Read in : English

தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் கற்பிக்கப்படும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை மூன்று வகைகளாகப் பிரித்து அறிமுகப்படுத்த தமிழகஅரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, தொழிற் கல்வி பாடப்பிரிவு மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் டெக்னாலஜி ஒரு புதிய பாடமாக அறிமுகப்படுத்தப்படுகிறது. பிளஸ் ஒன் வகுப்புகளுக்கு இந்தக் கல்வி ஆண்டிலும் பிளஸ் டூ மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டிலும் (2019 20) இந்த மாற்றம் நடைமுறைப்படுத்தப்படும். இதற்கான ஆணையை பள்ளிக் கல்வித் துறை பிறப்பித்துள்ளது.

மேல்நிலைப் பள்ளிகளில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடப்பிரிவு மாணவர்களுக்கு முதன்மைப் பாடமாக கம்ப்யூட்டர் சயின்ஸ் இருக்கும். .

வணிகவியல், கணக்குப்பதிவியல் (அக்கவுண்டன்சி) மற்றும் பொருளியல் (எகனாமிக்ஸ்) பிரிவு மாணவர்களுக்கும் வரலாறு, புவியியல் மற்றும் பொருளியல் மாணவர்களுக்கும் ஏற்கனவே இருந்த கம்பியூட்டர் சயின்ஸ் பாடத்திற்கு பதிலாக கம்பியூட்டர் அப்ளிகேஷன்ஸ் பாடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தொழிற் கல்விப் பிரிவில், கணக்குப் பதிவியல் மற்றும் தணிக்கையியல்  (அக்கவுண்டன்சி அண்ட் ஆடிட்டிங்) பிரிவு மாணவர்களுக்கும் கம்ப்யூட்டர்அப்ளிக்கேஷன்ஸ் அறிமுகப்படுத்தப்படுகிறது.

தொழிற் கல்விப் பிரிவில், கணக்குப் பதிவியல் மற்றும் தணிக்கையியல்  (அக்கவுண்டன்சி அண்ட் ஆடிட்டிங்) பிரிவு மாணவர்களுக்கும் கம்ப்யூட்டர்அப்ளிக்கேஷன்ஸ் அறிமுகப்படுத்தப்படுகிறது.

தொழிற் பாடப்பிரிவில் தற்போதுள்ள பொது இயந்திரவியல் (ஜெனரல் மெஷினிஸ்ட்) பாடப்பிரிவு அடிப்படை இயந்திரவியல் (பேசிக்மெக்கானிக்கல் என்ஜினீயரிங் ) என்று பெயர் மாற்றப்படுகிறது. அப்பாடப்பிரிவில் கணிதம், பேசிக் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் தியரி மற்றும்பிராக்டிக்கல் பாடங்களுடன் கம்ப்யூட்டர் டெக்னாலஜி பாடமும் இருக்கும்.

மின் இயந்திரங்களும் சாதனங்களும் (எலெக்ட்ரிக்கல் மெஷின்ஸ் அண்ட் அப்ளையன்சஸ்) என்ற பாடப்பிரிவு அடிப்படை மின் பொறியியல் (பேசிக்எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங்) பாடப்பிரிவாக மாற்றப்படும். அதில் கணிதம், பேசிக் எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் தியரி மற்றும் பிராக்டிக்கல்ஆகிய பாடங்களுடன், கம்ப்யூட்டர் டெக்னாலஜி, பாடமும் இருக்கும்.

எலெக்ட்ரானிக் எக்கியூப்மெண்ட்ஸ் என்ற பாடப்பிரிவு அடிப்படை மின்னணு பொறியியல் (பேசிக் எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங்) என்றபாடப்பிரிவாக மாற்றம் செய்யப்படுகிறது. இதில் கணிதம், பேசிக் எலெக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் தியரி மற்றும் பிராக்டிக்கல், கம்ப்யூட்டர்டெக்னாலஜி ஆகிய பாடங்கள் இருக்கும்.

கட்டட வரைவாளர் (டிராப்ட்ஸ்மேன் சிவில்) என்ற பாடப்பிரிவு அடிப்படை கட்டடப் பொறியியல் (பேசிக் சிவில் என்ஜினீயரிங்) என்ற பாடப்பிரிவாகமாற்றப்படுகிறது. இதில் கணிதம், பேசிக் சிவில் என்ஜினியரிங் தியரி மற்றும் பிராக்டிக்கல், கம்ப்யூட்டர் டெக்னாலஜி ஆகிய பாடப்பிரிவுகள்இருக்கும்.

ஆட்டோ மெக்கானிக் என்ற பாடப்பிரிவு அடிப்படை தானியங்கி ஊர்தி பொறியியல் (பேசிக் ஆட்டோமொபைல் என்ஜினீயரிங்) என்றபாடப்பிரிவாக மாற்றப்படும். இதில் கணிதம், பேசிக் ஆட்டோமொபைல் என்ஜினீயரிங் தியரி மற்றும் பிராக்டிக்கல், கம்ப்யூட்டர் டெக்னாலஜிஆகிய பாடப்பிரிவுகள் இருக்கும்.

டெக்ஸ்டைல் டெக்னாலஜி பாடப்பிரிவு மாணவர்களுக்கு கணிதம், டெக்ஸ்டைல் டெக்னாலஜி தியரி மற்றும் பிராக்டிக்கல் ஆகிய பாடங்களுடன்கம்ப்யூட்டர் டெக்னாலஜியும் பாடமாக இருக்கும்.

நர்சிங் பாடப்பிரிவில் உயிரியல், நர்சிங் தியரி மற்றும் பிராக்டிக்கல் ஆகிய பாடங்களுடன் கம்ப்யூட்டர் டெக்னாலஜியும் பாடமாக இருக்கும்.

துணிகளும் ஆடை வடிவமைப்பும் (டெக்ஸ்டைல் அண்ட் டிசைனிங்) என்ற பாடப்பிரிவு நெசவியலும் ஆடை வடிவமைப்பும் (டெக்ஸ்டைல்ஸ் அண்ட்டிரஸ் டிசைனிங்) பாடப்பிரிவாக மாற்றம் செய்யப்படுகிறது. மனையியல், டெக்ஸ்டைல்ஸ் அண்ட் டிரஸ் டிசைனிங் தியரி மற்றும் பிராக்டிக்கல்ஆகிய பாடங்களுடன் கம்ப்யூட்டர் டெக்னாலஜியும் பாடமாக இருக்கும்.

உணவு மேலாண்மையும் குழந்தை நலனும் (ஃபுட் மேனேஜ்மெண்ட் அண்ட் சைல்ட் கேர்) என்ற பாடப்பிரிவு உணவு மேலாண்மை (ஃபுட்மேனேஜ்மெண்ட்) என்ற பாடப்பிரிவாக மாற்றப்பட்டு, மனையியல், ஃபுட் சர்வீஸ் மேனேஜ்மெண்ட் தியரி மற்றும் பிராக்டிக்கல் பாடங்களுடன்கம்ப்யூட்டர் டெக்னலாஜி பாடமும் இருக்கும்.

வேளாண்மை செயல்முறைகள் (அக்ரிகல்ச்சுரல் பிராக்டிசஸ்) என்ற பாடப்பிரிவு வேளாண் அறிவியல் (அக்ரிகல்ச்சுரல் சயின்ஸ்) என்றபாடப்பிரிவாக மாற்றப்பட்டுள்லது. அதில் உயிரியல், அக்ரிகல்ச்சுரல் சயினஸ் தியரி மற்றும் பிராக்ட்டிக்கல் ஆகியவற்றுடன் கம்ப்யூட்டர்டெக்னாலஜி பாடமும் இருக்கும்.

அலுவலக செயலாண்மை (ஆபீஸ் செகரட்டரிஷிப்) பாடப் பிரிவு அலுவலக மேலாண்மையும் செயலியலும் (ஆபீஸ் மேனேஜ்மெண்ட் அண்ட்செக்ரட்டரிஷிப்) என்று மாற்றப்படும். வணிகவியல், கணக்குப் பதிவியல் (அக்கவுண்டன்சி), ஆபீஸ் மேனேஜ்மெண்ட் அண்ட் செக்ரட்டரிஷிப் தியரி,டைப்போகிராபி அண்ட் கம்ப்யூட்டர் அப்ளிக்கேஷன் பிராக்டிக்கல் ஆகிய பாடங்கள் இருக்கும்.

கணக்குப் பதிவியலும் தணிக்கையியலும் (அக்கவுண்டன்சி அண்ட் ஆடிட்டிங்) பாடப்பிரிவில் வணிகவியல், அக்கவுண்டன்சி, ஆடிட்டிங்பிராக்டிக்கல் ஆகியவற்றுடன் கம்ப்யூட்டர் அப்ளிக்கேஷன் பாடமும் இருக்கும்.

மேல்நிலைப் பள்ளிகளில் அறிவியல், கலைப் பிரிவு மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் இருந்து வருகிறது. இதில் சில பாடப் பகுதிகள்கலைப்பிரிவு மாணவர்களுக்கு கடினமானதாகவும் அட்வானஸ்ட்டாகவும் இருந்து வருகிறது. எனவே இந்த மாற்றம் செய்யப்படுகிறது. அத்துடன்,வணிகவிய்ல் பாடத்தில் டேலி முதலியனவும் தொழிற் கல்விப் பிரிவில் உடனடி வேலைவாய்ப்புக்கு ஏற்றதாக அமையும் கருதி இந்தப் புதியமாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெயர் மாற்றம்
தற்போதுள்ள வணிகக் கணிதம் (பிசினஸ் மேத்மேட்டிக்ஸ்)  பாடம் வணிகக் கணிதமும் புள்ளியியலும் (பிசினஸ் மேத்மேட்டிக்ஸ் அண்ட்ஸ்டாட்டிஸ்டிக்ஸ்) என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.

பிளஸ் ஒன் வகுப்பில் அறவியலும் பிளஸ் டூ வகுப்பில் இந்தியப் பண்பாடும் என்ற பாடங்கள் ஒன்றாகச் சேர்க்கப்பட்டு அறவியலும் இந்தியப்பண்பாடும் (எத்திக்ஸ் அண்ட் இந்தியன் கல்ச்சர்) என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.

ஜெனரல் நர்சிங் (தாள்1 மற்றும் தாள்2) என்று இருந்தது நர்சிங் பொது என்று ஒரே தொகுதியாக மாற்றப்பட்டுள்ளது.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival