Read in : English

சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் சிறுதானிய அரவை இயந்திரம், பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமத்தில் மலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், உணவு தயாரிப்பதில் உள்ள சிரமங்கள் குறைந்துள்ளதாக பழங்குடியின மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் உள்ளது கத்தரிமலை. இங்கு, பழங்குடியின மக்கள், 75 குடும்பங்களாக வசிக்கின்றனர். இங்கு செல்ல இணைப்பு சாலை வசதி இல்லை. மின்சார வசதி பெறவில்லை. மலை கிராமம் என்பதால் பாசன வசதியும் இல்லை. வானம் பார்த்த பூமியில் மானாவாரியாக ராகி, கம்பு, கேழ்வரகு, தினை போன்ற சிறு தானியங்களை பயிரிடுவர்.

அதுதான், பழங்குடியின மக்களின் பிரதான உணவு. ஒரு குடும்பத்துக்கு சராசரியாக ஆண்டுக்கு 75 கிலோவுக்கும் அதிகமாக சிறுதானிய மாவு தேவைப்பட்டது. வருடத்திற்கு, ஐந்து டன் சிறுதானிய மாவு அந்த கிராம தேவையை நிறைவேற்றும். விளையும் தானியங்களை சுத்தமாக்கி, உலர வைத்து அரைக்க வேண்டி இருந்ததது. மின்வசதி இல்லாததால், அரவை இயந்திரம் நிறுவ முடியவில்லை.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் உள்ளது கத்தரிமலை. இங்கு, பழங்குடியின மக்கள், 75 குடும்பங்களாக வசிக்கின்றனர். இங்கு செல்ல இணைப்பு சாலை வசதி இல்லை. மின்சார வசதி பெறவில்லை

இதனால், பண்டை கால தொழில் நுட்பத்தில் பழமையான திரிகல்லில் மாவு அரைத்து பயன்படுத்தி வந்தனர். இதில் வேலைப் பளு அதிகம். இதனால் பல குடும்பங்கள், விளைந்த தானியத்தை விற்று, அரசு வழங்கிய ரேஷன் அரிசி, மளிகைப் பொருட்களை பயன்படுத்தி வந்தனர். ஒரே வகை உணவு பயன்பாட்டால், சத்து குறைபாடு ஏற்பட்டது. அடிக்கடி நோய்வாய்ப் பட்டனர் கிராம மக்கள். மாற்று உணவாக கிழங்கு மட்டுமே கிடைத்து வந்தது.

நோயால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள், மலையில் இருந்து இறங்கி நகரங்களில் தானியங்களை அரைத்து எடுத்து சென்றனர். அடர்ந்த காட்டு வழியாக இதற்கு, எட்டு கிலோ மீட்டர் வரை நடக்க வேண்டியிருந்தது. இதற்காக, 3500 அடி உயரத்திலிருந்து இறங்கி வர வேண்டியிருந்தது. மிகவும் ஆபத்தான பாதையில் தனியாக பயணிக்க முடியது. குழுவாக மட்டுமே பயணிக்க முடியும். மழை காலங்களில் பயணம் செய்வது மிகவும் சிரமம்.

மேலும் படிக்க: திருவண்ணாமலையில் கொத்தடிமை நிலையில் வெளி மாநில பழங்குடிகள்

பழங்குடி மக்கள் முன்னேற்றத்தில் ஆர்வம் கொண்டவர் வேணுகோபால். ஈரோடு பகுதியில் சூரிய மின்சாரத்தில் இயங்கும் தண்ணீர இறைக்கும் பம்புகளை உருவாக்கி விநியோகம் செய்து வந்தார். பழங்குடியினர் சிரமம் அறிந்து உதவ வழி தேடினார்.

மலை கிராமங்களில் விளையும் சிறுதானியங்களை அங்கேயே மதிப்பு கூட்டினால் மக்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும் என்பதை உணர்ந்தார். இந்த நோக்கத்துடன் ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனை அணுகி, ஒரு திட்ட வரைவை அளித்தார். திட்டத்துக்கு கனரா வங்கி நிதி உதவி செய்ய முன்வந்தது.

கிராமத்தில் பயன்படுத்திய பாரம்பரிய திரிகைக்கல்

புதிய முறையில் சூரிய ஒளியில் இயங்கும் சிறுதானிய மாவு அரவை இயந்திரம் ஒன்று வடிவமைக்கப்பட்டது. மின்சார வசதி இல்லாத மலைகிராமத்தில், 2 எச்பி புளுவரேசர் அரவை இயந்திரத்தை உருவாக்கும் முயற்சி வெற்றி பெற்றது. வேணுகோபால் நடத்தி வரும் ஆஸ்கார் நிறுவனம் சில மாற்றங்களுடன் இதை உருவாக்கியது.

இந்த இயந்திரம் இரண்டு மாதம் சோதனையாக ஆய்வு செய்யப்பட்டது. பின், மலைகிராமத்துக்கு எடுத்துச் சென்று பொருத்தி சோதனை முறையில் இயக்கப்பட்டது.

தற்போது, சூரிய ஒளியில் இயங்கும் மாவு அரவை இயந்திரம் அந்த கிராமத்தில் சிறப்பாக இயங்குகிறது. மின்வசதியில்லாத அந்த கிராமத்தில் சூரிய ஒளியில் இயங்கும் இயந்திரம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாகனங்கள் செல்ல சரியான பாதை வசதியற்றது அந்த கிராமம். அண்மையில் தான் தமிழக அரசு கொண்டு வந்த, புத்துயுர் திட்டத்தில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இங்கு சூழலுக்கு உகந்த மாற்று எரிசக்தியில் அரவை இயந்திரம் இயங்குவதால் மின் செலவு மிச்சப்படுகிறது.

இதனால், கார்பன் மாசுபாடும் குறைகிறது‌. சூரிய ஒளியில் இயங்கும் மாவு அரவை இயந்திரத்தால் கேழ்வரகு, கம்பு, ராகி போன்ற சிறு தானியங்களை கிராமத்திலே மதிப்பு கூட்ட முடிகிறது. இதன் வழியாக, பழங்குடியின மக்கள் பொருளாதார ரீதியாக மேம்பட வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

சூரிய ஒளியில் இயங்கும் மாவு அரவை இயந்திரத்தால் கேழ்வரகு, கம்பு, ராகி போன்ற சிறு தானியங்களை கிராமத்திலே மதிப்பு கூட்ட முடிகிறது. இதன் வழியாக, பழங்குடியின மக்கள் பொருளாதார ரீதியாக மேம்பட வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது

கத்தரிமலை கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின பெண் ரோஜாதான் இந்த அரவை ஆலை நிர்வாகத்தை கவனித்து கொள்கிறார். ஒரு மண்குடிசையில் அமைந்துள்ளது அரவை ஆலை. கிராமத்தவர் அதை வாழ்வாதாரத் துணையாகப் பயன்படுத்துகின்றனர்.

சூரிய ஒளியில் இயங்கும் இந்த சிறிய அரவை இயந்திரம், கத்தரிமலை பழங்குடியின கிராமத்தில் நிகழ்த்தியுள்ள மாறுதல் வியப்பை தருகிறது. மக்களின் கடின வாழ்வின் கனத்தை பெருமளவு குறைத்துள்ளது.

இந்த இயந்திரத்தில் தானியம் அரைத்துக்கொடுக்க, சிறிய தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு பகுதி ரோஜாவுக்கு ஊழைப்பூதியமாக செல்கிறது. பெரும்பகுதி ஊரில் பொதுவான செயல்களுக்கான நிதி தேவையை நிறைவேற்றுகிறது. ஒரு சிறிய இயந்திரம் வசதி வாய்ப்பற்ற கத்தரிமலை கிராமத்தில் பெரும் மாறுதலை ஏற்படுத்தியுள்ளது.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival