Read in : English

இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட  லோக் ஆயுக்தா மசோதா  பல்லில்லா சட்டம் என்றுதான் கூற வேண்டும். ஏனெனில் இது ஊழலுக்கு எதிராக போரிடப்போவது  இல்லை.

முதல்வர், சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் இணைந்த குழுதான் லோக் ஆயுக்தாயுவை உருவாக்க முடியும். இதற்கு எந்த இறுதிதேதியும் முடிவு செய்யப்படவில்லை. தேர்வு செய்யும் குழுவில் அரசியலுக்கு அப்பால் பாரபட்சம் பார்க்காமல் செயல் படும் வல்லுனர்கள் இல்லை. இந்த சட்டத்தில் இருக்கும் மிகப் பெரிய குரைபாடு இது.

லோக் ஆயுக்தாவின் பணி என்பது தன்னிச்சையாகவும் சுதந்திரமாகவும் விசாரணை மேற்கொள்வதே. தமிழ்நாட்டு மசோதப்படி, குரூப் ஏ,பி, சி மற்றும் டி  அதிகாரிகள் மீது வரும் புகார்கள் லங லஞ்ச ஒழிப்புத்துறைதான் விரசாரிக்குமாம். எனவே லோக் ஆயுக்தாவின் கீழ் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தால் அதனை தலைமை செயலருக்கு கீழ் பணியாற்றும் ஒரு அதிகாரிதான் விசாரணைசெய்வார். இதன் மூலம் ஒரு அதிகாரியின் மீது எழுந்த பகார் விசரிக்கப்படுமா என்பது அரசாங்கமே முடிவு செய்யும். இது முதல்கட்ட விசாரணையாக அமையும். அவர்கள் தவறு இழைத்துள்ளார்கள் என கண்டறியப்பட்டால் லோக் ஆயுக்தா அதற்குப்பிறகு விசாரணை மேற்கொள்ளும். ஒருவேளை அரசியல்வாதிகள் தவறிழைத்தால் லோக் ஆயூக்தா அதனை நேரடியாக விசாரிக்கும்.

விநோதம் என்னவென்றால் லோக் ஆயுக்தா விசாரணை மேற்கொள்ளும்.  ஆனால் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய முடியாது.  இன்றுதாக்கல் செய்யப்பட்ட மசோதா, ‘’தகுதிவாய்ந்த அதிகாரம்’’ உடைய ஒருவர் தான் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய முடியும் என்கிறது.  இந்த விசாரணை முறை லோக் ஆயுக்தாவின் மொத்த  சுதந்திரத்தையும் அழிக்கிறது. மேலும் யார் பொய்யான வழக்கை  பதிவு செய்திருக்கிறார்கள் என அறியபட்டால்  அவர்களுக்கு ஓராண்டு சிறையும் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.  இது வழக்கு பதிவு செய்ய முனைவோருக்கு அச்சுறுத்தலாக இருக்கும்.

லோக் ஆயுக்தாவில் வழக்கு விசாரணை  பிரிவும் இல்லை. மேலும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்கள் மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்ய இயலாது. லோக் ஆயுக்தா, ஒரு அதிகாரி குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருந்தால் அவர் வழக்கை இடையூறு செய்வார் எனப்தால் அவரை பணி மாறுதலோ, இடைநீக்கமோ செய்ய பரிந்துரை செய்யலாம்.  ஆனால் இதை அரசு, நிர்வாக மேலாண்மை காரணத்துக்காக  புறந்தள்ளலாம்.

அதேபோல் ஊழல் தடுப்பு சட்டத்துக்கு உதவி செய்யும் வகையில்  நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற விவகாரத்தில் லோக் ஆயுக்தா தலையிடமுடியாது. ஆனால் பல லஞச ஊழல் வழக்குகளில்  சாட்சியங்கள் கால தாமதமாகி தான் வெளி வருகிரது. இதில் அரசு ஊழியர்கள் தங்கள் சொத்துக்களை வெளியிட வேண்டும் என்கிற அறிவிப்பும் இல்லை.

அரசால் பரிந்துரைக்கப்படக் கூடியவர்கள் மட்டுமே லோக் ஆயுக்தாவின் செயலராகவும் விசாரணை இயக்குநராகவும் நியமிக்கப்படுவர். மற்ற அதிகாரிகளும் அரசால் நியமிக்கப்படுவார்கள். ஆட்களை தேர்வு செய்வதிலும் சுதந்திரம் இல்லை. அரசுவேலைக்கு ஆட்களை தேர்ந்தெடுப்பதில் பல்வேறு ஊழல்கள் நடைபெறுகின்றன. அவை லோக் ஆயுக்தாவின் விசாரணைக்குள் வரவில்லை.

டிரான்ஸ்பெரன்சி இண்டர்நேஷனல் மற்றும் செண்டர் ஆப் மீடியா ஸ்டடீஸ் என்ற நிறுவனங்கள் 2008ல் நடத்திய ஒரு சர்வேயில் தமிழ்நாடு ஊழலில்  முன்னிலை வைகிக்கக்கூடிய மாநிலம் என்று தெரிய வந்துள்ளது. மகா ஊழல்கள் மற்றும் சொத்து சேர்ப்பதில் பெரிய அரசியல்வாதிகள் பலர் ஈடுபட்டுள்ளனர். லஞ்ச ஒழிப்புத்துறை இந்த அமைச்சர்களின் கீழ் இருப்பதால், மிக உயர்ந்த பதவியில் இருக்கும் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும்   உழல் புரிவதை தடுக்க முடியவில்லை. இதில் லோக் ஆயுக்தா எந்த மாற்றத்ய்தையும் கொண்டுவரப் போவதில்லை.

லோக் ஆயுக்தா மற்றும் லோக்பால் சட்டம் 2013, 63ஆவது பிரிவின்படி சட்டம் உருவாகக்ப்பட்ட ஒரு வருடத்துக்குள் மானில அளவிலான லோக் ஆயுக்தா அமைக்கப்பட  வேண்டும் என கூறுகிறது. பல மாநிலங்கள்  அதனை பின்பற்றி சட்டத்தை இயற்றிவிட்டன.

உச்சநீதிமன்றம், இந்தவருடம் ஜூலை 10ஆம் தேதிக்குள் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டுவர வேண்டும் என உத்தரவிட்டது. இச்சட்டம் அமலுக்கு வந்த பின்பும் லோக் ஆயூக்தா அமைக்காத சில மாநிலங்களுள் தமிழ்நாடும் ஒன்று. மேலும் பொதுமக்களின் ஆலோசனைக்கு வைக்கப்படாததில் இருந்தே தமிழக அரசின் நோக்கம் என்னவென்று புரிகிறது.  மற்ற மாநிலங்களில் லோக் ஆயுக்தாவின் வெற்றி தமிழ்நாட்டில் ஆள்பவர்களை ஒருபாதுகாப்பு சட்டத்துக்குள் அமர்த்தியிருப்பது போல் தோன்றுகிறது. கர்நாடக மாநிலத்தில் லோக் ஆயுக்தா சந்தோஷ் ஹெக்டே எழுப்பிய குற்றச்சாட்டு எடியூரப்பாவின்பதவியை இழக்கச் செய்தது. இரும்பு தாது திருட்டு வழக்கில், பெல்லாரி ரெட்டி சகோதரர்கள் சிறைக்குச் சென்றனர்.

இந்த திங்கள், தமிழகத்துக்கு மிகவும் சோகத்தையும் கவலையும் கொடுத்த நாள். தமிழக அரசின் உண்மை நிறத்தையும் கண்கூடாக காண நேர்ந்தது.

(ஜெயராம் வெங்கடேசன் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர். அறப்போர் இயக்கம் ஊழலுக்கு எதிராக செயல்பட்டு வரும்  இயக்கம்)

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival