் மூலம் நம்மைச் சுற்றி ஒரு சமநிலையை உருவாக்க முடியும்.
கேள்விகளுக்கு தொடர்பு கொள்ள 9840277566 or email amd@greenembryo.com or alladiss@gmail.com
Read in : English