Read in : English
’83’ திரைப்படத்தில் ஒவ்வொருவருக்குமான நிமிடங்கள் இருக்கின்றன. கீர்த்தி ஆஸாத்துக்கும், ரவி சாஸ்திரிக்கும்கூட அவர்களுக்கான புகழ் கொஞ்சம் இருக்கிறது. அந்த உலகக்கோப்பையில் சுனில் கவாஸ்கர் சொல்லிக்கொள்ளும்படியாக விளையாடவில்லை. ஆனால் அவருக்குமான ஒரு தருணம் இந்த படத்தில் இருக்கிறது. ஷேன் வார்ன் மைக் கேட்டிங்குக்கு வீசிய நூற்றாண்டின் பந்துவீச்சு என்று புகழப்படும் ஒன்றின் இந்திய வடிவமாக இருப்பது பல்விந்தர் சிங் சாந்து அந்த இறுதி ஆட்டத்தில் கார்டன் கிரீனிட்ஜிக்கு வீசிய பந்து.
83 திரைப்படத்தில், பந்தை பிடிப்பதை மறைத்துக் கொண்டால்தான் பேட்ஸ்மெனுக்கு உள்ளசைந்து வரும் பந்தைப் பற்றி முன்னெச்சரிக்கை எதுவும் கிடைக்காது என்பதைக் கவாஸ்கர், சாந்துவிற்குக் கற்றுக் கொடுக்கிறார். அதேபோன்று ஸ்ரீகாந்துக்குமான தருணங்கள் திரைப்படத்தில் உண்டு.
உலகக்கோப்பையை வென்ற அணியில் மற்றவர்களைப் போலல்லாமல் ஸ்ரீகாந்த் சிறிது வித்தியாசமானவர். கபில்தேவின் திட்டத்திற்கேற்ப அவர் விளையாடவில்லை. வேறு யாருடைய யோசனையை ஏற்று ஆடுபவர் இல்லை. தன்னுடைய போக்கில் ஆடுபவர் அவர். மற்றவர்களை போல அவர் பொருந்திவர மாட்டார்; பொருந்தி வருவதற்கும் அக்கறை கொள்ளமாட்டார்.
ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் கபில்தேவ் சிக்ஸர் அடித்துக் கொண்டிருக்கும்போது, ஸ்ரீகாந்த் கழிவறைக்கு செல்ல விரும்புவார். ஒரு விருந்தில் ஸ்ரீகாந்த் இடத்திற்கு பொருந்தாத ஒரு உரையை நிகழ்த்துவதாக படத்தில் இருக்கும். ஆனால் உரைமுடிவில் கபிலின் எழுச்சிமிக்க தலைமைப் பண்பைப் பற்றி பேசி சமாளித்துக் கொள்வார்.
படத்தில் கபில்தேவோ அல்லது மற்றவர்களோ ஸ்ரீகாந்த்திடம் விக்கெட்டை இழந்து விடாதே என்று எச்சரிக்கும்போது, ஸ்ரீகாந்த், தான் கட்டுப்படுத்தப்பட்டவர் போல உணர்கிறார். பின்பு அவர் மொகிந்தர் அமர்நாத்திடம் போய் கவாஸ்கரின் ‘டக்-டக்’ விளையாட்டைத் தன்னால் விளையாட முடியாது என்று சொல்கிறார்.
இறுதி ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வது அபாரம். “பட்டா பாக்கியம்; படாட்டி லேகியம்” என்று சொல்வார். வழக்கமாக சென்னையின் தெருக்களில் கிரிக்கெட் விளையாடும் சிறுவர்களின் போர்க்குரல் அது.
ரிச்சர்ட் ஆட்டமிழக்கும் கேட்ச்சும் 175 ரன்களும் கபில் தேவின் மிக சிறப்பான அடையாளங்கள்தான். ஆனால்,83 திரைப்படத்தில் வரும் ஸ்ரீகாந்தின் கட்டம் மிகவும் அற்புதமாக இருக்கிறது. ஸ்ரீகாந்த் இந்திய கிரிக்கெட் குழுவிற்குப் சற்று வித்தியாசமானவர்; அந்த காலகட்டத்தின் ஆட்டத்தை தாண்டி சிந்தித்தவர் எனலாம். அவரது உயரே பறக்கும் ‘லாஃப்டட் ஷாட்’ ஆட்டத்தை பின்னால்தான் இந்தியர்கள் பெரும்பாலும் பயன்படுத்த துவங்கினார்கள்.
ஸ்ரீகாந்த் இந்தியக் குழுவில் ஆகச்சிறந்த புதுமையான ஆட்டத்தை மேற்கொண்ட பேட்ஸ்மென். ஆனால் அதைச் பற்றி அவர் அதிகம் அலட்டிக் கொண்டது கிடையாது. அவரது பைத்தியக்காரத்தன வேகத்தில் ஒரு கட்டமைப்பு உள்ளது என்பதை யாரும் ஒத்துக்கொண்டது கிடையாது. இந்திய அணியில் வழக்கமாக இருக்கும் மும்பை அல்லது டில்லி ஆட்டக்காரர்களை போன்றவர் அல்ல அவர். அந்த காலகட்டத்தில் தொலைதூரச் சென்னையிலிருந்து வந்தவராக இருந்தார் ஸ்ரீகாந்த்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் அந்த புகழ்பெற்ற நால்வரை (பந்து வீச்சாளர்களை) ஸ்ரீகாந்த்தை போன்று துவம்சம் செய்த இந்திய ஆட்டக்காரர்கள் இருக்கமாட்டார்கள். அதுவரை எந்த இந்தியரும் அப்படிச் செய்ய நினைத்ததில்லை; அவர் செய்த விஷயம் எந்த இந்திய பேட்ஸ்மேனும் செய்யாத ஒன்று. அந்த உலகக்கோப்பை தோல்விக்கு பழிவாங்குவதை போன்று வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்கு ஆட வந்தபோது, எல்லோருடைய முன்மாதிரியான ஆட்டக்காரர் என்று சொல்லப்படும் சுனில் கவாஸ்கர் தன்னுடைய வழக்கமான தடுப்பாட்டத்திற்கு பதில், ஸ்ரீகாந்தின் அதிரடி ஆட்டத்தை நகலெடுத்து அந்த நால்வரின் பந்துவீச்சை எதிர்கொண்டதை இங்கே குறிப்பிடலாம்.
83 திரைப்படத்தை எடுத்தவர்களால் தமிழனான ஸ்ரீகாந்தை கிண்டல் பண்ணாமல் இருக்க முடியவில்லை. ஒரு குடும்பம் ஸ்ரீகாந்த்தை மாப்பிள்ளை கேட்டு வரும்போது அந்தப் பெண் சிறிது நிறம் மட்டுப்பட்ட பெண்ணாகத்தான் ஏகப்பட்ட நகை அணிந்து காணப்படுவாள். தமிழ்ப் பெண்ணாம்!
ஸ்ரீகாந்தினால் ஒரு ட்ரெண்டை உருவாக்க முடியும்; ட்ரெண்டாக மாறவும் முடியும். ஆனால் அதைப் பற்றிய பிரக்ஞை அவருக்கு இருந்ததில்லை. தான் என்னவொரு தாக்கத்தை ஏற்படுத்துகிறோம் என்ற உணர்வு அவரிடம் இல்லை. பிரார்த்தனை செய்தவாறே சூரியக்கடவுளைப் பார்ப்பார், உதவிகேட்டு.
அடுத்த பந்து எப்படி வேண்டுமானாலும் போகலாம்; சிக்ஸராகலாம்; அல்லது அவர் ஆட்டமிழக்கலாம். அது எல்லாம் கடவுள்களைச் சார்ந்தது அல்லது ஸ்ரீகாந்த் என்னும் ஆட்டக்காரரை சார்ந்தது. பந்து வீச்சாளர்களை சார்ந்தது அல்ல.
பெரும்பாலும் கவாஸ்கரோடுதான் தன் ஓப்பனிங்கை ஸ்ரீகாந்த் ஆரம்பித்திருக்கிறார். ஆனால் கவாஸ்கர் அவர் மீது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. சரியான பாவனை, மட்டையை பின்னுக்கு அசைத்தல், பந்தை அவதானித்தல், ஆரம்பக்கட்டப் பாதுகாப்பான அசைவுகள், கடைசி நிமிடத்துத் தாக்குதல் என்று கவாஸ்கரின் எந்த அம்சங்களும் ஒரு துளிகூட ஸ்ரீகாந்திடம் பிரதிபலித்தது இல்லை.
83 திரைப்படத்தை எடுத்தவர்களால் தமிழனான ஸ்ரீகாந்தை கிண்டல் பண்ணாமல் இருக்க முடியவில்லை. ஒரு குடும்பம் ஸ்ரீகாந்த்தை மாப்பிள்ளை கேட்டு வரும்போது அந்தப் பெண் சிறிது நிறம் மட்டுப்பட்ட பெண்ணாகத்தான் ஏகப்பட்ட நகை அணிந்து காணப்படுவாள். தமிழ்ப் பெண்ணாம்!
ஆம். தமிழர்களாகிய நாங்கள் கறுப்புதான். நீங்கள் எங்களை ‘காஃபி’ என்கிறீர்கள். நாங்கள் இந்தி பேசவில்லை என்பதால் நீங்கள் எங்களை சற்று குறைவான இந்தியர்கள் என்கிறீர்கள். அதனால் நாங்கள் துரோகத்தின் விளிம்பில் நிற்பதாகக்கூட நீங்கள் நினைக்கலாம். ஆனால் நாங்கள் அப்படி அல்ல.
நீங்கள் எங்கள் மொழியைக் கற்கவேண்டுமே ஒழிய நாங்கள் உங்கள் மொழியைக் கற்க வேண்டாம் என்று நினைக்கிறோம். உங்களைப் போலவே நாங்களும் இந்தியர்கள்தான்; சொல்லப்போனால் ஒருவேளை அதிகமாகவே இருக்கிறோம். எங்களுக்கு தேசபக்த சான்றிதழ் கொடுப்பதற்கு உங்களுக்கு உரிமை இல்லை. அந்த அதிகாரத்தை நாங்கள் ஒருபோதும் உங்களுக்குக் கொடுக்கவில்லை.
எங்கள் திரைப்படங்கள் வித்தியாசமானவை. எங்கள் மொழியின் வரிவடிவம் உங்களுக்கு ஜிலேபியை ஞாபகப்படுத்துகிறது. எங்கள் அரசியலும் வித்தியாசமானது. நீங்கள் இந்திரா காந்தியைத் தோற்கடித்தபோது, நாங்கள் அவருக்கு ஓட்டுப் போட்டோம். நீங்கள் மோடி அலையில் இருந்தபோது நாங்கள் அவரைப் பரிகசித்து கொண்டிருந்தோம். தமிழ்நாட்டில் மோடி கலந்துகொள்ளும் பொதுக்கூட்டங்களை கவனியுங்கள். வாடகைக்குக் கூட்
எங்கள் தோற்றம் வித்தியாசமானது; நாங்கள் வித்தியாசமாக சிந்திக்கிறோம். எங்கள் முன்னேற்றப்பாதை வித்தியாசமானது; மிகவும் மேம்பட்டது. நீங்கள் மத்திய அரசின் ஆதரவைச் சார்ந்திருக்கும்போது, நாங்கள் எங்களின் சொந்த சக்தியாலே முன்னோக்கிப் போகிறோம்.
பல காலம் கடந்த பின்புதான், ஸ்ரீகாந்த் கிரிக்கெட் குழுவின் முக்கிய அங்கத்தினர் ஆனார்; பின்பு இந்திய கிரிக்கெட் அமைப்புக்குள் நுழைந்தார். நீங்கள் அவரை ஏற்றுக் கொண்டு அவரை வளரவிட வேண்டியதாயிற்று. அவரை கேப்டன் ஆக்க வேண்டியதாயிற்று. அதனால் கிரிக்கெட் மைதான அரங்கில் உடை மாற்றும் அறையின் மொழியை இந்தியிலிருந்து ஆங்கிலத்திற்கு மாற்ற வேண்டியதாயிற்று. ஆனால் அவர் தனது குணபாவத்தின்படி, பாகிஸ்தானில் வெற்றிகரமாய் ஆடிய பின்பு, கிரிக்கெட் போர்டிடம் சண்டை போட்டார். பின்பு காப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். ஆனால் ஸ்ரீகாந்த் தேர்வாளராகத் திரும்பிவந்தார்.
அதீத தேசியவாதத்தில் மூழ்கி 83 போன்ற திரைப்படங்களை நீங்கள் எடுக்கலாம். ஆனால் நாங்கள் உங்கள் வழிக்கு வரமாட்டோம். உங்களின் தேசியவாத வி்ளையாட்டை விளையாடமாட்டோம்.
சுனில் கவாஸ்கருக்குக் கற்றுக்கொடுக்க ஸ்ரீகாந்திடம் ஏதோவொன்று இருந்ததுபோலவே, நாங்களும் உங்களுக்கு வழிகாட்ட முடியும். எங்களால் உங்களை உயரத்திற்குக் கூட்டிச் செல்ல முடியும். ஆனால் உங்கள் விளையாட்டை நாங்கள் விளையாட மாட்டோம். ஸ்ரீகாந்தும் உங்கள் விளையாட்டை விளையாடவில்லை. அவர் தனது சொந்த விளையாட்டை வி்ளையாடினார். நீங்கள் அவரை ஏற்றுக்கொள்ள வைத்தார்.
அதீத தேசியவாதத்தில் மூழ்கி 83 போன்ற திரைப்படங்களை நீங்கள் எடுக்கலாம். ஆனால் நாங்கள் உங்கள் வழிக்கு வரமாட்டோம். உங்களின் தேசியவாத வி்ளையாட்டை விளையாடமாட்டோம். 83 படத்தில் ஸ்ரீகாந்தைச் சேர்ப்பதைத் தவிர வேறுவழி இல்லை உங்களுக்கு. அதைப்போலவே நீங்கள் எங்களோடு பயணிக்க வேண்டும். நீங்கள் எங்களைச் சேர்த்துக் கொண்டால், நாங்கள் உங்களுக்குச் சில விஷயங்கள் கற்றுக்கொடுப்போம். உங்களுக்கு வழியும் காட்டுவோம்.
Read in : English