Read in : English
மத்திய பட்ஜெட்: கோதாவரி—காவிரி இணைப்புத் திட்டம் குமரி முனையைத் தொட வேண்டும்!
நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து கோதாவரி, காவிரி நதி இணைப்பை பற்றி பேசியுள்ளார். மகிழ்ச்சியான செய்திதான். இருப்பினும், உச்ச நீதிமன்றத்தில் இதுகுறித்த வழக்கை 1983இல் கொடுத்தவன் என்ற முறையில், ஏன் அந்த இணைப்பை காவிரியுடன் நிறுத்தாமல், வைகை, தாமிரபரணி நெய்யாற்றோடு இணைந்து கங்கை குமரி மாவட்டத்தை தொட வேண்டும் என்பது தான் கோரிக்கை. இதைப் பற்றி ஆராயுங்கள். இதுகுறித்த இந்தத் திட்டத்தை நிறைவேற்றலாம் என்ற கருத்தை உச்ச நீதிமன்றம் எனது வழக்கில் 2012ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி அறிவுறுத்தியது. காவிரியோடு நிற்காமல் அது தெற்கே வைகையும், தாமிரபரணியும், இறுதியாக குமரி முனையை சேர வேண்டும் என்பதுதான் பலரின் கோரிக்கை.
நல்ல காலத்திற்கான தொடக்கமா?: மாயையான பட்ஜெட் பேச்சு!
inmathi.com தளத்தைத் தொடங்கும் போது சில கேள்விகள் இருந்தன. செய்தி என்றால் என்ன? செய்தியை உருவாக்குபவர்கள் யார்? இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் தெரியும் என்று கூற முடியாது, ஆனால் inmathi.com தளத்தில் எவை செய்தியாக இருக்கக் கூடாது என்பது குறித்து சில தெளிவான முடிவுகள் உள்ளன.
தமிழ்நாட்டில் மின்துறையில் உடனடியாக சீர்திருத்தங்கள் தேவை!
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, 1957ஆம் ஆண்டு இரு பெரிய மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலங்கள் ஒரே தனிநபர் வருமானத்தைக் கொண்டிருந்தன. ஆனால் அதன் பின்னர், இரண்டு மாநிலங்களும் தங்கள் வளர்ச்சிப் பாதையில் முக்கிய வளர்ச்சிக் குறியீடுகளில் பல ஆண்டுகள் வேறுபட்டே இருந்தன. இப்போது, தமிழ்நாடு உத்தரப் பிரதேசத்தை விட மூன்று மடங்கு செல்வம் உடைய மாநிலமாக உள்ளது. மேலும், சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி என ஒவ்வொரு அளவுகோலிலும் இந்த இரு மாநிலங்களுக்கும் இடையே பெரிய வேறுபாடு உள்ளது. பொருளாதார ரீதியில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தியதில் மின்துறைக்கு ஒரு முக்கிய பங்கு இருந்தது.
பட்ஜெட் அறிவிப்பால் அனிமேஷன், விஷுவல் எபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ் துறைகள் விஸ்வரூபமெடுக்குமா?
காட்சி மயக்கத்தை ஏற்படுத்தும் கற்பனையாவும் காணா இன்பத்தைத் தரும் வல்லமை கொண்டவை. அந்த வகையில், ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் பால்யத்தை உயிர்ப்பிப்பவை அனிமேஷன், விஷுவல் எபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் துறைகள். இந்நான்கையும் ஒன்று சேர்த்தால் கிடைக்கும் ஏவிஜிசியின் வளர்ச்சி, கடந்த 20...
3 ஆண்டுகளில் 400 வந்தே பாரத் ரயில்கள்: பட்ஜெட் அறிவிப்பு நடைமுறையில் சாத்தியமா?
மைய அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் 400 வந்தே பாரத் இரயில்கள் வரும் மூன்று ஆண்டுகளுக்குள் இந்தியா முழுதும் இயக்கப்படும் என்று தன்னுடைய பட்ஜெட் உரையில் தெரிவித்தார். இந்தியா முழுதுமே இரண்டே இரண்டு வந்தே பாரத் இரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வரும் நிலையில் அவற்றை போன்ற 400 இரயில்கள் உருவாக்குவது சாத்தியம்தானா?
புதிய தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் யார்?
கோவிட்-19 பெருந்தொற்று எனும் விலங்குகளால் பிணைக்கப்பட்டு கட்டுண்டு கிடந்த பொருளாதாரம் அதிலிருந்து மீண்டு வரும் நிலையில், வரவிருக்கும் மத்திய பட்ஜெட் எதிர்வரும் ஆண்டுக்கான நம்பிக்கையின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. 2022- 2023 மத்திய பட்ஜெட்டுடன் இணைந்து வெளியாகும் 2021-22-க்கான பொருளாதார ஆய்வறிக்கையானது, அரசின் கொள்கைகள் பற்றி விமர்சனபூர்வமான தரவுகள் பகுப்பாய்வு மற்றும் ஆழமான ஆராய்ச்சி மூலமாக முந்தைய ஆண்டை மதிப்பீடு செய்து அதன் அடிப்படையில் வெளியிடப்படும் பொருளாதாரக் குறியீடுகளை மேம்படுத்திக் கொள்வதற்கு நாட்டுக்கு ஒரு வாய்ப்பினை வழங்கும். இந்தப் பின்னணியில், மத்திய நிதி அமைச்சகத்தினால் அடுத்த தலைமைப் பொருளாதார ஆலோசகராக டாக்டர் வெங்கட்ராமன் அனந்த நாகேஸ்வரன் சமீபத்தில் நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது
நீட் தேர்வு எழுத இலவசப் பயிற்சி: அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கை கொடுக்கும் முன்னாள் அரசுப் பள்ளி மாணவர்கள்!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எம்பிபிஎஸ் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு எழுதுவதற்காக, அறந்தாங்கியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் படித்த முன்னாள் மாணவர்களும் மாணவிகளும் இலவசப் பயிற்சி அளித்து வருகிறார்கள்.
ஆளுநருக்கு திமுகவின் அறிவுரை அவசியமா?
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவரது குடியரசு தின உரையில் `நீட்’ தேர்வை ஆதரித்து பேசியதற்காக, அவருக்கு எதிராக திமுகவின் கட்சி நாளிதழான `முரசொலி கடுமையாக விமர்சனம் செய்து எழுதி இருக்கிறது. `நீட்’ தேர்வின் காரணமாக அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடிகிறது...
தமிழ்நாட்டில் இந்துத்துவம் ஏன் வெற்றி பெறவில்லை?: இது மனதின் குரல், பிரதமருடையது அல்ல!
தமிழகத்தை பொறுத்தவரை தேசிய கட்சிகளின் வெற்றி என்பது வெறும் கனவுதான். பாஜக வசைபாடும் திராவிட கட்சிகளுடன், கூட்டணி வைத்துக்கொள்வதே அக்கட்சியின் இருப்பை காட்டிக்கொள்ள சிறந்த வழி.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்தால், தூத்துக்குடி மக்கள் ஏற்றுக்கொள்வார்களா? போராடுவார்களா?
ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூடச்சொல்லி அரசும், நீதிமன்றமும் போட்ட ஆணைகளைக் கடந்து அதை மீண்டும் திறந்த வரலாறு அந்த நிறுவனத்திற்கு உண்டு. தூத்துக்குடியில் 2018ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி நடந்த காவல்துறைத் துப்பாக்கிச் சூடு அந்த ஆலைக்கான மூடுவிழாவாகத்தான் தோன்றியது. ஆனால் ஸ்டெர்லைட் நிர்வாகம்...
Read in : English