Read in : English
தமிழக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை அன்று, முதல்வர் 110 விதியின் கீழ் திட்டங்களை அறிவித்தார். அதன் பிறகு திட்டம் குறித்து முதலில் காங்கிரஸ் கட்சிக்கு பேச அனுமதியளிக்க்கப்பட்டது. காங்கிரஸ் எதிர் கட்சி தலைவர் ராமசாமி, சிலைகள் கடத்தல் குறித்தும் ஐஜி.பொன்மாணிக்க வேல் குறித்தும் பேசினார். அதை தொடர்ந்து திமுக எதிர் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கோர்ட்டில் ஐஜி.பொன்.மாணிக்க வேல் அனைத்து சிலைகள் கடத்தல் வழக்குகளை விசாரிப்பார் என்று சொல்லியிருந்த நிலையில் தேவைப்பாட்டால், தலைமை செயலர், டிஜிபி ஆகியோரை நேரில் ஆஜராக நேரிட சொல்லும் அளவிற்கு நடந்தது என்ன என கேள்விஎழுப்பினார். அதற்கு முதல்வர், கூடுதல் வசதிகள் கேட்கப்பட்டது அதை நாங்கள் அவருக்கு செய்துகொடுத்தாகி விட்டது என்றார். ஆனால் ஸ்டாலின் மீண்டும் தலைமை செயலாளர், டிஜிபி ஆகியோரை நேரில் ஆஜராக சொல்லும் அளவிற்கு கோர்ட் சொல்வது ஏன் என கேட்டார். சபாநாயகர் தனபால், ஒரு அதிகாரியை வைத்து இத்தனை நேரம் விவாதம் நடத்த கூடாது என அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
யார் இந்த பொன் மாணிக்கவேல்
கடந்த 2010 ம் ஆண்டில், திமுக ஆட்சி காலத்திலேயே, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக இருந்தவர் ஐஜி.பொன்.மாணிக்க வேல். தஞ்சை கோயிலில்இருந்து, 100 கோடி மதிப்பிலான ராஜராஜ சோழன், லோக மகா தேவி சிலைகள் குஜராத்துக்கு கடத்தப்பட்டன. தஞ்சாவூர் சர்க்கை எனும் கிராமத்தில்ராவ்பகதூர், கோபாலாச்சாரி உதவியுடன் அந்த சிலைகள் கடத்தப்பட்டு குஜராத்தில், சாரா பாய் என்பவருக்கு பல கோடிக்கு விற்கபட்டன.
அப்போது, திமுக ஆட்சியில், முதல்வர் கருணாநிதி உத்தரவின் பேரில், ஐஜி ,பொன்.மாணிக்க வேல் ஒரு குழு அமைத்து குஜராத் முதல்வர் மோடியை சந்தித்து சிலைகள்மீட்க நடவடிக்கையை எடுத்தார். குஜராத்தில், தனியார் அருங்காட்சியகத்தில் அந்த சிலைகள் உள்ளன. அவர்களிடம் எப்படி கேட்டு பெறுவது என கைவிரிக்கப்பட்டது. அதன்பின்பு திமுக ஆட்சியில் அது தோல்வியில் முடிந்தது; அதிமுக அரசில் அதை வென்றெடுத்தார். அதிமுக அரசுக்கு பெருமை சேர்ந்த ஐஜி.பொன்.மாணிக்கவேல், ஏன் அவருக்கு கூடுதலாக ரயில்வே துறையை கொடுத்து, சிலை கடத்தல் வழக்கில் தொய்வு ஏற்படுத்துகிறார்கள் என்ற கேள்வியும் எழுகிறது.
சிலை கடத்தல் என 531 வழக்குகளை , பொன்.மாணிக்கவேல் விசாரணை நடத்தி வருகிறார். 250 கோடி மதிப்பிலான சிலைகளை மீட்டெடுத்துள்ளார்.
ஆனால், சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறும்போது அவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் ஐந்தரை ஆண்டுகள் இருந்ததால் அவரை பணியிடம் மாற்றம் செய்ததாக தெரிவித்தனர்.
அவருக்கு, அதிமுக அரசு பக்க பலமாக இல்லை. ஆனால், திமுகவினர், அவருக்கு கரம் கொடுத்து சட்டப்பேரவையில் வாதிடுகின்றனர். இன்ஸ்பெக்டராக இருந்து, ஐஜியாக உருவெடுத்துள்ள பொன்.மாணிக்கவேலுக்கு பிரச்சினை தொடங்கியதே பழனி கோயிலில் இருந்து தான் என்கின்றனர் விவரம் அறிந்தோர். தங்கத்தால் செய்த சிலைகள் நிறம்மாறி இந்து அறநிலைய துறை அதிகாரிகளின் சிலர் சாயம் வெளுத்தது தான். சாயம் வெளுத்த சில அதிகாரிகளால் தான், அவருக்கு சிலை கடத்தல் தடுப்புபிரிவு ஐஜியாக தொடர்ந்து இருக்க வந்த இடையூறுகள் என சக காவலர்கள் சிலர் கூறுகின்றனர். திமுக ஆட்சிகாலத்திலேயே, சிலைகள் மீட்க, ஐஜி.பொன்மா ணிக்கவேலுவை வைத்து பல முயற்சிகளை முன்னெடுத்தோம் என மார்தட்டி கொள்ளவே சட்டப்பேரவையில் அவருக்கான வாதம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள் .
Read in : English