Read in : English
தண்ணீர் இல்லையென்றால் மனிதனின் ஒழுக்கம் கெடும் என கூறுகிறார் திருவள்ளுவர். மேற்கு தொடர்ச்சியின் அடிவாரத்தில் அமைந்துள்ள கோவை நகரத்துக்கு தண்ணீர் குறைவு இல்லை.சிறுவாணி தண்ணீர் குடிப்பவர்கள் என்ற கர்வத்துக்கு சொந்தக்காரர்கள் அவர்கள்.
மேற்கு தொடர்ச்சி மலை தமிழக –கேரளா எல்லையில் உருவாகும் சிறுவாணியும் நொய்யலும் கோவை மக்களின் நீராதாரங்கள். சிறுவாணி ஆற்றின் நீர் ஓட்டத்திற்க்கு பெரிதும் துணையாக இருப்பது நொய்யல் ஆறாகும். மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகி கோவை மட்டுமின்றி நான்கு மாவட்டங்களில் ஓடி கொடுமுடியை அடைகிறது நொய்யல் ஆறு.
மேற்கு தொடற்சி மலையின் சிறப்பான புற்கள் மீது படியும் பனித்துளியே நீரா உருவாகி அதுவே சிறுவாணி ஆறாக ஓடிவந்தது.
பண்டைய சோழ மன்னர்கள் இந்த நதியின் வளத்தை நன்கு அறிந்திருந்தார்கள். நொய்யல் மற்றும் சிறுநதிகளின் நீரோட்டத்தை அவர்கள் சிறப்பாக பாசனத்திற்கு பயன்படுத்தினார்கள்.
கடந்த நூற்றாண்டின் அதிவேக வளர்ச்சி, நகரமயமாதல், தொழிற்வளர்ச்சி கோவை நகரை வெகுவாக மாற்றிவிட்டது.
இந்த நிலையில் கடந்த 2016- ம் ஆண்டு முதல் சிறுவாணி ஆற்றின் நீர் வரத்து குறைந்தது. அதன் ஓட்டம் ஒருகட்டத்தில் முழுவதுமாக நின்றும் போனது.
2016- ம் ஆண்டி கோவை உட்பட் திரூப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் அல்லாடி வந்தனர். 2017 ஜல்லிக்கட்டு போரட்டங்களில் அதிகப்படியான இளைஞர்கள் கலந்து கொண்ட நிலையில்,
போராட்டம் முடிவுக்கு வந்த பிறகு அவர்கள் கவனம் நகரின் குடிநீர் பிரச்சனையை நோக்கி திரும்பியது.
2000 ஆண்டுகளுக்கு முன்பே கொங்கு மண்ணை சொர்க்க பூமியாக வைத்திருந்த நொய்யல் ஆறு இப்போது ஆக்கிரமிப்பாலும் ஆற்று பாதை தடம் மாறி புதராக மண்டியிருப்பதை வரலாற்று ஆய்வாளர்கள் மூலம் அறிந்தனர் தன்னார்வ குழுவினர்.
தமிழக – கேரள எல்லையில் உருவாகி பேரூர் பகுதியில் சங்கமித்து கோவை நகரைச் சுற்றி குளங்களை நிரப்பி 5 மாவட்டங்களை கடந்து காவிரி ஆற்றில் கலக்கிறது நொய்யல் ஆறு. காவிரியில் கலக்கும் ஆற்றின் வரலாறு ஆய்வில் இருந்து எடுக்கப்பட்டதின் படி புகநுரான் வாய்க்கால் நொய்யல் ஆற்றின் அடியில் கல்லாலனா சுரங்கபாதையில் குறுக்கிடுகிறது,ஆற்றின் நீர் மேலே ஓடி கொடுமுடியில் காவிரியில் கலக்கிறது.
கோவையில் துவங்கி ஈரோடு கரூர் மாவட்டங்களில் ஒடும் ஆறு திருச்சி மாவட்ட பாசனத்தில் முக்கிய பங்காற்றி கல்லணையை அடைகிறது. சுமார் 200 கி.மீ தூரம் ஓடி 1800 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களுக்கு நீராதாரமாக விளங்கிய நொய்யல் ஆற்றின் குறுக்கே 30 க்கும் மேற்ப்பட்ட தடுப்பனைகளை கட்டினார்கள் சோழ மன்னர்கள் என கூறுகிறார் தமிழக நீர் மேலாண்மை பயிற்சி மைய முன்னாள் ஆய்வாளர் சண்முக பிரகதம் கொடுமுடி.
நொய்யல் ஆற்று பாதையை சீர் படுத்தியதும், கொடுமுடியில் சீற்றம் இல்லாமல் காவிரியில் நொய்யல் ஆறு கலக்குவது பண்டைய தமிழகத்தின் நீர் மேலாண்மையில் நடந்த மிகப்பெரிய சாதனை என கூறுகிறார் வரலாற்று ஆய்வாளர்.
கடந்த 200 ஆண்டுகளில் கோவை, திரூப்பூர், கரூர் மாவட்டங்களில் ஏற்பட்ட தொழில் நிறுவனங்களின் ஆக்கிரமிப்பு, நகர் விரிவாக்கம் ஆகியவற்றால் நொய்யல் நதி கழிவு நீர் நதியாக மாறியது, மேலும் சாயப்பட்டறை கழிவுகள் கலந்து முழுவதுமாக அழிந்து போனது நொய்யல் நதி. 2004 – ம் ஆண்டுக்கு பிறகு சாயப்பட்டறை கழிவுகள் கலப்பதை தடுக்க நடந்த போரட்டங்கள், நீதிமன்ற வழக்குகள் மூலம் தீர்வும் கிடைத்தது.
சிறுதுளி அமைப்பு 2016-ம் ஆண்டு கோவையில் ஏற்பட்ட கடும் வறட்சியில் குளங்களை பராமரிக்கும் பணியை துவங்கி நகர் முழுவதும் தன்னார்வலர்களை உருவாக்கி வந்தனர். இந்த அமைப்பில் பணியாற்றிய மணிகண்டன் தனது நண்பர்களுடன் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பை 2017- ம் ஆண்டு துவங்கியுள்ளார்.
கோவை நகரில் நிலத்தடி நீர் 40 அடியில் கிடைத்தாலும் அது உவர்ப்பு நீராக குடிக்க உகந்ததாக இல்லாமல் இருந்தது. இதற்கு தீர்வை தேடி அலைந்த கோவை குள பாதுகாப்பு மைப்பினருக்கு வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் முன்ளாள் பொது பணித்துறை அதிகாரிகள் கூறியது நொய்யல் பாதையை சீர் செய்தால் மட்டுமே கோவையை மட்டுமின்றி கொங்கு மண்ணை மீட்க முடியும் என்பதே.
அதன்படி கோவை நகரை சுற்றி 800 ஏக்கருக்கும் அதிகமான அமைந்துள்ள 5 குளங்கள் மற்றும் நீர் தேக்க குட்டைகளை மீட்பது என்று முடிவெடுத்துள்ளார்கள்.
நொய்யல் ஆற்று பாதையை கண்பிடிக்க மலைவாழ் பழங்குடியின மக்களை சந்தித்து உதவி நாடியுள்ளனர். நொய்யல் ஆற்று பகுதியை யானையால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும் என்ற பழங்குடியினர் யானை வலசை ;போன பாதை முற்றிலும் ஆக்கிரமிப்புகளால் அழிந்து போனதை சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆராய்ச்சியாளர் கொடுமுடியின் ‘பண்டைய பாசன வரலாறு’ புத்தகத்தின் துணையோடு குளங்களையும் அவற்றின் நீராதாரமான நொய்யலின் பாதையும் மீட்க காலம் இறங்கினர்.
தங்களின் பணிகளின் மூலம் நகர் முழுவதும் தன்னார்வலர்களை உருவாக்க ஆரம்பித்து 35 ஆயிரத்திற்கும் அதிகமான தன்னார்வலார்களை உருவாக்கியுள்ளார்கள்.
கடந்த 200 வாரங்களில் 5 குளங்களில் சுமார் 113 டன் குப்பைகளை அகற்றியுள்ளனர் கோவை குள பாதுகாப்பு அமைப்பினர்.மேலும் 19.5 கி.மீ தூர நீர்வழி தடங்களை தூர்வாரியுள்ளனர்.400 ஏக்கர் பரப்பில் விரிந்து கடந்த சீமைவேல மரங்கள் மற்றும் புதர்களை செம்மைப்படுத்தியுள்ளார்கள்.
நொய்யல் ஆறு நகரில் ஒட ஆரம்பிக்கும் பேரூர் பகுதியின் படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் பகுதியாக சுமார் 75 ஆண்டுகளாக இருந்து, அந்த பகுதியே குப்பை மேடாக வறட்சி பகுதியாக மாறி இருந்துள்ளது.
பேரூர் படித்துறையை சீர் செய்தால் மட்டுமே ஆற்று தண்ணீர் நகருக்குள் நுழைய முடியும் என்ற நிலைமை இருந்தது.300 ஏக்கர் சுற்றளவில் இருந்த பேரூர் படித்துறையை கடந்து வெள்ளளூர் குளத்தில் 15 குப்பைகளை அகற்றியுள்ளனர்.
2019- ம் ஆண்டு பெய்த பெருமழை கோவை குள பாதுகாப்பு
அமைப்பினர் மீட்டெடுத்த குளங்களுக்கு தண்ணீரை கொண்டு வந்து சேர்த்தது.
கோவையை சுற்றி தண்ணீர் நிரம்பிய இந்த தன்னார்வலர்களை பாராட்டி மத்திய ஜலசக்தி அமைச்சகம் தண்ணிர் மனிதர்கள் என்ற பட்டயம் தந்து பாராட்டியுள்ளார்கள். தற்போது கோவை மட்டுமின்றி கொங்கு மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் அனைத்து நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன.
இதையடுத்து சோழர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட தடுப்பணைகள் தற்போது மண்ணில் புதைந்து இருந்தாலும், விரைவில் அவைகளை சீர் செய்து பண்டைய தமிழக நீர் மேலாண்மையை குறிப்பை கண்டு பிடிப்பதே முக்கிய பணி என தெரிவிக்கின்றனர் கோவை குள பாதுகாப்பு அமைப்பினர்.
Read in : English