Read in : English

2017 ஜனவரி, ஜல்லிக்கட்டு போராட்டங்கள் தொடங்கியதிலிருந்தே தமிழ்நாடு பிரச்சனைகளை சந்திக்கத் தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டிற்கு எதிராக ஒட்டுமொத்த நாடும் திரண்டு எழுந்துவிட்ட உணர்வு எழுந்தது. மொத்த நாடும், அதாவது பாராளுமன்றம், மத்திய அரசு, உச்சநீதிமன்றம் மற்றும் வடநாட்டு ஊடகங்கள் என எல்லாமும்தான்.

ஜல்லிக்கட்டு பிரச்சனை, அடியாழம் வரை சென்றது. உச்சநீதிமன்றம், இந்தப்பக்கமிருந்து வைக்கப்பட்ட கோரிக்கைகளை மீண்டும் மீண்டும் நிராகரித்தது, வடநாட்டு ஊடகங்கள் ஜல்லிக்கட்டை ஒரு பயங்கரமான விஷயமாகப் பார்த்தன. ஆனால், தமிழ்நாட்டில் பாரம்பரியமான ஜல்லிக்கட்டை நடத்துவதற்கான உரிமையைப் பெறுவதற்கு அளவில்லா ஆதரவைத் தெரிவித்தது தமிழ்நாடு.லட்சக்கணக்கான போராட்டக்காரர்கள் மெரினாவில் திரண்டார்கள். ஜல்லிக்கட்டுக்கு தடை கேட்ட விலங்குகள் உரிமை அமைப்பு பீட்டாவுக்கும், மத்திய அரசுக்கும், உச்சநீதிமன்றத்துக்கும் எதிராக பொதுமக்களும், கார்ப்பரேட் நிறுவனங்களும் தங்கள் கோபத்தைக் காட்டினார்கள், மாநில அரசின் துணையோடு. தற்காலிகமானதே என்றாலும், ஜல்லிக்கட்டுப் பிரச்சனையை முடிப்பதற்கு ஏகப்பட்ட திருகுதாளங்களைச் செய்யவேண்டியிருந்தது. மாநில அரசு, சட்டமன்றத்தில் விரைவாக தாக்கல் செய்த சட்டமுன்வரைவில் உடனடியாக கையெழுத்திட்டார் இந்தியக் குடியரசுத் தலைவர். இந்த சட்டமுன்வரைவை மறுபடியும் பீட்டா எதிர்த்து நின்றபோது, ஒரு சமயத்தில் மறுபடியும் இதில் உச்சநீதிமன்றம் தலையிடும்படி ஆனது.

இவை அனைத்திலும் முக்கியமான விஷயம் என்னவென்றால், போராட்டக்காரர்களின் ஒரு பகுதியினர், இந்திய ஒன்றியத்திலிருந்து தமிழ்நாடு உடைய வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தனர். மாநில அரசின் உரிமைகளைப் பறித்து, தமிழர்கள் என்னசெய்ய வேண்டும் அல்லது என்ன செய்யக்கூடாது என டெல்லியில் அமர்ந்துகொண்டே முடிவெடுக்கும் பொறுப்பற்ற ‘கூட்டமைப்பின்’ மீது ஏற்பட்ட கசப்பை, பிரிவினைக்கான விதைகளாக பார்த்தார்கள்.

 மருத்துவக் கல்விக்கான பொது நுழைவுத் தேர்வாக அறிவிக்கப்பட்ட நீட் தேர்வு, அடுத்த பூதாகரப் பிரச்சனையாக வெடித்தது. நாடு முழுவதும், ஒட்டுமொத்த மருத்துவக் கல்லூரிகளுக்கும் ஒற்றைப் பொது நுழைவுத் தேர்வு இருக்கவேண்டுமென 2016ல் உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். 2013ல், இத்தகைய பொது நுழைவுத்தேர்வு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று உச்சநீதிமன்றமே சொல்லியிருந்தாலும், 2016ல் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, தன் பழைய முடிவை ரத்துசெய்தது உச்சநீதிமன்றம். 2016ல், தமிழ்நாடு நீட்டிலிருந்து விலக்கு பெற்றிருந்தாலும், 2017-இன் நீட் தேர்வு நெருங்கி கொண்டிருந்தது. நுழைவுத் தேர்வுகள் சமூக நீதிக்கு எதிரானவை என்றும், கிராமப்புற மற்றும் சமூகத்தில் பின்தங்கிய வகுப்பினரின் நலனை பாதிக்குமென்றும் வாதங்களை முன்வைத்து, தொழில்முறை கல்லூரிகளுக்கான எல்லா நுழைவுத் தேர்வுகளுக்கும், கடந்த பத்து வருடங்களாக விலக்கு பெற்றிருக்கிறது தமிழ்நாடு.

தமிழ்நாட்டில் பலரும் ஜல்லிக்கட்டைப் போன்றதொரு போராட்டம் நடக்கவேண்டுமென விரும்பினர். ஆனால், சுதாரித்துக்கொண்ட மாநில அரசு, மெரினாவின் எந்த விதமான ஒருங்கிணைப்பையும் திட்டவட்டமாக மறுத்தது. தமிழ்நாட்டு மாணவர்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு வழங்க மாநிலம் தழுவிய போராட்டங்கள் நடந்தன. ஜல்லிக்கட்டுக்கு முன்மொழியப்பட்ட சட்டமுன்வரைவைப் போலவே நீட் தேர்வுக்கும் அமல்படுத்தவேண்டும் என மாநில அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனால், ஜல்லிக்கட்டு சட்டவரைவுக்கு குடியரசுத் தலைவரால் அளிக்கப்பட்ட உடனடி ஒப்புதலைப்போல, நீட் தேர்வுக்கு இன்று வரை அப்படியொரு முடிவு எட்டப்படவில்லை. தமிழ்நாட்டின் சமூக நீதி ஆதரவாளர்களால், இது ஒரு துரோகமாகப் பார்க்கப்பட்டது.

ஜல்லிக்கட்டுக்கு முன்மொழியப்பட்ட சட்டமுன்வரைவைப் போலவே நீட் தேர்வுக்கும் அமல்படுத்தவேண்டும் என மாநில அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனால், ஜல்லிக்கட்டு சட்டவரைவுக்கு குடியரசுத் தலைவரால் அளிக்கப்பட்ட உடனடி ஒப்புதலைப்போல, நீட் தேர்வுக்கு இன்று வரை அப்படியொரு முடிவு எட்டப்படவில்லை. தமிழ்நாட்டின் சமூக நீதி ஆதரவாளர்களால், இது ஒரு துரோகமாகப் பார்க்கப்பட்டது.

மாநில அரசு, தமிழ்நாட்டு மாணவர்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்டால், நீதி விசாரணையில் தாக்குப்பிடிக்க முடியாது என்றும், உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்படும் என்பதும் மத்திய அரசின் கருத்தாக இருந்திருக்கலாம். ஆனால், இவையெதுவும், தமிழ் தேசியவாதிகளின் முன்னெடுப்பை நிறுத்தவில்லை.

எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விதமாக, மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவிகித மருத்துவ இடங்களை இடஒதுக்கீடு செய்யும் மாநில அரசின் ஆணையை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம். நீட் தேர்வில் வெற்றிபெற முடியாத மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த தலித் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். மாநிலத்தின் எல்லா இடங்களிலும் போராட்டங்கள் வெடித்தன. நீட் தேர்வை நடத்திய சிபிஎஸ்இ, ஒவ்வொரு மொழிக்கும் தயாரித்த வெவ்வேறு விதமான வினாத்தாள்கள் மாணவர்களிடம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தின.

தமிழ்நாட்டிலிருந்து நீட் எழுதவிருக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை குறைத்து மதிப்பிட்டு, அதன்பிறகு எழுந்த சிக்கலால் சில மாணவர்களுக்கு தேர்வு மையங்களை மாநிலத்திற்கு வெளியே ஒதுக்கி, 2018இலும் ஒரு பிரச்சனையை ஏற்படுத்தியிருக்கிறது சிபிஎஸ்இ. உணர்வுகளை காட்டத்தொடங்கிய தமிழக ஊடகங்களும், தொலைக்காட்சி சேனல்களும், தேர்வுக்கு முந்தைய நாளிலிருந்தே மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை நேரலை செய்தது. இரண்டு தந்தைகள் மாரடைப்பால் இறந்த நிகழ்வும், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சிபிஎஸ்இ மாணவர்கள் மீது காட்டிய அளவுக்கு மீறிய கடினமான கண்டிப்பும் ஹைலைட் செய்யப்பட்டது. வினாத்தாள்களில் தமிழில் தவறாக மொழிபெயர்க்கப்பட்ட பிழைகளும் எடுத்துக்காட்டப்பட்டன.

 2018ல், அதிகமான மாணவர்கள் நீட் தேர்வை எழுதியிருந்தாலும், நீட் தேர்வு சமூகநீதிக்கும், கூட்டாட்சிக்கும் எதிரானது என்பதும், மத்திய அரசு மற்றும் உச்சநீதிமன்றம் என்னும் வில்லன்களால், தமிழ் மக்களின் விருப்பத்தை மீறி அவர்களின் தொண்டைக்குள் திணிக்கப்பட்டது என்பதும் நீட்டைக் குறித்த கருத்தாக இருந்து வருகிறது.

பல பத்தாண்டுகளாக காவிரி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சனை பலகாலமாக தொடர்ந்து வந்தாலும், தற்போது எளிமையான, முழுமையான வார்த்தைகளால்  பேசப்பட்டு வருகிறது. உச்சநீதிமன்றத்தின் இறுதித்தீர்ப்புக்குப் பிறகும், நதிநீர்ப் பங்கீட்டை உறுதிசெய்வதற்கான காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் சுணக்கம் காட்டி வருகிறது மத்திய அரசு. கர்நாடக மாநில தேர்தலில், பாஜகவின் கைகளை ஓங்கவைக்கும் பொருட்டு, உச்சநீதிமன்றத்தை அவமதிப்பதையும் கணக்கில் கொள்ளாமல், உச்சநீதிமன்றத்தின் முன் ஒரு ஸ்கீமை சமர்பித்து மேலும் தாமதப்படுத்தியிருக்கிறது மத்திய அரசு. தமிழ் தேசியவாதிகளும், தமிழக அரசியல்வாதிகளும் கொதிப்பில் இருக்கிறார்கள். எதிரி நாடுகளுக்குக் கூட ஆற்றுப்படுகை சார்ந்த உரிமைகள் இருக்கின்றன. இந்திய ஒன்றியத்துக்குள் இருக்கும் தமிழ்நாட்டுக்கு அந்த உரிமை இல்லை. ஆதலால்,காவிரி நீர் தராத இந்தியாவிடமிருந்து விலகி, தனி நாடாக ஐக்கிய நாடுகள் சபையை நாடலாம். தமிழ்நாட்டுக்குத் தேவையான பங்கை வாங்கித் தர இயலாத நிலையில் இருக்கும் உச்சநீதிமன்றத்தின் பொறுப்பில்தான் இப்போது எல்லாமும் இருக்கிறது. தனது குறுகிய அரசியல் நலன்களுக்காக தீர்வை அளிக்க நினைக்கும் மத்திய அரசிடமில்லை.

ஜல்லிக்கட்டு-நீட்-காவிரி என்னும் முப்பட்டகம் வழியாக இந்திய ஒன்றியத்தைப் பார்க்கிறார்கள் தமிழ் தேசியவாதிகள்.

காவிரி என்னும் முப்பட்டகம் வழியாக இந்திய ஒன்றியத்தைப் பார்க்கிறார்கள் தமிழ் தேசியவாதிகள்.இந்த வலைக்குள், மேலும் சில விஷயங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. கூடங்குளம் அணுமின் நிலையத்தைத் தமிழ்நாட்டுக்குள் திணித்ததும், கிராமவாசிகளின், சூழலியலாளர்களின் விருப்பத்திற்கு எதிராக தேனியில் நியூட்ரினோ மையத்தை அமைத்ததும், ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு அனுமதி வழங்கி காவிரிப் படுகை விவசாயத்துக்கு பாதிப்பு ஏற்படுத்துவதும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெட்ரோகெமிக்கல் ரிஃபைனரி அமைக்கத் திட்டமிடுவதும், தமிழ்நாட்டை அழிப்பதற்கான அரசின், ஆளும் பாஜகவின் சதித்திட்டமாகப் பார்க்கப்படுகிறது.

டீமானிடைசேஷன் மற்றும் ஜி.எஸ்.டி அமலாக்கத்தையும் எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டிருந்தாலும் கூட, அவை ஏதோ குறிப்பாக தமிழர்களை தண்டிப்பதற்காகவே செய்யப்பட்ட விஷயங்களாகத்தான் தமிழ் தேசியவாதிகள் பார்க்கிறார்கள்.

டீமானிடைசேஷன் மற்றும் ஜி.எஸ்.டி அமலாக்கத்தையும் எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டிருந்தாலும் கூட, அவை ஏதோ குறிப்பாக தமிழர்களை தண்டிப்பதற்காகவே செய்யப்பட்ட விஷயங்களாகத்தான் தமிழ் தேசியவாதிகள் பார்க்கிறார்கள்.2011இன் மக்கள் தொகைக் கணக்கைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, 1971ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கைப் பயன்படுத்தியிருக்கிறது 15வது நிதி ஆணைக்குழு. குடும்பக் கட்டுப்பாடு மற்றும் மக்கள்தொகைக் கட்டுப்பாட்டில் கவனமாக பணிபுரிந்து முறைப்படுத்தியிருக்கும் அனைத்து தென் மாநிலங்களுக்கும் கசப்பான ஒரு புள்ளி இதுதான். நன்றாக செயல்படும் தென்மாநிலங்களை தண்டித்து, வட மாநிலங்களுக்கு அதிக வருவாயைப் பெற்றுத்தரும் நடவடிக்கை இது. தமிழ் தேசியவாதிகள் இந்த இடத்தில் சரியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள். மாநிலங்களிடமிருந்து வரி விதிக்கும் உரிமைகள் பறிக்கப்பட்டு, வரி வருவாய்க்கான பங்கும் அவர்களின் முடிவுக்கு உட்பட்டே இருக்கப்போகிறது. இதன் காரணமாகவே அதிகபட்ச வரி வருவாய், தென் மாநிலங்களிடமிருந்தும், மேற்கு மாநிலங்களிடமிருந்தும் பெறப்படுகின்றன.

கொதிநிலையை நெருங்கிக்கொண்டிருக்கும் இந்தக் கசப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. மத்திய அரசும், தேசியக் கட்சிகளும் பொறுப்பற்ற முறையில் இருந்தால், உறவுகள் கடுமையான முறிவுக்கு உட்படலாம். சிறு சிறு தமிழ்தேசியவாத குழுக்களிடம் மட்டும் இத்தகைய எண்ணங்கள் இல்லை. மைய நீரோட்டத்தில் இருக்கும் அரசியல் கட்சிகளிடம் கூட இத்தகைய உணர்வுகள் தேங்கியிருக்கிறது. திமுக, இதை வெளிப்படையாகவே பேசுகிறது. ஆட்சியில் இருப்பதாலும், தாங்கள் நிலைத்திருப்பதற்கு மத்திய அரசைச் சார்ந்து இருப்பதாலும், அதிருப்தியை வெளிப்படுத்தாமல் கவனமாக இருக்கிறது அஇஅதிமுக.

தேசிய நீரோட்டத்துக்குள், தமிழர்களை மீண்டும் ஒன்றிணைப்பது, மத்திய அரசு மற்றும் உச்சநீதிமன்றத்தின் கூட்டுப்பொறுப்பு. இந்தப் பொறுப்பை, மேலும் தங்களை அந்நியப்படுத்திக்கொள்ளாமல் தொடங்கிக் காப்பாற்ற வேண்டும்.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival