Read in : English
தமிழ்நாட்டில் முத்ரா கடன் வெற்றி திட்டம் பெற்றிருக்கிறது என்று சொல்ல வேண்டும். ஏனென்றால் அது ஓர் அத்தியாவசிய தேவையைப் பூர்த்தி செய்கிறது. ஒப்பீட்டளவில் முன்னேறியிருக்கும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில், மக்கள் தொழில் தொடங்குவதற்குத் தேவையான கடனைப் பெறுவதற்குச் சிரமப்படுகிறார்கள். பிணையம் வைப்பதற்கு அவர்களிடம் ஒன்றுமில்லை என்பது போன்ற பல்வேறு காரணங்களால் அவர்களுக்குக் கடன் கிடைப்பதில்லை. இந்தச் சவால்களை எதிர்கொள்ளவும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்குப் பிணையம் இன்றி கடன் கிடைக்க வழிசெய்யவும், ஒன்றிய அரசு 2015இ-ல் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா என்கிற முத்ரா திட்டத்தை தொடங்கியது. இதன் வட்டி விகிதங்கள் வெளிப்படையானவை; சந்தையில் கிடைக்கும் பிற கடன்களைவிட கட்டுப்படியாகக்கூடியவை.
முத்ரா திட்டத்தின்கீழ் மூன்று விதமான கடன்கள் வழங்கப்படுகின்றன: ஷிஷு திட்டத்தின் கீழ்- ரூ.50,000 வரையும் கிஷோர் திட்டத்தின் கீழ் – ரூ.50,001-லிருந்து ரூ.5 லட்சம் வரையும் தருண் திட்டத்தின் கீழ்- ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சம் வரையும் கடன் பெறலாம். உற்பத்தி, செயல்முறை, வியாபாரம், சேவைகள் மற்றும் வேளாண்மை சார்ந்த செயல்பாடுகள் போன்றவற்றுக்காக தொழில் தொடங்குபவர்களுக்கு உதவிசெய்ய இந்தக் கடன்கள் வழங்கப்படுகின்றன. தகுதி வாய்ந்த தொழில் நிறுவனங்களுக்கு முடிந்த அளவு கடன்கள் கொடுக்கும்படி கடன் வழங்கும் அமைப்புகளுக்கு ஒரு தெளிவான கட்டளையும், அழுத்தமும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பொதுத்துறை, தனியார் வணிக வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள், பிராந்திய கிராம வங்கிகள், குறுநிதி நிறுவனங்கள், வங்கிசாரா நிதி நிறுவனமான குறுநிதி அமைப்புகள், வங்கியல்லாத நிதி நிறுவனங்கள், சிறுநிதி வங்கிகள் ஆகியவை முத்ரா கடன்கள் வழங்குகின்றன.
கடந்த ஏழு ஆண்டுகளில், முத்ரா கடன் திட்டம் தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில்களைச் செய்பவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
கடந்த ஏழு ஆண்டுகளில், முத்ரா கடன் திட்டம் தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில்களைச் செய்பவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. புழங்குமூலதன ஆதரவைத் தந்து எல்லாவிதமான தொழில் நிறுவனங்களுக்கும் நம்பிகையைத் தந்து தொழில் வளர்ச்சியை உருவாக்கியதில் முத்ரா கடன்களுக்குப் பெரும்பங்கு உண்டு. குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில்களில் சுமார் 6,000 பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன; நேரடியாகவும், மறைமுகமாகவும் பல லட்சம் பேர் வேலை செய்கிறார்கள்.
இந்த ஆண்டு மார்ச் 18-ஆம் தேதிவரை கிடைத்த தரவுகள்படி, இந்தத் திட்டத்தின்கீழ், மொத்தமாக 34.28 கோடி கணக்குகளுக்கு ரூ.18.52 லட்சம் கோடி அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அதில் ரூ.17.99 கோடி (97.19 சதவீதம்) நாடு முழுவதும் வழங்கப்பட்டிருக்கிறது. இதில் ரூ.8.10 லட்சம் கோடி மதிப்புள்ள கடன்கள் மொத்தம் 23.27 கோடி பெண்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றன. மொத்தக் கடன்கள் எண்ணிக்கையில் இது 68 சதவீதமாகும்; கொடுக்கப்பட்ட கடன்களின் மதிப்பில் 44 சதவீதமாகும்.
உத்யோக் ஆதார் பதிவு அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 11,05,983 குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன; அவற்றில் 9,68,497 குறுந்தொழில்கள்; 1,33,123 சிறுதொழில்கள்; 4,362 நடுத்தரத் தொழில்கள். நாட்டில் உள்ள மொத்த குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் தமிழ்நாட்டில் மட்டும் 10.81 சதவீதம் இருக்கின்றன; தமிழ்நாட்டில் குறுந்தொழில் 10.81 சதவீமும் சிறு தொழில் 10.91 சதவீதமும் நடுத்தரத் தொழில் 8.75 சதவீதமும் ஆகும்.
குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில்களுக்கு கடன் வசதியை ஏற்படுத்திக் கொடுத்ததால் முத்ரா திட்டம் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமாகிவிட்டது. பதிவுமுறையும், கடன்விதிமுறைகளும் முத்ராவில் எளிமையானவை. இந்தத் திட்டத்தின்படி இருக்கும் கணக்குகள் மொத்தம் 4.08 கோடி அல்லது தேசிய எண்ணிக்கையில் 12 சதவீதம். இதுவரை, தமிழ்நாட்டில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட கடன்களின் மொத்த தொகை ரூ.1,85,420.03 கோடி; அதாவது இந்தியாவில் இது 10.30 சதவீதமாகும்.
மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு சொல்லப்பட்ட பதிலில், 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 25-ஆம் தேதி நிலவரப்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 2,64,46,737 பெண் தொழில்முனைவோர்கள் இருக்கிறார்கள் என்றும் அது நாட்டில் 11.49 சதவீதம் என்றும் சொல்லப்பட்டது. அவர்களுக்கு வழங்கப்பட்ட கடன்களின் மொத்த தொகை ரூபாய் 8,92,35,22 கோடி, அதாவது நாட்டில் 11.67 சதவீதம் என்றும் அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் பெண் தொழில்முனைவோர்களின் முத்ரா கடன் கணக்குகளின் மொத்த பங்கு 65.61 சதவீதம். அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட கடன்களின் பங்கு 48.57 சதவீதம்; இது தேசஅளவிலான பங்கைவிட 5 சதவீதம் அதிகம். மேலும், தமிழ்நாட்டு பெண் தொழில்முனைவோர்களுக்கு வழங்கப்பட்ட மொத்த கடன்தொகையின் பங்கு 48.81 சதவீதம்; இந்திய அளவிலான பங்கைவிட 6 சதவீதம் அதிகம்.
தமிழ்நாட்டின் மொத்த மக்கள்தொகை சுமார் 8 கோடி. இதில் 6.28 கோடி பேர் 18 வயதுக்கு மேம்பட்டவர்கள். இந்த 6.28 கோடி பேர்க்கு முத்ரா திட்டத்தில் 4.07 கோடி கடன் கணக்குகள் எப்படி இருக்கும் என்று சிலர் கேட்கிறார்கள். ஆனால் இது ஒரு தவறான புரிதல்.
இன்னும் 10 ஆண்டுகளுக்குள் 5 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை உருவாக்கவும், 50 லட்சம் பேர்களுக்கு மேலும் வேலைவாய்ப்புகளை உண்டாக்கவும் மிகப் பெரிய இலக்கை நிர்ணயித்திருக்கிறது.
ஒவ்வொரு தனிமனிதனுக்கும் கடன்கொடுப்பது முத்ராவின் நோக்கமல்ல. இது ஒரு வழக்கமான கடன் மாதிரி அல்ல. குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில்களுக்கு தொடர்ந்து நிதி ஆதரவு கிடைப்பதில் இருக்கும் பல்வேறு இடைவெளிகளை நிரப்புவதற்காகக் கொண்டுவரப்பட்ட ’மறுநிதி’ மாதிரிதான், இந்த முத்ரா திட்டம்.
உதாரணமாக, தமிழ்நாட்டில் 50 லட்சம் குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில்கள் இருக்கின்றன; சுமார் ஒரு கோடி பேர் வேலை செய்கிறார்கள். இந்தத் துறை நாட்டில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. அவர்களின் பெரும்பாலோர் முறைசாரா துறையில் பணிசெய்கிறார்கள். மாநில அரசு 2020-21-இல் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன்களை ஏஜென்சிகள் மூலம் 19 லட்சத்திற்குக் குறைவான நிறுவனங்களுக்கு ஏற்பாடு செய்தது. முப்பது லட்சம் நிறுவனங்களுக்கு கடன் கிடைக்கவில்லை. இந்த இடைவெளியை நிரப்பத்தான் முத்ரா திட்டம் வந்திருக்கிறது.
சிறுதொழிலுக்குக்கூட தொடர்ந்து நிதி தேவைப்படும் பட்சத்தில், தொழிலில் ஒருவருக்கு ஒரே கடன் மட்டும் கொடுப்பது சாத்தியமில்லை. அதே சமயம், எல்லாக் கடன்களையும் ஒரே கணக்கில் ஒன்று சேர்ப்பதும் சாத்தியமில்லை. முத்ரா திட்டத்தின்கீழ், ஏற்கனவே எடுத்த கடனை ஒரு நிதியாண்டில் வட்டியோடு கட்டி முடித்தபின்பு, ஒரு பயனாளி மூன்று பிரிவுகளிலும் ஒரு தடவைக்கும் மேலாக கடன்பெற அனுமதிக்கப்படுகிறார். இது அவரின் புழங்கு மூலதனத் தேவைகளுக்கு உதவும். ஒவ்வொரு தடவையும் பயனாளி புதிதாகத்தான் கணக்கில் எடுத்துக்கொள்ளப் படுகிறார். ஒரு பயனாளி பல்வேறு கடன்வழங்கும் நிறுவனங்களிலிருந்தும் முத்ரா கடன்களை வாங்கிக் கொண்டிருக்கலாம்.
இன்னும் 10 ஆண்டுகளுக்குள் 5 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை உருவாக்கவும், 50 லட்சம் பேர்களுக்கு மேலும் வேலைவாய்ப்புகளை உண்டாக்கவும் மிகப் பெரிய இலக்கை நிர்ணயித்திருக்கிறது தமிழ்நாட்டின் குறு, சிறு, மற்றும் நடுத்தர தொழில் துறை. குறுந்தொழில் நிறுவனங்களை சிறு அல்லது நடுத்தர நிலைக்கு மேம்படுபடுத்த வேண்டும் என்ற திட்டமும் இருக்கிறது. முத்ரா திட்டம் வழங்கும் முறைசார்ந்த வங்கிக்கடன் இணைப்புகள் இல்லாமல் தமிழ்நாட்டின் இந்த இலக்கு நிறைவேறுவது சாத்தியமில்லை.
Read in : English