Read in : English

நூலகம் என்பது, பொது அமைப்பு, நிறுவனம் அல்லது தனி நபரால் உருவாக்கி பேணப்படும் தகவல் மூலகங்களின் சேமிப்பு நிலையம். அறிவை வளர்க்கும் நுால்களின் கூடல். மரபு வழி நோக்கில் அறிவின் கிடங்கு எனலாம்.

தகவல் மூலகங்களை, சொந்தமாக வாங்க விரும்பாத அல்லது வாங்க முடியாதவர்கள் ஆய்வுகளுக்கு, நுாலகங்களை தொழில் முறையில் பயன்படுத்துகின்றனர். செலவின்றி அறிவை வளர்க்க விரும்புவோர் பொது நுாலகங்ளை பயன்படுத்துகின்றனர்.

இப்போது, கணினி மற்றும் இணைய தொழில் நுட்ப வளர்ச்சியால் நுாலக பயன்பாடு, முன்னேறிய நிலையில் உள்ளது. நுால்கள் தவிரத் தகவல் சேமித்துள்ள பிற ஊடகங்களையும் பயன்படுத்தும் தொழில் நுட்பம் வளர்ந்துள்ளது. இதுவும் நூலகங்களின் ஒரு பகுதியாகிவிட்டது.

நுண்படலம் (microfiche), நுண்சுருள்தகடு (microfilm), ஒலிநாடா, குறுவட்டு, ஒலிப்பேழை, ஒளிப்பேழை என பலவற்றிலும் பதியப்பட்ட படங்கள், ஆவணங்கள், ஓவியங்களை சேமித்து பயன்படுத்தும் இடங்களாகவும் மாறியுள்ளன.

நவீன நுாலக செயல்பாடு டிஜிட்டல் வடிவத்துக்கு மாறியுள்ளது. மூலகங்களிலிருந்து, பலவகை வடிவ தகவல்களை தடையின்றிப் பெறும் வகையில் திகழ்கிறது. தகவல் தேடுவோருக்கு உதவும் வகையில், தேவை அறிந்து விளக்கமளிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்களின் சேவையும் கிடைக்கிறது.

சில ஆயிரம் ஆண்டுகள் பழமை கொண்டது நுாலக வரலாறு. பழங்காலத்தில் மெசப்பட்டோமியாவில் வாழ்ந்த மக்கள் களிமண் தகடுகளில் தகவல்களை எழுதினர். அவற்றை சூளைகளில் சுட்டு, கோவில் மற்றும் அரண்மனைகளில் பாதுகாத்தனர். இவை தனித்தனி ஏடுகளாகத் துறை வாரியாகப் பிரித்து பேணப்பட்டு வந்தன.
இதுவே நுாலகத் தோற்றத்தின் முன்னோடி எனக் கூறப்படுகிறது.
எகிப்தியர், பாப்பிரசுத் தாளில் எழுதத் தொடங்கிய பின், கி.மு.300ம் ஆண்டளவில் அலக்சாண்டிரியாவில், பல ஆயிரம் பாப்பிரசு உருளைகள் கொண்ட கருவூலம் அமைக்கப்பட்டது. நவீன நுாலகங்களின் முன் மாதிரியாக கொள்ளத்தக்கது.

ரோமானியர் காலத்தில் ஜூலியஸ் சீசர் வசதிபடைத்தவர்களிடம் உதவி பெற்று பொதுநூலகங்களை அமைத்ததாக வரலாற்று சுவடுகள் உள்ளன. கி.மு.4ம் நுாற்றாண்டில் 28 பொது நுாலகங்கள் நிறுவப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. பின், ஐரோப்பாவில் பிரான்ஸ் பல்கலைக்கழகங்களில் நுாலகங்கள் நிறுவப்பட்டன. ஐரோப்பிய நாடான இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், கி.பி.1400ல் நிறுவிய, போட்லியின் என்ற நுாலகமே உலகில் மிகப்பெரிய பல்கலைக்கழக நுாலகமாக திகழ்கிறது.

பொது நுாலகங்களை நிறுவுவதற்கான சட்டம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில், 1850ல் நிறைவேற்றப்பட்டது. அது முதல் நுாலகங்கள் வளர்ச்சி பெறத் தொடங்கின. இந்தியாவிலும் பல நிலைகளில் நுாலகங்கள் வளர்ச்சி அடைந்து வருகின்றன. அரசு, அறக்கட்டளை, நிறுவனம் சார்ந்து வளர்ந்தாலும், தனி நபர்களின் அயராத உழைப்பில் உருவான நுாலகங்கள் பலவும் பெரும் சேவையாற்றி வருகின்றன.

அறிவை பெருக்கவும், ஆய்வுகளுக்கு தகவல் உதவி செய்வதிலும் பெரும் சேவையாற்றி வருகின்றன.

சென்னையில், ரோஜாமுத்தையா, பேராசிரியர் அரசு உருவாக்கிய நுாலகம், புதுக்கோட்டையில் ஞானாலயா, சென்னை அருகே ஊரப்பாக்கத்தில் பத்திரிகையாளர் பூபதி உருவாக்கியுள்ள ஆவண நுாலகம் என, தனி நபர் உழைப்பால் உருவானவை தமிழகம் எங்கும் உள்ளன. அறிவை பெருக்கவும், ஆய்வுகளுக்கு தகவல் உதவி செய்வதிலும் பெரும் சேவையாற்றி வருகின்றன.

இவை தவிர, கிராமப்புறங்களில் எந்த பின்புலமும் இன்றி சுயஆர்வத்தால் உருவாக்கப்பட்ட, தனிநபர் நுாலகங்கள் தமிழகத்தில் பல இடங்களில் அறிவு பரப்பு மையங்களாக செயல்பட்டு வருகின்றன. அவற்றின் நுால் சேமிப்பும், சேவைகளும் மிக உயர்வானவை. தன்னலமற்ற சேவையை செய்து வருகின்றன. இந்த பணி போற்றத்தகுந்த முயற்சியாக உள்ளது.

அப்படிப்பட்ட நுாலகம் ஒன்று, நாகப்பட்டினம் மாவட்டம், மறைக்காடு என்ற வேதாரண்யம் அருகே கருப்பம்புலம் கிராமத்தில் அமைந்துள்ளது. அரசு பள்ளியில், தமிழாசிரியராக பணிபுரியும் பாலாஜி இதை உருவாக்கியுள்ளார். ஆய்வுகளுக்கு உதவும் வகையில் குறிப்பு உதவி நுால்களையும், சாதாரண மக்கள், அறிவு பெற ஏற்றவகையில் வாசிப்பு நுால்களையும் கொண்டுள்ளது இந்த நுாலகம்.

திருக்குறளில் மட்டும், 500க்கும் அதிகமான பதிப்புகள் சேகரிக்கப்பட்டு உள்ளனபதிப்பில் இல்லாத அரிய பல தமிழ் நுால்கள் சேமிப்பாக உள்ளனசோவியத் ரஷ்யாவில் வெளியிடப்பட்ட தமிழ்நுால்களில் பெரும்பாலானவை இந்த நுாலக சேகரிப்பில் உள்ளன.

இது, 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நுால்களை கொண்டுள்ளது.
திருக்குறளில் அனைத்து பதிப்பு நுால்கள் மற்றும் உரை நுால்களும் உள்ளன. திருக்குறளில் மட்டும், 500க்கும் அதிகமான பதிப்புகள் சேகரிக்கப்பட்டு உள்ளன. பதிப்பில் இல்லாத அரிய பல தமிழ் நுால்கள் சேமிப்பாக உள்ளன. சோவியத் ரஷ்யாவில் வெளியிடப்பட்ட தமிழ்நுால்களில் பெரும்பாலானவை இந்த நுாலக சேகரிப்பில் உள்ளன.

சுப்ரமணிய பாரதியின் நுால்கள், ராமாயணம் தொடர்பாக வெளிவந்த தமிழ் பதிப்புகள், சிலப்பதிகாரம் தொடர்பான பதிப்புகள் உரை நுால்கள் என, பதிப்புகள் அனைத்தையும் இந்த நுாலகம் கொண்டுள்ளது. இது, ஒப்பிட்டு ஆய்வு செய்வோருக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

நவீன அறிவுக் களஞ்சியங்களும், பல மொழி நுால்களும் பராமரிக்கப்படுகின்றன. பிரமிக்கத் தக்க வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. எந்த சுணக்கமுமின்றி முறையாக பராமரிக்கப்படுகிறது. எப்போதும் பயன்படுத்த ஏற்ற வகையில், வீட்டின் மாடியில் தனி அறைகள் அமைத்து, சுத்தமாக பேணப்படுகிறது. குறிப்புதவி நுால்களை, பதிவேட்டில் பதிந்து எடுத்து செல்லவும் அனுமதி உண்டு.

மாணவ, மாணவியர் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்துவதற்காக, பள்ளிகளில் வாசிப்பு தொடர்பான செயல்முறை அரங்குகளையும் நடத்துகிறார் பாலாஜி. அவற்றில், பிரபல எழுத்தாளர்களை பேச வைக்கிறார்.


மாணவ, மாணவியர் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்துவதற்காக, பள்ளிகளில் வாசிப்பு தொடர்பான செயல்முறை அரங்குகளையும் நடத்துகிறார் பாலாஜி. அவற்றில், பிரபல எழுத்தாளர்களை பேச வைக்கிறார். இந்த பரப்புரை மூலம், நுாலறிவு மேம்படும் வாய்ப்பு ஏற்படுகிறது.

இதை உருவாக்கியது குறித்து பாலாஜி கூறியாதவது:
சிறுவனாக இருந்த போதே, படிக்கும் ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. காமிக்ஸ் புத்தகத்தில் இருந்து என் வாசிப்பு துவங்கியது. வாசித்த நுால்களை பராமரிக்கும் பழக்கமும் அப்போதே ஏற்பட்டது. ஆரம்ப காலத்தில் சேகரித்து வைத்திருந்த புத்தகங்களை, நுாலகங்களுக்கு கொடையாக கொடுத்துவிட்டேன்.

பின், சேமித்து மறுவாசிப்புக்கு பயன்படுத்தும் ஆர்வம் ஏற்பட்டது. அது முதல், படிக்கும் புத்தகங்களை எல்லாம் வீட்டிலே சேமிக்க ஆரம்பித்தேன். அவை பல்கி பெருகின. அவற்றை பார்த்ததும் மலைப்பு ஏற்பட்டது. நுாலகமாக வடிவமைத்து, பலருக்கும் பயன்படும் வகையில் அமைய வேண்டும் என விரும்பினேன்.

வீட்டு நுாலக மாதிரிகளை தேடி, சூழலுக்கு ஏற்ப வடிவமைத்தேன்.
வீட்டின் மாடியை முறையாக பயன்படுத்த முடிவு செய்தேன். அதற்கு ஏற்றவாறு அறைகளை வடிவமைத்தேன். புத்தகங்களை சுலபமாக பயன்படுத்த ஏற்ற வகையில், அலமாரிகளை வாங்கி புத்தகங்களை அடுக்கினேன். திருப்தி ஏற்படும் வகையில் அமைந்தது.

நான் படித்த புத்தகங்கள் மட்டும் இன்றி, அரிய புத்தகங்களைத் தேடித்தேடி சேகரித்து, நுாலகத்தை ஏழிலாக்கினேன். பழைய புத்தக வியாபாரிகளைத் தேடி, அரிதான நுால்களை வாங்க முயன்றேன். வாட்ஸ் ஆப், மின்னஞ்சல் என தொடர்பியல் தொழில் நுட்பம் வளர்ந்துள்ளதால், புத்தக சேகரிப்புக்கு அலைய வேண்டியதில்லை. தமிழகம் முழுவதும் பழைய புத்தக வியாபாரிகளுடன் தொடர்பு வைத்துள்ளேன்.

அன்றாடம் புத்தகங்கள் குறித்த தகவல் மற்றும் புத்தகத்தின் அட்டை படத்தை, மெசஞ்சர் தகவலாக வியாபாரிகள் அனுப்புவர். அவற்றில் வேண்டியதை தேர்வு செய்து, ‘ஜிபே’ போன்ற நவீன பண பரிமாற்ற முறைகளை கடைபிடிப்பதால், நேர விரயம் ஏற்படுவதில்லை. இருந்த இடத்திலே உரிய நுால்களைத் தேர்வு செய்யமுடிகிறது.

நேரம் காலம் என கட்டுப்பாடு இன்றி எப்போதும் நுாலகத்தை பயன்படுத்தலாம். குறிப்புதவி நுால்களை எடுத்து சென்று படிக்க உரிய வழிமுறைகள் வகுத்துள்ளேன்.
நுாலகத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது பெரும் மகிழ்ச்சி தருகிறது. நுால்கள் கொடையளிக்கவோ, நுாலகத்தை பயன்படுத்தவோ, 97885 18219 என்ற அலைபேசியில் அழைக்கலாம், இவ்வாறு, பாலாஜி கூறினார்.

அறிவை பரப்புவதில், இது போன்ற முயற்சி, வட்டார ரீதியாக பெரும் பலனைத் தரும். தமிழக மக்களின் வாழ்க்கை தரத்திலும், அறிவுத் தேடலிலும் பெரும் மாற்றங்களை நிகழ்த்தும். நுாலகங்களே கோவில்களாக மாறும்.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival