Read in : English

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் அமைந்திருக்கும் ஃபோர் பாயிண்ட்ஸ் ரிசார்ட்டில் 44ஆவது சர்வதேச சதுரங்கப் போட்டி நடைபெற்றுவருகிறது. 11 சுற்றுகள் கொண்ட இந்த செஸ் ஒலிம்பியாட்டில் ஆகஸ்ட் 8, நேற்று பத்தாம் சுற்று நடந்து முடிந்தது. அந்தச் சுற்றின் ஆட்டங்களைப் பற்றிச் சுருக்கமாகப் பார்க்கலாம்.

ஓப்பன் பிரிவில், உஸ்பெகிஸ்தான் 7 வெற்றிகள் மற்றும் 3 டிராக்களுடன் 17 ஆட்டப் புள்ளிகளுடன் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது. மேலும், இந்த அணி இந்த ஒலிம்பியாட்டில் இதுவரை தோல்விபெறவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெறவுள்ள இறுதிச் சுற்றில், நெதர்லாந்துடனான ஆட்டத்தில் வெல்லும் பட்சத்தில், சாம்பியன்ஷிப் உஸ்பெக் அணியினருக்குச் செல்லும் என்பது நிதர்சனம்.

ஆர்மீனியா 8 வெற்றிகள், ஒரு டிரா மற்றும் ஒரு தோல்வியுடன் இரண்டாம் இடத்திலும், தலா 7 வெற்றிகள், 2 டிராக்கள் மற்றும் ஒரு தோல்வியுடன் இந்திய ஏ, பி, அமெரிக்கா ஆகிய மூன்று அணிகள் 16 ஆட்டப் புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன.

பத்தாம் சுற்று அமெரிக்காவிற்கு (துருக்கிக்கு எதிராக 3 – 1) முக்கியத்துவம் வாய்ந்தது. துருக்கியுடனான வெற்றி மட்டுமல்லாது, அஜர்பைஜான் (எதிராக உஸ்பெகிஸ்தான்) மற்றும் ஈரான் (எதிராக இந்தியா ஏ) அணிகள் தங்கள் ஆட்டங்களில் தோல்வியடைந்து, நெதர்லாந்து மற்றும் செர்பியா டிராவில் முடிந்து, இந்த ஐந்து நாடுகளுக்கும் பத்தாம் சுற்று பாதகமாய் அமைந்தது அமெரிக்காவுக்குப் பெரும் வாய்ப்பு. போதிய ஆட்டப் புள்ளிகள் இல்லாமல் அவை பின்னுக்குத் தள்ளப்பட, இறுதிக் கட்டத்தில், மிகச் சரியான நேரத்தில் அமெரிக்கா மேலே முன்னேறியிருக்கிறது எனலாம்.

இந்தியா A, 2 ½ -1 ½ என்ற கணக்கில் ஈரானை வீழ்த்தியது. எஸ்.எல்.நாராயணன் பர்தியா தனேஷ்வரையும், விதித் சந்தோஷ் குஜராத்தி எம்.அமின் தபதாபாய்யையும் வென்றனர். அர்ஜுன் எரிகைசி பூயா இடானியுடன் டிரா செய்தார். பென்டலா ஹரிகிருஷ்ணா பர்ஹாம் மக்சூட்லூவிடம் தோற்றார்.

மேலும் படிக்க:

உஸ்பெகிஸ்தானைத் தொடரும் ஆர்மீனிய, இந்திய அணிகள்

ஆர்மீனியாவைத் துரத்தும் இந்தியா

இந்தியா B, உஸ்பெகிஸ்தானுடனான ஆட்டத்தில் இரண்டாவது மற்றும் நான்காவது போர்டுகள் டிராவில் முடிவடைந்தன. ஜவோகிர் சிந்தாரோவுக்கு எதிராக பிரக்ஞானந்தா வெற்றி பெற்றதன் மூலம் குகேஷின் அதிர்ச்சிகரமான தோல்வியை ஈடுகட்ட முடிந்தது. உஸ்பெகிஸ்தான் கிராண்ட்மாஸ்டர் நோதிர்பெக் அபுசத்தரோவிடம் குகேஷ் தோற்றார்.

உண்மையில், இந்த ஒலிம்பியாட்டில் இதுவரை உஸ்பெகிஸ்தானின் விளையாட்டுப் புள்ளிவிவரங்கள் இந்திய இளைஞர்களின் சில தோல்விகளைத் தவிர ஒத்துப்போயிருக்கிறது எனலாம். இதில், ஆறாவது சுற்றில் பென்டலா ஹரிகிருஷ்ணாவிடம் அபுசத்தரோவ் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. நிஹல் சரின் நோடிர்பெக் யாகுபோவ் மற்றும் அதிபன் ஜகோங்கிர் வகிடோவ் ஆகியோருடன் ட்ரா செய்தனர்.

போர்டு 3 இல், இறுதி ஆட்டத்தில் சிந்தாரோவை பிரக்ஞானந்தா கார்னர் செய்தபோது, உஸ்பெக்கின் இளம் புயல் ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது. பிரக்ஞானந்தா, வெள்ளை ராஜாவுக்கு விளையாடி, தனது எதிரியை ஒரு யானை மற்றும் சிப்பாய் மூலம் திணறடித்தார் – சிப்பாய் பதவி உயர்வுக்கு இரண்டு நகர்வுகள் இருந்தன. End game எனப்படும் உச்சகட்ட ஆட்டத்தில், சுமார் 40 நகர்வுகளாக ராஜாக்கள் தங்கள் சக்திகளைப் பதிலுக்கு பதில் காவு கொடுத்திருந்தனர்.

இந்தியா C, ஸ்லோவாக்கியாவுடன் டிரா செய்தது. இரண்டு போர்டுகள் சமநிலையில் முடிவடைந்தன. அபிமன்யு பூராணிக் (எதிராக கிறிஸ்டோபர் ரெப்கா) எஸ்பி சேதுராமனின் (விக்டர் காசிக் எதிராக) தோல்வியை ஈடுகட்டினார். சூர்ய சேகர் கங்குலி (எதிராக ஜெர்கஸ் பெச்சாக்) மற்றும் முரளி கார்த்திகேயன் (எதிராக ஜுராஜ் ட்ருஸ்கா) சமநிலையில் இருந்தனர்.
மகளிர் பிரிவில், 8 வெற்றிகள், ஒரு தோல்வி, ஒரு டிரா என 17 புள்ளிகளுடன் இந்தியா A அணி முதலிடத்தில் உள்ளது. 16 ஆட்டப் புள்ளிகளுடன், போலந்து, அஜர்பைஜான், உக்ரைன் மற்றும் ஜார்ஜியா ஆகியவை பட்டியலில் மேல் நகரப் போராடிக்கொண்டிருக்கின்றன.

மகளிர் பிரிவில், இந்தியா A அணி 3 ½ – ½ என்ற கணக்கில் கஜகஸ்தானை வீழ்த்தியது. கோனேரு ஹம்பி (எதிராக ஜன்சயா அப்துமாலிக்), தானியா சச்தேவ் (எதிராக செனியா பாலாபயேவா) மற்றும் பக்தி குல்கர்னி (எதிராக குலிஸ்கான் நக்பயேவா) ஆகியோர் தங்கள் போட்டிகளில் வெற்றிபெற்றனர், அதே சமயம் வைஷாலி பிபிசரா அஸ்ஸௌபயேவாவுடன் டிரா செய்தார்.
நெதர்லாந்திற்கு எதிராக 1 – 3 என்ற கணக்கில் இந்தியா B வென்றது. பத்மினி ராவத் (மாக்டெல்ட் வான் பாரஸ்ட் எதிராக), மேரி ஆன் கோம்ஸ் (எதிராக ரோசா ரட்ஸ்மா), திவ்யா தேஸ்முக் (எதிராக டீ லாஞ்சவா) ஆகியோர் தங்கள் ஆட்டங்களில் வென்றனர் மற்றும் வந்திகா அகர்வால் ஜாவோகின் பெங்கிடம் தோல்வியடைந்தார்.

இந்தியா C ஸ்வீடனுக்கு எதிராக 3 – 1 என்ற கணக்கில் வென்றது. பி.வி. நந்திதா (எதிராக இன்னா அக்ரெஸ்ட்) மற்றும் பிரத்யுஷா போடா (எதிராக விக்டோரியா ஜோஹன்சென்) ஆகியோர் தங்கள் ஆட்டங்களில் வெற்றி பெற்றனர், சஹிதி வர்ஷினி (எதிராக பியா க்ராம்லிங்) மற்றும் ஈஷா கரவாடே (அன்னா க்ராம்லிங் பெல்லோனுக்கு எதிராக) ஆகியோர் தங்கள் போட்டிகளை டிரா செய்ய முடிந்தது.

இந்த ஒலிம்பியாடில் இதுவரை நந்திதா ஒரு தோல்வி, ஒரு டிராவுடன், 7.5 / 9 என்ற கணக்கில் அபாரமாக ஆடி இந்தியப் பெண் வீராங்கனைகளிடையே முதலிடத்தில் இருக்கிறார். நந்திதாவுடனான ஆட்டத்தில் மார்கரெட் மூன்று முறை செய்த பிழைகள் அவருடைய ஆட்டத்திற்குப் பெரும்பாதிப்பை ஏற்படுத்தின. இந்த ஆட்டத்தில் நந்திதா வெள்ளை ராஜாவுக்கு ஆடினார்.
அடுத்தடுத்து நின்ற குதிரைகளை யானைகளும் அடுத்தடுத்து நின்றன, துணைக்கு ராணியும் இருந்தது. நந்திதாவும் அதற்கு ஈடு கொடுக்க கறுப்புக் குதிரையைச் சுற்றி அவரது யானைகளையும் ராணியையும் மற்றும் மந்திரியையும் வைத்து சுற்றிவளைத்தார். பல பரிசீலனையின் முடிவில், காய்கள் கழிந்தன. இறுதியில் மார்கரெட் தனது ராணியை மட்டும் வைத்திருந்தார். நந்திதாவிடம் ராணி, யானை, மந்திரி ஆகியவை இருந்தன.

ஒரு கறுப்பு சிப்பாய் ராணியாவதற்கு இரண்டு நகர்வுகள் பாக்கியென்ற நிலையில், கறுப்பு ராஜாவுக்கு செக் மேட்டை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ராஜாவின் சிப்பாய்க்கு முட்டுக் கொடுத்தாக வேண்டிய கட்டத்தில், மார்கரெட் ராஜாவை நகற்ற, யானை சிப்பாயை வெட்டவும் ஆட்டம் முடிவடைந்துவிட்டது. மார்கரெட்டின் தவறுகளை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு நந்திதா அவரை எளிதில் வென்றார்.

பரபரப்பான செஸ் ஒலிம்பியாட்டின் இறுதி சுற்று இன்று நடைபெறும். தங்கப் பதக்கத்தை இந்திய மகளிர் அணி பெறும் வாய்ப்பு உள்ளது. பதக்கத்தை வெல்லுமா என்பது இன்று தெரிந்துவிடும்.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival