Read in : English

என்கிராமத்தின் உள்பகுதியில் நண்பனின் வீட்டுக்கு நடந்துபோய்க் கொண்டிருந்தபோது, குதித்துக்குதித்து புளியம்பழங்களையும், புளியம்பூக்களையும் பறித்து நடந்துகொண்டே அவற்றைச் சாப்பிட்டது எனக்கு ஞாபகம் வந்தது. இந்தப் புளியம்பூக்களிலும், மொட்டுகளிலும் மிதமான புளிப்பும், இனிப்பும், மற்றும் துவர்ப்பும் கலந்திருக்கும். இயற்கையில் வெகுசில பூக்களே அப்படியே உண்ணும் தன்மையைக் கொண்டிருக்கும். அழகு, அன்பு, புத்தம் புதிய தன்மை, கலாச்சாரம், பருவம், மற்றும் நிறம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பூக்கள். சாப்பிடத் தகுந்த பூக்களில் மருத்துவக் குணங்கள் உண்டு. சில நோய்களுக்குக் கைவைத்தியமாக அவை பல ஆண்டுகளாகப்  பயன்பட்டு வருகின்றன. சாயம் தயாரிக்க வண்ணப்பூக்கள் பயன்படுகின்றன; உணவுகளுக்கு நிறம் கொடுக்கவும் பயன்படுகின்றன. சில பூக்கள் காயவைக்கப்பட்டு, பொடியாக்கப்பட்டு பத்திரப்படுத்தப் படுகின்றன. சில சமைக்கப்படுகின்றன; சில கால்நடைத் தீவனமாக உபயோகப்படுகின்றன. கசப்பு, இனிப்பு என்று மலர்களின் சுவைகள்  மாறுபடுகின்றன; அதனால்தான் தேனீக்கள் மலர்களிலிருந்து தேனெடுக்கின்றன. வீடுகளில் பல்வகையான பூக்கள் சமையலறைத் தோட்டத்தில் வளர்க்கப்படுகின்றன; மருத்துவ நோக்கங்களுக்காகப் பயன்படுகின்றன; அல்லது சமைக்கப்பட்டு அவற்றின் குணாம்சங்கள் அறியாமலே உண்ணப்படுகின்றன. சில பூக்களின் குணாம்சங்கள் பற்றியும், அவை ஏன் உண்ணப்படுகின்றன, ஏன்  உண்ணமுடியும் என்பவற்றைப் பற்றியும் இங்கே பார்க்கலாம்.

புளியம்பூக்களிலும், மொட்டுகளிலும் மிதமான புளிப்பும், இனிப்பும், மற்றும் துவர்ப்பும் கலந்திருக்கும்.

முதலில் முருங்கைப்பூ: இது சமையலுக்கு உதவுகிறது; உடைத்த முட்டையோடு சேர்க்கப்படுகிறது; அல்லது அதை வைத்துப் பொரியல் செய்யப்படுகிறது. வாழைப்பூவைப் போல வடை சுடுவதற்கும் முருங்கைப்பூ பயன்படுகிறது. முருங்கைப் பூக்களை வழக்கமாகச் சாப்பிட்ட எலிகளுக்கு டியூமர் வருவதில்லை என்று விஞ்ஞானரீதியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆயுர்வேதத்தில் குழந்தைப்பேறு ஆரோக்கியத்தை வளர்த்தெடுக்கவும், நரம்புக்கட்டமைப்பைப் பலப்படுத்தவும் முருங்கைப்பூ பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பூக்கள் காயவைக்கப்பட்டு கஷாயம் தயாரிக்கப்படுகிறது. காயவைக்கப்பட்ட முருங்கைப்பூக்கள் இணையதளச் சந்தையில் கிடைக்கின்றன; அதனால் அவற்றின் விலைகளும் அதிகமாகவே இருக்கின்றன. ஊட்டச்சத்துப் பார்வையில், இந்தப் பூக்களில் புரோட்டீன், நார்ச்சத்து, தாதுப் பொருட்கள் நிறைவே இருக்கின்றன.

வீடுகளில் பல்வகையான பூக்கள் சமையலறைத் தோட்டத்தில் வளர்க்கப்படுகின்றன; மருத்துவ நோக்கங்களுக்காகப் பயன்படுகின்றன; அல்லது சமைக்கப்பட்டு அவற்றின் குணாம்சங்கள் அறியாமலே உண்ணப்படுகின்றன.

பல்சுவை பச்சடி வைப்பதற்கு வேப்பம்பூக்களைப் பயன்படுத்துவது  ஒரு மரபு. புத்தாண்டுத் தினத்தில் எல்லாச் சுவைகளுக்கும் இடங்கொடுக்கும் சமையல் வழிகாட்டி நெறிமுறையில் கசப்புச்சுவை தருவதற்கென்று வேப்பம்பூ இடம்பெறுகிறது. ரசம் தயாரிப்பதற்கும் வேப்பம்பூக்கள் பயன்படுகின்றன. புற்றுநோயைத் தடுக்கும் குணங்கள் அவற்றில் இருக்கின்றன என்பது இளம்விலங்குகளின்மூலம் விஞ்ஞானம் நிரூபித்திருக்கிறது. வேப்பம்பூவை மாவாக்கி அதனோடு தேனைக் கலந்து பூச்சிக்கடித்த குழந்தைகளுக்குக் கொடுப்பதுண்டு.

ஆந்திரப்பிரதேசம் ரெங்காரெட்டி மாவட்டத்தில் சமீர்பேட்டையில் உள்ள மான் பூங்காவில் உள்ள புங்கமரம். புங்க மலர்களிலும் மருத்துவக்குணங்கள் இருக்கின்றன

புங்கமலர்களிலும் மருத்துவக்குணங்கள் இருக்கின்றன. தீய நுண்ணுயிரிகளை எதிர்க்கும் குணங்களும், செல்சேதங்களைத் தடுக்கும் குணங்களும் அவற்றில் உண்டு. மேலும் அவை செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்யவும் உதவுகின்றன. புங்கமலர்களை உலரவைத்து அவற்றோடு வெந்தயம், மஞ்சள், மிளகு ஆகியவற்றைச் சேர்த்து தேநீர் தயாரிக்கப்படுகிறது. அந்தத் தேநீர் இரத்தத்தின் அதிக சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. ஆயுர்வேதத்தில் உலர்ந்த புங்கமலரில் தயாரித்த கஷாயம் மூலநோயைக் குணமாக்கும் ஆற்றல் கொண்டது. காயவைக்கப்பட்ட புங்கமலர்ப் பொடியைத் தேனோடு உண்டால் ஜலதோசத்தையும், இருமலையும் குணமாக்கிவிடலாம். அந்தப் பூவிலிருந்து எடுத்த எண்ணெயை உண்ணக்கூடாது; ஆனால் தோல்நோய்களுக்குச் சிகிச்சைசெய்ய அதைப் பயன்படுத்தலாம்.

 

செம்பருத்தியின் மருத்துவப் பயன்பாடு மிகப்பிரச்சித்தமானது. ஊட்டச்சத்து மிக்க இந்தப் பூவை கேசவளர்ச்சி ஊக்கியாகவும், தேநீர் மற்றும் கஷாயம் தயாரிப்பதற்கும் பயன்படுத்தலாம்.  

செம்பருத்தியின் மருத்துவப் பயன்பாடு மிகப்பிரச்சித்தமானது. அந்தப் பூவின் நிறத்திற்குக் காரணம் அதில் இருக்கும் ஆந்தோசியனின் என்னும் நிறமிதான். செல்சேதத் தடுப்புக் குணாம்சங்கள் அந்த நிறமியில் இருக்கின்றன. ஹைபிஸ்கஸ் என்றழைக்கப்படும் செம்பருத்தியில் நிறைய தாவர இரசாயனங்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஊட்டச்சத்து மிக்க இந்தப் பூவை கேசவளர்ச்சி ஊக்கியாகவும், தேநீர் மற்றும் கஷாயம் தயாரிப்பதற்கும் பயன்படுத்தலாம். கஷாயத்தின் நிறம் பிரகாசமாகவும், அழகாகவும் இருக்கக் காரணம் பூவிலிருக்கும் ஆந்தோசியனின் என்னும் நிறமி பூவிலிருந்து நீருக்குக் கடத்தப்படுவதுதான். செம்பருத்திப்பூ காயவைக்கப்பட்டு பொடியாக்கப்பட்டு தேநீர்த் தூளோடு கலக்கப்பட்டு தேநீர் தயாரிக்கப்படுகிறது. சிறுநீர்ப்பாதைத் தொற்றுக்கு மருந்தாகவும் செம்பருத்திப்பூ செயல்படுகிறது. செம்பருத்தித் தேநீர் சிறுநீர்க் கடுப்புக்கும், சிறுநீர்ப்பைத் தொற்றுக்கும் மருந்தாக வீட்டில் தயாரிக்கப்படுகிறது. அதனால் அதுவோர் சிறந்த  பாக்டீரியா கொல்லியாகவும் செயல்படுகிறது. புத்தம்புதிய செம்பருத்திப் பூக்களை அப்படியே உண்பவர்களும் உண்டு; உலரவைத்து உண்பவர்களும் உண்டு; அல்லது கஷாயம் வைத்து அருந்துபவர்களும் உண்டு. இந்தப் பூக்களில் பாக்டீரியாவுக்கு எதிரான, சர்க்கரை நோய்க்கெதிரான குணாம்சங்களும், கல்லீரலைக் காக்கும் பலமும் இருக்கின்றன. இயற்கையிலேயே கல்லீரலைக் காக்கும் குணம் கொண்டதால், செம்பருத்திப் பூக்கள் கல்லீரலில் படியும் கொழுப்பைக் குறைக்க உதவுகின்றன; அதைப்போல இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்து இரத்தநாளங்களின் அடைப்புகளை நீக்கிவிடுகின்றன. அதனால் தமனிக்கூழ்மைத் தடிப்பு தவிர்க்கப்படுகிறது. எனினும் சர்க்கரை நோய்க்கு மாத்திரைகள் சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்கள் செம்பருத்திப்பூவை உண்பதைத்  தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அது மேலும் சர்க்கரை அளவைக் குறைத்து பிரச்சினைகளை உருவாக்கிவிடும். இந்தப்பூ இரத்த அழுத்தத்தையும் குறைத்துவிடும் என்பதால் ஏற்கனவே உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க மாத்திரை சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள் இந்தப் பூவைத் தவிர்ப்பது நல்லது. கர்ப்பிணிகள் செம்பருத்தித் தேநீரையோ, கஷாயத்தையோ அருந்த வேண்டாம். ஏனென்றால் அது இரத்தப்போக்கை உருவாக்கும் சாத்தியம் கொண்டது.

தமிழ்நாட்டின் வீடுகளில் காணப்படும் படர்கொடி சங்குப்பூ. இதிலிருந்து தயாரிக்கப்படும் தேநீர் அல்லது கஷாயம் நீல நிறத்தில் இருக்கும். மருத்துவ குணம் கொண்ட இதை அருந்துவதால் கொழுப்பு எரிக்கப்படுகிறது. காய்ச்சல் குறைந்துவிடும்.

தமிழ்நாட்டில் எல்லா வீடுகளிலும் காணப்படும் இன்னொரு படர்கொடி  நீல (வணணத்துப்பூச்சி) பட்டாணிப் பூ (கிளிட்டோரியா டெர்னடி). பெரும்பாலும் சங்குப்பூ என்று அழைக்கப்படுகிறது. இதன் நிறம் கவர்ச்சியானது; இதை வைத்து தயாரிக்கப்படும் தேனீர் அல்லது கஷாயம் அழகான நீலநிறத்தில் இருக்கும்; அருந்துவதற்குச் சுவையாகவும் பார்வையைச் சுண்டியிழுப்பதாகவும் இருக்கும். இந்தப் பூவில் இருக்கும் டெர்னட்டின் ஆந்தோசியானின், க்யூர்சிட்டின், கேம்ஃபெரால் ஆகிய நிறமிகள்தான் பூவுக்கு வழமையான வண்ணத்தைக் கொடுக்கின்றன. இதை உண்பதால் கொழுப்பு எரிக்கப்படுகிறது; அழற்சி அடங்கிவிடுகிறது; வெப்பம் தணிந்து காய்ச்சல் குறைகிறது; செல்சேதங்கள் தடுக்கப்படுகின்றன. சங்குப்பூ கஷாயம் அருந்தப்படுவதோடு, கேசவளர்ச்சி ஊக்கியாகவும் முடியில் தடவப்படுகிறது. காய்ச்சலுக்குப் பயன்படுத்தப்படும் ‘பாரசெட்டமால்’ மாத்திரையைப் போலவே சங்குப்பூவும் காய்ச்சலைத் தணிக்கும் குணாம்சம் கொண்டது என்பது சுவாரஸ்யமானதோர் தகவல். மூளைச் செயல்பாட்டை அதிகரித்து அறிவுத்திறனையும் வளர்த்தெடுக்கும் திறன்கொண்டது சங்குப்பூ. இயற்கை உணவின் நிறத்தை மெருகூட்டவும் இது பயன்படுகிறது.

தமிழின் மரபுவழியான செழித்த அறிவு இன்னும் தமிழர்களுக்கே போய்ச்சேரவில்லை; எதிர்காலச் சந்ததிக்கும் அப்படித்தான். அதனால் வீட்டிலிருக்கும் பெரியவர்கள் இந்தப் பூக்களின் பாதுகாப்பான பயன்பாட்டைப் பற்றிய தங்கள் அறிவையும், பழக்கவழக்கங்களையும் இளைய தலைமுறையினரை சென்றடைய செய்ய வேண்டும்.

இந்தப் பூக்கள் எல்லாம் அப்படியே உண்ணப்படுகின்றன; அல்லது உலரவைத்துப்  பொடியாக்கியும் உண்ணப்படுகின்றன. இவை தமிழர்களுக்கு புதிய பூக்கள் அல்ல; ஆனாலும் மருந்துக் கடைகளில் அலோபதி மாத்திரைகள் கிடைப்பதால் இந்தப் பூக்களின் பயன்பாடு மிகவும் சுருங்கிப்போனது. தமிழின் மரபுவழியான செழித்த அறிவு இன்னும் தமிழர்களுக்கே போய்ச்சேரவில்லை; எதிர்காலச் சந்ததிக்கும் அப்படித்தான். அதனால் வீட்டிலிருக்கும் பெரியவர்கள் இந்தப் பூக்களின் பாதுகாப்பான பயன்பாட்டைப் பற்றிய தங்கள் அறிவையும், பழக்கவழக்கங்களையும் இளைய தலைமுறையினரை சென்றடைய  செய்ய வேண்டும். மூலிகைத் தேநீர், கஷாயம், உலர்ந்த பூக்கள் அல்லது பூக்களின் பொடிகள் ஆகியவற்றைத் தயாரிப்பதை அவர்களுக்கும் சொல்லிக்கொடுக்க வேண்டும். நவீன கருவிகளில் நேரத்தை வீணடிப்பதற்குப் பதிலாக, இளைய தலைமுறையினர் இந்த மண்ணைத் தொட்டு வீட்டுக்கருகே மருத்துவ குணங்கள் கொண்ட தாவரங்களை வளர்த்து அவற்றால் பயன்பெறும் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும். நமது மரபு அறிவை இளைய தலைமுறையினருக்கும் சென்றடையச் செய்ய வேண்டியதுடன்,  அந்த அறிவைப் பேணிக் காப்பதும், அடுத்த தலைமுறை சுற்றுப்புறச்சூழலோடு இணக்கமாக வாழ்வதற்கு வழிவகுக்கும்.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival