Read in : English
எரிபொருள் சிக்கனத்துக்கா, சென்னை ஆட்டோக்களில் இவ்வளவு சத்தம்?
டட், டட், ட்ர்ர்ர்ர்ர்...சில சமயங்களில் இதற்கு ஒரு பெயரையும் அவர்கள் வைத்திருக்கிறார்கள்: பர் பீட். இது ஹிப்-ஹாப் போன்ற தூண்டும் இசை. அது சென்னை ஆட்டோவின் சத்தம்.
தமிழக அரசியல்கட்சிகள் ’நீட்’டை எதிர்ப்பது சமூக நீதிக்காக அல்ல!
இந்திய மருத்துவக் கல்வியும் மருத்துவப் பயிற்சியும் ஆதிகாலத்திலே தொடங்கிவிட்டன. ஆதிக்க இனங்களைச் சார்ந்த வைத்தியர்களும் மற்ற இனங்களைச் சார்ந்த பழங்குடி மருத்துவர்களும் நோய்களுக்கு வைத்தியம் பார்த்தார்கள். நவீன மருத்துவத் தொழில் பிரிட்டிஷ் இந்தியாவில் 19-ஆம் நூற்றாண்டில் உருவெடுத்தது. அடிப்படையில் போரில் காயம்பட்ட வீர்ரகளுக்கு வைத்தியம் பார்க்க உதவி செய்வதற்காக, உடல்நல ஆரோக்கிய ஊழியர்களுக்கு தொழில் பழகுநர் பயிற்சியளிக்கப்பட்டது. அந்தக் காலம் முதல் இன்றைய ‘நீட்’காலம் வரை, மருத்துவக் கல்வியில் பெரிதாக முன்னேற்றமில்லை. இவ்வளவுக்கும் நிறைய மருத்துவக் கல்லூரிகள் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று.
கமல் ஹாசன் மூலம் புதிய வடிவத்தில் நாகரிக ஆடையாக மாறிய காதி!
நேர்த்தியானது, கம்பீரமானது, தற்போதும் நாகரிகமானது. பாரம்பரியமானது மட்டும் அல்ல. நடிகரும், அரசியல்வாதியுமான கமல் ஹாசனால், இந்தியாவிலும், அமெரிக்காவிலும் சமீபத்தில் தொடங்கப்பட்ட காதி பிராண்ட் ஆன்லைன் விற்பனைக்கான நோக்கம் இதுதான். நிச்சயமாக, கேஎச் ஹவுஸ் ஆஃப் கதர் என்ற இந்திய ஆடை முயற்சியானது, ஒரு மெல்லிய துணிக்கான நாகரிகத்தை உயர்த்துகிறது. சிறப்பாக வடிவமைக்கப்பட்ட, நேர்த்தியாக வெட்டப்பட்ட, பிரகாசமான வண்ணங்களில் இறுக்கமாகத் தைக்கப்பட்ட ஆடைகளுடன் மாடல்கள் இருக்கின்றனர். இங்கு பாரம்பரியம் மேலே துருத்திக் கொண்டு தெரிவதில்லை
அனிமேஷன் படித்துவிட்டு பாரம்பரிய விவசாயம் செய்யும் இளைஞர்!
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த வண்டிப்பாளையத்தை சேர்ந்த விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த சீத்தாராமன் அனிமேஷன் படித்து விட்டு, பாரம்பரிய விவசாயத்தில் களம் இறங்கியுள்ளார். இயற்கை உரத்தைத் தயாரிப்பதுடன் கருப்பு கவுனி என்ற பாரம்பரிய நெல் ரகத்தை சாகுபடி செய்து சக விவசாயிகளுக்கு வழங்கி வருகிறார்.
மீண்டும் நகரத்துக்கு வெளியே மாற்றப்படும் மதுரை மத்திய சிறைச்சாலை!
பல நூற்றாண்டுகளாக மக்கள் தொடர்ந்து வாழும் நகரங்களில் மதுரையும் ஒன்று. 1840களில் மதுரை கோட்டையை தாண்டி அமைந்த எல்லாமே மதுரை மக்களுக்கு புறநகர்தான். 1859ஆம் ஆண்டு மதுரை ரயில் நிலையம் அமைந்தபோது, நகரத்துக்கு வெகுதொலைவில் அமைத்ததற்காக மக்கள் போராட்டம் நடத்திய கதை எல்லாம் இங்கு உண்டு.
ஸ்டெர்லைட் போராட்டம்: போலீஸ் துப்பாக்கி சூடு நடந்த அந்த நாளில் யார் இருந்தார்கள்?
ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் பல்வேறு கட்டங்களாக பல்வேறு தரப்பினரையும், பல்வேறு ஆர்வலர்கள் மற்றும் அரசியல் தலைவர்களையும் உள்ளடக்கியது.
பிரதமரின் கதிசக்தித் திட்டம்: ரயில்வே துறையில் மாற்றங்கள் கொண்டுவர செய்ய வேண்டிய 7 விஷயங்கள்!
’பிரதமர் கதி சக்தி தேசிய பெருந்திட்டம்’ (மாஸ்டர் பிளான்) என்பது பொருளாதார வளர்ச்சியிலும் தொடர் அபிவிருத்தியிலும் மாறுதலை ஏற்படுத்தும் ஓர் அணுகுமுறை. சாலை, ரயில்பாதை, விமானநிலையம், துறைமுகம், பொதுப்போக்குவரத்து, நீர்வழிப் போக்குவரத்து, மற்றும் போக்குவரத்து உட்கட்டமைப்பு ஆகிய ஏழு உந்துசக்திகளால் இந்த அணுகுமுறை எழுச்சிபெறும்
தமிழ்நாட்டில் வலசை வரும் பறவைகளில் மாற்றம்: சதுப்பு நிலங்களின் சுற்றுச்சூழல் மாறிவருவதை அடையாளம் காட்டுகிறதா?
வேனிற்காலம் ஏறக்குறைய தொடங்கிவிட்டது. வலசை போகும் பறவைகள் தங்கள் சொந்த இடங்களுக்கு செல்ல தொடங்கிவிட்டன. பறவை ஆர்வலர்களும் சூழல் வல்லுனர்களும் பறவைகள் கணக்கெடுப்பை தமிழ் நாட்டின் நீர்நிலைகளில் பல இடங்களில் முடித்து விட்டார்கள். இந்த கணக்கெடுப்புகள் நமக்கு சொல்வதென்ன?
105 ஆண்டு பழமை வாய்ந்த பாம்பன் ரயில்வே பாலத்துக்கு இந்த ஆண்டு குட்பை!
ராமேஸ்வரம் என்றாலே நினைவு வருவது பாம்பன் ரயில் பாலம். இரண்டு கிலோமீட்டர்கள் நீளம் உள்ள இந்த பாலத்தின் மீது செல்லும் ரயில் ஒரு அழகியல் என்றே சொல்லலாம். உலகத்தின் மிக ஆபத்தான ரயில் பாதைகளில் ஒன்றாக அறியப்படும் இந்தப் பாலத்தை ரயிலில் சென்று அனுபவிப்பது ஒரு சுகம் என்றால் அருகிலுள்ள சாலை பாலத்தின் மீது நின்று அதை பார்த்து அனுபவிப்பது மற்றொரு சுகம். நாம் நின்று பார்க்கும் போது பாலம் உயர்த்தப்பட்டு படகுகள் கடந்தால் நமக்கு ஒரு குழந்தையின் குதூகலம் கிடைப்பதை உணரலாம்.
எலைட் ஸ்கூல் திட்டம்: அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்து டாக்டரான ஏழை மாணவி!
பிளஸ் டூ தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களை அதிக மதிப்பெண்களை எடுக்க வைப்பதற்காக ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த நந்தகுமார் முயற்சியில் தொடங்கப்பட்ட எலைட் ஸ்கூலில் படித்து, டாக்டராகி இருக்கிறார் தாழ்த்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த ஏழை மாணவி எம். கிருஷ்ணவேணி.
Read in : English