Read in : English
கடந்த 5 அல்லது 6 ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, மேட்டூர் நீர்மட்டம் உயர்வு, தேக்கி வைக்கப்படும் கொள்ளளவு அதிகரிப்பு என அடிக்கடி ஊடகங்களில் செய்திகள் வெளிவருகிறது. வழக்கமாக இந்த மாதத்தில் டெல்டா விவசாயிகள், தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்வார்கள். நீர்பற்றாக்குறை காரணமாக, நிலங்கள் வறண்டு போய் குறுவை சாகுபடி மகசூலை வறட்சி தாக்கும். இதனால் விவசாயிகள் பாதிப்புக்குள்ளாவார்கள்.
ஆனால் தற்போது வேறு மாதிரியான சூழ்நிலை நிலவுகிறது. அணையின் நீர்மட்டம் வழக்கத்திற்கு மாறாக உற்சாகமாக காணப்படுகிறது. பயிர்கள் நீரில் மூழ்காமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் தொடர்ச்சியாக திறந்து விடப்படுகிறது.
எவ்வளவு கனஅடி நீர் சேமிக்கப்படுகிறது, வெளியேற்றப்படுகிறது என்று ஏராளமான புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதனை இன்மதி.காம் சற்று மாறுபட்ட கண்ணோட்டத்தோடு அணுகுகிறது. ‘எவ்வளவு உபரி நீர் வீணாக கடலில் கலக்கிறது?.’ என்பதே அது.
கடந்த 50 ஆண்டுகளில் தமிழ்நாடு 2 திராவிட கட்சிகளால் (அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.) தொடர்ந்து ஆளப்பட்டு உள்ளது. இவர்கள் ஆட்சிக்காலத்தில், தமிழகத்தில் எங்காவது ஒரு அணை கட்டப்பட்டுள்ளதா? என்பதை பார்த்தோமானால் மாநிலத்தின் உண்மையான சோக நிலையாக இது உள்ளது.
மேட்டூர் அணை மட்டுமல்ல..! கிட்டத்தட்ட அனைத்து அணைகளும் 50 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயராலும், மறைந்த முன்னாள் முதல்வர் கே. காமராஜராலும் கட்டப்பட்டவைதான். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்யும், வெள்ளத்தால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழியும், மீண்டும் வறட்சி ஏற்பட்டு பயிர்களின் உற்பத்தியை பாதிக்கும்.
கடந்த 50 ஆண்டுகளாக இதே நிலைமை தொடர்வதாக விவரிக்கிறார் திரு. ஜெ. ராமதாஸ். இவர் நாகப்பட்டினத்தில் விவசாயத்துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
அண்மையில் விவசாயி ஆர். பாஸ்கரன் குறித்து இன்மதி.காம் இணையதளத்தில் ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. அப்போது மேட்டூரில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால் மட்டும் குறுவை சாகுபடியை காப்பாற்ற முடியாது என்று அவர் கூறியிருந்தார். இந்த தண்ணீர் குளங்கள், ஏரிகள் மற்றும் நீர்நிலைகளை மீட்டெடுக்க முடியும். குறிப்பாக மே மாதத்தில் டெல்டா விவசாயிகள் நீர் பற்றாக்குறையை எதிர்கொள்ள கூடாது.
இதுவே டெல்டா மாவட்டத்தில் உள்ள பல்வேறு விவசாயிகளின் குரலாக உள்ளது. இதுகுறித்து ஒருமித்த கருத்தை அவர்கள் கூறி உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த திரு. ராஜ்குமார் என்பவர் கூறும்போது, கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு திறந்து விடப்படும் வளமான (உபரி) தண்ணீர் ஒரு ஈகைக்குணம் கொண்ட செயல் அல்ல என்றார்.
இந்த பகுதி தமிழகத்தின் வறட்சி மிகுந்த பட்டியலில் உள்ளது. ஏனெனில் அவர்கள் தண்ணீரை திறந்து விடாவிட்டால், அவர்களின் சமவெளி பகுதிகளில் வெள்ளம் புகுந்து விடும். இது அவர்களுக்கு பேரழிவை தரும். கழிவு நீரை வெளியேற்றும் வடிகால் போன்று கர்நாடகம் செயல்பட்டு வருகிறது. இது தன்னலமற்ற தன்ைம அல்ல. வெறும் சுயநலம்.
பெயர் சொல்ல விரும்பாத பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, மேட்டூர் அணைகளில் இருந்து அதிகப்படியான தண்ணீர் திறக்கப்பட்டு விட்டதால், அது கடலுக்கு சென்று விட்டது. மேட்டூர் அணை மட்டுமல்ல, உபரி நீர் திறக்கப்படுவதும் அது கடலில் கலப்பதும் அனைத்து அணைகளிலும் நடக்கிறது. இது படபடக்க செய்யும் விஷயம் அல்ல.
மேட்டூர் அணைகளில் இருந்து அதிகப்படியான தண்ணீர் திறக்கப்பட்டு விட்டதால், அது கடலுக்கு சென்று விட்டது. மேட்டூர் அணை மட்டுமல்ல, உபரி நீர் திறக்கப்படுவதும் அது கடலில் கலப்பதும் அனைத்து அணைகளிலும் நடக்கிறது. – பொதுப்பணித்துறை அதிகாரி
மாநிலத்தில் போதுமான அணைகளும், தடுப்பணைகளும் உள்ளன. இருப்பினும் அணைக்கட்டுகளுடன் ஒப்பிடும் போது, எத்தனை தடுப்பணைகள் தற்போது உள்ளன என்பது குறித்த ஆவணங்கள் அரசாங்கத்திடம் இல்லை. என்றார்.
தொடர்ந்து எத்தனை நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான தண்ணீர் கடலில் கலந்துள்ளது என்ற கேள்வியை எழுப்பினோம். அதற்கு, ‘‘உறுதியாக தெரியவில்லை. இது கண்காணித்து பதிவிட வேண்டும். இருப்பினும் அந்த கேள்விக்கு சில பதில்களை கொடுக்க முடியும். ஆனால் தற்போது பதில் இல்லாமல்தான் இருக்கிறோம். உபரி நீர் கடலில் வீணாக கலப்பது விவசாயிகளுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு நாம் ஒரு காரியம் செய்யலாம். ஓடும் தண்ணீரை காப்பாற்ற, குழிகளை தோண்டி அவற்றை சேமிக்கலாம். சிறு விவசாயிகள் 2 முதல் 3 வரை இணைந்து, இதுபோன்ற குழிகளை தோண்டி தண்ணீரை சேமிக்கலாம். இதன்மூலம் அவர்கள் தண்ணீரை பகிர்ந்து கொள்ள முடியும். எந்தவொரு செயலையும் செய்யாமலே, வெறுமனே எங்களை (அரசாங்கத்தை) குற்றம் சாட்டக் கூடாது. சாதாரண மனிதனின் தேவை அனைத்தையும் ஒரு அரசாங்கத்திடம் எதிர்பார்க்க முடியாது. சில செயல்களை தனிப்பட்ட முறையில் செய்ய இந்த சமூதாயம் முன்வர வேண்டும்.’’ என்றார்.
திருத்துறைப்பூண்டி வேளாண்மை அலுவலகத்தில் பணியாற்றும் திரு. ராமசுப்பு கூறும்போது, ‘‘இப்போது என்ன அணை கட்ட வேண்டும்.? நீங்கள் என்ன கனவு காண்கிறீர்களா? இல்லை நாம் காமராஜர் ஆட்சிக்காலத்தில்தான் இருக்கிறோம் என்று நினைக்கிறீர்களா.? இன்றைய அரசியல் சூழ்நிலை வித்தியாசமானது. சாதாரண பனை ஓலையில் கொட்டகை கட்ட வேண்டும் என்றால் கூட கமிஷன், லாபத்தில் பங்கு கொடுக்க வேண்டும். இந்த நிலையில் நீங்கள் அணை கட்டுவது குறித்து பேசுகிறீர்கள். இது சாத்தியமா? என்று அசட்டு சிரிப்புடன் பதிலுரைத்தார்.
திருச்சி வேளாண்மை அதிகாரி திரு. வடிவேலு கூறியதாவது:-
‘‘விவசாயிகளுக்கு ஆதரவாக தண்ணீரை சேமித்து வைக்க குளங்கள் தோண்டுவது குறித்து அரசு திட்டத்தில் இல்லை. ஆனால் எல்லாவற்றிற்கும் திட்டங்கள் உள்ளது. கிணறு தோண்ட இயந்திரங்கள் சந்தைப்படுத்தப்பட்டது என நீள்கிறது. இவைகள் செய்தித்தாள்களில் உள்ளன. இதனை நான் மறுக்கவில்லை. ஆனால் பணம்? உயரதிகாரிகளிடம் இருந்து கீழே வருவதற்குள் 90 சதவீதம் ஆவியாகி (மாயம்) விடுகிறது. இதற்கு முன்னால் எங்களால் எதை செய்ய முடியும். மழை பெய்யவில்லை என்றால், நாம் வறட்சியில் இருப்போம். இந்த நிலையில் நீங்கள் நீர்பாசன துயரம் குறித்து பேசுகிறீர்கள். இது இந்தியா, இஸ்ரேல் அல்ல. விவசாயத்தில் இதுபோன்ற சூழ்நிலையை யாராலும் நியமிக்க முடியாது. நான் இந்த துறையில் 30 ஆண்டுகளை பார்த்துள்ளேன். அதன் செயல்பாடுகள் குறித்து கூறினேன்.இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து மாநில வேளாண் அமைச்சர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள முயற்சித்தோம். ஆனாலும் இந்த கட்டுரையை பதிவேற்றும் வரை அவரிடமிருந்து எந்த பதிலும் பெற முடியவில்லை.
நிலைமை எதுவாக இருந்தாலும், ஒரு தனிப்பட்ட நபரின் அணுகுமுறை மாற்றங்கள், அரசாங்கத்தை மாற்றும் என்று எதிர்பார்க்க முடியாது.
கோயம்புத்தூர் வேளாண்மை பல்கலைக்கழக துணை முதல்வர் கே. ராமசாமி, ‘‘விவசாயிகளிடத்தில் இருந்து மாற்றம் வர வேண்டும் என்றால் மாற்றுங்கள். தண்ணீரை பாதுகாத்து, அதனை சேமித்து சிக்கனமாக பயன்படுத்துங்கள். தண்ணீர் ஒரு விலைமதிப்பற்ற பொருள் என்று நமது விவசாயிகள் நினைப்பதில்லை. இதனை எப்படி பயன்படுத்துவது என்பது அவர்களின் அடிப்படை உரிமையாகும். ஆனால் தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் போதுதான் அவற்றின் முக்கியத்துவம் உணரப்படுகிறது. தனிப்பட்ட முறையில் தண்ணீரை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து இஸ்ரேல் வழிகாட்டுகிறது. நாமும் அவர்களை போன்ற நிலைமையை அடைய மேலும் 30 ஆண்டுகள் ஆகலாம்.’’ என்றார்.
Read in : English