Read in : English
விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சாந்தனும் முருகனும், விடுதலைப்புலிகள் தலைவர்கள் இந்திய அரசுக்கு எதிராகவும், இந்திய தலைவர்களுக்கு எதிராகவும் செயல்பட்டது மாபெரும் தவறு. அப்படியான தவறு நிகழ்ந்திருக்காவிட்டால், ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவு ஏற்பட்டிருக்காது என்று இருவரும் கூறினர்.
தொடர்ந்து பேசிய இருவரும், இனி வரும் காலங்களில் இலங்கை தமிழர்கள் முன்னேற வேண்டும் என்றால் ஆயுதம் தாங்கிய போராட்டம் பயன்தராது. இந்தியா மற்றும் உலக நாடுகளின் ஆதரவுடன் அரசியல் தீர்வுக்கு முயற்சி செய்வது தான் சரியான அணுகுமுறை ஆகும் என்றனர். 2011, அக்டோபரில் நடந்தப்பட்ட பிரத்யேக பேட்டியில் கூறிய சாந்தன்,’’தற்போது ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவு துரதிஷ்டவசமானது. 2009 இறுதிப்போரில் விடுதலைப் புலிகளுக்கு நேர்ந்த விளைவுகளைக் கண்டு கவலையுற்றேன். அதே போரில், விடுதலைப் புலிகள் நொறுக்கப்பட்டது குறித்து பெரும் கவலையடைந்தேன்’’ என்றார் தீராத துக்கத்துடன்.
இந்திய அரசாங்கத்துக்கு எதிராக செயல்பட்டதே விடுதலை புலிகள் இயக்கம் செய்த மிகப் பெரிய தவறு. – சாந்தன்
கடந்த காலத்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் ஏதேனும் தவறிழைத்ததா என்ற கேள்விக்கு பதிலளித்த சாந்தன், “இந்திய அரசாங்கத்துக்கு எதிராக செயல்பட்டதே விடுதலை புலிகள் இயக்கம் செய்த மிகப் பெரிய தவறு.எழுபதுகள் மற்றும் எண்பதுகளில் இந்திய அரசும் மக்களும் ஈழத் தமிழர்களுக்கு தார்மீக ஆதரவையும் நிதி உதவியும் அளித்து உறுதுணையாக இருந்துள்ளார்கள். அந்த சமயத்தில், உலக பெருஞ்சமூகம், இந்தியா சொல்வதைக் கேட்டது. அதனால் விடுதலைப் புலிகள் உலகின் பல இடங்களுக்கு சென்று ஈழத்தமிழர் விடுதலைக்காக பிரச்சாரம் செய்ய முடிந்தது.இருந்தபோதும், இந்திய அரசுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுத்தக் காரணத்தாலும் ராஜிவ் காந்தி படுகொலை நிகழ்ந்ததாலும் இந்திய மக்களின் ஆதரவையும் உலக மக்களின் ஆதரவையும் ஒருசேர நாங்கள் இழந்தோம்’’என்றார் சாந்தன்.
தொண்ணூறுகளுக்கு பிறகு, குறிப்பாக அமெரிக்காவில் 9/11 சம்பவத்துக்கு பிறகு- அதாவது, இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டதுக்கு பிறகு உலக அளவில் சூழ்நிலைகள் மாறிவிட்டன என்பதை பேரறிவாளன் ஒத்துக்கொண்டார். “எனவே எந்த நாடும் ஆயுதமேந்திய எந்த இயக்கத்துக்கும் எவ்வித ஆதரவையும் தருவதற்குத் தயாராக இல்லை’’ என்பதை பேரறிவாளன் சுட்டிக் காட்டினார்.
இந்தியாவின் மீது தங்கள் கருத்தென்ன என்ற கேள்விக்கு பதிலளித்த சாந்தன், “இது எங்கள் மூதாதையர் நிலம். இந்தியா தான் எங்களுக்கு எல்லாமுமானது. பலவழிகளில் இந்தியாவின் ஆதரவை நாங்கள் சார்ந்தே உள்ளோம். அந்த ஆதரவு மீண்டும் எங்களுக்குக் கிடைக்க வேண்டும்;அது நிகழ வேண்டும்’’ என்றார் பெரும் நம்பிக்கையுடன்.
இதுகுறித்து பேசிய முருகன், “எல்லாவற்றையும் விட இந்தியா எங்களுக்கான ஆன்மீக பூமி. எங்கள் இரு நாட்டினருக்கும் கலாச்சாரம், பண்பாடு, மொழி, வரலாற்று தொடர்பு என பல விஷயங்கள் பொதுவாக உள்ளன. முக்கியமாக, இந்தியா எங்கள் ஆன்மீக குரு. எங்கள் வாழ்வாதார பலத்தை நாங்கள் எங்கள் குருவிடமிருந்தே பெறுகிறோம். இங்குள்ள மதமும் கோயில்களுமே ஆதாரங்கள் எமக்கு. இன்றைய உலக சூழலில் , ஆயுத போராட்டம் அல்ல, அரசியல் தீர்வு தான் பலன் தரும். இன்று ஈழத்தில், தமிழர்களுக்கான சரியான தலைமை இல்லை. ஆனால் எவர் உருவாகி வந்தாலும், ஈழத்திலுள்ள தமிழர்களின் நலனுக்காகவும் எதிர்காலத்துக்காகவும் இந்தியா மற்றும் உலக நாடுகளின் ஆதரவுடன் அரசியல் தீர்வைக் காண வேண்டும்’’ என்று தீர்க்கமாகக் கூறினார் முருகன்.
ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தீர்வு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என கேட்டதற்கு, “ஈழத் தமிழர்களுக்கு இன்று கிடைக்க கூடிய எந்த அரசியல் தீர்வை காட்டிலும், ராஜிவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் தான் சிறந்த தீர்வு” என உடனடியாக பதிலளித்தார் சாந்தன்.
‘’பிரச்சனை என்னவெனில் இலங்கை அரசு அந்த ஒப்பந்தத்தை செயல்படுத்த எந்த முயற்சிகளையுமே மேற்கொள்ளாவில்லை’’ என்பதை பேரறிவாளன் சுட்டிக் காட்டினார்.
இக்கட்டுரையின் முதல் பகுதியை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
இக்கட்டுரையின் இரண்டாவது பகுதியை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
இக்கட்டுரையின் மூன்றாவது பகுதியை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
Read in : English