Read in : English

ஒரு தொழிலின் இருத்தலுக்கு இலாபம் என்பது ஆதாரக் காரணங்களில் ஒன்றுதான். எனினும் அதைச் சாதிக்கும் முறையில் நோக்கம் என்பதும் ஆதாரச்சுருதியாக இருக்க வேண்டும். மூலக்காரணத்தை ஆராய்வதும், ஒவ்வொரு செயலிலும் நோக்கத்தைக் கொண்டிருப்பதும் தொழில் வளர்ச்சிக்கு உதவும்.

அதைப்போல, தொழில்நடத்தும் முறைகளுக்குச் சவால் ஏற்படுவதும் வேகமான வளர்ச்சிக்கு உதவும்..
ஆதலால் பின்வரும் வினாக்களுக்கு விடைகள் தேடிக்கொள்வது அவசியம்:

•தொழிலின் நோக்கம் என்ன?
•முக்கியமான தொழில் விழுமியங்கள் என்ன?
•தொழிலின் தொலைநோக்குப் பார்வை என்ன?
•இலட்சிய வாசகம் என்ன?
•தொழிலின் குறிக்கோள்கள் என்ன?

இவற்றை எல்லாம் தெளிவாகக் கொண்டிருக்கும் ஒரு தொழில் தான் பயணிக்க வேண்டிய திசையைப் பற்றிய ஒரு நல்ல பிரக்ஞை உணர்வைக் கொண்டிருக்கும். அவற்றைச் சாதிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து நல்ல நிதி வளர்ச்சியை அந்தத் தொழில் அடையும்.

எழுத்தாளர் சைமன் சைனக் சொல்கிறார்: “நீங்கள் எதைச் செய்கிறீர்களோ அதை அல்ல மக்கள் ஏற்றுக்கொள்வது, அதை ஏன் நீங்கள் செய்கிறீர்கள் என்பதைத்தான் அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.”

ஆதலால் தொலைநோக்கு, செயல்திறன் ஆகியவற்றைப் பற்றிய வாசகங்களை வரையறுத்துக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம்.

பெரிய நிறுவனங்களை அவதானித்தீர்கள் என்றால், அவற்றில் பெரும்பாலான வெற்றிகரமான நிறுவனங்கள் ஒரு தெளிவைக் கொண்டிருக்கும்; ஒரு நோக்கத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும். உதாரணமாக, கெல்லோக் நிறுவனத்தின் இலட்சிய முழக்கம் இதுதான்: “குடும்பங்களைப் பேணிக் காப்பதுதான் எங்கள் நோக்கம்; அதனால் அவை வளர முடியும்; செழிக்க முடியும்.”

நைக் நிறுவனத்தின் இலட்சிய வாசகம்: “உலகத்தில் உள்ள ஒவ்வொரு விளையாட்டு வீரர்க்கும் புத்தெழுச்சியை, புதுமையைக் கொணர்வது. உங்களுக்கு உடல் என்று ஒன்று இருந்தால், நீங்கள் ஒரு விளையாட்டு வீரர்.”

கூகுளின் பணி முழக்கம்: ”எங்கள் நிறுவனத்தின் இலட்சியம் உலகத்தில் உள்ள அனைத்து தகவல்களையும் திரட்டி அனைவருக்கும் அவற்றைக் கொண்டு சேர்ப்பதும், உபயோகமாக்குவதும்.”

இந்த மாதிரியான முழக்கங்கள் இன்னும் சிறியதாக, நறுக்குத் தெறித்தாற் போல் இருந்தால் செய்தி இன்னும் வலிதாக சென்றடையும். உதாரணமாக, ’டெட்’ நிறுவனத்தின் சுருக்கமான வாசகம் இது: ‘கருத்துக்களைப் பரப்பு.”

ஒரு நல்ல இலட்சிய வாசகத்தின் மூலக்கூறுகள் பின்வருமாறு:
  • வாடிக்கையாளரோடு தொடர்பில் இருப்பது
  • உங்கள் மக்களுக்கான நோக்கம்
  • உங்கள் இயக்கங்களை நோக்கிய சார்பு

வாடிக்கையாளருக்குக் கிடைக்கும் அனுபவம், பொருள் வழங்குவோரிடம் மீதான மனப்பான்மை, ஊழியர்களை நடத்தும் விதம் போன்றவற்றில் ஒரு தொழில் நிறுவனம் நடந்துகொள்ளும் அடிப்படை நடத்தையை விழுமியங்கள் வரையறுக்கலாம். தர்மம், நேர்மை, புதுமை, கூட்டுணர்வு போன்ற முக்கியமான அம்சங்களும் அதில் அடங்கும்.

இலாபத்திற்காக உங்களது தொழில் விழுமியங்களைச் சமரசம் செய்து கொள்ளுமா? இந்தக் கேள்விக்கான விடையை உங்களது அணியில் உள்ள எல்லா அங்கத்தினர்களுக்கும் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களும் உங்களது மனப்பான்மையைக் கொண்டிருக்க முடியும்.

ஒரு நிறுவனத்தில் காகிதத்தில் எழுதப்பட்டிருக்கும் விழுமியங்களும், நடைமுறையில் இருக்கும் விழுமியங்களும் முரண்படக்கூடிய சந்தர்ப்பங்களும் உண்டு. உங்கள் தொழிலில் எப்படி?

வியூகத்தின் நான்கு தூண்கள்,தொழிலுக்கான ஒரு பலமான வியூகத்தைக் கட்டமைக்க, பின்வரும் நான்கு அடிப்படை அளவுகோல்களைத் தூண்களாகக் கொள்வது உசிதம்:

1. நோக்கம் – உங்கள் தொழிலின் நோக்கத்தை அறிந்துகொள்வது; தொழிலின் இலட்சியங்களுக்கேற்ப உங்கள் வியூகத்தைக் கட்டமைத்துக் கொள்வது.

2. திட்டம் – நோக்கத்திற்குத் தகுந்தவாறு உங்கள் தொழில் திட்டங்களை குழுவை ஈடுபடுத்தி ஆழமான சிந்தனையோடு தகவமைத்துக் கொள்வது.

3. தன்முனைப்பு – திட்டமிட்ட வியூகம் தன்முனைப்புத் தன்மையோடு இருக்கும்போது, தொழிலில் நேரும் சவாலான நிகழ்வுகளின் சாத்தியத்தைத் தொடர்ந்து அது குறைத்துவிடும்.

4. முன்னுரிமை கொடுத்தல்: உங்கள் தொழிலின்
முக்கியமான அம்சங்களுக்கு சரியான முன்னுரிமை கொடுத்தால், வியூகத்தை நிறைவேற்றுவதற்கான சிறந்த தொழில் பார்வைகளைத் தருவதற்கு அது உதவும்.

 

மேலே குறிப்பிடப்பட்ட கட்டுரையின் தகவல்கள் சங்கீதா சங்கரன் சுமேஷ்  அவர்களின் “Where is The Moolah” என்ற புத்தகத்திலிருந்து தொகுக்கப்பட்டவை.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival