Read in : English
மெட்ரோ ரயில் கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை இணைக்க வருகிறது. இந்த இரண்டு மாநிலங்களுக்கு இடையிலான பரஸ்பர நல்லுணர்வை மேம்படுத்தும் விதத்தில், ஓசூர் வரை பெங்களூரு மெட்ரோ ரயிலை விரிவாக்கம் செய்யும் பணியில் இரண்டு மாநிலங்களும் இணைந்து செயல்பட இருக்கின்றன. ஓசூர் 8.8 கி.மீ தூரம் தமிழ்நாட்டின் எல்லையாக இருக்கிறது.
பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் இந்தத் திட்டத்தின் முன்மொழிவை ஒன்றிய அரசின் நகர்புற மேம்பாட்டு அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளது. பொம்மசந்திரா – ஓசூர் மெட்ரோ ரயில் விரிவாக்கம் சம்பந்தமாக மார்ச் 21 அன்று ஒன்றிய அமைச்சகம் புனேயில் ஒரு கூட்டத்தை நடத்தியிருக்கிறது.
பொம்மசந்திரா – ஓசூர் தூரம் 20.5 கி.மீ. இதில், 8.8 கி.மீ தூரம் தமிழ்நாட்டிலும், 11.7 தூரம் கி.மீ கர்நாடகத்திலும் இருக்கின்றன. இந்தத் திட்டத்தின் செலவு, முதலீடு, தொழில்நுட்ப விவரங்கள், லாப பங்கீடு, ஆகியவற்றை பெங்களூரு மெட்ரோ ரயில் விவரித்திருக்கிறது.
பொம்மசந்திரா – ஓசூர் லைன் சம்பந்தமான ஆய்வை தமிழக அரசு மேற்கொள்ளலாம் என்று கர்நாடக அரசு கடிதம் எழுதியிருக்கிறது என்று பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் அஞ்சும் பார்வெஸ் கூறியிருக்கிறார்.
டாக்டர் செல்லக்குமார் எழுதிய கடிதத்தை தொடர்ந்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை இந்த ஆய்வை அனுமதித்திருக்கிறார். திட்டத்தின் நன்மைகளும் தீமைகளும், இரண்டு மாநிலங்களின் செயல்படு முறைகளும் இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்படும்.
இந்த திட்டத்தின் செலவு, முதலீடு, தொழில்நுட்ப விவரங்கள், லாப பங்கீடு, ஆகியவற்றை பெங்களூரு மெட்ரோ ரயில் விவரித்திருக்கிறது.
இந்தியாவில் இதுதான் மாநிலங்களுக்கு இடையேயான முதல் மெட்ரோரயில் திட்டம். இதன் மூலம் பொம்மசந்திரா – ஓசூர் வழிப்பாதை ஒரு கனவு உட்கட்டமைப்பு வழித்தடமாக நிபுணர்களின் கருத்துப்படி மாறும் வாய்ப்பு அதிகம்.
பெங்களூரு – ஓசூர் மெட்ரோ ஒரு வரம்
காட்டுப்பள்ளி துறைமுகம், சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களை இணைக்கும் ஒரு டிஃபன்ஸ் காரிடரை திட்டமிடும்படி, தமிழக அரசை தன்னுடை பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டார். பெங்களுரு – ஓசூர் மெட்ரொ ரயில், ஓசூர் நகரத்தை பெங்களூருக்கு மிக அருகில் கொண்டு சேர்க்கும்.
மேலும் படிக்க:
3 ஆண்டுகளில் 400 வந்தே பாரத் ரயில்கள்: பட்ஜெட் அறிவிப்பு நடைமுறையில் சாத்தியமா?
105 ஆண்டு பழமை வாய்ந்த பாம்பன் ரயில்வே பாலத்துக்கு இந்த ஆண்டு குட்பை!
தங்கள் அரசியல் எல்லைகளைக் கடந்து, தமிழக, கர்நாடக அரசியல் கட்சிகள் ஒரே பார்வையைக் கொண்டிருப்பது இதுதான் முதல் தடவை. கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.சித்தராமையா, முதல்வர் பொம்மைக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். பெரும் மதிப்பு வாய்ந்த இந்த கர்நாடக–தமிழக மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்றும் படி சித்தராமையா கேட்டுக்கொண்டிருக்கிறார். வணிக ரீதியாகவும், சமூக ரீதியாகவும் மற்றும் பொருளாதார ரீதியாகவும் இந்தத் திட்டம் இரண்டு மாநிலங்களையும் உணர்வுப்பூர்வமாக ஒன்றிணைக்கும் என்று சித்தராமையா கூறியிருக்கிறார்.
வணிக ரீதியாகவும், சமூக ரீதியாகவும் மற்றும் பொருளாதார ரீதியாகவும் இந்தத் திட்டம் இரண்டு மாநிலங்களையும் உணர்வுப்பூர்வமாக ஒன்றிணைக்கும் என்று சித்தராமையா கூறியிருக்கிறார்.
இந்தத் திட்டம் நிறைவேறும் போது பொம்மசந்திரா – ஓசூர் இடையிலான பயண நேரம் வெறும் 20 நிமிடங்களாகக் குறையும். இரண்டு மாநிலங்களுக்கான ரயில் பாதை உயர்மட்ட இருப்புப்பாதையாக இருக்கும் என்பதால், போக்குவரத்து நெருக்கடியும், காலதாமதமும் ஏற்பட வாய்ப்பில்லை. பொருளாதார ரீதியாகவும், பாதுகாப்பு ரீதியாகவும், இந்த இரு மாநிலத்திட்டம் வெற்றி பெறும். இந்தத் திட்டத்தின் கட்டுமான செலவுகளையும், இயக்கச் செலவுகளையும் பகிர்ந்து கொள்ளும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் இரண்டு மாநிலங்களுக்கு இடையே உருவாக வேண்டும் என்று கர்நாடக அரசு கூறியிருக்கிறது.
தற்போது தமிழக–கர்நாடக போக்குவரத்துச் சேவைகள் சாலை நெருக்கடிகள் பொறுத்து ஐம்பது நிமிடங்கள் எடுத்துக் கொள்கின்றன.
“ஒன்றிய அரசின் மெட்ரோ சட்டங்களை இந்தப் பகுதிக்கு எப்படி விரிவாக்கம் செய்யலாம் என்பதையும் ஆராய வேண்டும். இரண்டு மாநில அரசுகள் கலந்துக்கொண்டு ஆலோசனை செய்து தங்கள் மெட்ரோ மாநகரங்களுக்கு இந்த மெட்ரோ சட்டங்களை விரிவாக்கம் செய்து கொள்ளலாம்” என்று மே 23 தேதியிட்ட கடிதத்தில் பெங்களூரு மெட்ரோ ரயில் கூறியிருக்கிறது.
தமிழக – கர்நாடக மெட்ரோ ரயில், நாட்டில் பெரிய வாய்ப்புக் கொண்ட ஐ.டி காரிடர் வழியாகக் கடந்து செல்லும். மேலும், ஐ.டி பூங்காக்கள், போக்குவரத்து மையங்கள், தொழிற்பேட்டைகள், பெரிய குடியிருப்புக் காலனிகள், துணைக்கோள் நகரங்கள், உற்பத்தித் தலங்கள் ஆகியவையும் இந்த ரயில் வழிப்பாதையில் ஊடாடிச்செல்லும்.
மெட்ரோ ரயில் சாத்தியம் தான்
கர்நாடக சாலைப் போக்குவரத்துக் கழகம், பெங்களூரு மெட்ரோபாலிட்டன் போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் ஆகியவை இணைந்து பெங்களூருக்கும் ஓசூருக்கும் இடையே தினமும் 420 சேவைகளை இயக்குகின்றன. ஒவ்வொரு பேருந்திலும், ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களைத் தவிர எழுபது சதவீத பயணிகள் பிரயாணம் செய்கிறார்கள் என்று ஓர் ஆய்வு சொல்கிறது. இரண்டு மாநிலங்களின் சாலைப் போக்குவரத்து ஆணையங்கள் நடத்திய ஆய்வுகளின் படி, சராசரியாக ஒவ்வொரு நிமிடத்திற்கும், 75 வண்டிகள் ஆய்வுப் பகுதி வழியாக கடந்து செல்கின்றன. இவற்றில் 60 சதவீதம் பயணிகள் வாகனங்களின் அடர்த்தியான போக்குவரத்து, சரியாகச் சொன்னால், பெங்களூருக்கும் ஓசூருக்கும் இடையே இல்லாமல் இருக்கலாம். ஆனால், இது பெங்களூருக்கும் சென்னைக்கும் இடையே அடிக்கடி நிகழும் போக்குவரத்து தான்.
தமிழக–கர்நாடக மெட்ரோ ரயில், நாட்டில் ஆகப்பெரிய வாய்ப்புத்திறன் கொண்ட ஐ.டி காரிடர் வழியாக கடந்து செல்லும்.
இந்தியாவில் மெட்ரோரயிலை வைத்திருக்கும் முதல் டையர்-III மாநகரமாக ஓசூர் திகழும். பல டையர்-II மாநகரங்களுக்கே கூட இன்னும் மெட்ரோ ரயில் வரவில்லை.
ஓசூர் என்னும் தொழில்நகரத்தை பெங்களூரின் எதிர்காலப் புறநகர் ரயிலுடன் இணைத்து ஓசூருக்கு பயணத்தை எளிதாக்க கர்நாடக அரசு முன்பு திட்டமிட்டிருந்தது. அந்தத் திட்டமும் இப்போதைய பொம்மசந்திரா – ஓசூர் மெட்ரோ திட்டமும் ஒரே நேரத்தில் செயல்படுமா? அந்தப் புறநகர் ரயில் முற்றிலும் வேறான திட்டம். சென்னை அல்லது மும்பை புறநகர் ரயில்வே உடன் ஒப்பிடக்கூடியது என்று தென்கிழக்கு ரயில்வே அதிகாரிகள் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.
ஓசூர், பெங்களூரின் துணைக்கோள் நகரம் ஆகுமா?
ஏற்கனவே ஓசூர் பெரிதாக வளர்ந்திருக்கிறது. இதற்குக் காரணம் தமிழக அரசு பல குடியிருப்புத் திட்டங்களையும் மாநகர வளர்ச்சித் திட்டங்களையும் நிறைவேற்றி இருப்பதுதான். ஓசூரில் இருக்கும் ஒப்பீட்டளவில் மலிவான வீடுகளில் பல மாணவர்களும் அலுவலக ஊழியர்களும் குடியிருக்கிறார்கள். அசோக் லேலண்ட் நிறுவனம் தனது ஊழியர்களை பெங்களூருக்கும் ஓசூருக்கும் கொண்டுசெல்வதற்கு வழக்கமான பேருந்து வசதிகளை வைத்திருக்கிறது.
இந்தப் புதிய மெட்ரோ பாதை பெரும் வளர்ச்சி நடவடிக்கைகளுக்கு வழித்தடம் அமைத்துக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
Read in : English