Read in : English
எலும்பு மஜ்ஜை ஸ்டெம் செல் தானம் ரத்ததானத்திலிருந்து அதிகமாக வேறுபட்டது இல்லை. ஆனால் அதுதான் ஓர் ஐந்துவயதுச் சிறுமியைப் பெருக வாய்ப்பில்லாத ஆனால் குணமாக்கக்கூடிய நோயிலிருந்து காப்பாற்றி வழக்கமான வாழ்க்கையைத் தொடர உதவப்போகிறது. அதுதான் அவளுக்குக் கிடைத்த ஒரேவாய்ப்பு. அந்த மாதிரியான தானம் செய்வதற்கு முன்வந்த ஒருசில தன்னார்வலர்களில் ஓர் இளைஞரும் இருந்தார். ஏப்ரல் 19 அன்று அந்த அபூர்வமான தானம் நிகழ்ந்தது.
எலும்பு மஜ்ஜை ஸ்டெம் செல் தானம் ஒப்பீட்டளவில் எளிமையானது. மூன்று அல்லது நான்கு மணிநேரத்திற்குள் நிகழும் இது ரத்ததானம் போன்றதுதான். இந்தத் தொழில்நுட்பம் பழமையானது; அடிக்கடி பயன்படுத்தியதுதான்.
தானம் கொடுப்பவருக்கும், பெறுபவர்க்கும் இடையே ஒரு முழுமையான டிஎன்ஏ பொருத்தம் இருப்பது அவசியம்; அப்போதுதான் தானம் முழுமையாகப் பலனளிக்கும். ஆனால் இப்படிப்பட்ட தானம், தலசீமியா, ரத்தப்புற்றுநோய், மற்றும் மரபுவழி ரத்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தியாவில் கிடைப்பது கடினம். மேற்கத்திய நடுகளில் இது எளிதாகக் கிடைக்கக்கூடியது. இந்தியாவில் கடினமாக இருப்பதற்குக் காரணம் தானம் கொடுக்கும் சாத்தியம் உள்ளவர்கள் மத்தியில் விழிப்புணர்வு இல்லாமைதான், என்கிறார் ஜீவன் ஸ்டெம் செல் பவுண்டேஷன் சகநிறுவனரும், சேர்மனுமான டாக்டர். ஸ்ரீனிவாசன் பெரியதிருவடி.
பின்வருபவை நாம் கேட்ட வினாக்களும் அவர் கொடுத்த விடைகளும்:
எலும்பு மஜ்ஜை ஸ்டெம் செல் தானம் தீர்த்துவைக்கும் பிரச்சினை எவ்வளவு கடுமையானது?
இந்தியாவில் 2007-லிருந்து ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,20,00 முதல் 1,50,000 வரையிலான மக்களுக்கு ரத்தப்புற்று நோய் ஏற்படுகிறது. அதைப்போல, ஒவ்வோரு வருடமும் 15,000 குழந்தைகள் தலசீமியாவோடு பிறக்கின்றன. இவர்களில் 60-70 சதவீதத்தினரைக் குணப்படுத்தமுடியும், பொருத்தமான, ரத்தம் உருவாக்கும் ஸ்டெம் செல்கள் அவர்களுக்குக் கிடைத்தால். ஆனால் தானம் கொடுப்பவர்களின் அதிகாரப் பதிவேட்டில் அதிக மக்கள் பதிந்ததில்லை என்பதுதான் பெரும்பிரச்சினை.
உலகம் முழுவதும் ரத்த மஜ்ஜை ஸ்டெம் செல் தானமளிப்பதாக 3.8 கோடி மக்கள் பதிவுசெய்திருக்கிறார்கள். அதில் 95 சதவீதத்தினர்கள் மேலைநாட்டினர். ஜீவன் ஃபவுண்டேஷன் ஸ்டெம் செல் பதிவேட்டில் தானம் அளிப்பதாக 12,000 பேர் பதிவு செய்திருக்கிறார்கள். இந்தச் சின்னப்பட்டியலில் பொருத்தமானவர் கிடைப்பது கடினம் என்பதுதான் பிரச்சினை.
ஸ்டெம் செல் மாற்று அறுவைச் சிகிச்சை ஏதோ ஒரு மிகச்சிக்கலான ஆபரேஷன் போல தெரிவதால், மக்கள் தயங்குகிறார்கள் போலும்.
ஸ்டெம் செல் தானத்திற்கும் ரத்ததானத்திற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. எலும்பு மஜ்ஜையில் ரத்தத்தை உருவாக்கும் ஸ்டெம் செல்கள் இருக்கின்றன. கடந்த காலத்தில் ஸ்டெம் செல்களை நேரடியாக இடும்பு எலும்பிலிருந்து எடுக்க வேண்டியிருந்தது; மிகவும் வலிநிறைந்த செயல்முறை இது. அதற்காக மயக்கமருந்து கொடுக்க வேண்டியிருந்தது.
இன்று ஓர் இயந்திரம் ரத்தத்திலிந்து ஸ்டெம் செல்களை எடுக்கிறது. நாளத்திலிருந்து ரத்தம் எடுக்கப்பட்டு எந்திரத்திற்கு அனுப்பப்படுகிறது; பின்பு எந்திரம் ஸ்டெம் செல்களை எடுத்து மீண்டும் தானமளிப்பவருக்கே அனுப்புகிறது. மூன்று அல்லது நான்கு மணிநேரத்தில் இந்தச் செயல்முறை முடிந்துவிடும். செயல்பாட்டிற்கு முன்பு தானமளிப்பவருக்கு மருந்துகள் கொடுக்கப்படும். அப்போதுதான் அவரது எலும்பு மஜ்ஜையிலிருந்து ஸ்டெம் செல்கள் விளிம்புக்கு வரும்.
எலும்பு மஜ்ஜை ஸ்டெம் செல் தானம் ஒப்பீட்டளவில் எளிமையானது. மூன்று அல்லது நான்கு மணிநேரத்திற்குள் நிகழும் இது ரத்ததானம் போன்றதுதான். இந்தத் தொழில்நுட்பம் பழமையானது; அடிக்கடி பயன்படுத்தியதுதான்.
யார் தானமளிக்கலாம்?
20-40 வயதுக் குழுமத்திலிருக்கும் ஆரோக்கியமான ஆண்களும் பெண்களும் தானம் செய்யலாம். அவர்கள் இளமையாக இருந்தால் இன்னும் நல்லது; அப்போதுதான் அவர்களின் செல்கள் பெருகும் வாய்ப்புகள் அதிகமாகும்.
முதலில் நாங்கள் ரத்தமாதிரியை எடுப்போம். அதிலுள்ள டிஎன்ஏ மரபணுத் தகவல்களை குறித்துக்கொண்டு தரவுக்கட்டமைப்பில் சேமித்து வைத்திடுவோம். ஸ்டெம் செல்களுக்கான வேண்டுகோள் எழும் பட்சத்தில் நோயாளியின் டிஎன்ஏ தகவலை ஒரு மென்பொருள் மூலம் பார்வையிட்டு முற்றிலும் பொருத்தமான தானம் இருக்கிறதா என்று ஆராய்வோம்.
அப்படி ஒருவர் கிடைத்தால், அவர் முற்றிலும் தகுதியானவரா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வோம். அவரால் தானம் கொடுக்க முடியுமா என்பதைத் தீர்மானிக்க விரிவான உடல்பரிசோதனைகள் செய்யப்படும். முற்றிலும் பொருத்தமானவர்கள் பத்துபேர் கிடைத்தால் அவர்களில் ஐந்து அல்லது ஆறுபேர் பின்வாங்கிவிடுவார்கள். இது இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் நிகழ்வதுதான்.
நீங்கள் டிஎன்ஏ பொருத்தம் பற்றிப் பேசினீர்கள். டிஎன்ஏ என்பது பிராந்தியத்திற்குப் பிராந்தியம் வேறுபடுகிறதே.
ஆம். உண்மைதான. காக்கேசியன் எலும்பு மஜ்ஜை ஸ்டெம் செல் ஓர் இந்தியனுக்குப் பொருந்தும் வாய்ப்புகள் மிகமிகக் குறைவு. அப்படியே பொருத்தமான செல்கள் கிடைத்தாலும், அவற்றை இந்தியாவுக்குக் கொண்டுவர இன்றைய மதிப்பில் சுமார் ரூபாய் 28,000 இலட்சம் செலவாகும்.
இந்தியாவிலே கூட, இருக்கும் ஒன்பது மொழிசார்ந்த இனங்களின் டிஎன்ஏ-க்கள் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை. அதனால் ஒரு தமிழர் நோயாளிக்கு இன்னொரு தமிழர் தானமளிக்கும் ஸ்டெம் செல் பொருந்தி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதனால் பிராந்திய பதிவேடுகளில் நாங்கள் இப்போது கவனம் செலுத்துகிறோம்; பின்னர் அவை தேசிய கட்டமைப்புக்கு இட்டுச்செல்லும்.
இந்தியாவில் 2007-லிருந்து ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,20,00 முதல் 1,50,000 வரையிலான மக்களுக்கு ரத்தப்புற்று நோய் ஏற்படுகிறது. அதைப்போல, ஒவ்வோரு வருடமும் 15,000 குழந்தைகள் தலசீமியாவோடு பிறக்கின்றன. இவர்களில் 60-70 சதவீதத்தினரைக் குணப்படுத்தமுடியும், பொருத்தமான, ரத்தம் உருவாக்கும் ஸ்டெம் செல்கள் அவர்களுக்குக் கிடைத்தால். ஆனால் தானம் கொடுப்பவர்களின் அதிகாரப் பதிவேட்டில் நிறையபேர் பதிவு செய்யவில்லை என்பதுதான் பெரும்பிரச்சினை.
ஒரு ஸ்டெம் செல் மாற்று அறுவைச் சிகிச்சைக்கு எவ்வளவு செலவாகும்?
மூன்று படிநிலைகள் உண்டு. தானமளிப்பவர்களைப் பதிவுசெய்தல்; அவர்களின் டிஎன்ஏ-யை சேகரித்தல்; அதை டிஎன்ஏ தரவுக் கட்டமைப்பில் சேர்த்தல்; தேவைப்படும்போது பட்டியலில் தானம் கொடுக்கக்கூடிய பொருத்தமான ஆளைக் கண்டுபிடித்தல்; இவையாவும் முதல்படிநிலை. இதற்கு பவுண்டேஷனின் நிறுவனச் சமூகப்பொறுப்பு நிதியும், மற்ற நன்கொடைகளும் பயன்படுகின்றன.
இரண்டாவது படிநிலையில் தானமளிப்பவருக்குச் செய்யப்படும் உடல் பரிசோதனைகளும், அவரிடமிருந்து செல்களை அறுவடை செய்தலும், பின்பு அவற்றைக் கட்டுப்படுத்தப்பட்ட வெப்பச்சூழலில் நோயாளிக்குக் கடத்துவதும் அடங்கும். இதற்கு ரூபாய் 3 லட்சம் முதல் ரூபாய் 3.5 இலட்சம் வரை செலவாகும். அதற்குப்பின் மாற்று அறுவைச்சிகிச்சை செலவும், மற்றும் மருத்துவமனை செலவுகளும் இருக்கின்றன.
ஸ்டெம் செல் பதிவேடு ஏன் தேவைப்படுகிறது?
இன்று ஸ்டெம் செல் மாற்று அறுவைச்சிகிச்சைக்கான உட்கட்டமைப்பு நம்மிடம் இருக்கிறது. எலும்பு மஜ்ஜை ஸ்டெம் செல் மாற்று அறுவைச் சிகிச்சை இந்தியாவில் வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்தான் 1980களில் தொடங்கியது.
இந்தியாவில் இந்த மாற்று அறுவைச்சிகிச்சை 200 நிலையங்களில் நடத்தப்படுகிறது. ஆனால் பொருத்தமான தானமளிப்பவர்கள் கிடைக்காமல் போவது அடிக்கடி நிகழ்கிறது. பொருத்தமான ஆட்களைத் தேடிக் கண்டுபிடிக்க வசதியான பெரிய தரவுக்கட்டமைப்பு நம்மிடம் இல்லை. அதனாலே குடும்ப உறுப்பினர்களே தங்கள் ஸ்டெம் செல்களைத் தானம் செய்கிறார்கள்; அவற்றில் 50 சதவீதம் பொருத்தமான தானம் அமைவது நிகழ்கிறது. மருத்துவச் செயற்பாட்டுக்குப் பின்பு சில சிக்கல்கள் எழக்கூடும். அதற்கு நோயாளி சரியான மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். மிகவும் பொருத்தமான தானம் நோயாளியைக் குணப்படுத்தும் வாய்ப்பை அதிகமாக்குகிறது. அப்படியொரு பொருத்தமான தானம் பதிவேட்டின் மூலமாகத்தான் வரும்.
யார்யார் தங்கள் பெயர்களை பதியலாம்? உங்கள் இலக்குகள் என்ன?
தானம் செய்யும் சாத்தியமுள்ள 50,000 பேரைக் கொண்டு அவர்களின் டிஎன்ஏ தகவல்களை எளிதாகத் தேடக்கூடிய தரவுக்கட்டமைப்பில் சேமித்து வைக்க வேண்டும் என்பதுதான் ஜீவன் ஃபவுண்டேஷன் ஸ்டெம் செல் பதிவேட்டின் இலக்கு. 20-40 வயதுக் குழுமத்தினர்கள் வரவேற்கப்படுகிறார்கள். எலும்பு மஜ்ஜை ஸ்டெம் செல்களைத் தானம் செய்வதற்கு, ரத்தத்தையும், ரத்தத்துகள் அணுக்களையும் தானம் செய்யும் வழக்கம் கொண்டவர்களைத் தேடிக் கொண்டிருக்கிறோம்.
மேலும் தகவல்களுக்கான இணையமுகவரி: https://www.bethecure.in/
பதிவு செய்வதற்கு ஆர்வமுள்ளவர்கள் இந்த முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம: registrations@jeevan.org
ரத்தமாதிரி சேகரிப்பதற்கும் மற்ற விசயங்களுக்கும் நாங்கள் ஏற்பாடு செய்கிறோம்.
Read in : English