Read in : English

சாலை விதிமீறல்களில் ஈடுபடும் மோட்டார் வாகன ஓட்டிகளைத் திருத்த அரசு எவ்வளவோ முயற்சி செய்தும் அவர்கள் திருந்தியபாடில்லை. கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 13) அன்று தமிழ்நாடு அரசு மற்றொரு நடவடிக்கையை அறிவித்திருக்கிறது. சிஏஜி உட்பட பல்வேறு அரசு சாரா நிறுவனங்கள் நீண்ட நாளாகச் சொல்வது போல சாலை விதிமீறல் குற்றங்களுக்கான அபராதங்களை அதிகரித்திருக்கிறது அரசு.

திருத்தப்பட்ட மோட்டார்வாகனச் சட்டம் 2019-ன் படி அதிகமான அபராதங்களை விதிக்கவும், சாலைப் பாதுகாப்பை உருவாக்கத் தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் அரசிற்கு அதிகாரம் உண்டு.

புதிய அபராதக் கட்டமைப்பு அக்டோபர் 28 முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது. சென்னை மாநகரக் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அதை விவரித்திருக்கிறார். என்னென்ன குற்றங்களுக்கு அபராதங்கள் தற்போது அதிகரிக்கப்பட்டிருக்கின்றன என்பதைப் பார்ப்போம்:

திருத்தப்பட்ட மோட்டார்வாகனச் சட்டம் 2019-ன் படி அதிகமான அபராதங்களை விதிக்கவும்சாலைப் பாதுகாப்பை உருவாக்கத் தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை  எடுக்கவும் அரசிற்கு அதிகாரம் உண்டு

தேவையற்ற ஹார்ன் அடித்தல் ரூ. 1,000 (முதல் தடவை); ரூ.2,000 (பின்பு)

ஆம்புலன்ஸ்க்கு வழிவிடாமை ரூ. 10,000

ஹெல்மெட் இல்லாமை ரூ. 500 (முதல் தடவை); ரூ.1,500 (பின்பு)

ஸ்டால்லைன் விதிமீறல் ரூ. 500 (முதல்தடவை); ரூ.1,500 (பின்பு)

சாலைகளில் ரேசிங் ரூ. 5,000

அதிகாரியின் ஆணைக்குக் கட்டுப்படாமை ரூ. 2,000

மேலும் படிக்க: சென்னை சாலைகளை நரகமாக்கும் ஹாரன்களின் சத்தம்

எது வேலை செய்யும்?
பெந்தம் மற்றும் பெக்காரியா உருவாக்கிய குற்றம் செய்ய அஞ்ச வைத்தல் என்னும் கொள்கையிலிருந்து வருவதுதான் பலமான சாலை விதி நடைமுறைப்படுத்தல் என்னும் கட்டமைப்பைப் பற்றிய எழுத்துக்கள். நடைமுறைப்படுத்தும் நடவடிக்கை கடுமையாக, துரிதமாக மாறினால் அபராதங்கள் வேலை செய்யும் என்பதைச் சொல்லும் கருத்தாக்கம் அது.

விஐபி கலாச்சாரம், அரசுத் துறைப் பணி கெளரவம் உண்டாக்கும் சாலைவிதி மீறல், வணிகரீதியிலான வாகனங்கள் விதிகளைக் கடைப்பிடிக்காமை ஆகிய அம்சங்கள் நிறைந்த நமது சாலைகளில் அதிகரிக்கப்பட்ட அபராத நடவடிக்கையானது அடிக்கடி தவறு செய்யும் இருசக்கர வாகன ஓட்டிகளை மட்டுமே இலக்காக்கும்; குறிப்பாக, எந்தவிதமான செல்வாக்கும் இல்லாதவர்களை மட்டுமே பாதிப்புக்குள்ளாக்கும்.

முதலில் எச்சரிக்கை கொடுத்துப் பார்ப்பது, அப்படியும் திருந்தவில்லை என்றால் பின்பு கடுமையான நடவடிக்கை எடுப்பது; இது போன்ற பாணியில் நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்வதில்லை.

விஐபி கலாச்சாரம்அரசுத் துறைப் பணி கெளரவம் உண்டாக்கும் சாலைவிதி மீறல்வணிகரீதியிலான வாகனங்கள் விதிகளைக் கடைப்பிடிக்காமை ஆகிய அம்சங்கள் நிறைந்த நமது சாலைகளில் அதிகரிக்கப்பட்ட அபராத நடவடிக்கையானது அடிக்கடி தவறு செய்யும் இருசக்கர வாகன ஓட்டிகளை மட்டுமே இலக்காக்கும்

இனிவரும் நாட்களில் பெருநகர சென்னைப் போக்குவரத்துக் காவல்துறை கடுமையாக நடந்துகொள்ளும் பட்சத்தில், பின்வரும் செயற்பாடுகளையும் மேற்கொள்ளலாம்:

புதிய அபராதங்களை தொலைக்காட்சி, இணையம், சமூக வலைத்தளங்கள், சாலைகளின் முக்கியச் சந்திப்புகளில் விளம்பரப்படுத்தலாம்.

· சாலைவிதிமீறல் குற்றங்கள் சுத்தமாகச் சகித்துக் கொள்ளப்படுவதில்லை என்பதை மக்களுக்குப் புரிய வைக்கலாம். உதாரணமாக, தவறான வழியில் வண்டி ஓட்டினால் அபராதம் அதிகமாக இருக்கும் என்பதை விளம்பரப்படுத்தலாம்.

· எதிர்பாராத இடங்களில் காவல் துரை கண்காணிப்பை ஏற்படுத்தி விதிமீறல்களைப் பதிவு செய்யச் சொல்லலாம். விதிமீறும் வாகன ஓட்டிகளுக்கு இரண்டு வாரங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பலாம்.

· அந்த நோட்டீஸை போக்குவரத்துத் துறை தரவுக் கட்டமைப்பில் இணைத்து ஆவணப்படுத்தலாம்.

· வீதிமீறல் செய்யும் வாகன ஓட்டிகளைப் படம்பிடிக்குமாறு பாதசாரிகளையும் சைக்கிள் ஓட்டுபவர்களையும் உற்சாகப்படுத்தலாம்.

· தவறு செய்யும் எம்டிசி பேருந்து ஓட்டுநர்களைக் கடிந்து காவல்துறை மீதான நம்பிக்கையை வளர்த்தெடுக்கலாம்.

· மோட்டார்வாகனச் சட்டம் பிரிவு 194எஃப் (பி)-ன்படி ஒரிஜினல் சைலன்சர்களை நீக்கும் ஆட்டோரிக்‌ஷாக்களின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் கொடுக்கலாம்.

· கார்களுக்குள் டாஸ்போர்டு கேமாராக்களை வைப்பதை ஊக்குவித்து விதிமீறல்களைப் படம்பிடிக்கலாம். கார் உதிரிப்பொருட்களை விற்கும் முகவர்களிடம் இது சம்பந்தமாகப் பேசி ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

· மோட்டார்வாகனச் சட்டப்படி அரசு முகமைகளைப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்களாக்க வேண்டும்.

· பிரிவு 198 (ஏ)-யின் படி, பாதுகாப்பற்ற சாலைகளைப் பற்றிய புகார்களைப் பொதுமக்களிடம் பெற வேண்டும். பின்னர் விசாரித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள், சாலைப் பாதுகாப்பு தர ஆலோசகர்கள் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். முதலில் இதற்கான காலக்கெடுவை நிர்ணயம் செய்ய வேண்டும். பின்பு தவறு செய்யும் வாகன ஓட்டிகளுக்கு அபராதங்கள் விதிக்கலாம்.

·எல்லா நடைமேடைகளையும் பெருநகரச் சென்னை மாநகராட்சியும் மாநில நெடுஞ்சாலைத் துறையும் சீர்படுத்த வேண்டும். ஆக்கிரமிப்பாளர்களை அகற்ற வேண்டும். சாலை ஓரங்களில் கட்டபட்ட மதம் சம்பந்தப்பட்ட சட்டத்திற்குப் புறம்பான அனைத்து கட்டுமானங்களையும் அகற்ற வேண்டும். மதம் சம்பந்தப்பட்ட கட்டுமானங்கள் வேறொரு இடத்திற்குப் பெயர்க்கப்பட வேண்டும்.

· சாலைச் சந்திப்புகளின் பராமரிப்பிற்கும், போக்குவரத்து சிக்னல்களின் பராமரிப்பிற்கும் அந்த எல்லைக்குள் இருக்கும் போக்குவரத்துக் காவல் நிலையத்தைப் பொறுப்பாக்க வேண்டும்.

தவறு செய்யும் எம்டிசி பேருந்து ஓட்டுநர்களைக் கடிந்து காவல்துறை மீதான நம்பிக்கையை வளர்த்தெடுக்கலாம்

· காவல்துறை அதிகாரிகளும் ஊழியர்களும் பெரிய சாலைவிதிமீறல் நிகழ்வைக் கண்டும் காணாமல் இருந்ததற்குப் பொதுமக்கள் சாட்சியம் தந்துவிட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

· சாலைகளில் லஞ்சம் வாங்கும் காவல்துறை அதிகாரிகளை உடனடியாகப் பணிநீக்கம் செய்ய வேண்டும்.

துரதிர்ஷ்டவசமாக அதிகரிக்கப்பட்ட அபராதங்கள் பெருந்தோல்வியில் முடியலாம். ஏனென்றால் பெரிய விபத்து அல்லது உயிரிழப்பு அல்லது படுகாயம் ஏற்படாத வரையில் விதிகளைப் பற்றிக் கவலைப்படாமல் சாவதானமாக சாலைகளில் பயணிக்கலாம் என்ற மனப்பான்மை பல வாகன ஓட்டிகளுக்கு இருக்கிறது. அவர்களின் வருமானமும் குறைவுதான். அவர்களிடம் எப்படி சாலை விதிமீறலுக்கான அதிகமான அபராதங்கள் வசூலிப்பது என்று போலீஸும் ஆர்டிஓக்களும் தயங்குகிறார்கள்.

மேலும் படிக்க: சென்னை மாநகராட்சி: அதிகரிக்கப்போகிறது பார்க்கிங் கட்டணம்

சாலைகளில் ஓடும் பெரும்பாலான வணிக வாகனங்கள் வெறும் காயலான்கடைச் சாமான்கள்தான். சாலை விதிமீறல்களுக்காக விதிக்கப்படும் அபராதங்கள் அவற்றின் சந்தை மதிப்பைவிட அதிகமாகலாம் என்று இரண்டு ஆர்டிஓக்கள் கூறினர்.

போக்குவரத்து விதிகளைக் கடுமையாக அமல்படுத்தும் கட்டமைப்பு நம்பத்தகுந்த ஒன்றாய், தொழில்முறை நேர்த்தி கொண்டதாக, பாகுபாடு அற்றதாக மாறுவதற்கும், சாலை உட்கட்டமைப்பு மேம்படுவதற்கும் ஓர் தரமான அணுகுமுறை தேவை.

அப்படி இல்லை என்றால், பொதுமக்களிடம் கோபம் அதிகரிக்கும். அதனால் சாலை விதிமுறைகளைக் கடுமையாக வலியுறுத்தும் விசயத்தில் ஒரு தளர்வு ஏற்படலாம். ஹெல்மெட் விதியில் அப்படித்தான் நிகழ்ந்தது.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival