Read in : English
இஸ்லாமியன் மறைகிறான்: பத்திரிகையாளர் சயீத் நக்வி எழுதிய முக்கியத்துவம் வாய்ந்த நாடகம்!
முஸ்லிம்கள் இல்லாத பாரதம் - பொளரென்று கடூரமாக தொனிக்கிறதா? கடவுளே! ஒரு பக்கம் முஸ்லிம்களை எல்லாம் அப்புறப்படுத்திவிடலாம், நாடு கடத்தி விடலாம், முடிந்தால். ஏதோ ஓர் அதிசயத்தால் அவர்கள் காணாமல் போய்விட்டாலும் நல்லதுதான். ஆனால் அப்புறம்? அவர்களைக் காட்டி தலித்துக்களையும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினரையும் கட்டுக்குள் வைத்திருக்கும் நிலை மாறக்கூடுமே...அவ்விரு பிரிவினரும் முஸ்லிம்கள் விட்டுச் சென்ற உடைமைகளுக்கு உரிமை கோரினால், அவர்கள் இணைந்து அரசியல் அதிகாரத்தையும் கைப்பற்றத் தொடங்கினால்...? கொஞ்சம் ஏடாகூடமான நிலைமைதான்
மதி மீம்ஸ்: ஆட்டுத்தாடிக்கும் மாநில அரசுக்கும் மீண்டும் மோதல்!
உளவுத்துறை போலீஸ் அதிகாரியாக இருந்து தமிழக ஆளுநராகியுள்ள ஆர்.என். ரவி, நீட் தேர்வு மசோதாவைத் திருப்பியனுப்பியதன் மூலம் திமுக அரசுடன் மோதல் போக்கைத் தீவிரப்படுத்தியுள்ளார்.
‘வளையோசை கலகலவென’ திரையுலகில் மனதை மயக்கும் இசைக்குயில் லதா மங்கேஷ்கர்!
உடல்நலமில்லாமல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இசைக்குயில் லதா மங்கேஷ்கர் ஞாயிற்றுக்கிழமை (6.2.2022) காலமானார். மனதை மயக்கும் குரல் என்பது இசையுலகில் மிகை வார்த்தைகள் அல்ல. இசையின் உள்ளடக்கத்தில் அதுவும் ஒரு தவிர்க்க முடியாத அம்சம். மிகச்சில சாதனையாளர்களிடம் மட்டுமே அப்படியொரு மயக்கும் குரலைத் தரிசிக்க முடியும்.
மத்திய பட்ஜெட்: நதி நீர் இணைப்புத் திட்டம் எளிதில் சாத்தியமில்லை!
இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, பெண்ணாறு நதிகள் இணைப்பு திட்டத்திற்காக ரூ.46,605 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. நதிநீர் இணைப்பு திட்டத்தில் தொடர்புடைய மாநிலங்கள் ஒத்துழைப்பு அளித்தால் மத்திய அரசு அதற்கான நிதியை அளிக்கும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நதிகள் இணைப்பு என்பது அவ்வளவு எளிதில் சாத்தியமாகாது என்கிறார் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் எஸ். ஜனகராஜன்
இன்றைக்கும் மிகவும் பின்தங்கியுள்ள ஆதிவாசி மக்களின் வாழ்வு எப்போது மலரும்?
குரலற்ற ஆதிவாசி மக்களின் வளர்ச்சியில் முனைப்புடன் செயலாற்றுபவர் டாக்டர் கே. கிருஷ்ணன். ஆதிவாசி மக்கள் உரிமைக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள பவுண்டேஷன் பார் சஸ்டைனபிள் டெவலப்மென்ட் (Foundation for Sustainable Development (FSD) என்ற அமைப்பின் முதன்மை செயல் இயக்குநர் பொறுப்பு வகிக்கிறார். தேசிய ஆதிவாசி சாலிடாரிடி கவுன்சில் அமைப்பின் கன்வீனர் பொறுப்பிலும் உள்ளார். பல பகுதிகளில் கொத்தடிமைகளாக இருந்த, 13,000 ஆதிவாசிகளை களத்தில் நின்று மீட்டு மறுவாழ்வு திட்டங்களை செயல்படுத்திவருகிறார். பழங்குடியின மக்கள் வாழ்வதாரத்தை மேம்படுத்தும் வகையில், முன்னுதாரணத் திட்டங்கள் பலவற்றை சோதனை முறையில் அமல்படுத்தி வெற்றி கண்டுள்ளார். பழங்குடியின மக்களின் இன்றைய நிலை பற்றி, ‘இன்மதி’ இணைய இதழுடன் கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அவருடன் நடத்திய உரையாடல்:
திரைப்பட நட்சத்திரங்கள் பாடல் எழுதுவது ‘வைரல்’ ஹிட் ஆவதற்கு மட்டும்தானா?
திரைப்பட நடிகராக வேண்டுமென்று திரைத்துறைக்குள் காலடி வைத்த எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பாளர் ஆனதும், நடிப்பதே லட்சியம் என்று நினைத்த ஏ.பி.நாகராஜனுக்கு முந்தைய தலைமுறை முதல் ஷங்கருக்குப் பிந்தைய தலைமுறை வரை பல கலைஞர்கள் இயக்குநரானதும் தமிழ் சினிமா வரலாற்றின் சில பக்கங்களில் காண முடியும்...
சாவின் விளிம்பில் கைவிடப்பட்டவர்களுக்கு மதுரை டாக்டர்களின் மனித நேய சேவை!
தங்களை மருத்துவர்களாக்கிய சமூகத்துக்கு நாம் ஏதும் செய்யவில்லையோ என்ற எண்ணம் டாக்டர் பாலகுருசாமிக்கு வந்தபோது தான் தனியே இல்லை என்பது அவருக்கு தெரிய வருகிறது. 2008ஆம் ஆண்டு மருத்துவ படிப்பு முடித்த பாலகுருசாமி மதுரையின் ஒரு பெரிய மருத்துவமனையில் 2009 ஆண்டு பணியில் சேர்கிறார். அங்கிருந்த டாக்டர்கள் அமுதநிலவன், வெங்கடேஷ், ஸ்ரீவித்யா மஞ்சுநாத், பிரபுராம் நிரஞ்சன், சபரிமணிகண்டன் மற்றும் சதீஷ் நண்பர்களாகிறார்கள். சாமானியக் குடும்பங்களிருந்து படித்து மருத்துவர்களான தங்களுடைய மருத்துவ அறிவு ஏழை மக்களுக்கும் பயன்பட வேண்டும் என்று தீர்மானித்த நண்பர்கள் மதுரை மகாத்மா காந்தி நகரில் ஒரு சிறிய கிளினிக் ஆரம்பிக்கிறார்கள். பெரும்பாலும் இலவச வைத்தியம் அல்லது நோயாளிகளால் கொடுக்க முடிந்ததை வாங்கிக்கொள்வது. விடுமுறை நாட்களில் மதுரையை சுற்றிய கிராமங்களில் முகாம்கள் நடத்துவது.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் வரமா அல்லது சாபமா?
இந்தியாவின் மிகவும் நகரமயமாக்கப்பட்ட மாநிலமான தமிழ்நாட்டில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு அரசியல் களத்தை மீண்டும் பரபரப்பாக்கியுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி, தாம்பரம், காஞ்சிபுரம், கோயம்புத்தூர், மதுரை உள்ள மாநகராட்சிகளுக்கு வரும் பிப். 19ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் கடந்த ஜனவரி 28ஆம் தேதி அறிவித்தது. இது பொதுமக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பட்ஜெட்: டிஜிட்டல் சொத்து வரி தமிழக கிரிப்டோ வர்த்தகர்களிடம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
மத்திய பட்ஜெட்டில் டிஜிட்டல் சொத்துகள் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு 30% வரி விதிக்கப்படும் என்று
கூறப்பட்டுள்ளது. இந்த புதிய ஒழுங்குமுறைகள் தமிழ்நாட்டில் கிரிப்டோ தொடர்பான குற்றச் சம்பவங்களை குறைக்குமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தற்போது
இந்தியாவில் புதிய டிஜிட்டல் சொத்து வரியானது, கிரிப்டோ சமூகத்தினரிடையே உள்ள நிச்சயமற்ற தன்மையை அகற்ற உதவும் என்கிறார் தமிழ்நாடு எமர்ஜிங் டெக்னாலஜிகளுக்கான சிறப்பு மையத்தின் (CEET) பிளாக்செயின் முன்முயற்சிக்கானத் தலைவர் இஷான் ராய். அவர் , இன்மதி இணையதளத்திற்கு அளித்த பேட்டி:
பள்ளி மாணவர்களுக்கு கிராமியக் கலைகளைக் கற்றுத்தரும் பட்டதாரி இளைஞர்!
பாரம்பரிய கலைகள் மூலம் கிடைக்கும் வருமானத்தில் பட்டதாரியான இளைஞர் ஒருவர், கிராமம்தோறும் சென்று அழிவில் இருக்கும் பாரம்பரிய கிராமியக் கலைகளை பள்ளி மாணவர்களுக்கு கற்று கொடுத்து வருகிறார்.
Read in : English