Read in : English

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்த, ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் மாமன்னன் திரைப்படத்தின் படப்பிடிப்பு, சேலம் அருகே ஜருகு மலைப் பகுதியில் நடைபெற்றுவந்தது. சில நாள்களுக்கு முன்னர் நடிகர் இந்தப் படத்தின் படப்பிடிப்பிடையே நடிகர் வடிவேலுவின் பிறந்தநாளும் கொண்டாடப்பட்டது.

அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்துடன் படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றிருக்கிறது எனச் செய்தி வெளியாகியுள்ளது. உதயநிதி ஸ்டாலின் ஜருகு மலைவாழ் மக்களுக்கு உதவிகள் அளித்த செய்திகளும் வெளியாயின. இந்தச் செய்திகள் எல்லாம் மாமன்னன் திரைப்படம் தொடர்பான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

மாமன்னன் திரைப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பதற்குக் காரணம் இல்லாமலில்லை. ஓர் இயக்குநராக மாரி செல்வராஜ் தமிழ்த் திரைப்பட உலகில் அழுத்தமாகக் காலை ஊன்றியுள்ளார். அவரது பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தன.

மாரி செல்வராஜை, வணிகரீதியான வெற்றிப் படங்களைத் தொடர்ந்து கொடுத்துவரும் ஓர் இயக்குநர் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. மாரி செல்வராஜின் வெற்றி என்பது அவர் முன்வைக்கும் கருத்தியல் சார்ந்து  அழுத்தமான  படங்களைப் படைப்பது தொடர்பானது

இந்தச் சூழலில் தமிழக அரசியலில் கோலோச்சும் கட்சி ஒன்றின் தலைவரது மகனுடன் அடுத்த படத்தில் கைகோக்கிறார் என்ற செய்தி வெளியானது முதலே படம் பற்றிய ஊகங்களும் செய்திகளும் ரசிகர்களின் பேசுபொருள்களாயின. படத்தின் தலைப்பான மாமன்னன் என்பது பல சுவாரசியமான ஊகங்களை எழுப்பக்கூடியதாக இருக்கிறது.

மாரி செல்வராஜை, வணிகரீதியான வெற்றிப் படங்களைத் தொடர்ந்து கொடுத்துவரும் ஓர் இயக்குநர் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. மாரி செல்வராஜின் வெற்றி என்பது அவர் முன்வைக்கும் கருத்தியல் சார்ந்து அழுத்தமான படங்களைப் படைப்பது தொடர்பானது.

மாரி தான் நம்பும் கருத்தியலைப் பொது மக்களின் மனங்களில் விதைக்கும் வேலையைத் தான் தனது படங்களின் வழியே செய்துவருகிறார். ஒடுக்கப்பட்ட மக்களின் உள்ளக் குமுறலை உணர்ச்சிமிகு திரைக்கதையாக்கி அதைப் பொதுமக்களின் பார்வைக்குப் படைக்கும் படங்களையே மாரி செல்வராஜ் உருவாக்குகிறார்.

மேலும் படிக்க: மாற்றம் ஒன்றே மாறாததா?: பரியேறும் பெருமாள் காட்டும் நிகழ்கால நிஜங்கள்!

2018ஆம் ஆண்டில் வெளியான பரியேறும் பெருமாள் படம் சாதி பற்றிய செறிவான உணர்ச்சியை, அழுத்திவைக்கப்பட்டிருந்த மனப்புழுக்கத்தை தெள்ளிய நீரோட்டம்போல் திரையில் வெளிப்படுத்தியிருந்த விதம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அந்தப் படம் ஒடுக்கப்பட்டவரது வலியைச் சொல்லியிருந்தாலும், ஒடுக்குவோரின் செவிகளையும் சென்றடைந்தது. நீங்கள் செய்வது சரியா, நீங்கள் திருந்தாதவரை இந்தச் சமூகம் மாறப்போவதில்லை என்ற செய்தியையே பரியேறும் பெருமாள் முன்வைத்து நகர்ந்திருந்தது.

சாதி இழிவை ஒடுக்கப்பட்டோர் மாற்ற இயலாது, அது ஒடுக்குவோர் கவனத்தில் கொள்ள வேண்டிய வேலை என்பதை அக்கறையுடனும் சமூகப் புரிதலுடனும் முன்வைத்திருந்தது.

ஒடுக்கும் சமூகத்துடனான ஆக்கபூர்வ உரையாடலைக் கோரி நின்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதி என்னும் இடத்திலேயே அந்தத் திரைப்படத்தை வைக்க முடியும். பொதுச் சமூகத்தின் மனசாட்சியை உலுக்க வேண்டிய தேவையிருந்ததை உணர்ந்த மாரி செல்வராஜ் அதைத் தனது கைவசப்பட்ட கருவியான திரைப்படம் வழியே முடிந்த அளவு உலுக்கியிருந்தார்.

ஆனாலும், பரியேறும் பெருமாள் படத்தில் அவர் பேசியது, ஒரு மென்மையான குரலில். அதிர்ந்து பேசாமல் அவ்வளவு வலியையும் மௌனமாகவே உணர்த்திய படம் அது. அதனாலேயே அது பெருவாரியான வரவேற்பைப் பெற்றது. ஆனால், அந்த மென்மையான குரல் கர்ணனுக்குத் தேவைப்படவில்லை.

கர்ணன் ஆர்ப்பாட்டமானவன். அவனால் கொடுமைகளைக் கண்டு ஒதுங்கிப் போய்விடவோ, ஒன்றும் தெரியாததுபோல் காட்டிக்கொள்ளவோ இயலவில்லை. அவன் எரிமலையாக வெடித்தவன். சமூகக் கோபத்தைச் சந்நதம் கொண்ட சிறு தெய்வம் போல் வெளிப்படுத்தியவன். ஒரு பேருந்து நிலையத்தைக்கூட வழங்காமல் தனது சமூகத்தைப் பொதுச் சமூகம் வஞ்சிப்பதன் உள்ளார்ந்த காரணத்தைக் கற்றுக்கொண்டவன்.

பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் மாரி செல்வராஜ் ஒரு சமுதாயத்தின் பெரிய மனிதரிடம் சாதி என்னும் அழுக்குப் படிந்திருந்தால், அது ஒடுக்கப்பட்டோரை எப்படிப் பாதிக்கும் என்பதைச் சொல்லியிருந்தார். கர்ணனில், அதிகார வர்க்கத்தினரிடம் சாதிய வன்மம் வெளிப்பட்டால் அதனால் ஒடுக்கப்பட்டோரது வாழ்வு எப்படிச் சிதிலமடையும் என்று காட்டியிருந்தார்

அதனால்தான் அவனால் பரியனைப் போல் பொதுச் சமூகத்தின் பிரதிநிதியுடன் உட்கார்ந்த பேச இயலவில்லை; ஓங்கிக் கையுயர்த்திவிடுகிறான். நயவஞ்சகத்தை நயமான பேச்சு மாற்றிவிடும் என்பதில் அவனுக்கு நம்பிக்கை இல்லை. அவன் வாளேந்தப் புறப்பட்டவன்.

ஆயுதமாக அறியப்பட்ட ஒரு வாள், உண்மையில் யார் கையில் இருக்கிறது என்பதைப் பொறுத்துதான், அது ஆயுதமா கேடயமா என்பதை வரையறுக்க முடியும். ஒடுக்குபவர்களின் பக்கம் இருந்த கண்ணன் கையில் அது ஆயுதம், ஒடுக்கப்பட்டவர்களின் சார்பாக இருந்த கர்ணன் கையில் அது கேடயம். கேடயத்தை ஆயுதமாக மாற்ற வேண்டிய தேவையைக் கர்ணன் உருவாக்கவில்லை; கண்ணன் உருவாக்குகிறான். அடிப்படையில் கர்ணன் அவமானங்களைச் சகித்துக்கொள்ள முடியாதவன், அவற்றைத் துடைத்தெறிய பெரிய அளவில் போராடியவன்.

மொத்தத்தில், அவன் ஒரு போராட்டக்காரன். அதனால்தான் பரியனைப் போல் கர்ணன் தமிழ்ச் சமூகத்தில் உச்சிமுகரப்படவில்லை. கர்ணனைவிடப் பரியன் மேலானவன் என்ற முணுமுணுப்பு எழுந்ததன் காரணம் கர்ணனின் கோபாவேசம்தான்.

மேலும் படிக்க: சன் பிக்சர்ஸ், ரெட் செயிண்ட் மூவிஸ் திரைப்படத் துறையில் ஆதிக்கம் செலுத்துகிறதா?

கர்ணன் மீனை இரண்டு துண்டாக வெட்டிய பிறகு யானை மீது பவனி வருவான். அப்போது பின்னணியில், போராடடா ஒரு வாளேந்தடா பாடல் பிண்ணனியில் இசைக் கருவிகளால் மட்டும் இசைப்பட்டிருக்கும். அந்தப் பாடல் தெக்கத்தில் கிராமங்களில் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமை கீதமாகவே முழங்கிவருகிறது. பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் மாரி செல்வராஜ் ஒரு சமுதாயத்தின் பெரிய மனிதரிடம் சாதி என்னும் அழுக்குப் படிந்திருந்தால், அது ஒடுக்கப்பட்டோரை எப்படிப் பாதிக்கும் என்பதைச் சொல்லியிருந்தார்.

கர்ணனில், அதிகார வர்க்கத்தினரிடம் சாதிய வன்மம் வெளிப்பட்டால் அதனால் ஒடுக்கப்பட்டோரது வாழ்வு எப்படிச் சிதிலமடையும் என்று காட்டியிருந்தார். கர்ணன் படம் வெளியான நேரத்தில் படச் சம்பவங்களின் காலகட்டம் குறித்த சர்ச்சை எழுந்து ஓய்ந்தது. அதன் பிறகு, மாமன்னன் படத்தின் அறிவிப்பு வந்தது.

இதுவரை மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான, பரியேறும் பெருமாள், கர்ணன் இரண்டுமே ஒடுக்கப்பட்ட எளிய மனிதர்களின் வாழ்க்கையைத் திரையில் வெளிப்படுத்தியிருந்தன. அவற்றைப் பிரம்மாண்டமான திரை மொழியில் உணர்வுகொந்தளிக்கப் பேசியிருந்தார் மாரி செல்வராஜ். உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி படம் அவரை ஒரு சமூகநீதிப் போராளியாக முன்வைத்திருந்தது. இவர்கள் இருவரும் கைகோக்க உருவாகியுள்ளது மாமன்னன். ஆக, படம் முன்வைக்கும் அரசியல் குறித்து அறிய அனைவருமே ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.

ஒரு திரைப்படம் சாதிக்க சாதி மட்டுமே போதாது. அது சொல்லப்பட்ட விதம் திரைப்படக் கலைக்கு நெருக்கமாக இருக்க வேண்டும். முதலில் ஒரு திரைப்படம் ரசிகருக்குத் திரைப்படமாகத் திருப்தி தர வேண்டும். அப்படி திருப்தி தந்தால் மட்டுமே ரசிகரால் அதன் உள்ளடக்கத்தைக் கொண்டாட முடியும்.

உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி படம் அவரை ஒரு சமூகநீதிப் போராளியாக முன்வைத்திருந்தது. இவர்கள் இருவரும் கைகோக்க உருவாகியுள்ளது மாமன்னன்.  ஆக, படம் முன்வைக்கும் அரசியல் குறித்து அறிய அனைவருமே ஆர்வத்துடன் இருக்கிறார்கள்

திரைப்படமாக உருவாவதில் தோல்விபெற்றுவிட்டால் அதன் உள்ளடக்கம் எவ்வளவு சிறப்பானதாக இருந்தாலும் ரசிகர்கள் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டார்கள்.

இந்த அடிப்படை உண்மையை முழுக்க உணர்ந்தவராகத்தான் மாரி செல்வராஜ் இதுவரை இரண்டு படங்களைப் படமாக்கியுள்ளார். அவரது மூன்றாம் படம் மாமன்னன். முதல் இரண்டு படங்களிலும் யோகிபாபுவை தேர்ந்தெடுத்திருந்த மாரி செல்வராஜ் இந்தப் படத்தில் வடிவேலுவை நடிக்கவைத்திருக்கிறார்.

வடிவேலுவுக்கு தேவர் மகன் படத்தில் கிடைத்தது போன்ற குணச்சித்திர வேடம் கிடைத்திருக்கலாம். உதயநிதி ஸ்டாலின் நடிக்க வந்து பத்தாண்டுகளாகிவிட்டன. அவர் நடித்த படங்களில் அண்மையில் வெளியான நெஞ்சுக்கு நீதி படத்தை மட்டும்தான் அவர் நெஞ்சை நிமிர்த்திச் சொல்லிக்கொள்ள முடியும். அதுவும் மறு ஆக்கப்படமே. மற்றபடி ஒரு நடிகராகத் தனது கணக்கில் நல்ல படத்தைச் சேர்க்க உதயநிதி பிரியப்பட்டிருந்தால் அதற்கு மாமன்னன் சரியான தேர்வாக இருக்க முடியும்.

மாரி செல்வராஜ் மீதான மிகப் பெரிய நம்பிக்கை உருவாக அவரது இரண்டு படங்கள்தாம் காரணங்கள். அந்த வரிசையில் குறிப்பிடத்தகுந்தவனாக இருப்பானா மாமன்னன்? பரியேறும் பெருமாள், கர்ணன் இருவருக்கும் ஒரு சாதிய அடையாளம் இருந்தது. அவர்கள் இருவருமே ஒடுக்கப்பட்டவர்கள். மாமன்னன் சாதி கடந்தவனோ, சாதிய இழிவுக்கு எதிராகப் போராடுபவனோ?

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival