Read in : English
இந்திய பொருளாதார நிலையைப் பற்றிச் சரியாக விவரிப்பது தேசிய அளவில் இரண்டே இரண்டு ஆவணங்கள்தான். ஒன்று ஒன்றிய அரசின் பட்ஜெட்; மற்றொன்று பொருளாதார ஆய்வு. ஒன்றிய அரசு பட்ஜெட் என்பது வெறும் நிதிநிலை அறிக்கை மட்டுமல்ல; அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகள் சம்பந்தமாக கொள்கை ரீதியிலான பல்வேறு உள்ளர்த்தங்களையும் கொண்டது. அது ஆட்சி முனைப்புகளைப் பற்றியும் பேசுகிறது.
தேசிய பொருளாதார ஆய்வை நிபுணர்கள், நன்கு பயிற்சியளிக்கப்பட்ட பொருளாதாரத் துறை அதிகாரிகள் அடங்கிய குழு தயாரிக்கிறது. அந்த ஆய்வறிக்கை ஆழமான ஆராய்ச்சிகளையும், சம்பந்தப்பட்ட நிபுணர்கள் தரும் ஆலோசனைகளையும் கொண்டது. வேளாண்மை மற்றும் தொழில் உற்பத்தி, உள்கட்டமைப்பு, வேலைவாய்ப்புகள், பணப்புழக்கம், விலைகள், இறக்குமதிகள், ஏற்றுமதிகள், அந்நிய செலவாணி கையிருப்பு, பிற பொருளாதாரக் காரணிகள் ஆகிய பட்ஜெட்டுக்குச் சம்பந்தமான விஷயங்களில் நிகழும் போக்குகளைப் பற்றிய தரவுகளையும், புள்ளி விவரங்களையும் கொண்ட ஆவணம் அந்த ஆய்வறிக்கை. நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக அது சமர்ப்பிக்கப்படுகிறது.
ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வு அறிக்கையைத் தொடர்ந்து, பல மாநிலங்கள் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது தங்களுடைய மாநில பொருளாதார ஆய்வு அறிக்கைகளைக் கொண்டுவருகின்றன. நடப்புக்கு இணையாக மேம்படுத்தப்பட்ட புள்ளி விவரங்களைக் கொண்டிருப்பவை அந்த அறிக்கைகள். அப்படிச் செய்கின்ற மாநிலங்களில் ஆந்திரபிரதேசம், சத்தீஸ்கர், கர்நாடகம், குஜராத், மஹாராஷ்ட்ரம், கேரளம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், ஒடிஷா, பஞ்சாப் ஆகியவை அடங்கும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக தமிழ்நாடு அந்தப் பட்டியலில் இல்லை. தமிழ்நாட்டின் புதிய நிதியமைச்சர் மாநிலப் பொருளாதார ஆய்வை வெளியிட்டு ஒரு புதிய போக்கை உருவாக்குவார் என்று பலர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அப்படியேதும் நிகழவில்லை.
மாநிலப் பொருதாளாதார ஆய்வு ஒரு முக்கியமான கொள்கை ஆவணம். வளங்களைத் திட்டமிடுதல், முதலீடுகள், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், பல்வேறு மாவட்டங்களின் முன்னேற்றத்தை மதிப்பிடுதல், வளர்ச்சி சாத்தியங்களை மதிப்பிடுதல், தொடர்ந்து செல்லும் வளர்ச்சி இலக்குகளை மதிப்பிடுதல், விடுபட்ட துறைகளுக்கான உத்திகளைத் திட்டமிடுதல் ஆகிய விஷயங்களைக் கொண்டது.
பொருளாதார மதிப்பீட்டிற்கென்று தனியாக ஒரு துறையை உருவாக்கிய முதல் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. தமிழ்நாட்டில் இந்தத் துறை 1972-லிருந்து இயங்கி வருகிறது. ஆனால் அது பொருளாதார ஆய்வு அறிக்கை சமர்ப்பிப்பதை ஒரு வழக்கமாகக் கொண்டிருக்கவில்லை.
தமிழ்நாட்டுக் கல்வியாளர்களுக்கும், சிந்தனையாளர்களுக்கும், அரசுசாரா தொண்டு நிறுவனங்களுக்கும்கூடஇந்த அறிக்கையில் பெரிய ஆர்வம் இருப்பதில்லை. பொருளாதார மதிப்பீட்டிற்கென்று தனியாக ஒரு துறையை உருவாக்கிய முதல் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. தமிழ்நாட்டில் இந்தத் துறை 1972-லிருந்து இயங்கி வருகிறது. ஆனால் அது பொருளாதார ஆய்வு அறிக்கை சமர்ப்பிப்பதை ஒரு வழக்கமாகக் கொண்டிருக்கவில்லை.
தமிழ்நாட்டில் ‘டியர்’ (டிபார்ட்மெண்ட் ஆஃப் இவால்வேஷன் அண்ட் அப்ளைட் ரிசர்ச்) என்றழைக்கப்படும் மதிப்பீடு மற்றும் பயன்பாட்டுக்கான ஆராய்ச்சி என்ற துறை ஒன்று இருக்கிறது. அது பொருளாதார மதிப்பீடு என்ற அறிக்கையைத் தயார்செய்கிறது. ஆனால் அது வழக்கமாக வெளியிடப்படுவதில்லை. மாநிலப் பொருளாதார ஆய்வை தேசிய பொருளாதார ஆய்வைப்போல பொது வெளியில் வைக்கவேண்டும்.
தமிழ்நாட்டிற்கான கடைசி பொருளாதார ஆய்வறிக்கை 2014-15-லிருந்து 2017-18 வரைக்குமான காலகட்டத்திற்கானது. கடந்த நான்கு ஆண்டுகளில் (2018-19 முதல் 2021-22 வரை) அப்படிப்பட்ட அறிக்கை ஒன்றும் இல்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. கொள்கை வடிவமைப்பாளர்களுக்கு அது தேவையான ஓர் அறிக்கை. நிறுவன ரீதியிலான ஆட்சி அமைப்புகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களையும், நிகழ்வுகளையும் திட்டமிடுவதற்கு அவர்களுக்கு அந்த அறிக்கை அவசியமானது.
செப்டம்பர் 1-ஆம் தேதி நிலவரப்படி, 789 மதிப்பீடு ஆய்வுகளை நடத்தியிருப்பதாக ‘டியர்’ இணையதளம் சொல்கிறது. அவற்றில் ஒன்றுகூட பொதுமக்கள் பார்வைக்குக் கிடைப்பதில்லை. திட்டங்களை மதிப்பீடு செய்வதற்கு வரி செலுத்துவோரின் பணம் செலவழிக்கப்படுகிறது. ஆனால் வரிசெலுத்தும் மக்கள் ஆராய்வதற்காக அந்த அறிக்கைகள் வெளியிடப்படுவதில்லை.
மாநிலங்களின் பொருளாதார ஆய்வுகளை ஆராய்ந்த ஆசிரியர் கோவிந்த் பட்டாசார்ஜி சமீபத்தில் இப்படிச் சொன்னார்: “பீகாரின் பொருதாளார ஆய்வு ஒரு தகவல் தங்கச்சுரங்கம். பாட்னாவில் இருக்கும் சிந்தனை அமைப்பான ஆசியா வளர்ச்சி ஆராய்ச்சிக் கழகம் அதைத் தயாரிக்கிறது. அந்த ஆய்வின் 14-ஆவது வடிவம் (2019-20) நடுநிலைத்தன்மையைக் கடைப்பிடிக்கிறது, அரசியல் அழுத்தங்கள் மற்றும் வலியுறுத்தல்கள் இருந்தபோதிலும்.”
“இந்த விஷயத்தில் பீகாரில் தொடர்ந்து ஆண்ட அரசுகளைப் பற்றி நல்லவிதமாகத்தான் சொல்லவேண்டும். ஏனென்றால் எந்த அரசும் குறுகிய அரசியல் காரணங்களுக்காக இந்த ஆவண உள்ளடக்கத்தில் தலையிடுவதில்லை. உண்மையில் பீகாரின் பொருளாதாரத்தைப் புரிந்துகொள்ளவும் அல்லது ஆராய்ச்சி செய்யவும் உதவக்கூடிய ஒரே ஆவணம் இதுதான். இந்த ஆய்வின் தரவுகளில் தலையிட்டு விளையாடினால், அது தங்களுக்கே மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதை அரசியல்வாதிகள் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.”
மாநிலத்தின் பெயர் பெற்ற பொருளியல் நிபுணர்கள் கூட தமிழ்நாட்டின் பொருளாதார மதிப்பீட்டு அறிக்கையை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை. முந்தைய அறிக்கைகள் அதிகாரிகள் தயாரித்த வெறும் நிர்வாகக் குறிப்பேடுகள்தான். நிஜமான பொருளாதாரத்தைத் துல்லியமாகக் காட்டும் தரவுகளைக் கொண்டு மதிப்பீடு செய்து அலசி ஆராய்ந்த ஆராய்ச்சிகள் அல்ல.
மாநில அரசின் ஆட்சிமுறையில் அமைப்பியல் சீர்திருத்தத்தின் அவசியம் பற்றி பழனிவேல் தியாகராஜன் பேசிக்கொண்டிருக்கிறார். ஆனால் இந்த மீள்கட்டமைப்பை ஆரம்பித்து வைப்பதற்கான களப்பணியை மாவட்ட ஆட்சியர் அமைப்பிலிருந்து தொடங்க வேண்டும்.
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், 2022-23-லிருந்து ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டோடு பொருளாதார ஆய்வையும் கொண்டு வரப்போவதாக சட்டசபையில் 2021ஆம் ஆகஸ்டு 19-ஆம் தேதி அறிவித்தார். ஆனால் மாநில அரசு 2021-22-க்கான ஆய்வை வெளிக்கொண்டுவர நடவடிக்கையை எடுத்ததுபோல தெரியவில்லை. இவ்வளவுக்கும் தமிழ்நாட்டில் பொருளாதார அறிஞர்களுக்கும் கொள்கை வடிவமைப்பாளர்களுக்கும் பஞ்சமே இல்லை. ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும் மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் தலைவருமான டாக்டர் சி. ரங்கராஜன், சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் பி. துரைசாமியும் நினைவுக்கு வருகிறார்கள்.
மாநில அரசின் ஆட்சிமுறையில் அமைப்பியல் சீர்திருத்தத்தின் அவசியம் பற்றி பழனிவேல் தியாகராஜன் பேசிக்கொண்டிருக்கிறார். ஆனால் இந்த மீள்கட்டமைப்பை ஆரம்பித்து வைப்பதற்கான களப்பணியை மாவட்ட ஆட்சியர் அமைப்பிலிருந்து தொடங்க வேண்டும்.
ஐநாவின் தொடர்வளர்ச்சி இலக்குகளின் குறியீடுகளை சாதித்துக் காட்டிய ஒரு சில மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று என்று சமீபத்து தேசிய பொருளாதார ஆய்வு சுட்டிக்காட்டியிருக்கிறது. எனினும் மாவட்ட ரீதியிலான குறியீடுகளைத் தெரிந்து கொள்வது சுவாரஸ்யமாக இருக்கும். மாநிலப் பொருளாதார ஆய்வால் வெவ்வேறு துறைகளில் இருக்கும் வேலையாள் பற்றாக்குறையையும், உழைப்பாளர் புலம்பெயர்வையும் மதிப்பீடு செய்து மொத்த தொழிலாளர் தொகையையும் அளவிடமுடியும்.
அதிகாரிகளின் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்புணர்வையும், உற்பத்தித்திறனையும் மேம்படுத்த தரவுகளை மையமாகக் கொண்ட ஆட்சிமுறையைப் பற்றி பழனிவேல் தியாகராஜன் பேசியிருக்கிறார். ஆனால் பேசுவது எளிது; நடைமுறைப்படுத்துவதுதான் கடினம். தரவுகளை மையமாகக் கொண்ட ஆட்சிமுறை அமைப்பை உருவாக்க மாநிலப் பொருளாதார ஆய்வு உதவும்.
பொருளாதார ஆய்வில் வெவ்வேறு சிந்தனையாளர்களின், நிபுணர்களின் உள்தரவுகள் இடம்பெற்றிருப்பதால், அந்த ஆய்வு மாவட்டங்கள் எப்படி செயல்படுகின்றன என்பதைப் பற்றி விருப்புவெறுப்பற்ற ஒரு நடுநிலை மதிப்பீட்டைத் தரும்; அது பிராந்திய சமச்சீர்வின்மைகளைச் சரிபடுத்த உதவும். நிதியமைச்சர் ஒன்றிய அரசின் கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் விமர்சித்துப் பேசுகிறார். முதலில் அவர் வெளிப்படையான நிர்வாகத்திலும், ஆட்சிமுறை அமைப்புகளிலும் மாநிலத்தைச் சரிசெய்யட்டும்.
(கட்டுரையாளர், பொருளாதார மற்றும் பொதுக்கொள்கை நிபுணர்).
Read in : English