Read in : English
‘ஸ்டார்ட் அப்’ புதிதாகத் தொழில் தொடங்குவதை நாம் எப்படி எளிமையாக விவரிப்பது? இது ஒரு புதுமையான வர்த்தக மாதிரியைக் கொண்ட ஒரு முயற்சி. வர்த்தகத்தை பெருக்குவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. ஸ்விக்கி அல்லது ஜுமாட்டோ போன்றவை அடிப்படையில் பொருள்களை எடுத்துச் சென்று வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதை அடிப்படையாகக் கொண்டவை.
அவை புவியில் தகவமைப்பு, செல்பேசி தொழில்நுட்பம் மற்றும் வங்கிகளை தங்களது முன்னேற்றதுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன. பிரச்சினை, அதற்கானத் தீர்வு, தீர்வுக்கான புள்ளிகளை இணைத்தல் ஆகியவற்றை ஸ்டார்ட் அப் நிறுவனம் அடையாளம் காண்கிறது.
உலகம் முழுவதும் எதிர்கால தொழில் புரட்சி 4.0 என்பது இத்தகைய புதுமையான, தொழில்நுட்பத்தால் இயக்கப்பட்டு புதிதாக தொடங்கப்படும் ஸ்டார்ட் அப் தொழில்கள் உச்சத்தை எட்டுவதற்கான வாய்ப்புகளுடையவையாக இருக்கும். இந்தப் புதிய தொழில் நுட்பங்களை, மாற்றங்களைப் புரிந்து கொள்ளாமல் செயல்படும் வர்த்தக நிறுவனங்கள் காலாவதியாகிவிடும் அபாயம் உள்ளது.
2018-இல் தமிழ்நாடு புதிய தொழில் தொடக்கம் மற்றும் புதுமைக்கான இயக்கம் (Tamil Nadu Startup and Innovation Mission- TANSIM) என்ற அமைப்பை 2018இல் தமிழக அரசு ஏற்படுத்தியது. மதுரையைச் சேர்ந்த சமூக தொழில்முனைவோரான சிவராஜா ராமநாதன் இதன் முதல் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்த ஜனவரி முதல் வாரத்தில் அவர் பொறுப்பேற்கிறார்.
ராமநாதனின் நேட்டிவ் லீட் ஃபவுண்டேஷன், தமிழகத்தில் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் ஸ்டார்ட் அப் தொழில் கலாச்சாரத்தையும் புதுமைகளையும் மேம்படுத்தும் நோக்கில் செயல்படுகிறது. இளம் தொழில் முனைவோரை வளர்த்து முன்னெடுப்பதில் அவருக்கு 25 ஆண்டு கால அனுபவம் உள்ளது. தமிழ்நாட்டில் ஸ்டார்ட் அப் தொழில் கலாச்சாரம் குறித்தும் அடைய விரும்பும் இலக்குகள் குறித்தும் டான்சிம் தலைமை செயல் அதிகாரி சிவராஜா ராமநாதனிடம் இன்மதி நடத்திய உரையாடல் வருமாறு:
கேள்வி: ஸ்டார்ட் அப் தொழில் என்பதை எப்படி நீங்கள் வரையறுக்கிறீர்கள்?
சிவராஜா ராமநாதன்: ஸ்டார்ட் அப் என்பது ஒரு தொழிலை உச்சிக்கு கொண்டு செல்வதற்கான யோசனையாகும். நவீன தொழில்நுட்பம் மற்றும் புதுமையான செயல்பாடுகள் மூலம் வளர்ச்சியை எட்டமுடியும். இது ஒரு புது யுக கலாச்சாரம்.விவசாயம் மற்றும் உற்பத்தித்துறையில் வழக்கமாக நாம் செயல்படுவதிலிருந்து மாறுபாட்டு அறிவுசார்ந்த தொழில் நிறுவனங்களாகச் செயல்படுவதாகும். இது புதிய தொழில் புரட்சியாக இருக்கப் போகிறது. இந்த புதிய ஸ்டார்ட் அப் தொழில் கலாசாரத்தை தமிழகத்தில் நாம் வளர்க்க வேண்டும்.
கேள்வி: தமிழகத்தில் ஸ்டார்ட் அப் கலாச்சாரத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
சிவராஜா ராமநாதன்: தமிழகத்தில் இப்போதுதான் ஸ்டார்ட் அப் தொழில் தலையெடுக்கத் தொடங்கியுள்ளது. பெங்களூர் ஏற்கெனவே ஸ்டார்ட் அப் கேந்திரமாக மாறிவிட்டது. ஏனெனில் அங்கு தகவல் தொழில்நுட்பம் சார்ந்த அடிப்படை கட்டமைப்பு வசதிகள் அங்கு முன்னரே வந்துவிட்டன. தில்லியில் தேசியத் தலைநகர மண்டலப் பகுதி, மும்பை மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்கள் நம்மைவிட முன்னிலையில் உள்ளன.
கேரளம் தொழில்துறைக்கு உகந்ததாக இல்லை என்றாலும், ஸ்டார்ட் அப் தொழில் கலாசாரத்தை தீவிரமாக ஆதரிக்கத் தொடங்கிவிட்டது. சென்னையிலும் கோயம்புத்தூரிலும் ஸ்டார்ட் அப் தொழில்கள் தொடங்கிவிட்டன என்றாலும் மாநில அளவில் அது இன்னும் சூடுபிடிக்கவில்லை.
கேள்வி: தமிழகத்தில் ஸ்டார்ட் அப் கலாசாரம் வேகமாக வேரூன்ற வேண்டுமானால் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் எவை?
சிவராஜா ராமநாதன்: முதலாவதாக நாம் தொழில்களில் ரிஸ்க் எடுக்க விரும்புவதில்லை. இப்போது நமது யோசனைகளைச் செயல்படுத்த பல வழிகள் உள்ளன. ஒருவர் தனது யோசனைகளை சரியாகச் செயல்படுத்தினால் ‘ரிஸ்க்’ அளவை குறைத்துவிட முடியும். சென்னை, கோயம்புத்தூர் தவிர மற்ற இடங்களில் ஸ்டார்ட் அப் தொழில் குறித்த விழிப்புணர்வு மிகவும் குறைவாக உள்ளது. விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான சரியான வழிகாட்டுதல்கள் இல்லை. புதிதாக தொழில் தொடங்குபவர்களையும், தொழில் முதலீட்டார்களையும் நாம் இணைக்க வேண்டும். புதிய தொழில் நிறுவனங்களின் தயாரிப்புகள், சேவைகளை சந்தைப்படுத்த இணைப்பு வசதிகள் தேவை. இதற்கு நாம் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் செயல்படும் நிபுணர்களை அழைத்து அவர்களின் யோசனைகளின் பேரில் செயல்பட வேண்டும். இப்படி பல விஷயங்கள் உள்ளன.
கேள்வி: நமது மாநிலத்தில் ஸ்டார்ட் அப் கலாச்சாரத்தை புகுத்த பிரகாசமான வாய்ப்புகள் உள்ளனவா?
சிவராஜா ராமநாதன்: கல்வியில் நாம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளோம். நாட்டில் உள்ள 100 முன்னணி கல்வி நிறுவனங்களில், 35 கல்வி நிறுவனங்கள் தமிழகத்தில் உள்ளன. புதுமை சார்ந்த தொழில் தொடக்க கலாச்சாரத்துக்குத் தேவையான அறிவுசார் தளம் நம்மிடம் உள்ளது. சமூகத்தை அதிகாரமிக்கவர்களாக்குவதுடன் பெண்களை அதிகாரமிக்கவர்களாக்குவர்களாக்குவதில் நாம் முன்னிலையில் உள்ளோம். இவை ஊக்கமளிப்பதாக இருக்கிறது. சமூக நீதி என்று பார்க்கும்போது தமிழகமும் கேரளமும் குறிப்பிடத்தக்க சாதனைகளை படைத்துள்ளது. இதற்காக ஆட்சியாளர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். மற்றொரு முக்கியமான அம்சம், தொழில் துறையில் முதிர்ச்சிடைந்து இருப்பதுதான்.
தகவல் தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சி அடைந்தபோது, நாம் சில தொழில்களை இழந்துவிட்டோம். ஏனெனில் அது பெரும் வருவாய் ஈட்டும் துறையாக இருந்தது. பலரும் தொழில் முனைவோர் ஆவதைவிட வேலைக்குச் செல்வதற்கே முன்னுரிமை கொடுத்தனர். வலுவான தொழில்முனையும் அமைப்பை உருவாக்கும் வகையில் சேவைத்துறையிலிருந்து தகவல் தொழில்நுட்ப பொருள்கள் தயாரிக்கும் தொழிலுக்கு மாறும்படி இளைஞர்களுக்கு யோசனைகூறி அறிவுறுத்த வேண்டியதுள்ளது.
சென்னை, கோயம்புத்தூர் தவிர மற்ற இடங்களில் ஸ்டார்ட் அப் தொழில் குறித்த விழிப்புணர்வு மிகவும் குறைவாக உள்ளது. விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான சரியான வழிகாட்டுதல்கள் இல்லை. புதிதாக தொழில் தொடங்குபவர்களையும், தொழில் முதலீட்டார்களையும் நாம் இணைக்க வேண்டும்.
கேள்வி: ஸ்டார்ட் அப் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கு உங்கள் திட்டங்கள் என்ன?
சிவராஜா ராமநாதன்: விரிவாகச் சொல்ல வேண்டுமானால், இதை அடைய மூன்று முதல் நான்கு அடுக்கு நிலைகளில் வேலைகள் செய்ய வேண்டும். முதல் கட்டமாக சிந்தனைக் களம் உருவாக்க வேண்டும். இது நிபுணர்கள் மற்றும் தொழில்முனைவோர் யோசனைகளையும் சாத்தியக்கூறுகளையும் ஆராய்வதற்கான மேடையாகும். அடுத்து வர்த்தகத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான ஆராய்ச்சி, செயல்திட்டத்தை உருவாக்குவது. அதன் பிறகு கருத்துகளை அறிந்துகொண்டு முடிவுகளை பகுப்பாய்வு செய்வது.
தகவல் தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சி அடைந்தபோது, நாம் சில தொழில்களை இழந்துவிட்டோம். ஏனெனில் அது பெரும் வருவாய் ஈட்டும் துறையாக இருந்தது. பலரும் தொழில் முனைவோர் ஆவதைவிட வேலைக்குச் செல்வதற்கே முன்னுரிமை கொடுத்தனர்
கேள்வி: உங்களின் சிறப்பு கவனம் என்னவாக இருக்கும் அல்லது எப்படி வித்தியாசமாகச் செயல்படப்போகிறீர்கள்?
சிவராஜா ராமநாதன்: எனது கவனம் அனைத்தையும் உள்ளடக்கிய பெருமளவிலான தொழில்முனைவை உருவாக்குவது. ஸ்டார்ட் அப் கலாச்சாரம் சென்னை அல்லது கோயம்புத்தூருடன் நின்றுவிடக்கூடாது. அது அனைத்து இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களுக்கும் பரவ வேண்டும். கல்வி நிறுவனங்களில் உள்ள தொழில் திறன் வளர்ப்பு மையங்கள் சிறப்பாகச் செயல்பட வேண்டும்.
எங்களிடம் போதுமான முதலீட்டாளர்கள் உள்ளனர். தொழில் தொடங்குவதற்கான யோசனைகளை சரியாகக் கண்டறிவது சவாலாக உள்ளது. இதற்கு தீர்வு காண்பதில் நாம் முதலில் கவனம் செலுத்த வேண்டும்.
Read in : English