Read in : English

மருத்துக் கல்வியின் மீது மோகம், எம்பிபிஎஸ் படிப்பில் தகுதி அடிப்படையில் சேருவதற்குக் குறைந்த எண்ணிக்கையிலான இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அதிகக் கட்டண வசூலிப்பு போன்றவை காரணமாக, எப்படியாவது மருத்துவப் படிப்பைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வமுள்ள மாணவர்கள் வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பைப் படிக்கச் செல்கிறார்கள்.

இந்தியாவில் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்காதவர்களுக்கு கட்டணம் செலுத்தி படிக்கும் அளவுக்கு உள்ள வெளிநாட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்ததும் மகிழ்ச்சியடைகிறார்கள். அவர்கள் வெளிநாட்டு மண்ணில் தரையிறங்கியவுடன், யதார்த்த நிலை அவர்களை கஷ்டத்தில் ஆழ்த்திவிடுகிறது.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் நீட் தேர்வு மூலம் இடம் பெற முடியாத இந்தியர்கள், இங்குள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அதிகக் கட்டணம் வசூலிப்பதால், சீனா, ரஷ்யா, உக்ரைன், பிலிப்பைன்ஸ், நேபாளம், வங்கதேசம், கரீபியன் தீவுகளான ஆன்டிகுவா, பார்படாஸ், கிர்கிஸ்தானின் செயின்ட் கிட்ஸ், மற்றும் போலந்து, பெலாரஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் மருத்துவக் கல்வியை படிக்க முடிவு செய்கிறார்கள்.

படிக்கச் செல்லும் நாட்டைப் பொறுத்து படிப்புக்கான செலவு ரூ.20 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரை ஆகும். எடுத்துக்காட்டாக, ஜெர்மனியில், அரசுப் பல்கலைக்கழகங்களில் கட்டணம் இருக்காது அல்லது பெயரளவில் ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் அளவுக்குக் கட்டணம் இருக்கும். ஆனால், அந்நாட்டில் மாணவர் சேர்க்கை முறை மிகவும் கடினமானது. அத்துடன், அங்கு படிக்க விரும்பும் மாணவர் ஜெர்மன் மொழியையும் கற்க வேண்டும்.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் நீட் தேர்வு மூலம் இடம் பெற முடியாத இந்தியர்கள், இங்குள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அதிகக் கட்டணம் வசூலிப்பதால், சீனா, ரஷ்யா, உக்ரைன், பிலிப்பைன்ஸ், நேபாளம், வங்கதேசம், கரீபியன் தீவுகளான ஆன்டிகுவா, பார்படாஸ், கிர்கிஸ்தானின் செயின்ட் கிட்ஸ், மற்றும் போலந்து, பெலாரஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் மருத்துவக் கல்வியை படிக்க முடிவு செய்கிறார்கள்.

ʺஇந்தியாவில் பயிற்சி செய்ய உரிமம் பெறும் வரை அவர்கள் புகழ்பெற்ற மருந்தாளுநர்களே தவிர வேறில்லை. ஏனென்றால் நாங்கள் அவர்களை மருத்துவ உதவியாளர்களாக மட்டுமே நியமிக்க முடியும்ʺ என்கிறார் டாக்டர் நவீன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர்கள் மருத்துவர்களாக இருப்பதற்குத் தகுதியானவர்களே. ஆனால், உரிமம் பெறுவதற்கு அவர்கள் முதலில் வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரிகளுக்காக நடத்தப்படும் தேர்வில் (Foreign Medical Graduate Examination- FMGE) தேர்ச்சி பெற வேண்டும். அந்தத் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் அந்தப் பட்டத்துக்கு இங்கு மதிப்பில்லை.

பெரும் தொகையை செலவழித்துப் பட்டம் பெற்றிருந்தாலும் பெற்றோரையே சார்ந்திருக்க வேண்டியதுள்ளது என்ற குற்ற உணர்வு பலருக்கு உள்ளது. அதனால், மருத்துவமனைகளில் உதவியாளர்களாகப் பணிபுரியத் தொடங்குகிறார்கள்ʺ என்கிறார் நவீன்.

வெளிநாட்டில் மருத்துவப் பட்டம் பெறும் மாணவர்களில் 25 சதவீதம் பேர் மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் எஃப்எம்ஜிஇ தேர்வில் தேர்ச்சி பெற முடிகிறது

வெளிநாட்டில் மருத்துவப் பட்டம் பெறும் மாணவர்களில் 25 சதவீதம் பேர் மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் எஃப்எம்ஜிஇ தேர்வில் தேர்ச்சி பெற முடிகிறது என்கிறார் ராமநாதபுரம் மாவட்டம் ஆர்எஸ் மங்கலத்தைச் சேர்ந்த வில்லியம்ஸ் ஸ்டீபன். 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற இந்தத் தேர்வில் 18,048 பேர் எழுதினார்கள். அதில் 4,282 பேர், அதாவது 23.73 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இது கடினமான தேர்வு.

பிலிப்பின்ஸ் நாட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு மருத்துவப் படிப்பை முடித்த அவர், இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற உள்ள இந்தத் தேர்வுக்காகத் தயாராகி வருகிறார்.

இந்தத் தேர்வு ஜூன், டிசம்பர் மாதங்களில், அதாவது ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படுகிறது. இந்திய குடிமக்கள், வெளிநாட்டில் உள்ள இந்தியக் குடிமக்கள் இத்தேர்வை எழுதலாம். இரண்டு பிரிவுகளாக நடைபெறும் இத்தேர்வுக்கு மொத்த மதிப்பெண்கள் 300. சூஒரு பிரிவுத் தேர்வு காலையிலும் மற்றொரு பிரிவுத் தேர்வு பிற்பகலிலும் நடைபெறும். இத்தேர்வில் நெகட்டிவ் மார்க் கிடையாது. ஆனால், இத்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு இத்தேர்வு எழுதும் மாணவர்கள் 150 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்கிறார் ஸ்டீபன்.

இத்தேர்வில் தேர்ச்சி பெறுவதென்பது மாணவர் மற்றும் அவர்கள் பயிறசி பெறும் நிறுவனத்தைப் பொறுத்தது. சிலர் முதல் முயற்சியிலேயே அதில் தேர்ச்சி பெறுகிறார்கள். ஆனால், பலர் தேர்ச்சி பெறுவதற்கு மேலும் இரண்டு முறையாவது தேர்வு எழுதவேண்டியுள்ளது. ʺமருத்துவப் பட்டம் படித்த பிறகும், அதன் மூலம் வருமானம் கிடைக்காமல் இருப்பது மன வேதனையாக இருக்கிறது. அதற்காக கவனத்தைச் சிதறவிட்டுவிட்டால், எப்போதும் தேர்வில் தேர்ச்சி பெற முடியாதுʺ, என்கிறார் கடந்த ஆண்டு எஃப்எம்ஜிஇ தேர்வில் தேர்ச்சி பெற்ற டாக்டர் கமேஷ் சுபின். தற்போது அவர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவவராக இருக்கிறார்.

பொதுவாக, வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பை முடிக்க ஆறு ஆண்டுகள் ஆகும். பெரும்பாலான வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் அந்நாட்டின் மொழியினைக் கற்றுக்கொள்வதை உள்ளடக்கிய இரண்டு வருட படிப்பை மருத்துவப் படிப்பிற்கு முன் மாணவர்கள் செய்யவேண்டும். மாணவர்கள் மருத்துவப் பட்டம் பெற்று இந்தியா திரும்பியதும், எஃப்எம்ஜிஇ தேர்வில் தேர்ச்சி பெற்று, பின்னர் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ரூ.3 லட்சம் செலுத்தி இன்டர்ன்ஷிப்பில் சேர வேண்டும். இது தவிர, அவர்கள் இன்டர்ன்ஷிப்பிற்காக அனுப்பப்படும் மருத்துவமனைக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை கூடுதலாகச் செலுத்தும்படி அந்த மருத்துவமனைகள் நிர்பந்திப்பதும் உண்டு.

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் கட்டாய நன்கொடை கேட்பதில்லை என்றாலும், கல்விக் கட்டணமாக இந்திய மதிப்பில் ரூ. 3 லட்சம் முதல் 4 லட்சம் வரை வசூலிக்கின்றன. தங்குமிடம் மற்றும் உணவிற்கான செலவுகளுடன் கட்டணம் அதிகரிக்கிறது. நாமக்கல் மாவட்டம் வெப்போடையைச் சேர்ந்த கே.பார்த்தசாரதி கூறுகையில், ʺ ரூ.16 லட்சத்திற்குள் மருத்துவப் படிப்பைப் படித்துமுடித்துவிட முடியும் என்று கூறப்பட்டது. ஆனால், தங்குவதற்கும் உணவுக்கும் சேர்த்து ரூ.70 லட்சம் செலவாகிவிட்டதுʺ என்கிறார்.

இந்தியாவில் உள்ள தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் பட்டம் பெறுவதைவிட, வெளிநாட்டில் மருத்துவப் படிப்பைப் படிப்பதற்கு இன்னும் குறைவாகவே செலவாகும். ஆனால் அவர்கள் ஆறு ஆண்டுகள் வெளிநாட்டில் மருத்துவப் படிப்பைப் படிக்கிறார்கள். ஆனால், எஃப்எம்ஜிஇ தேர்வு எழுத மேலும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஆகின்றன. அதன் பிறகே, மருத்துவராகப் பணிபுரிய உரிமம் பெறுகிறார்கள். அதற்கு நீங்கள் இந்தியாவிலேயே படித்திருக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கலாம் என நினைப்பீர்கள்.

ஆனால், நீட் தேர்வு, தேர்வில் போதிய மதிப்பெண் பெற இயலாமை, போதிய எண்ணிக்கையில் மருத்துவக் கல்லூரிகள் இல்லாதது போன்ற காரணங்களால் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை நாட வைக்கின்றனʺ என்கிறார் பார்த்தசாரதி.

2019 ஆம் ஆண்டில், இளநிலை அளவில் 90 ஆயிரம் மருத்துவ மற்றும் பல் மருத்துவ பட்டப் படிப்புக்கான இடங்களுக்கு சுமார் 15 லட்சம் விண்ணப்பதாரர்கள் நீட் தேர்வு எழுதினார்கள். அதாவது, ஒரே ஒரு இடத்திற்காக 17 மாணவர்கள் போட்டியிட்டனர்.

2018 முதல், வெளிநாடுகளில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கும் நீட் தேர்வு கட்டயமாக்கப்பட்டுவிட்டது.

2018 முதல், வெளிநாடுகளில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கும் நீட் தேர்வு கட்டயமாக்கப்பட்டுவிட்டது. வெளிநாட்டு மருத்துவப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பதார்களை ஈர்க்கும் மற்றொரு அம்சம் என்னவென்றால், யுஎஸ்எம்எல்இ தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு அந்தப் பல்கலைக்கழகங்கள் உறுதியளிக்கும் பயிற்சியே ஆகும். இது அவர்களை அமெரிக்காவில் பணிபுரிய தகுதியுடையதாக ஆக்குகிறது.

சிலர் யுஎஸ்எம்எல்இ (யுனைட்டெட் ஸ்டேட்ஸ் மெடிக்கல் லைசென்சிங் எக்ஸாமினேஷன்) தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், பெரும்பாலானவர்கள் எஃப்எம்ஜிஇ தேர்வை எழுதுவதற்காக இந்தியா திரும்புகின்றனர். ஆனால் தங்களது வாழ்க்கையைப் பரிதாபமாக்கும் வகையிலேயே இத்தேர்வு கடினமாக்கப்படுவதாக பலர் கருதுகின்றனர்.

21 ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற எஃப்எம்ஜிஇ தேர்வுக்கான பாடத்திட்டமானது மருத்துவ பட்டதாரி களுக்கான விதிமுறைப்படி இருந்தது. தேசிய மருத்துவ ஆணையத்தால் (என்எம்சி) இது தயாரிக்கப்பட்டது.

கொரோனா முதல் அலையின்போது, முன்னாள் மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ் எஃப்எம்ஜிஇ தேர்வு கடினமாக இருப்பது பற்றி கவலை தெரிவித்திருந்தார். இந்தத் தேர்வு வேண்டுமென்றே வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்துவதாக அவர் குற்றஞ்சாட்டினார். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பயின்று வருவதாகவும், ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பல்கலைக்கழகங்களில் இருந்து 8,000 முதல் 9,000 மாணவர்கள் இந்தியாவுக்குத் திரும்புவதாகவும் அன்புமணி கூறினார்.

இந்தத் தகுதி வாய்ந்த மருத்துவர்கள், இந்தியாவில் பயிற்சிபெறப் பதிவு செய்ய முடிந்திருந்தால், அவர்கள் கொரோனா சிகிச்சை செய்யும் மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவி இருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 1,000 தமிழ்நாட்டு மருத்துவ மாணவர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் இருந்து திரும்பி வந்து எஃப்எம்ஜிஇ தேர்வுக்குத் தயாராகி வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 25 சதவீதம் பேர் மட்டுமே எஃப்எம்ஜிஇ தேர்வில் தேர்ச்சி பெறுகிறார்கள்; ஆனால், இத்தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் விட்டுவிடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்கிறார் கல்வியாளர் மற்றும் சமூக தொழில்முனைவோருமான நெடுஞ்செழியன்.

மருத்துவப் பட்டப்படிப்பிற்காகத் தங்கள் குழந்தைகளை வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்புவதால் ஏற்படும் ஆபத்துகளை பெற்றோர்கள் உணரவில்லை. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை வரவழைக்க ஒவ்வொரு நகரத்திலும் தரகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் சொல்வதற்கும் யதார்த்ததுக்கும் இடைவெளி அதிகம். 17 வயதிலேயே குழந்தைகளை ஆபத்தில் அமிழ்த்துகிறோம்ʺ என்று அவர் கூறுகிறார்.

சில ஏஜெண்டுகள் தங்கள் பிள்ளைகள் மருத்துவராவதைப் பார்க்கவேண்டும் என்று ஆர்வமாக இருக்கும் இந்தியப் பெற்றோரை முட்டாள்களாக்குகிறார்கள். போலிப் பல்கலைக்கழகங்கள் அல்லது பட்டப்படிப்புகளுக்கு அங்கீகாரம் இல்லாத நிறுவனங்களில் அவர்களைச் சேரச் செய்கிறார்கள். ஓராண்டு அல்லது இரண்டு ஆண்டுகள் படிப்பை முடித்தவுடன், அவர்களின் கல்வி எதற்கும் பிரயோஜனமில்லை என்பதை அவர்கள் உணர்கிறார்கள்.

வெளிநாட்டில் மருத்துவப் பட்டப்படிப்புகள், நாம் நினைப்பதைப்போல குறைவாக இருப்பதில்லை. செலவு அதிகம். படிக்கும்போது மருத்துவ சிகிச்சை அனுபவம் போதிய அளவில் இருக்காது. ஏழை நாடுகள்கூட நோய்வாய்ப்பட்டவர்கள் வெளிநாட்டில் படித்த மாணவர்களிடம் சிகிச்சைபெறுவதை விரும்புவதில்லை. இதுபோன்ற தருணங்களில், இந்த மாணவர்கள் கல்வி ரீதியாக தகுதியுடையவர்களாக இருக்கலாம். ஆனால் மருத்துவ சிகிச்சை அளிப்பதில் போதுமான தகுதியுடையவர்களாக இருப்பதில்லை.

ʺவெளிநாட்டில் படிக்கும் மாணவர்களைக் காட்டிலும் இந்தியாவில் ஏராளமான நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதன் மூலம் நல்ல பயிற்சி கிடைக்கிறதுʺ என்கிறார் இந்தியாவில் படித்துத் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் பாலகுருசாமி.

எவ்வாறாயினும், கொரோனா பெருந்தொற்று, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் சேர விரும்பும் மாணரவர்களின் ஆர்வத்தைக் குறைத்துள்ளது. கொரோனாவின் போது சிக்கித் தவித்த பெற்றோர்களும் மாணவர்களும் ஒரே மாதிரியான பாடத்தைக் கற்றுக்கொண்டனர் என்கிறார் நெடுஞ்செழியன். இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நபர்கள் சீனாவின் வுஹானில் இருந்த இந்திய மருத்துவ மாணவர்கள்.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival