Read in : English
தமிழக பட்ஜெட்டில் சில முக்கியமான சமூக நலத் திட்டங்களுக்கு கடந்த ஆண்டைப் போலவே அல்லது அதைவிடக் குறைவாகவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று விமர்சனம் செய்து இன்மதி இணைய இதழில் வந்த விமர்சனக் கட்டுரைக்கு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த பட்ஜெட்டைவிட (2021-22) இந்தப் பட்ஜெட்டில் பெரும்பாலான துறைகளுக்கான ஒதுக்கீடுகள் சிறிதளவே பெயரளவில் (nominal terms) உயர்ந்திருக்கின்றன. சில ஒதுக்கீடுகள் பெயரளவில் குறைக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் சில ஒதுக்கீடுகள் சற்று அதிகமாக உயர்ந்திருக்கின்றன. அந்த உயர்வுகள் பணவீக்க விகிதத்தை முறியடித்து வளர்ச்சிக்குத் தூண்டுகோலாக இருக்கும் என்று பொருளதார நிபுணர் பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா தனது கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.
அந்தக் கட்டுரை மரியாதைக்குரிய விமர்சனம் என்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம் நான் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து, வழக்கமான அரசியல் சந்தேகக் கண்ணோட்டத்துடன் கூடிய விமர்சனமாக அல்லாமல், எழுதப்பட்ட யதார்த்தமான விமர்சனம் அது என்று குறிப்பிட்டுள்ள அவர், அதுகுறித்து எழுதுவதாகவும் தெரிவித்துள்ளார். அவரது எதிர்வினையையும் இன்மதி வெளியிடும்.
கடந்த வாரம் நான் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து, வழக்கமான அரசியல் சந்தேகக் கண்ணோட்டத்துடன் கூடிய விமர்சனமாக அல்லாமல், எழுதப்பட்ட யதார்த்தமான விமர்சனம் அது என்று குறிப்பிட்டுள்ள அவர், அதுகுறித்து எழுதுவதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழக பட்ஜெட் குறித்து நான்கு கட்டுரைகளை இன்மதி இணைய இதழ் வெளியிட்டது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நாளான்று முகநூலில் (ஃபேஸ் புக்) பட்ஜெட் குறித்த விவாதத்தை இன்மதி நடத்தியது.
வருவாய் செலவு கணக்கில் 9 ஆயிரம் கோடி அதிகரித்தாலும், வருவாய்ப் பற்றாக்குறையைச் சமாளிக்கும் வகையில் வருவாய் கூடுதலாக அதிகரிக்கும் என்று பழனிவேல் தியாகராஜன் கூறியிருந்தது அந்த விவாதத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த அளவுக்கு வரி விதிப்பு மூலமே நல்ல பொருளாதார வளர்ச்சி விகிதம் இருக்கும என்று பட்ஜெட் சுட்டிக்காடியது.
கொரோனா தொற்று குறைந்து வரும் சூழ்நிலையில், பொருளதாரச் செயல்பாடுகள் இயற்கையாகவே அதிகரிக்கும் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வழிவகுக்கும். அதனால் வரி வசூல் இயற்கையாகவே மீண்டும் எழுச்சி பெறும். வரி வசூலை ஊக்கப்படுத்தும் வகையில விரைவில் கொள்கை அறிவிப்பை அரசு வெளியிடும் என்று அரசுடன் இணைந்து செயல்படும் ஒரு பொருளாதார நிபுணர் இன்மதியிடம் தெரிவித்தார். சொத்து வரி வழிகாட்டும் மதிப்பீடும் பத்திரப் பதிவுக் கட்டணமும் திருத்தி அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட்டில் பெருங்கவனம் பெற்ற விஷயங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவானதாக இல்லை என்று வேறு ஒரு கோணத்தில் விமர்சனம் முன் வைக்கப்பட்டது.
பட்ஜெட்டில் பெருங்கவனம் பெற்ற விஷயங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவானதாக இல்லை என்று வேறு ஒரு கோணத்தில் விமர்சனம் முன் வைக்கப்பட்டது. தொழில் வளர்ச்சிக்கும் சேவைத் துறை வளர்ச்சிக்கும் முன்னுரிமை கொடுக்காமல் வளர்ச்சி இலக்குகளை எட்டுவதும் நீண்ட கால பொருளாதார மலர்ச்சியும் சாத்தியமல்ல என்றும் அந்தக் கட்டுரை சுட்டிக்காட்டியது.
நகர்ப்புற வளர்ச்சியும் நகர்ப்புற கட்டமைப்பும் குறித்த பட்ஜெட் அறிவிப்புகளின் தாக்கம் குறித்து பட்ஜெட் தினத்தன்று வெளியான ஒரு கட்டுரை எடுத்துக்காட்டியது.
அரசுப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் கல்லூரியில் சேர்ந்து படிப்பை முடிக்கும் வரை மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கும் தமிழக அரசின் இந்தத் திட்டம் குறித்தும் இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 6 லட்சம் மாணவிகள் பயன் பெறுவார்கள் என்று பட்ஜெட்டில் கல்வி மேம்பாட்டுக்கான முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்புகளை மற்றொரு கட்டுரை ஆராய்ந்தது.
Read in : English