Read in : English
தமிழ்நாட்டில் ஆளுமைமிக்க தலைவருக்கான இடம் வெறுமையாக உள்ளது. அதை ரஜினி மற்றும் கமல், தாங்கள் தான் நிரப்ப வேண்டும் என்று எண்ணிக்கொண்டு இருக்கலாம். காலா திரைப்படம் அதன் ஹீரோ சக்தி மிகுந்த மீட்பாளர் என்னும் செய்தியை கொடுத்திருந்தாலும், அது ரஜினியின் அரசியலுக்கு சற்றும் பொருந்தாத படம். கமல் திரைப்படங்களில் அவருடைய அரசியலை வெளிப்படுத்தும் விஷயங்கள் இல்லாத காரணத்தால் அவர் திரையில் இருந்து அரசியலுக்கு நுழைந்த மாற்றம் தெரியவில்லை. நேற்று, திங்கள்கிழமை வெளியான ‘இது நம்மவர் படை’ – மய்யம் பாடல்கள் அவருடைய அரசியலை வலுப்படுத்துவதாக இல்லை.
இது நம்மவர் படை- ஆறு பாடல்களைக் கொண்டுள்ளது. பாடல்கள் நடனம் ஆடுவதற்குரியதாகவும் கேளிக்கை மற்றும் மண் சார்ந்த இசையுடன் உள்ளது. வைரமுத்துவின் சீடரான சிநேகன் திரைப்படங்களுக்கு பல நெஞ்சை உருக்கும் பாடல்களை எழுதியுள்ளார். மய்யத்துக்காக சிநேகன் எழுதியுள்ள பாடல்கள் பல விஷயங்களை பொதுமைப்படுத்தி உள்ளது அல்லது கமல் மக்களை மீட்கும் ஒரு மீட்பராக சித்தரித்துள்ளது. அதைதாண்டி அப்பாடல்களில் எதுவும் இல்லை.
தமிழகத்தில் இருக்கும் பிரச்சனைகளை பட்டியலிடும் பாடல் வீரியமற்று இருக்கிறது. எந்த ஆரம்பநிலை இயக்கமும் பிரச்சனைகளுக்கான தீர்வை சொல்ல வேண்டும். கமலின் மய்யம், தமிழகத்தின் பிரச்சனைகளை ஆராயவோ அவற்றுக்குத் தீர்வு காணவோ முனையவில்லை. ‘நாட்டு நடப்பு சரியில்லடா’ என்னும் பாடலில் அரசியல்வாதிகள் நாட்டை திருட நினைக்கிறார்கள் என்று பாடப்பட்டாலும் அப்பாடலில் உண்மை ஒலிக்காததால் ஏதோ இடறுகிறது.
நான்கு பாடல்களிலும் கமல் நீதியை நிலைநாட்ட வந்த “நம்மவர்” என்று புகழ் பாடுகிறது. ஆனால் அந்த அநீதி எங்கிருந்து எப்படி வருகிறது என்று அதன் மூலத்தைப் பாடவில்லை. யார் சமமாக நடத்தப்படவில்லை என்றும் கூறவில்லை. ஓரு வரி தேசபக்தி; ஒரு வரி பகுத்தறிவு; ஆஙகாங்கே செயலில் இறங்குவதற்கான அழைப்பும் ஒற்றுமைக்கான பேச்சும் பாடல்களில் இருக்கிறது. பிரகாசமான எதிர்காலம் வந்துகொண்டுள்ளது என்பதைக்கூறும் வகையிலும் உள்ளது. எப்படி? ‘நம்மவர்’ இதைச் செய்வார்? அவர் உலக அரசியலை அறிந்திருக்கிறார்; மகாத்மா காந்தியின் போதனைகளை பின்பற்றுகிறார் என்ற விளக்கம் அளிக்கிறது.
தமிழர்கள் ‘நம்மவரை’ விரும்பலாம். அவரின் உலகத் தரமான நடிப்பு குறித்து பெருமிதப்படலாம். அவருடைய திரைப்படங்களில் தன்னைத் தானே போற்றிக்கொள்ளும் நுகர்வுதன்மையை மக்கள் அனுமதிக்கலாம். காரணம் அவர் மண்ணின் மைந்தர், மட்டுமில்லாது பல இந்திய சினிமா பிரபலங்களுக்கு ஏதோ ஒருவகையில் மேலானவர்.
ஆனால் கமலின் அரசியலுக்கு அடித்தளம் என்ன என்ற கேள்விக்கு பதில் இப்பாடல்கள் தெளிவுப் படுத்தவில்லை. பாரம்பரியமான நடைமுறைகளோ அல்லது நம்பிக்கைகளோ மய்யத்துக்கு இல்லை;அவற்றுக்கு எதிரான கருத்தும் இல்லை. கமல் தானும் தன் மய்யம் அமைப்பும் இன்றைய அரசியலுக்கு வெளியே உள்ளதுபோல் காட்டிக்கொள்கிறார். அவருடைய கட்சியில் திறமையான அரசியல் ஆளுமைகள் யாரும் இல்லை.அதேபோல், மய்யத்தின் தலைமைகளில் அரசியல் அனுபவம் பெற்றவர்கள் இல்லை.
பல அரசியல் கட்சிகள் நிறைந்த சூழலில், எதையும் சாதிக்காமல் மய்யம் நிலைநிறுத்தப்பட்ட கட்சியாக முடியாது. அதேவேளையில் மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம், காரணம் மய்யம் தான் ஒரு மாற்று என்ற கூற்றை இழந்துவிடும்.
Read in : English