Read in : English
இராமேஸ்வரம் அந்தோணியார்புரத்தில் தோண்டியெடுக்கப்படும் குண்டுகள் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியை சேர்ந்ததாக கணிக்க படுகிறது. நேற்று இரவு எடிசன் என்பவரின் வீட்டின் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் பொழுது கிடைத்த குண்டுகளை வைத்து மேற்கொண்டு தோண்ட, 30 ஆண்டுகள் பழமை வாய்ந்த வெடிகுண்டுகள், வெடிபொருட்கள் கிடைத்தன. இது விடுதலை புலிகளின் ஆயுத கிடங்கு என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அக்காலத்தில் விடுதலை புலிகள், தமிழ் ஈழ விடுதலை இயக்கங்களின் படைகள் தங்கச்சிமடம் அருகில் உள்ள தண்ணீரூற்று என்று கிராமத்தில் தான் இருந்தது என்று அந்த ஊரைச் சேர்ந்தவர் கூறுகிறார். தஙகச்சிமடத்தில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முகாம் இருந்தது, என்று அந்த பகுதி மக்கள் தெரிவித்தார்கள். 1990களில் இந்தியாவிடம் பிளவு ஏற்பட்டு விடுதலை புலிகள் வெளியேறிய பொழுதும், பத்மநாப தலைமை கொண்ட ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அங்கேயே செயல்பட்டது.
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் வரதராஜ பெருமாள் இலங்கையில் தமிழ் மாகாணத்திற்கு முதலைமைச்சராக பொறுப்பேற்று இந்திய அமைதிபடையை ஆதரித்ததை காரணமாக விடுதலை புலிகள் அந்த இயகத்தைச் சார்ந்த பத்மநாப மற்றும் 12 பேரை சுட்டுக் கொன்றார். இதுவே பின்னர், ராஜீவ் காந்திக்கும் நேரிட்டது.
Read in : English