Read in : English

வாழ்வையும் செயல்பாட்டையும் வேதியியல் மொழியில் அறிவிக்கும் மரபணுக்குறியீடுகள், ஓர் உயிரியல் அற்புதம். வாழ்வதற்கு இன்றியமையாத புரதங்களை மரபணுக்கள் குறிப்பிடுகின்றன. உடலில் புரதங்களின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் பணியையும் செய்கின்றன. இவையே, வாழ்வின் அடிப்படையாக உள்ளதாக மரபணுவியல் ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில், 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரிகோர் மெண்டல், தாவரங்களில் செய்த பரிசோதனையின் போது, மரபணு பற்றிய விவரம் கண்டறியப்பட்டது. தொடர்ந்து மனித மரபணுக்கள் பற்றிய அறிய தகவல்களை, நீண்ட ஆய்வுகளுக்கு பின் அறிஞர்கள் வெளிப்படுத்தினர்.

ஆனாலும், 2003 ஆம் ஆண்டுக்கு பின்பே, மனித மரபணுத் தொடரை வரிசைப்படுத்தும் அரிய கண்டுபிடிப்புகள் பற்றிய விவரங்கள் வெளிவரத் தொடங்கின. மனித மரபணுத் தொடரை வகைப்படுத்திய பின் நிகழ்ந்த கண்டுபிடிப்புகளில், மனிதர்களிடையே உள்ள பல வேறுபாடுகள் புலப்படத் தொடங்கின.

குறிப்பாக, ஆண் – பெண் வேறுபாடு பற்றிய நம்பிக்கைகள் குறித்த விவரங்கள் மிக முக்கியானவை. ஆண் – பெண் வேறுபாடு என்பது உயிரியல் சிறப்பே அன்றி, மேலாண்மையை நிலைநாட்டி ஒப்பிடுவதற்கான முறை அல்ல என்பதைத் தெளிவுபடுத்தியது.

ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில், 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரிகோர் மெண்டல், தாவரங்களில் செய்த பரிசோதனையின் போது, மரபணு பற்றிய விவரம் கண்டறியப்பட்டது. தொடர்ந்து மனித மரபணுக்கள் பற்றிய அறிய தகவல்களை, நீண்ட ஆய்வுகளுக்கு பின் அறிஞர்கள் வெளிப்படுத்தினர்

மனித உடலில் உள்ள தடுப்பாற்றல், இயற்கையின் அரிய பரிசு என்பதையும் ஆதாரப்பூர்வமாக விளக்கியது. வாழ்வின் புதிர்களை விடுவித்து, பாரம்பரியமாக நம்பி வந்தவற்றை மறு பரிசீலனை செய்யத் தூண்டுகின்றன, மரபணுவியல் ஆராய்ச்சி தொடர்பாக வரும் ஆராய்ச்சித் தகவல்கள்.

மனித சமுதாய வளர்ச்சியின் முக்கியச் செயல்பாடான மரபணுவியல் ஆய்வுக் கண்டுபிடிப்புகள் குறித்துத் தமிழ் மொழியில், அறிவு நூல்களே இல்லை. அந்தக் குறையைப் போக்கும் வகையில், ‘வாழ்க்கைக் குறியீடு மரபணுவியல் புரட்சி’ என்ற நூல் வெளிவந்துள்ளது.

மேலும் படிக்க: மனித குழுக்களின் மரபணுவியல்: தமிழர்களைப் பற்றி என்ன சொல்கிறது?

இந்திய அரசின் நேரடி நிர்வாகத்தில் உள்ள, நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனம் இந்தப் புத்தகத்தை வெளியிட்டுள்ளது. பிரபல அறிவியல் எழுத்தாளர் மோகன் சுந்தர ராஜன் இந்த நூலைப் படைத்துள்ளார். எளிய மொழி நடையில் அனைவரும் உள்ளடக்கத்தைப் புரிந்துகொள்ளும் வகையில் நூல் அமைந்துள்ளது. மானுட வளர்ச்சியில் புரட்சியை ஏற்படுத்தும் தகவல்களைக் கொண்டுள்ளது. அரும் பெரும் உழைப்பால் உருவாகியுள்ளது.

மரபணுவியலில் நிகழ்ந்துள்ள வியத்தகு கண்டுபிடிப்புகளைப் பற்றி அறிந்து கொள்ளவும், இளைஞர்கள் ஆர்வத்துடன் இத்துறையில் ஈடுபடத் தூண்டும் வகையிலும் இந்தப் புத்தகத்தில் உள்ள தகவல்கள் அமைந்துள்ளன. அறிவு சார்ந்த செயல்பாடு தமிழ் மொழியில் பெருகி வருவதை மெய்ப்பிக்கும் வகையில் நூல் உள்ளது

கிட்டத்தட்ட, 70,000 ஆண்டுகளுக்கு முன், ஆப்பிரிக்கா பகுதியில் இருந்து வெளியேறிய மனிதர்களும், அதற்கு பின், உலகின் பல திசைகளிலிருந்து இடம்பெயர்ந்தவர்களும் வெவ்வேறு காலகட்டங்களில் இந்திய மண்ணில் வந்து சேர்ந்த தகவல்களையும் கொண்டுள்ளது. இவை, பழங்கால மரபணுச் சுவடுகளின் வழியாகக் கிடைத்த ஆய்வுத் தகவல்களின் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளன.

மேலும் படிக்க: நம்பிக்கைதரும் எலும்பு மஜ்ஜை ஸ்டெம் செல் தானம்

மரபணுவியலில் நிகழ்ந்துள்ள வியத்தகு கண்டுபிடிப்புகளைப் பற்றி அறிந்து கொள்ளவும், இளைஞர்கள் ஆர்வத்துடன் இத்துறையில் ஈடுபடத் தூண்டும் வகையிலும் இந்தப் புத்தகத்தில் உள்ள தகவல்கள் அமைந்துள்ளன. அறிவு சார்ந்த செயல்பாடு தமிழ் மொழியில் பெருகி வருவதை மெய்ப்பிக்கும் வகையில் நூல் உள்ளது.

போலியோ தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்து, உலகத்துக்குப் பரிசாக வழங்கிய உயிரியல் அறிஞர் ஜோனஸ் சால்க் அவர்களுக்கு இந்த நூல் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தின் விற்பனை அரங்குகளில் இந்த நூல் கிடைக்கும்.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival