Read in : English
ஒவ்வொரு வருடமும் ஜூன் 5ஆம் தேதி அரசும் தொழில் நிறுவனங்களும் சுற்றுச்சூழல் மீதான தங்கள் பொறுப்பை மறுபரிசீலனை செய்கின்றன. பூமி, பருவநிலை மாறுதலில் இருந்து மழைக் காடுகள் குறைந்து வருவது வரையான பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சனைகளை எதிர்கொள்கிறது.
மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் 2008 ஆண்டு கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் வருடம் தோறும் 8 மில்லியன் டன்பிளாஸ்டிக் உபயோகப்படுத்தப்படுகிறது. அதில், 5.7 மில்லியன் டன் பிளாஸ்டிக் குப்பைகளாக மாறுகிறது. அதாவது, தினம் தோறும் 15,722 டன் பிளாஸ்டிக் குப்பை உருவாகிறது. அதில், 40% பிளாஸ்டிக் குப்பைகள் சேகரிக்கப்படுவதும் இல்லை; மறுசுழற்சி செய்யப்படுவதும் இல்லை. மாறாக, அவை கால்வாய்களிலோ, திறந்த வெளியிலோ, ஆற்றிலோ, கடற்கரையிலோ கேட்பாரின்றிக் கிடக்கின்றன.
தினம் தோறும் 15,722 டன் பிளாஸ்டிக் குப்பை உருவாகிறது. அதில், 40% பிளாஸ்டிக் குப்பைகள் சேகரிக்கப்படுவதும் இல்லை
பிளாஸ்டிக் குப்பை உருவாவதில் சென்னை தேசிய அளவில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. புதுடெல்லி தினம் 429.4 டன் பிளாஸ்டிக் குப்பையை உருவாக்கி முதலிடத்தில் உள்ளது. இந்த பிளாஸ்டிக் குப்பைகளை புதைத்தால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு மக்காமல் மண்ணில் அடியில் புதைந்து கிடக்கும். அல்லது எரித்தால் காற்றில் விஷத்தைப் பரப்பும்; அதனை சேகரிக்காமல் விட்டுவிட்டால் கடல்பரப்பில், ஏரிகளில் மிதந்து கொண்டு இருக்கும். கடலில் கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் ஒரு பெரிய தீவையே உருவாக்குகிறது. அதனை ‘கிரேட் பசிபிக் கார்பேஜ் பேட்ச்’ என்று அழைக்கிறார்கள். அது அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தின் அளவு உள்ளது என்கிறார்கள். இந்த ’பேட்ச்’-ல் தோராயமாக 3.5 மில்லியன் டன் பிளாஸ்டிக் உள்ளதாம். கடலில் இருக்கும் இந்த பிளாஸ்டிக், மிகவும் நுண்ணியதாக இருப்பதால் கடல்வாழ் பாலூட்டிகள் அதனை உணவென தவறாகப் புரிந்துகொண்டு உண்ணுகின்றன. பறவைகளும், கடல் நுண்ணியிர்களும் கூட உண்ணுகின்றன என்பது தான் கொடூரம். நிரந்தரமாக கடலில் சிந்திக் கிடக்கும் எண்ணெயை விட பலமடங்கு இது கடல் வாழ் உயிரனங்களுக்கு ஆபத்தானது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2011 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் பிளாஸ்டிக் பைகளைஅதன் மைக்ரான் அளவை பொறுத்து பயன்படுத்த தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
சுற்றுச்சூழல் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியா தூய்மையான இந்தியாவை உருவாக்க உறுதி பூண்டுள்ளது. தமிழ்நாட்டில் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பிளேட்டுகள், டம்ளர்கள், தண்ணீர் பைகள், உறிஞ்சு குழல்கள் சாமான் வாங்கும் பைகள் ஆகியவற்றுக்கு தடை விதிக்கபப்ட்டுள்ளதாக அறிவிக்கபப்ட்டுள்ளது. பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதற்கு தடைவிதிப்பதில் இந்தியாவில் தமிழகம் ஒரு முன்னோடி மாநிலம். தமிழ்நாடு பிளாஸ்டிக் ஆர்ட்டிகிள்(விற்பனை, சேமிப்பு, போக்குவரத்து மற்றும் பயன்பாடு) சட்டம் 2002 -ன் படி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2011 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் பிளாஸ்டிக் பைகளைஅதன் மைக்ரான் அளவை பொறுத்து பயன்படுத்த தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், தமிழகம் தூக்கியெறிப்படும் பிளாஸ்டிக் பயன்பாட்டில் முன்னிலையில் இருக்கிறது. நல்ல சட்டங்களும் கொள்கைமுடிவுகளும் தவறான செயல்பாட்டால் எப்படி சீரழிகிறது என்பதற்கு இச்சட்டமே எடுத்துக்காட்டு. இதற்கு முன்பு அறிவிக்கப்பட்ட எந்த தடை அறிவிப்பும் சமுறையாக அமல்படுத்தப்படவில்லை. ஆனால், அது ஊழலுக்கான வழியாக இருக்கிறது. இம்முறைவிதிக்கப்பட்டுள்ள தடைக்கு சரியான வழிகாட்டுதலையும் அதை செயல்படுத்துவதற்கு நிதி ஒதுக்கீடும் இல்லாமல் போனால்வழக்கம் போல் இது அடுத்த ஜூன் 5, 2019 வரைக்கும் ஒரு வியாபாரமாகவே இருக்கும்.
கட்டுரையாளர்: தர்மேஷ் ஷா, சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்
Read in : English