Read in : English
சமீபத்தில் வெளியான ஃபர்ஹானா தமிழ்த் திரைப்படம் எளிமையான நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இஸ்லாமியப் பெண், குடும்பச் சூழல் காரணமாக வேலைக்குச் செல்லும் போது சந்திக்கும் பிரச்சினைகளைப் பேசுகிறது.
சமீபகாலமாக காஷ்மீர் பைல்ஸ், தி கேரளா ஸ்டோரி, ஃபுர்கா என அடுத்தடுத்து வெளிவந்த திரைப்படங்கள் இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகளாகவும், பிரிவினைவாதிகளாகவும் சித்தரித்ததால் அவை சர்ச்சைகளைச் சந்தித்தன. இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள ஃபர்ஹானா திரைப்படத்தின் டிரெயிலரில் ஐந்து வேளை தொழுகை, ஃபுர்கா, கட்டுப்பாடுகள் என்று காட்டப்பட்டிருப்பதால் ஒருவேளை ஃபர்ஹானாவும் இஸ்லாமியப் பெண்களை இழிவுப்படுத்தும் திரைப்படமாக இருக்கலாமோ என்று அச்சம் நிலவியது. இஸ்லாமிய பெண்களுக்கு எதிரான காட்சிகள் அதில் இடம்பெற்றிருக்கலாம் என்ற வதந்தி பரவியது. அதனாலே முன்னெச்சரிக்கையாக ஃபர்ஹானாவாக நடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டது.
இப்போது திரைப்படம் வெளிவந்துவிட்டது. அதைப் பார்த்தவர்களில் பெரும்பாலோர் சர்ச்சைக்குரிய வகையில் அதில் இஸ்லாமியர்களுக்கு எதிரான எந்தச் சித்தரிப்பும் இல்லை என்றே கூறுகிறார்கள்.
ஃபர்ஹானாவில் இஸ்லாமியப் பெண்கள் இழிவுப்படுத்தவில்லை என்பது வாஸ்தவம்தான் என்றாலும், அந்தத் திரைப்படம் மறைமுகமாக இஸ்லாமியர்களைக் குறிவைத்திருக்கிறது என்பது ஆழ்ந்து பார்த்தால் புலனாகும்
ஃபர்ஹானாவில் இஸ்லாமியப் பெண்கள் இழிவுப்படுத்தவில்லை என்பது வாஸ்தவம்தான் என்றாலும், அந்தத் திரைப்படம் மறைமுகமாக இஸ்லாமியர்களைக் குறிவைத்திருக்கிறது என்பது ஆழ்ந்து பார்த்தால் புலனாகும். ஃபர்ஹானா என்ற கதாபாத்திரத்தை இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் வேண்டுமென குறிப்பாகச் சித்தரித்துள்ளார் என்றுதான் கூற வேண்டும்.
பெரும்பாலும் நடுத்தரவர்க்கத்தைச் சேர்த்த இஸ்லாமியர்கள் வசிக்கும் சென்னை திருவல்லிக்கேணிப் பகுதியை மையப்படுத்தி, குறுகலான வீதிகளில் சிறிய வீடுகளில் வசிக்கும் இஸ்லாமியர்களின் வாழ்வை காட்டி இருக்கிறார் இயக்குநர். இஸ்லாம் மதத்தில் கடமையாக்கப்பட்ட ஐந்து வேளை தொழுகை மட்டுமில்லாமல், அதிகாலை 3 மணியில் இருந்து 4 மணிக்குள் செய்யப்படும் தஹஜித் தொழுகை மற்றும் புர்கா, தொப்பி, காலணி, உணவு உண்ணும் முறை என எல்லாவற்றையும் ஆழமாகத் துல்லியமாகப் பதிவு செய்திருக்கும் இயக்குநருக்கு, ஒருசிலர் மதத்தின் பேரால் இஸ்லாமியப் பெண்கள் மீது திணிக்கும் கட்டுப்பாடுகளை கவனிக்கத் தவறிவிட்டார் போல தோன்றுகிறது.
மேலும் படிக்க: கேரளா ஸ்டோரி திரைப்படம் சொன்ன கதையும் நிஜமான கதையும்
மூன்று குழந்தைகள், செருப்புக் கடை வைத்திருக்கும் தந்தை, அதில் வரும் சொற்ப வருமானத்திற்காக வேலை செய்யும் கணவன் என்று அமைந்திருக்கும் தனது எளிமையான குடும்பத்திற்காக ஒரு கட்டத்தில் கட்டுப்பாடுகளை உடைத்துக் கொண்டு வேலைக்குச் செல்கிறாள் ஃபர்ஹானா. பணிபுரியும் கால் சென்டரில் ஆண் வாடிக்கையாளரால் வரும் பிரச்சினைகளையும், அதை அந்தப் பெண் எதிர்கொள்வதையும் கதைக்கருவாக அமைக்கப்பட்டுள்ளன. எல்லாம் சரி!
ஆனால் பணியிடங்களில் பலவிதமான பிரச்சினைகளை மதம் கடந்து, சாதி கடந்து எல்லாப் பெண்களுமேதான் அன்றாடம் சந்திக்கிறார்கள். அப்படியிருக்கும் போது, குறிப்பாக ஓர் இஸ்லாமிய குடும்பப் பெண்ணை மட்டுமே ஏன் தேர்வு செய்ய வேண்டும்? அதற்கு அவசியம் இல்லையே!
இஸ்லாமிய பெண்களை மையப்படுத்தித் திரைப்படம் எடுக்க விரும்பினால் அவர்களுக்கே உரிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கின்றன; அவற்றைப் பேசலாம். உதாரணமாக, புர்கா அணிய வேண்டும் என இஸ்லாமிய குழந்தைகளைக் கட்டாயப்படுத்துவதைச் சித்தரிக்கலாம். ஜனநாயக நாட்டில் ஆடை என்பது அவரவரின் தனிப்பட்ட உரிமை.
பெரும்பாலும் நடுத்தரவர்க்கத்தைச் சேர்த்த இஸ்லாமியர்கள் வசிக்கும் சென்னை திருவல்லிக்கேணிப் பகுதியை மையப்படுத்தி, குறுகலான வீதிகளில் சிறிய வீடுகளில் வசிக்கும் இஸ்லாமியர்களின் வாழ்வை காட்டி இருக்கிறார் இயக்குநர். மதத்தின் பேரால் இஸ்லாமியப் பெண்கள் மீது திணிக்கப்படும் கட்டுப்பாடுகளை இயக்குநர் கவனிக்கத் தவறிவிட்டார்
”நீ இப்படித்தான் இருக்க வேண்டும், இந்த உடையை அணிந்துதான் வெளியே செல்ல வேண்டும், இவர்களுடன் பேசக் கூடாது; அவர்களுடன் பேசக்கூடாது; பெண் பிள்ளைகள் இந்தந்த வரம்புகளுக்குள் தான் இருக்க வேண்டும்,” என்றெல்லாம் கட்டாயப்படுத்துவது மனித உரிமை மீறலாகிறது.
”அந்நிய ஆண்களின் பார்வை படாமல் இருக்க புர்கா அணிய வேண்டும்,” என சிலர் விளக்கம் தருகிறார்கள். ஆனால், புர்கா அணிந்து செல்லும் பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள் தொடர்ந்து கொண்டு தானே இருக்கின்றன. ”ஆண்கள் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பார்கள். அதனால் புர்கா அணிய வேண்டும்,” என கட்டாயப்படுத்துவதுதான் முரண்பாடாக உள்ளது. ஆண்கள் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பார்கள்.
மேலும் படிக்க: ஹிஜாப், இஸ்லாமிய பெண்களின் ஆடை உரிமையை பறிக்கிறதா?: கவிஞர் சல்மா
அதனால் புர்கா அணிய வேண்டும்,” எனகட்டாயப்படுத்துவதுதான் முரண்பாடாக உள்ளது. ஆண்கள் தவறான கண்ணோட்டத்தில் பார்த்தால் அவர்களுக்கு த்தானே தண்டனை தரவேண்டும். ”நீபுர்காஅணிந்துபோ,” என்று பெண்களுக்கு ஏன் தண்டனை தரவேண்டும்? விருப்பத்தின் பேரில் ஆடை அணிவதில் தவறில்லை..ஆனால், இதைத்தான் அணிய வேண்டும் என திணிப்பதுதான் தவறாகிறது.
இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இதுபோன்ற கருத்துகளை முன்வைக்கும் இஸ்லாமிய சமூகம் சார்ந்த கதைக்களத்தை வைத்துத் திரைப்படம் எடுத்து இருக்கலாம். ஆனால், வர்த்தகத் திரைப்படத் தேவைகளுக்காக, இஸ்லாமியர்கள் என்றாலே வெறுப்பு உணர்வு என்ற மாய பிம்பத்தால் எல்லாற்றிற்கும் இஸ்லாமிய பெண்களை எடுத்துக்காட்டுவது சுயலாபத்தின் நோக்கத்தையே காட்டுகிறது. இனியாவது திரைப்பட இயக்குநர்கள் குறிப்பிட்டசமூகத்தை அல்லது பிரிவினரைக் குறிவைக்கும் வழக்கத்தை விட்டு விடுவது நல்லது.
Read in : English