Read in : English

நாடு சுதந்திரம் அடைந்த நாளில் இருந்து, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக தொல்லியல் ஆய்வுகள் நடத்தப்பட்டு வந்தாலும், தொல்லியல் என்பது ஆய்வாளர்களிடையேயும், அறிஞர்களிடையேயும் மட்டுமே பேசுபொருளாக, பத்தாண்டுகளுக்கு முன்புவரை இருந்துவந்துள்ளது. எனினும், தற்போது பல மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. சமூக வலைதளங்கள் மற்றும் பல தொல் பாரம்பரியக் குழுக்களின் உருவாக்கத்தின் மூலமாக, இந்த விஷயத்தின் மீதான புதிய பார்வை ஏற்பட்டுள்ளது. ஆனால் இன்னும் கூட, பாரம்பரியத்தின் மீதும், வரலாற்றின் மீதும் நடத்தப்பட்டு, கல்வி இதழ்களில் பிரசுரிக்கப்பட்டாலும், அவை பொதுமக்கள் அணுகும் நிலையில் இல்லை. இந்தச் சிக்கலுக்கு தீர்வு காணும் பொருட்டு, 2019-ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம், இருமொழி இதழான (ஆங்கிலம் மற்றும் தமிழ்) ‘சாசனம்’ என்னும் இதழை அறிமுகப்படுத்தியது.

‘சாசனம்’ இதழின் ஐந்தாவது தொகுதி வெளியானதும், “தமிழ்நாட்டில் எந்தெந்த இடங்களில் எல்லாம் தொல்லியல் அகழாய்வுகள் நடக்கின்றன என்பதை, ஆண்டுக்கு இருமுறை வெளியாகும் ‘சாசனம்’ இதழ் தெளிவாக்குகிறது என்பதில் மகிழ்கிறேன்” என்றார் அதன் ஆசிரியர் சுகவன முருகன்.

தமிழ்நாட்டில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிச்சநல்லூர், இரும்புக்கால தாழிகள் கண்டெடுக்கப்பட்ட இடமாக பிரபலமடைந்த ஒன்று. தற்போதைய ‘சாசனம்’ தொகுதியில், ஆதிச்சநல்லூரில், இரும்புக்கால தாழிப் புதையிடம் குறித்து, இந்தியத் தொல்லியல் துறையை (திருச்சி வட்டம்) சேர்ந்த டி அருண்ராஜ், விபி யதீஷ் குமார், வி முத்துக்குமார் ஆகியோர் எழுதியுள்ளனர். 17 ஆண்டு கால இடைவெளிக்குப் பின், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஏ.எஸ்.ஐ திருச்சி வட்டம், 2021-ஆம் ஆண்டு, அக்டோபர் 10-ஆம் தேதி ஆதிச்சநல்லூரில் மீண்டும் புதிதாக தொல்லியல் ஆய்வைத் தொடங்கியது. புவியியல் மற்றும் தொல்லியல் அம்சங்களை அடிப்படையாக வைத்து, மொத்த மண்மேடும் மூன்று வெவ்வேறு இடங்களாக (அ, ஆ, இ) பிரிக்கப்பட்டுள்ளது.

2019-ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம், இருமொழி இதழான (ஆங்கிலம் மற்றும் தமிழ்) ‘சாசனம்’ என்னும் இதழை அறிமுகப்படுத்தியது.

“பொருள் ரீதியான அடையாளங்கள் மற்றும் பண்பாட்டு வரிசை நிகழ்வுகள் ஆகியவற்றை மீண்டும் ஆய்வு செய்வதே, தற்போதைய அகழாய்வின் முக்கிய குறிக்கோளாகும். சமீபத்தில் வெளியுலகுக்கு வந்த இந்தத் தொல்லியல் ஆய்வுகள், தனியான அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. நான் முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்” என்கிறார்கள் ஆசிரியர்கள். உயர் தெளிவுத்திறனுடனுடன், பட விளக்கங்களுடன், ஆதிச்சநல்லூரில், ஒவ்வொரு தொல்லியல் படிநிலைகளையும் ஆசிரியர்கள் விளக்கியிருக்கிறார்கள்.

அகழாய்வுக்குப் பின், உடனடியாக வெளியிடப்படும் செய்தி அறிக்கையை அடிப்படையாக வைத்து செய்தித்தாள்களும், இதழ்களும் கட்டுரைகள் எழுதி வெளியிட்டாலும், அவை பெரும்பாலும் நிறைவுறாத தகவல்களுடனே நின்றுவிடுகிறது. இங்குதான், ‘சாசனம்’ போன்ற தொல்லியல் இதழ்கள் செயல்படுகின்றன என்கிறார் சுகவன முருகன். “நமக்குப் பங்களிக்கும் கட்டுரைகளில் கல்வி ரீதியான வாசகங்களைத் தவிர்க்குமாறு நான் ஆசிரியர்களிடம் சொல்லி வருகிறேன். ‘சாசனம்’ ஒரு இடைப்பட்ட இடத்தின் நின்று, கல்வி இதழ்களுக்கும், பாதித் தகவல்களைக்கொண்ட செய்தித்தாள்களுக்கும் இடையே பாலமாக செயல்படுகிறது” என்றார்.

மேலும் படிக்க:

தமிழ்நாட்டில் சிதிலமடைந்து கிடக்கும் புத்த, சமண ஸ்தலங்கள்

இராஜராஜ சோழனின் ஈழ காசுகளை கண்டெடுத்த பள்ளி மாணவி; பழங்கால பொருட்களை கண்டறிய உதவிய பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் பயிற்சி 

”ஓவியங்கள், கற்பாறை செதுக்கு வேலைகள் மற்றும் பழனி குன்றுகள்” என தலைப்பிடப்பட்ட மற்றொரு கட்டுரையில், ஏ.எஸ்.ஐ அறிஞர்கள் ஆர்.என் குமரன், எம். சரண்யா மற்றும் பி.முருகன் ஆகியோர், ’பல்வேறு தரப்பட்ட தாவரங்களும், உயிர்களும் கொண்ட நிலப்பரப்பின் வளர்ச்சிக்கு வழிவகுத்து, மேற்குத் தொடர்ச்சி மலையின் வெளிப்புறத் தொடராக அமைந்திருக்கக்கூடிய, தனித்த பகுதியான பழனி குன்றுகள்’ என்கிறார்கள். இந்த ஆசிரியர்கள் 17 தளங்களைக் குறித்துப் பேசுகிறார்கள். அவை பெரும்பாலும் பழனி மலையின் பாறை குடையப்பட்ட தங்குமிடங்களாகவும், குகைகளாகவும் உள்ளன. அவற்றில் வரலாற்றில் முந்தைய காலங்களில் செதுக்கப்பட்ட பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன. “பழனி மலை ஓவியங்கள் பலவிதமானதாக உள்ளன.

வேட்டையாடுவது, களித்திருப்பது, வருந்துவது, வணிகம் செய்வது என பல வகையான மனித இயல்புகளை பறைசாற்றுவதாக உள்ளன. பாறைக் குகைகளின் முன்பகுதியில் பெரும்பாலான ஓவியங்கள் இருக்கும்படி தீர்மானிக்கப்பட்டு வரையப்பட்டுள்ளன. அவையனைத்தும் நேரடியான சூரிய ஒளியைத் தவிர்க்கும் இடங்களாகவே உள்ளன” என்று குறிப்பிடுகிறார்கள்.

அவரது கட்டுரையில், மூத்த கல்வெட்டு நிபுணர் எஸ். ராஜவேலு, அறிவியல் தரவுகள் மற்றும் ஏனைய கூட்டு ஆதாரங்களின் துணையுடனும், பண்டைய தமிழகத்தின் எழுத்தறிவைக் குறித்துப் பேசுகிறார். எழுத்து ஆவணங்களுக்கான பண்டைய ஆதாரமாக, சிந்து சமவெளிப்பகுதியில் இருந்து முத்திரை வடிவங்களாக மீட்கப்பட்டிருந்தாலும் கூட, வடிவங்களைத் தாங்கிய ஓவியங்களுடனான 400 முத்திரைகளைப் புரிந்துகொள்வதில் இப்போது வரை வெற்றி கிடைக்கவில்லை.

தமிழ்நாட்டில் எந்தெந்த இடங்களில் எல்லாம் தொல்லியல் அகழாய்வுகள் நடக்கின்றன என்பதை, ஆண்டுக்கு இருமுறை வெளியாகும் ‘சாசனம்’ இதழ் தெளிவாக்குகிறது

எனினும், ராஜவேலுவின் கூற்றுப்படி, ஹரப்பா நாகரிகம், திராவிட நாகரிகம் என்றும், முத்திரையின் மீதிருக்கும் எழுத்துக்கள், தமிழுடன் தொடர்புடைய திராவிட எழுத்துகளின் முன்வடிவம் என்றும் அறிஞர்கள் கருதுவதாகக் குறிப்பிடுகிறார். “அந்தக் குறிப்புகள் புரிந்துகொள்ளப்பட்டு, ஏற்கப்படுமாயின், எழுத்துப்பூர்வமான இந்திய வரலாறு என்பது இன்றிலிருந்து 6000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே தொடங்கப்பட்டிருக்கவேண்டும். அதுவரையில், இந்திய எழுத்து வடிவங்களின் தாயாகவும், கிபி 4-ஆம் நூற்றாண்டின் இலங்கை பிராமி வடிவம் உட்பட கிபி 600-களில் தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் பரவலாகவும் இருந்த ‘தமிழி’ (தமிழ் பிராமி) வடிவத்தைச் சார்ந்து இருக்கவேண்டியுள்ளது. ராஜவேலுவைப் பொறுத்தவரை, பிரிட்டிஷார் காலத்தில் இருந்து, வடநாட்டில் “ராமாயண” “மஹாபாரத” தளங்கள் அகழாய்வு செய்யப்பட்டாலும், அந்த இடங்களில் ’பிராமி’ வடிவங்கள் கண்டெடுக்கப்படவில்லை.

“அதன் மூலம் தெரிய வருவது என்னவெனில், கிபி 4-ஆம் நூற்றாண்டு வரை, வட இந்தியப் பகுதியில் அப்படியான எழுத்து முறைகள் இல்லை என்றே தெரிகிறது” என்றார்.

‘சாசனம்’ தற்போதைய இதழில், ஆங்கிலத்தில் 13 ஆய்வுக் கட்டுரைகளும், தமிழில் 9 ஆய்வுக் கட்டுரைகளும் உள்ளன. ஒரு நடுகல் நிபுணராக, தமிழ்நாட்டின் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் நடுகற்களை ஆவணப்படுத்தியிருக்கிறார். கேரளாவிலும், கர்நாடகத்திலும் பல வரலாற்று, தொல்லியல் இதழ்கள் வெளிவந்தாலும்கூட, தமிழ்நாட்டில் இதுதான் முதல்முயற்சியாக இருக்கிறது. “இன்டர்நெட்டின் சாதகமான நிலையிலும், வலைப்பூக்களின் மேம்பாட்டின் காரணத்தாலும், இதழ்களை நூல்களாக அச்சிட்டு வெளியிடுவதென்பது, விலை உயர்ந்த செயல்பாடாக மாறியிருக்கிறது.

தரத்தில் உயர்ந்த காகிதத்தைக் கொண்டு இந்த இதழ்களை அச்சுக்கு கொண்டுவந்திருப்பது, ஆய்வாளர்களுக்காகவும், வாசகர்களுக்காகவும் இது பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே” என்கிறார் சுகவன முருகன்.

 

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival