Read in : English
வேலூர், அக்டோபர் 12, 2011 : ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட மூன்று கைதிகளான முருகன், சாந்தன், மற்றும் பேரறிவாளன் ஆகியோர், மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். சென்னை உயர் நீதிமன்றம், தீர்ப்பை நிறுத்தி வைத்திருந்த பொழுது அக்டோபர் 2011 வேலூர் சிறையில் நடந்த நேர்காணலில், அவர்கள் விரைவில் விடுவிக்கப்படலாம் என்றும் நம்பப்பட்டது. (இந்த நேர்காணல் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பை நிறுத்தி வைத்திருந்த பொழுது நடந்தது. தற்போதும் தமிழ்நாடு அரசு, ஆளுநருக்கு ஏழு குற்றவாளிகளை கருணை அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளது. அப்பொழுதும் இதே சூழ்நிலை தான் கிட்டதட்ட நிலவியது.) அப்பொழுது விடுதலை பற்றிய அவர்களுடைய சிந்தனைகள், விடுதலையானால் எதிர்காலம் எப்படியிருக்கும்,அவர்களுக்கு கனவுகள் உண்டா, என்ற கேள்விகளுக்கு பதில் இந்த பேட்டியில் :
1991 ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட மூவர் 20 ஆண்டுகள் சிறையில் கழித்தனர். சென்னையிலிருந்து 140 கிமீ தொலைவிலுள்ள, உயர் பாதுகாப்பு கொண்ட, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட மூன்று சிறை கைதிகளும் சென்னை உயர்நீதிமன்றம் மரண தண்டனையை நிறுத்தி வைத்திருந்த போதிலும், “நாங்கள் மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக மாறக்கூடும் என்று நம்பிக்கையோடு இருக்கிறோம்” “விரைவில் நாங்கள் சிறையிலிருந்து விடுபடுவோம்”, என்று நம்பிக்கை தெரிவித்தனர்.
(பிப்ரவரி 18, 2014 இல் உச்சநீதிமன்றம் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியது).
இந்திய நீதிமன்றங்களில் குற்றவாளிகளின் கருணை மனுக்களை தாமதமாக கையாளுவதின் அடிப்படையில் வழங்கப்பட தீர்ப்புகளை மேற்கோள் காட்டி, பேரறிவாளன், “எங்கள் கருணை மனுவை நிராகரிக்க இந்தியாவின் ஜனாதிபதிக்கு பல ஆண்டுகள் எடுத்தது. கருணை மனுவைக் கையாள்வதில் உள்ள மிகப் பெரிய தாமதம் மன வேதனையை ஏற்படுத்தியது. நாங்கள் இரக்கத்தை தேடவில்லை,நாங்கள் நீதியைத் தான் தேடுகிறோம்,” என்று கூறினார்.
இந்திய அரசாங்கத்தின் பதில் சென்னை உயர்நீதி மன்றத்தில் தெரிவிக்கப்படும் என்று கருதினோம். இந்திய அரசாங்கம் கருணையைப் பரிந்துரைக்கும் என்றும் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கும் என்றும் நாங்கள் கருதினோம். நாங்கள் புதிய கருணை மனுவினை இந்திய ஜனாதிபதிக்கும் மற்றும் காங்கிரஸ் தலைவரான சோனியா காந்திக்கும் அனுப்பினோம், சோனியா காந்தி எங்கள் கருணை மனுவிற்கு உதவி செய்வார் என்று நம்பினோம்.
சோனியா காந்தி 2000 களின் போது நான்கு குற்றவாளிகளுக்கு கருணை காட்டுமாறு தமிழக அரசிற்கு பரிந்துரைத்ததாக நினைவுகூறுகிறார் (இந்த மூவரும் மற்றும் நளினி, முருகனின் மனைவி). “சோனியா காந்தியும் அவரது மகள் ப்ரியங்காவும் நாங்கள் இறப்பதை விரும்ப மாட்டார்கள் என நாங்கள் உறுதியாக இருந்தோம். அதே அடிப்படையில், சோனியா காந்தி அவர்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து, எங்களுக்கு கருணை வழங்கப்படும் என்று நம்புகின்றோம்”,. என்று முருகன் கூறினார்.
பேரறிவாளன் தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளின் ஆதரவை மேற்கோள் காட்டி, “நாங்கள் இவ்வளவு பெரிய ஆதரவை காண்பதில் களிப்படைகிறோம். தமிழ்நாட்டின் சில பகுதிகளில், ஒவ்வொரு நாளும் ஆர்ப்பாட்டங்கள் அல்லது கூட்டங்கள், மரணதண்டனை குறித்து பொதுவாகவும், குறிப்பாக எங்கள் வழக்கில் மரணதண்டனைக்கு எதிராகவும் நடக்கின்றன,” என்று கூறினார்.
“நாங்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவிற்கு அவரது ஆதரவிற்கு மிகப் பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர் மத்திய அரசிற்கு கருணை மனுவிற்கான பொது முறையீட்டை மட்டும் கோரவில்லை. அவர் தமிழ்நாடு சட்டமன்றம் மூலமாக, மத்திய அரசிடம் அழுத்தம் கொடுப்பதற்கு ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளார். இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க, நடவடிக்கை”, என்றும் பேரறிவாளன் கூறினார்.
1991 ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிறகு, அவர்களுக்கு ஆதரவு குறைந்து விட்ட நிலையைப் பற்றி கேட்டதற்கு,” நாங்கள் முன்பு சோகமாக இருந்தோம். ஆனால், நாங்கள் இந்த எழுச்சியை பார்ப்பதில் மகிழ்கிறோம். இது கருணையை பெறுவதற்கு முன்பான ஒரு காலகட்டமாகவே பார்க்கிறோம்,” என்று சாந்தன் கூறினார்.
அடுத்தது என்ன? ஆயுள் தண்டனையே பொதுவாக 14 ஆண்டுகள் என்று கணக்கிட்டால், 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்தீர்கள் என்ற காரணத்தினால், நீங்கள் விரைவில் விடுவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கிறீர்களா?
“என் புரிதல் என்பது ஆயுள் தண்டனைக்கு அதிகபட்சமாக 14 ஆண்டுகள் என்று பொருள். ஒருவரின் நல்ல நடத்தையை கருத்தில் எடுத்துக்கொண்டால், 14 வருட காலத்தை, உண்மையில், ஏழு அல்லது எட்டு ஆண்டுகளுக்கு கீழே கொண்டு வர முடியும். நல்லநடத்தை நிராகரிக்கப்பட்டாலும், 14 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். நீதிபதி, மரணதண்டனையை மாற்றும் பொழுது கைதிகள் வாழ்நாள் சிறைவாசத்தை நிறைவு செய்துவிட்டார்கள், என்று சுட்டிக்காட்டி, அவர்கள் விடுவிக்கப்படுவார்கள்,” என்று உத்தரவிட்டால், நன்றாக இருக்கும். மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசும் இந்த விஷயத்தில் எங்களுக்கு உதவமுடியும். கிட்டத்தட்ட எல்லா அரசியல் கட்சிகளும் நாங்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கூறின. எனவே,நாங்கள் விரைவில் விடுவிக்கப்படுவோம் என்று எதிர்பார்க்கிறோம். இன்னும் சில வாரங்களிலேயே நாங்கள் சிறையிலிருந்து விடுபடுவோம்,” என்றும் பேரறிவாளன் கூறினார்.
“இந்திய பாதுகாப்புப் படைகள், குறிப்பாக விமானப்படையில் சேருவதுதான் நான் கொண்டிருந்த ஒரே கனவு”. – பேரறிவாளன்
மூவரும் இளைஞர்களாக இருந்த போது சிறையில் அடைக்கப்பட்டனர். இன்று அவர்கள் நடுத்தர வயது ஆண்கள். சிறைச்சாலையில் இருந்த போது நிகழ்ந்த இந்த நிலைமாற்றத்தைப் பற்றி விசாரித்தபோது, அவர்கள் எப்படிச் சமாளித்தார்கள் என பேரறிவாளன் இவ்வாறு கூறுகிறார். “இன்று எனக்கு வயது 41. இளைஞனாக இருந்தபோது நான் திருமணத்தை பற்றியும், குடும்பத்தை பற்றியும் ஒரு போதும் நினைத்ததில்லை. அப்பொழுது, நான் கற்பதில் ஆர்வம் கொண்டிருந்தேன் . இந்திய பாதுகாப்புப் படைகள், குறிப்பாக விமானப்படையில் சேருவதுதான் நான் கொண்டிருந்த ஒரே கனவு. நான் தேசிய மாணவர் படையில் ஆர்வம் கொண்டவனாக இருந்தேன், சீருடை அணிய எனக்கு பிடித்திருந்தது. ஒரு இந்திய விமானப்படை சீருடையை அணிவதை நேசித்திருந்தேன். எனது தாயார் அற்புதம்மாள் அவரது எழுபது வயதிலேயே இருக்கிறார், அவர் அடிக்கடி சிறை வருவார் . நான் அவருடன் இருக்க விரும்புகிறேன்.”
சாந்தன் மற்றும் முருகன் இலங்கைத் தமிழர்கள். LTTE அங்கத்தினர்களாக , அவர்கள் போர்க்குணமிக்க அமைப்பின் அனைத்து சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டவர்கள். இயக்கத்தின் விதிகளின்படி அவர்கள் திருமணம் செய்துகொள்ள முடியாது. “இளம் வயதில் இருந்த போது எனக்கு திருமணம் பற்றிய திட்டம் எதுவும் இல்லை. அவ்வாறு இருந்த போதிலும், “LTTE க்கு எதிரான 2009 யுத்தத்தின் போது, இலங்கையில் அப்போது உள்ள நெருக்கடியான சூழ்நிலையையும் தாண்டி என் பெற்றோர் உயிருடன், இருப்பதை ஒரு பத்திரிக்கையின் மூலம் அறிந்ததில் மகிழ்ச்சி அடைந்தேன். நான் அவர்களை பார்க்க முடியுமா என்று எனக்கு தெரியாது. 2009 க்குப் பிறகு என் உறவினர்களுடன் நான் தொடர்பை இழந்தேன். என் சொந்த குடும்பத்தை அமைப்பதில் எனக்கு ஆர்வம் இல்லை. அந்த சிந்தனை என் மனதில் நுழைந்ததில்லை. நிச்சயமாக, என் பெற்றோர்களை இப்போது பார்க்க விரும்புகிறேன்,” என்று சாந்தன் கூறுகிறார்.
மறுபுறம் முருகன் தனது அமைப்பின் விதிகளை மீறி திருமணம் செய்துகொண்டார். ராஜீவ் காந்தி படுகொலைக்கு முன்னதாக நளினியை நேசித்தார், அவரை திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவித்தார். ராஜீவ் காந்தி கொலைக்கு பிறகு அவர்கள் திருப்பதியிலுள்ள பிரசித்திபெற்ற பாலாஜி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். அவரது கர்ப்ப காலத்தின் போது, எதிர்பாராதவிதமாக நளினியைப் பிரியங்காகாந்தி சிறையில் சந்தித்தார். பின்பு, நளினி உட்பட நான்கு பேருக்கு கருணை காட்டுமாறு சோனியா காந்தி எழுதிய கடிதத்திற்கு பிறகு, நளினியின் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. முருகனின் மகள் மேக்ரா இங்கிலாந்தில் படிக்கிறார். அவர் சமீபத்தில் சிறைச்சாலையில் நளினியை 18 மாத இடைவெளிக்கு பின்பு சந்தித்தார்.
இங்கிலாந்தில் வசிக்கும் முருகனின் சகோதரர் சமீபத்தில் சிறையில் அவரை சந்திக்க வந்தார். மற்ற உறவினர்களைப் பொறுத்தவரையில், அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது தெரியாது, என்றார் முருகன்.
மூன்று நடுத்தர வயதினரும் சிறையிலிருந்து வெளியே வரும் சூழ்நிலை ஏற்படும் பொழுது போது, உலகம் 1991 லிருந்து கணிசமாக மாறியிருப்பதை உணர்வார்கள்.
இக்கட்டுரையின் முதல் பகுதி வாசிக்க கிளிக் செய்யவும்
Read in : English