Read in : English
ஆளும் தற்போதைய திமுக அரசு, மாநிலத்தின் கடனை அதிகரித்துக்கொண்டே போவதற்காக முந்தைய ஆட்சியில் இருந்த அதிமுகவை தொடர்ச்சியாக விமர்சித்தே வந்திருக்கிறது. பத்து வருடங்களுக்கு பிறகு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த திமுக, மாநில நிதிநிலையின் மீது ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டது. “தமிழகத்தின் பொருளாதாரம் – வளர்ச்சியின் உச்சம் தொட்ட 2011-2012 ஆண்டில் இருந்து, அடுத்த பத்தாண்டுகளில் பொருளாதார நிலை சீரான ஒரு வேகத்தில் குறைந்தபடியே இருந்திருக்கிறது என்பது மிகவும் கவலைக்குரிய ஒன்றாகும். 2013-2014-க்கு பிறகு நிதிநிலை நிலையான வேகத்தில் மோசமடைந்தே வந்திருக்கிறது” என தெரிவிக்கப்பட்டது.
கடந்த இரண்டு நிதியாண்டுகளில், அதாவது (2020-21 மற்றும் 2021-22)-இல், கடன் வாங்குவதில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட முன்னணியில் நிற்கிறது. மாநில வளர்ச்சி என்னும் பெயரில் இத்தகைய கடன் அளவு அதிகரித்தல் நடந்திருக்கிறது. 2021-2022 நிதியாண்டில், திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளாக கொடுக்கப்பட்ட இலவசங்களை விநியோகிப்பதற்காகவும், பல்வேறு நோக்கங்களுக்காகவும் ரூ.87,000 கோடியை கடனாகப் பெற்றுள்ளது. மேலும், தற்போதைய நிதிநிலை ஆண்டான 2022-2023-இல் ரூ.90,116.52 கோடியையும், மாநில வளர்ச்சி என்னும் பெயரில், கடனாக வாங்கத் திட்டமிட்டுள்ளது.
GSDP விகிதத்துக்கான தமிழ்நாட்டின் கடன் என்பது, 2026-27-ஆம் ஆண்டில், 31.0%-ஐத் தொடும். முன்னதாக அது 2019-2020-ஆம் ஆண்டில் 25.7%-ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்.பி.ஐ தரவுகளின்படி, 2022-2023 நிதியாண்டில், முதல் கால் பகுதியில், அதாவது (ஏப்ரல் முதல் ஜூன் வரை) ரூ.23,500 கோடியைக் (26.07%) கடனாக வாங்கும் என்பதாக தெரியவருகிறது. இதிலிருந்து, அஇஅதிமுகவில் இருந்து திமுக எந்த விதத்திலும் வேறுபட்ட செயல்பாட்டைக் காட்டவில்லை என்பது தெளிவாகிறது.
ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து ஒருவருடத்துக்குப் பின்னும், முந்தைய அஇஅதிமுக அரசின் இலவச திட்டங்களின் பாரம்பரியத்தில் இருந்தும், பொருளாதாரம் மற்றும் அதன் வளர்ச்சியுடன், கொஞ்சமும் ஒன்றாமல் இருக்கும் மாநில கடன் அளவு அதிகரிப்பில் இருந்தும் கொஞ்சமும் விலகாமல் அடியொற்றி நடந்துகொண்டிருக்கிறது. வெள்ளை அறிக்கையில் அரசு தெரிவித்ததைப்போல, தமிழ்நாடு நிதி நிலைமையில், நிலையற்றதன்மையிலேயே தொடர்ந்து வருகிறது. இந்த சூழலைச் சரிசெய்வதற்கான சீர்திருத்தங்கள் எங்கே?
திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளாக கொடுக்கப்பட்ட இலவசங்களை விநியோகிப்பதற்காகவும், பல்வேறு நோக்கங்களுக்காகவும் ரூ.87,000 கோடியை கடனாகப் பெற்றுள்ளது
மத்திய அரசு விதித்துள்ள நிபந்தனைகளின்படி, மாநில வளர்ச்சி ஒப்பந்தங்களின் மூலம் சந்தைகள் மூலமாக மாநில அரசுகள் கடன் பெறலாம் எனத் தெரிவித்தது. கூடுதலாக, மாநிலத்தின் மின்துறை பிரிவுகளில் சீர்திருத்தங்களை மேற்கொண்ட பின்பு, 3.5% GSDP என்னும் மொத்த உள்நாட்டு மாநில உற்பத்தியின் அளவுக்கும், கூடுதலாக 0.5% GSDP அளவுக்கும் மட்டுமே கடன் பெறலாம் எனத் தெரிவித்துள்ளது. 15-வது நிதி கமிஷனின் நியமங்களின்படி, நிலையான GSDP வேற்பட்டு, தமிழ்நாட்டில் கடன் இந்த வருடத்தில் வரம்பிடப்பட்ட அளவை விட உயர்ந்து தாண்டிச் சென்றுள்ளது.
கடந்த கால கடன்களுக்காக மிக அதிக விகிதத்தில் வட்டித்தொகையைச் செலுத்தி வருகிறது தமிழ்நாடு. பல மாநிலங்களையும் எடுத்துக்கொண்டால், தமிழ்நாட்டின் வட்டி செலுத்து விகிதம் 21% GSDP-ஆக (2021-22) உள்ளது. இது பஞ்சாப் மாநிலத்துக்கு அடுத்ததாக, நாட்டிலேயே இரண்டாவது வட்டி விகித அளவை வகிக்கிறது. தற்போதைய நிதியாண்டு 2022-23-இன் படி, தமிழ்நாட்டுக்கான கடப்பாடு கொண்ட செலவுகள் (வட்டி, கட்டணங்கள், சம்பளத்தொகை மற்றும் ஓய்வூதியம்), பட்ஜெட்டின்படி 67%-ஆக உள்ளது. இது நிச்சயமாக ஆரோக்கியமான பொருளாதாரமாக இருக்காது. மீதமுள்ள திட்டமிடப்பட்ட செலவுக்கு வெறும் 33% மட்டுமே கொண்டதாக உள்ளது. இவை வளர்ச்சி திட்டங்களுக்கும், உட்கட்டமைப்புகளுக்கும், சுகாதாரத்தும், பொது மக்கள் பாதுகாப்புக்கும் போதுமானதாக நிச்சயம் இருக்காது.
மேலும் படிக்க:
தமிழக பட்ஜெட்: ஒட்டுமொத்த மாநில வளர்ச்சிக்கான திட்டங்கள் எங்கே?
‘மின்தடைகளுக்கு திமுக ஆட்சிதான் பொறுப்பேற்க வேண்டும்’
மத்திய அரசு பரிந்துரைத்த, முக்கிய மின்துறை பிரிவு சீர்திருத்தங்கள், விவசாயத்துக்கான இணைப்புகள், நுகர்வோருக்கான நேரடி பயன் பரிமாற்றத்தின் மூலம் வரும் மானியத்தொகை, உள்ளாட்சி நிர்வாகங்களாலும், அரசுத்துறைகளாலும் செலுத்தப்படும் மின் கட்டணங்கள், அரசுக் கட்டடங்களில் நிர்மாணிக்கப்படும் ப்ரீபெய்டு மீட்டர் நிறுவல்கள், மற்றும் புத்தாக்க தொழில்நுட்பங்கள் ஆகியவை அடங்கியதாகும். அவற்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம், 2021-22-ஆம் ஆண்டில், மாநிலம் கூடுதலாக 7,054 கோடி ரூபாயைக் கூடுதல் கடனாகப் பெறமுடியும். குறிப்பிட்ட இந்தத் தொகையே, 0.5% GSDP விகிதத்தை ஆக்கிரமிக்கிறது.
ஆனால், திமுக அரசு இத்தகைய அமைப்பு ரீதியாக சீர்திருத்தங்களைப் புறக்கணிக்கிறது. ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்கள் ஏற்கெனவே இந்தச் சீர்திருத்தங்களை மேற்கொண்டு, கூடுதல் கடனை வளர்ச்சித் திட்டங்களுக்காக பெறுகிறது.
சமீபத்திய ஆர்.பி.ஐ அறிக்கை (ஜுன் 16,2022)-இன் படி, மாநிலத்தின் மின் விநியோக நிறுவனங்களில், நிதி ரீதியான இடர் மேலாண்மை மதிப்பீடுகளில், “தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் ஆகியவை இந்த அபாய நிலையில் இருப்பதாகவும், குஜராத், அசாம், ஹரியானா, ஒடிஷா போன்ற மாநிலங்கள் இதில் இருந்து பாதுகாப்பான நிலையில் இருப்பதாகவும்” தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மின் விநியோக நிறுவனங்களான, Tangedco-இல் முன் பெயில்-அவுட் மற்றும் நீண்ட நிலுவைக்கடனாக ரூ.1,24,4134 கோடி இருப்பதாக ஆர்.பி.ஐ அறிக்கை தெரிவிக்கிறது. இதற்கான பங்கு மட்டுமே ரூ.72,211 கோடியாக உள்ளது.
ஆர்.பி.ஐ ஆய்வுகளின்படி, நீண்ட கால கடன் நிலுவைத்தொகையின் 75% மட்டுமே ரூ.93,210 கோடியாக இருக்கும். முன் பெயில்-அவுட் நிலையிலும் கூட, நீண்ட கால கடன் நிலுவைத்தொகை ரூ.31,103-ஆக இருக்கும். மேலும் அதன் பங்குத்தொகை ரூ.41,937 கோடியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின் துறைப் பிரிவு நிறுவனங்கள் (Tangedco) மீதான சிஏஜி அறிக்கை, அமைப்பு ரீதியான சீர்திருத்தங்களை மிகவும் அழுத்தமாக, வலியுறுத்தி பரிந்துரைக்கிறது. பொருளாதாரம் நிலையாக இருக்க துணை செய்வதற்கு இந்த ஆற்றல் மீட்சியே வழிவகுக்கும் என வலியுறுத்துகிறது. சிஏஜி மாநில அரசுகளை இந்தத் சீர்திருத்தங்களை மேற்கொண்டு, வட்டி தொகையைக் குறைக்குமாறும், வரி மனுக்களை சமர்ப்பிக்குமாறும் TNERC-க்கு தொடர்ச்சியாக அறிவுறுத்தியுள்ளது. மேலும், சரியான மதிப்பீட்டும், கட்டுப்பாட்டுக்கும் உதவுவதற்காக, AT&C நஷ்டக் கணக்குகள் CEA-வால் பரிந்துரைக்கப்பட்ட முறையால் துல்லியமாக கணிக்கப்படுகிறது. மாநில அரசு இப்பரிந்துரைகளை ஏற்கவில்லை. AT&C இழப்பு விகிதம் 2015-2020 காலத்தில் 2.24% முதல் 3.41% வரை குறைவாக காட்டப்படுவதால், ரூ.6,547.25 கோடி மதிப்பிலான ஆற்றல் நஷ்டமாகியுள்ளது.
ஆர்.பி.ஐ ஆய்வுகளின்படி, நீண்ட கால கடன் நிலுவைத்தொகையின் 75% மட்டுமே ரூ.93,210 கோடியாக இருக்கும்
ஆக, தற்போதைய திமுக அரசு, “தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த நிதி சமநிலை குன்றிய நிலையை” தொடர்ந்து வருகிறது. மாநில நிதிநிலை குன்றுவதற்கான முக்கிய பிரச்சனையாக இருப்பது, “அரசின் உறுதி இல்லாமல் அவர்களால் கடன் பெற முடியாத நிலையில் இருக்கும், பொதுத்துறை நிறுவனங்களின் பொருளாதார நிலை சீர்கேடு” என்பதை திமுக அரசின் வெள்ளை அறிக்கையே சுட்டிக்காட்டியுள்ளது.
அதுமட்டுமின்றி, தேசிய நெடுஞ்சாலை முதல் மெகா தொழிற்சாலைமயமாக்கல் மற்றும் தேசிய அளவிலான முக்கிய திட்டங்களுக்கு எதிரான தனது வரலாற்று நிலைப்பாடுகளுடன் திமுக போராடுகிறது. இதனால் முதலீடுகளுக்கான சூழலும் இன்னும் கனியவில்லை.
மாநிலத்தின் நிதியமைச்சர், 2022-23 -ஆம் ஆண்டின் கொள்கை விளக்கக்குறிப்பில், “நிதித்துறை, சர்வதேச நிதியத்துடன் இணைந்து மாநிலத்தின் பொது நிதி மேலாண்மையில் சீர்திருத்தங்களைக் கொண்டுவரும், குறிப்பாக, பட்ஜெட் உருவாக்கத்திலும், நிதி இடர் மேலாண்மை” சீர்திருத்தங்களைக் கொண்டுவரும் என்றார். அதையொட்டி, அத்தகைய “நிதி இடர் மேலாண்மை”யில் சர்வதேச நிதியத்துடனான இணைவுச் செயல்பாட்டில் எந்தவிதமான வெளிப்படைத்தன்மையும் இல்லை.
(ஆசிரியர், ஒரு பொருளாதார நிபுணர், பொதுக்கொள்கை நிபுணர்)
Read in : English