Read in : English
அன்புள்ள விவசாயிகளே! நாம் அனைவரும் அறிந்த செய்திதான்…தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் முழுக் கொள்ளளவை எட்டத் தொடங்கியுள்ளன. சில அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட ஆரம்பித்துள்ளதால் சில கிராமங்களில் வெள்ளம் புகுந்துள்ளது.
ஆடி மாதத்தில் மழை பெய்யாத போதும் எப்போது எப்போது வந்தது என யாராலும் நினைவுபடுத்திக் கூற முடியாது. காவிரி நீர் கிடைத்துவிட்டது என நாம் அதிகம் அகமகிழ்ந்துவிட்டோம். ஆனால் ஒரு நிமிடம் நினைத்து பாருங்கள், ஆயிரக்கணக்கான கன அடி நீர் கடலில் சென்று கலக்கிறது. இன்னும் அடுத்த ஆறு மாதங்களில் தண்ணீர் பஞ்சத்தை மீண்டும் எதிர்கொள்ளுவோம். இது நமக்கு புதிது அல்ல.பல ஆண்டுகளாக பார்த்துக்கொண்டும் கேட்டுக்கொண்டும் உள்ளோம்.
உங்கள் கவனத்துக்கு ஒரு விஷயத்தை கொண்டு வர விரும்புகிறேன். இந்த நீரை நாம் கொஞ்சமாவது சேமிக்க முடியும். எப்படி? நமது வயல்களில் தோட்டங்களில் பண்ணைக் குட்டைகள் அமைத்தால் அது விவசாய வளர்ச்சிக்கும் உற்பத்திக்கும் வெகுவாக உதவி செய்யும்.
இது அரசின் வேலையில்லையா என கேள்வி கேட்கலாம். ஒரு விஷயத்தை மட்டுமே பதிலாகச் சொல்ல விரும்புகிறேன் என் நண்பர்களே…
எல்லா விஷயங்களுக்கும் அரசை சார்ந்திருப்பது ஒரு போதும் கைகொடுக்காது:உதவாது.
எனது பல ஆண்டுகள் பயணத்தில், சில இடங்களில் தனிநபர்கள், சங்கங்கள், அவர்களது அற்புதமான வேலைகளால் என்னை ஆச்சர்யப்படுத்தியுள்ளார்கள். அந்த வேலையை அவர்கள் எந்த விருதுக்கும் பாராட்டுக்கும் ஆசைப்பட்டு செய்தது கிடையாது.
திருச்சி அருகில் ஒரு சங்கத்தை பார்த்தேன். அச்சங்கத்துக்கு குடும்பம் என்று பெயர். அது ஒரு தொண்டு நிறுவனம். (0431- 2331879&2331842) இந்த சங்கம் புதுக்கோட்டையில் இருந்து 40 கி.மீ தூரத்தில் உள்ள கொங்கதிரையான்பட்டி என்னும் ஊரில் மழை நீரை சேமிக்கவும் பாதுகாக்கவும் மரங்களை நட்டிருந்தார்கள். இது அந்த விவசாயிகளுக்கு அவர்களின் வாழ்க்கையை மறுசீரமைப்பு செய்ய உதவியுள்ளது. அதனால் அவர்கள் வேலை தேடி நகரங்களுக்கு குடிபெயரவில்லை.
மானாவாரி நிலத்தில் விவசாயிகள் நெல்லும் நிலக்கடலையும் பயிர் செய்கிறார்கள். அந்த கிராமத்தில் இருக்கும் 35 கிணறுகள் குடிநீர் மற்றும் நீர் பாய்ச்சப் பயன்படுகிறது. பருவமழை தவறினால் நிலத்தில் பயிர் செய்யமுடியாமல் வேலை தேடி நகரங்களுக்கு இடம் பெயர்ந்தார்கள். சிலர் மன உளைச்சலில் தங்களுக்குக் கிடைத்த விலையில் நிலத்தை விற்றுச் சென்றனர். இதனை உள்ளூர் பஞ்சாயத்து நிர்வாகம் கவனிக்கவில்லை;இடம் பெயர்ந்து போகும் மக்களை தடுக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
அந்த கிராமத்துக்கு குடும்பம் தொண்டு நிறுவனம், 2008-09 ஆம் ஆண்டு அங்கு நிலவும் நிலைமையை தானே தெரிந்துகொள்ளச் சென்றது. அப்போது நடந்த உரையாடலில் அங்க்ஜு விவசாயிகள் தண்னீரின் மதிப்பை அறிந்து அதனை சேமிக்க முயற்சி எடுப்பதில்லை;மரங்களும் நடுவதில்லை என்பதை உணர்ந்துள்ளனர். மரங்கள் வளர்க்க வேண்டும் என்று குடும்பம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கிராம மக்களிடம் கூறியபோது அவர்கள் சிரித்தனர். காரணம் பயிர் வளர்க்கவே நீரில்லாதபோது, மரம் வளர்ப்பது எப்படி என்பதே அவஎர்களின் சிரிப்புக்குக் காரணம். அவர்களை குடும்பம் அமைப்பை சேர்ந்தவர்கள் பேசி சம்மதிக்க வைத்தனர்.
அந்த ஊரில் 7 குழுக்கள் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு குழுவிலும் 14 உறுப்பினர்கள் இருந்தனர். அவர்களில் 7 பேர் ஆண்கள்; 7 பேர் பெண்கள். இந்த உறுப்பினர்களை வைத்து கிராமத்தில் ஆங்காங்கு பண்ணைக் குட்டைகளை வெட்டினர். கிட்டத்தடட் நான்கைந்து வருடங்களில் பல பண்ணைக் குட்டைகள் தோண்டப்பட்டன. மேலும் கால்வாய்களில் தூர்வாரப்பட்டது.
கிராமத்தினர் கொடுத்த ஆலோசனையின் பேரில் பழ மரங்களும் கட்டைகளாகும் மரங்களும் நடப்பட்டன. ஆரம்பக்கட்டத்தில் குழுவினரே மரக்கன்றுகளை கவனித்துக்கொண்டார்கள். 5-6 வருடங்களில் அந்த கிராமம் கட்டாந்தரையாக இருந்தது விளைநிலமாக மாறியது. இந்த வேலையை தொண்டு நிறுவனத்துக்கு பதில் உள்ளூர் நிர்வாகம் தான் செய்திருக்க வேண்டும் என அக்கிராம மக்கள் தெரிவித்தனர். இப்போது அந்த கிராமம் முழுதும் மரங்கள் உள்ளன. தண்னீர் அவர்களுக்கு பிரச்சனையில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கு நீர் இல்லை. நிலம் வெறுமையாக இருந்தது.
இப்போது சிந்த்தித்து பாருங்கள்! நாம் ஒவ்வொருவரும் இதேபோல் முயற்சி செய்தால் உடனடியாக இல்லாவிட்டாலும் நமது கிராமமும் சிஒல வருடங்களில் தண்ணீர் பற்றாக்குறையை அழித்திட முடியும். நாம் ஒன்றிணைந்து நமக்காக மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த கிராமத்தின் நலனுக்காகவும் செய்தால், நமது கிராமம் நீர் பற்றாக்குறை நீங்கி, தற்சார்புடைய கிராமமாக உருவாகும். அதற்கு நமக்கு குடும்பம் போன்று ஒரு தொண்டு நிறுவனம் தேவையில்லை. நாமே இணைந்து வேளாண்துறையினரிடம் கோரிக்கை விடுக்கலாம். அவர்கள் செய்யவில்லை எனில் மாவட்ட ஆட்சியரிடம் சென்று கூறலாம். அங்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கு பதிவு தபால் அனுப்பலாம். முடிந்தால் அவரையே நேரில் சந்திக்க முயற்சி செய்யலாம்.
இன்றைய சூழ்நிலையில் எதுவும் முடியத காரியமில்லை நண்பர்களே… அடுத்தவாரம் சந்திக்கும்வரை நன்றி.
Read in : English