Read in : English
அன்புள்ள விவாசாயிகளே: வணக்கம். போனமுறை பத்தியில் குறிப்பிட்டது போல, உங்களுடனான என் உரையாடலை ஆரம்பித்துவிட்டேன். தொலைபேசி, வாட்ஸ் அப், இ-மெயில் என பலவழிகளில் உங்கள் ஆதரவை தெரிவித்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகள். உங்களது ஆவலையும் ஆசையையும் துன்பங்களாஇயும் ஒரு விவசாயியாக நான் புரிந்துகொண்டேன். பலர்தஙக்ளாது பிரச்சனைகளை இங்கு பேசுவதாகக் குறிப்பிட்டார்கள். ஒரு விவசாயியாக நான் அனுபங்களாஇப் பகிர்ந்துகொள்கிறேன். அதன்படி, விவசாயிகளின் முக்கிய பிரச்சனையானவிவசாய தற்கொலைகள் குறித்து ஆரம்பிக்கிறேன்.
விவசாயி அல்லாதவர்கள், வேலைக்கு செல்வோர், மாணவர்கள், பணியாளார்கள் என அனைவரும் விவசாயம் என்று நாம் குறிப்பிட்டாலே, விவசாய நிலத்தை விற்கும் விவசாயிகள், நகரத்துக்கு குடிபெயரும் விவசாயிகள் மற்றும் விவசாயிகளின் தற்கொலை குறித்தே பேசுகிறார்கள். இதுகுறித்த ஒரு பறாவை பார்வை தேவையாக இருக்கிறது.
விவசாயிகளின் தற்கொலைகளாஇ அலட்சியம் செய்ய இயலாது. அதனை மறைக்கவும் இயலாது. அதை நேரடியாக எதிர்கொள்ள வேண்டும்; அதேவேளையில் இந்த தற்கொலைகலுக்குபொறுப்பேற்று அவமானப்பட வேண்டும். இதில் ஒருவரை மட்டும் குற்றம் சொல்ல முடியுமா? அல்லது அரசை மட்டும் கை காட்ட இயலுமா? இந்த தற்கொலைகள் எவ்வாறு நிகழ்கின்றன? தவறான இடத்தில் தவறான பயிர்களை விதைக்கும் போது, நஷ்டம் ஏற்படுகிறது. அதிலிருந்து விடுபட, அடுத்த முறை நல்ல மகசூல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் கடன்வாங்குகிறார்கள். ஆனால் மறுபடியும் நஷ்டமே உண்டாகுகிறது. மீண்டும் தவறான பயிரை தேர்ந்தெடுத்ததே இதற்கு காரணம். இது ஒரு மோசமான வட்டம். கடனை அடைக்க கடன் வாங்கியபோது, விறுவிறு என ஏறும் வட்டியையும் அசலையும் கட்ட முடியாமல் திண்டாடும் போது, தன் வாழ்க்கையை முடித்துக்கொள்வதே கௌரவமாக இருக்கும் என்று நம்புகிறார்கள்; தற்கொலையை தீர்வாக நாடுகிறார்கள்.
தற்கொலை செய்துகொள்பவர்களுக்கு அது சில மணித்துளிகளிலான வலி. ஆனால் அவர்களது குடும்பத்துக்கு கலத்துக்கும் தீராத வலி. 2007ஆம் ஆண்டு விதர்பாவுக்கு சென்றிருந்தேன். அப்போது தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் சிலரது குடும்பத்தினரை சந்தித்தேன். அப்போது, எத்னால் இந்த தற்கொலை என்று கேட்கும்போது, அளித்த பதில்அற்ற்ஹிர்ச்சிகரமானது. ஆம், விவசாயிகளிடம் இந்த விதைகளை போட்டால் அது அதிக மகசூலைத் தரும் என்று சொல்ல, அதனை நம்பி வாங்கி பயிர் செய்த விவசாயிகளுக்கு எதிர்பார்த்தமகசூல் கிடைக்காமல் ஏமாற்றம் மிஞ்ச, அது தற்கொலையில் போய் முடிந்தது தஎன்று அவர்கள் அளித்த பதில் இன்று அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.
அதனையடுத்து என்ன நடந்தது? ஒவ்வொரு நாளும் அங்கு தற்கொலைகள் நடந்தவண்ணமே இருந்தன. அந்த தற்கொலைகள் அரசியல் பிரச்சனையாக்கப்பட்டு அரசியல் கட்சிகள் ஒன்றன் மீதுஒன்று குற்றம்சாட்டிக்கொண்டன. ஆனால் யாரும் எந்த்ய தீர்வும் தரவில்லை என்பதுதான் சோகம். மரபணு மாற்றம் செய்யபபட்ட பிடி பருத்தி எங்கெல்லாம் விதைக்கப்பட்டதோ அங்கு அதிகம்வேதி உரங்கள் தேவைப்பட்டது; அதனையொட்டியே அத்தற்கொலைகள் நடந்தன. எங்கு விவசாயிகள் பாரம்பரிய விதைகளாஇ விதைத்தார்களோ அங்கு தற்கொலை நடக்கவில்லைஎன்பதுதன் முகத்தில் அறையும் உண்மை.
நாம் விவசாயிகளின் தற்கொலை குறித்து பேசும்போது யோசிக்க வேண்டிய முக்கியமான விஷயம் இது: இயற்கை வேளாண்மையை பின்பற்றும் எந்த ஒரு விவசாயியாவது தற்கொலைசெய்துகொண்டுள்ளாரா? சில விவசாயிகள் தாங்களாகவே பஞ்சகாவ்யம், மீன் குணபஜலம், வேம்பு மற்றும் ஆமணக்கிலிருந்து தயாரிக்கப்படும் இயற்கை பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றைபூச்சிக் கட்டுப்பாட்டுக்கு பயன்படுத்துகிறார்கள். விவசாயிகள் வாழும் கிராமத்திலேயே அவர்களுக்குத் தேவையான அனைத்து விதமான பூச்சி, நோய்க்கட்டுப்பாட்டுக்கான மூலப்பொருட்கள்கிடைக்கின்றன.
நாகபட்டினம் மாவட்டம்,மயிலாடுதுறை வட்டம், கிடத்தளைமேடு கிராமத்தைச் சேர்ந்த சேதுரமன் என்கிற விவசாயி, எந்த தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படாத பண்ணையத்தைமேற்கொள்கிறார். அவர் என்ன செய்கிறார் தெரியுமா? நிலத்தில் 2-3 டன் மண்புழு உரத்தை போட்டு நன்கு உழுது பயிர் வைக்கிறார். அதன்பிறாகு, வயலில் மண்புழுக்களை விடுகிறார். மண்புழுக்கள் மண்ணுக்கு உட்டம் கொடுப்பதோடு, நீரை சேமிக்கவும் செய்கிறது. மண்புழு மண்ணை கிளாறுவதால், அது பொலபொலவென ஆகிறது. அதனால் தண்ணீர் மண்ணுக்குள்சீகிரமக பரவி நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கச் செய்கிறது. பஞ்சகாவ்யத்தை தொடர்ந்து தெளித்து வருவதாலும் பாய்ச்சப்படும் நீரில் கலந்துவிடுவதாலும் மண் வளாம் கூடுகிறது.
இந்த தொழில்நுட்பத்தை பின்பற்றுவதால் ஏக்கருக்கு 60,000-65,000 ரூபாய் வருமனம் வருடத்துக்கு கிடைக்கிறது. இதுகுறித்து விளக்கம், ஆலோசனை பெற விரும்புகிறவர்கள் சேதுராமனை 04364- 236467 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
விவசாய நண்பர்களே! சேதுராமன் ஒரு பனை சோற்றுக்கு ஒரு சோறு பதம். தமிழகத்தில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பலர் அமைதியாக விவசாயம் செய்துகொண்டுள்ளார்கள். அவர்களாஇக் குறித்தும் வரும் வாரங்களில் பேசுவோம். நன்றி
Read in : English