Read in : English

Share the Article

தமிழ்நாட்டில் உள்ள பழமையான பஞ்சபூத சிவன் கோயில்களில் ஒன்றான சிதம்பரம் (ஆகாயம்) தில்லை நடராஜர் கோயில் தீட்சிதர்கள் குழந்தைத் திருமண குற்றச்சாட்டுகளில் சிக்கித் தவிக்கிறார்கள்.

2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே பல குழந்தைத் திருமணங்கள் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் 2022 அக்டோபர் முதல் காவல்துறை மூன்று வழக்குகளைப் பதிவு செய்து தீட்சிதர் குடும்பங்களைச் சேர்ந்த ஆறு பேரைக் கைது செய்திருக்கிறது.

ஒரு ’மதப்பிரிவுச் சிறுபான்மை’ இனமான தீட்சிதர்கள் பல ஆண்டுகளாக அரசாங்கத்துடன் இணக்கமாகப் போகமுடியாமல் தவிக்கிறார்கள். 2009 ஆம் ஆண்டில், சிதம்பரம் கோயிலைக் கையகப்படுத்த தமிழக அரசு எடுத்த முயற்சிக்கு எதிராக தொடர்ச்சியான வழக்குகளைத் தொடுத்தனர் தீட்சிதர்கள். இறுதியாக ஜனவரி 6, 2014 அன்று உச்ச நீதிமன்றம் சிதம்பரம் கோயிலைத் தொடர்ந்து நிர்வகிக்கும் சுதந்திரத்தை (அரசமைப்புச் சாசனம் பிரிவு 26 இன் கீழ்) தீட்சிதர்களுக்கு வழங்கியபோது அவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆனால், தற்போது குழந்தைத் திருமணக் குற்றச்சாட்டை மையப்படுத்தி தீட்சிதர்களை தமிழக அரசு குறிவைப்பதாக தீட்சிதர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் இதுகுறித்த விவாதங்கள் நிலவி வரும் சூழ்நிலையில், வழக்கறிஞர் ஜி.சந்திரசேகர் இன்மதியுடனான நேர்காணலில் குழந்தைத் திருமண விவகாரத்தில் தீட்சிதர்களுக்கு ஆதரவாகப் பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.

மூன்று குழந்தைத் திருமண வழக்குகளைப் பதிவு செய்த காவல்துறையினர், சம்பந்தப்பட்ட பெற்றோர்கள் உட்பட ஆறு பேரைக் கைது செய்து, சம்பந்தப்பட்ட சிறுமிகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்த விதம், காவல்துறை ஏதோ உள்நோக்கத்துடன் செயல்படுகிறதோ என்ற சந்தேகத்தைத் தூண்டியுள்ளது

குழந்தைத் திருமணக் குற்றச்சாட்டின் அடிப்படையில் காவலர்கள் நடத்தும் விசாரணையைத் தான் தனிப்பட்ட முறையில் எதிர்க்கவில்லை என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார். ஆனால், குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் 2009 -ன் கீழ் (முந்தைய சட்டம் குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம், 1929) மூன்று குழந்தைத் திருமண வழக்குகளைப் பதிவு செய்த காவல்துறையினர், சம்பந்தப்பட்ட பெற்றோர்கள் உட்பட ஆறு பேரைக் கைது செய்து, சம்பந்தப்பட்ட சிறுமிகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்த விதம், காவல்துறை ஏதோ உள்நோக்கத்துடன் செயல்படுகிறதோ என்ற சந்தேகத்தைத் தூண்டியுள்ளது. இந்த கைதுகளில் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றார் அவர்.

முன்பு சிதம்பரம் கோயில் நிர்வாகத்தில் அரசு தலையிட செய்த முயற்சியை அப்போது தீட்சிதர்கள் கேள்வி எழுப்பினர். தமிழ்நாடு இந்து சமய அறநிலையச் சட்டம், 2006-இன் வரம்பிற்கு அப்பாற்பட்டது சிதம்பரம் கோயில் என்று அவர்கள் வாதிட்டனர்.

மேலும் படிக்க: பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்: தமிழகத்தின் முதல் பெண் மடாதிபதி

கோயிலின் வருமானத்தையும் மற்றும் நகைகளையும் கணக்கிட இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட முந்தைய முயற்சியை தீட்சிதர்கள் தடுத்து நிறுத்திய சம்பவங்களுக்கு அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் இப்போது இறங்கியுள்ளதா என்ற ஐயமும் வலுப்பெற்றுள்ளது என்றார் சந்திரசேகர்.

குழந்தை திருமணக் குற்றவாளிகள் என்று குற்றஞ்சாட்டப்பட்டு தீட்சிதர்கள் பலிகடாவாக்கப்படுகிறார்கள் என்றும், சமூக நலன் சார்ந்த வழக்கை போக்சோ வழக்காக மாற்ற முயற்சிக்கும் காவல்துறையின் அணுகுமுறை முற்றிலும் தவறானது என்றும் அவர் தெரிவித்தார்.

குழந்தைத் திருமணம் என்பது சட்டப்படி குற்றம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ஒரு குற்றச்சாட்டு அல்லது புகார் பரிசீலிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு சம்மன் அனுப்புவதற்கான சட்ட முறை பின்பற்றப்படுவதற்கு முன்பாக, இந்த வழக்கில் தொடர்பில்லாத சிலர் உட்பட தீட்சிதர் குடும்ப உறுப்பினர்கள் சிலரை கைது செய்து, ஒரு பெண்ணைக் கூட இரவு 11 மணி வரை சட்டவிரோதமாக காவல் நிலையத்தில் உட்கார வைத்தனர்.

தீட்சிதர்கள் தங்களது குடும்ப ஆண்கள் தீட்சிதர்களாக மாறுவதற்கு 21 வயது மற்றும் திருமணம் கட்டாயம் என்று வரையறுக்கும் சொந்த விதிகளைக் கொண்டுள்ளனர் எனவே, குழந்தைத் திருமணத்திற்கு நமது அரசியலமைப்புச் சட்டத்திலும் இடமில்லை; சிதம்பரம் கோயிலின் விதிமுறைகளிலும் இடமில்லை என்று அவர் கூறினார்

விசாரணை செய்வது சரி; ஆனால் அது செய்யப்பட்ட விதம்தான் தவறு என்றார் சந்திரசேகர். தீட்சிதர்களுக்கு எதிரான அனைத்து தவறான பிரச்சாரங்களும் அம்பலப்படுத்தப்பட வேண்டும் என்றும், இந்த சமூகம் குறித்து பரவி வரும் அனைத்து தவறான கருத்துகளும் அகற்றப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

வழக்கறிஞர் ஜி.சந்திரசேகர்

தாங்கள் காவல்துறையினரால் எவ்வாறு துன்புறுத்தப்படுகிறோம் என்பதை சுட்டிக்காட்டி தமிழக காவல்துறைத் தலைவரான டிஜிபி, உள்துறை செயலாளர் மற்றும் பிற உயர் அதிகாரிகளிடம் கடந்த ஆண்டு தீட்சிதர்கள் மனுக்களை அளித்தனர்.

மேலும் படிக்க: பல்லக்கில் பட்டணப் பிரவேசம்: 1953ஆம் ஆண்டிலேயே நிராகரித்த குன்றக்குடி அடிகளார்

பதின்ம வயதினர் (சிறார்கள்) சம்பந்தப்பட்ட போக்சோ வழக்குகளில் அவசரப்பட்டு கைது செய்ய வேண்டாம் என்று அனைத்து மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கும் 2022 டிசம்பரில் டிஜிபி அனுப்பிய சுற்றறிக்கையை நினைவுகூர்ந்த சந்திரசேகர், காவலர்கள் இப்போது எந்த அக்கறையும் அனுதாபமும் காட்டாமல் சில தீட்சிதர்களை ஏன் அவசரமாகக் கைது செய்துள்ளனர் என்று கேள்வி எழுப்பினார்.

குழந்தைத் திருமண வழக்கை போக்சோ வழக்காக மாற்றுவதே அவர்களின் நோக்கம். ஆனால், போக்சோ வழக்குகளில் கூட, போலீசார் நிதானமாக செயல்பட வேண்டும் என்று டிஜிபியே அறிவுறுத்தியுள்ளார். தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினரான ரமேஷ் மே 25, 2023 அன்று தாமாக முன்வந்து செய்த விசாரணைக்குப் பிறகு, குழந்தைத் திருமணம் குறித்த குற்றச்சாட்டுகள் உண்மையில்லை.

ஆளுநர் ஆர். என்.ரவியும் அப்படித்தான் கூறினார் என்று சந்திரசேகர் சுட்டிக்காட்டினார். காவல்துறையினர் செய்திருப்பது நிச்சயமாக குழந்தைகள் உரிமைகள் மற்றும் மனித உரிமைகளை மீறும் செயலாகும் என்றார் அவர்.

இந்தச் சர்ச்சையில் தீட்சிதர்களுக்கு ஆதரவாக ஆளுநர் இருப்பது ஏன் என்று கேட்டதற்கு, இந்த கேள்வியை அவரிடம்தான் கேட்க வேண்டும் என்றார் சந்திரசேகர். தீட்சிதர்கள் கடந்த காலங்களில் செய்ததைப் போல இப்போதும் இந்த வழக்குகளை சட்டரீதியாக தொடர்ந்து எதிர்கொள்வார்கள் என்று கூறிய அவர், வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின், குறிப்பாக சிறுமிகளின் புகைப்படங்கள் சட்டத்திற்கு முரணாக ஊடகங்களில் வெளியிடப்படுவதாக வருத்தம் தெரிவித்தார்.

தீட்சிதர்கள் தங்களது குடும்ப ஆண்கள் தீட்சிதர்களாக மாறுவதற்கு 21 வயது மற்றும் திருமணம் கட்டாயம் என்று வரையறுக்கும் சொந்த விதிகளைக் கொண்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே குழந்தைத் திருமணத்திற்கு நமது அரசியலமைப்புச் சட்டத்திலும் இடமில்லை; சிதம்பரம் கோயிலின் விதிமுறைகளிலும் இடமில்லை என்று அவர் கூறினார்.

தமிழகத்தில் உள்ள ஐந்து புகழ்பெற்ற அம்பலங்களில் ஒன்றான பொற்சபை (பொன்னம்பலம்) என்று சைவ சமயத்தினர் அழைக்கும் சிதம்பரம் கோவிலில் சிவபெருமான் சபாநாயகர் அல்லது தீட்சிதர்களின் சபையின் நாயகர் என்ற புராண நம்பிக்கையை சுட்டிக்காட்டி நேர்காணலை முடித்தார் வழக்கறிஞர் சந்திரசேகர்.


Share the Article

Read in : English

What the Tamil Nadu Organic policy needs Music to homecoming Chennaiites: the sound of the Chennai auto Should you switch from meat to plant-based alternatives? Indian kitchen staples are great for building immunity Pickle juice for muscle cramps? Find out more fascinating facts about pickles