Read in : English

நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவில் அமைந்துள்ள தேனம்பாடி என்னும் மலை கிராமத்தைச் சேர்ந்த ஷோபா (37), பெட்ட குறும்பர் பழங்குடி இனத்தவரில் முதுநிலைப் பட்டம் பெற்ற முதல் பெண்.
விளிம்பு நிலைக் குடும்பத்தைச்சேர்ந்த ஷோபா மதன், சோஷியல் ஒர்க் பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டப் படிப்பை முடித்த பிறகு, தற்போது நீலகிரி மலைப் பகுதியில் உள்ள நீலகிரி குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்கள் கூட்டமைப்பு (Nilgiris Particularly Vulnerable Tribal Groups Federation) மூலம் விளிம்பு நிலை பழங்குடி மக்களின் உரிமைக்காகப் பாடுபட்டு வருகிறார்.

“எங்களது அப்பா மதன் நான்காம் வகுப்பு வரைப் படித்தவர். அவர் விவசாயக் கூலி வேலை செய்து வந்தார். அம்மா பொம்மி பள்ளிப் படிப்பையே எட்டாதவர். எங்களது அப்பா, எங்களை எப்படியாவது படிக்க வைக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தவர். அதனால், எங்களுக்குக் கதைப் புத்தகங்களை வாங்கித் தருவார். அம்பலமூலாவில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரைப் படித்தேன். பத்தாம் வகுப்புத் தேர்வில் 500க்கு 342 மதிப்பெண்கள் பெற்றார். பின்னர் செயின்ட் தாமஸ் மேல்நிலைப் பள்ளியில் தாவரவியல், விலங்கியல், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்தேன்.

அதையடுத்து மற்றவர்களின் உதவியுடன்தான் நான் கல்லூரிப் படிப்பைப் படிக்க முடிந்தது. அத்துடன், அப்பா கடன் வாங்கி எங்களைப் படிக்க வைத்தார். அதையடுத்து, 2005ஆம் ஆண்டில் ஊட்டியில் எமரால்ட் ஹைட்ஸ் காலேஜ் ஃபார் உமன் கல்லூரியில் பிஎஸ்சி அனிமல் சயின்ஸ் அண்ட் பயோ டெக்னலாஜி படிப்பில் சேர்ந்தேன். அதைத் தொடர்ந்து 2008இல் தாம்பரத்தில் உள்ள சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் சோஷியல் ஒர்க்கில் முதுநிலைப் பட்டம் பெற்றேன்” என்கிறார் ஷோபா.

விளிம்பு நிலைக் குடும்பத்தைச்சேர்ந்த ஷோபா, சோஷியல் ஒர்க் பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டப் படிப்பை முடித்த பிறகு, நீலகிரி குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்கள் கூட்டமைப்பு மூலம் நீலகிரி பழங்குடி மக்களின் உரிமைக்காகப் பாடுபட்டு வருகிறார்

சோஷியல் ஒர்க் படித்த ஷோபாவுக்கு சமூக சேவையில் நாட்டம் ஏற்பட்டது. அதையடுத்து, பல்வேறு தொண்டு நிறுவனங்களில் வேலை செய்தார். 2009ஆம் ஆண்டில் கிறிஸ்துவக் கல்லூரியின் சோஷியல் ஒர்க் துறையின் கீழ் செயல்பட்ட சென்டர் பார் இன்டர்நேஷனல் சோஷியல் ஒர்க் அமைப்பின் சார்பில் மென்டல் ஹெல்த் திட்டத்தில் திட்ட அதிகாரியாகப் பணியாற்றினார். 2010ஆம் ஆண்டில் வேலூரைச் சேர்ந்த ரெஸ்ட்லஸ் டெவலப்மெண்ட் என்ற தொண்டு நிறுவனத்தில் பள்ளி மாணவர்களிடம் எச்ஐவி எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் தன்னார்வலராகச் செயல்பட்டார். 2013இல் வோல்ட்வைட் ஃபண்ட் பார் நேச்சர் இந்தியா ((WWF- INDIA) அமைப்பு சார்பில், வயநாடு வனஉயிரின சரணாலயத்தில் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் (Human Wildlife Conflict) இடையேயான மோதல் குறித்து ஆராய்ச்சி செய்தார்.

மேலும் படிக்க:

பிஎச்டி படிக்கும் இருளர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த முதல் பெண்! 

அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படிப்பு, மாலத்தீவுகளில் கேட்டரிங் வேலை!

நீலகிரி மாவட்டம் கடலூர் வன கோட்டத்தில் மனிதர்களும் யானைகளுக்கும் இடையே மோதலை (Human elephant conflict) தவிர்ப்பதற்கான மேலாண்மை குறித்த சர்வேயை 2012இல் மேற்கொண்டார். 2013லிருந்து 2014 வரை ரீட் (READ – Rights, Education and Development)) என்ற அமைப்பின் திட்ட மேலாளராக இருக்கும்போது, திருப்பூரில் ஜவுளித் தொழிற்சாலைகளில் சுமங்கலி திட்டத்தின் கீழ் வேலை செய்யும் இளம் பெண்களின் நிலை குறித்த ஆய்வுத் திட்டத்தை மேற்கொண்டார்.

சோஷியல் ஒர்க் படித்த ஷோபாவுக்கு சமூக சேவையில் நாட்டம் ஏற்பட்டது.

கல்பாக்கம், சதுரங்கப்பட்டினம், சென்னை ஆகிய இடங்களில் உள்ள மீனவர்களின் மென்டல் ஹெல்த் குறித்த அடிப்படை ஆராய்ச்சியையும் மேற்கொண்டார்.

இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு கருத்தரங்குகளிலும் பயிலரங்குகளிலும் பங்கேற்றவர் ஷோபா. 2015இல் பிரேஸில் நாட்டில் நடந்த இரண்டு மாத அரசியல் பயிற்சி முகாமில் (Political Training for Political Educators) பங்கேற்றார். அங்கு இருந்த இரண்டு மாத காலத்தில் பழங்குடியினரின் உரிமைகள் குறித்தப் புரிதல் ஏற்பட்டதாகக் கூறுகிறார் ஷோபா.

இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு கருத்தரங்குகளிலும் பயிலரங்குகளிலும் பங்கேற்றவர் ஷோபா. 2015இல் பிரேஸில் நாட்டில் நடந்த இரண்டு மாத அரசியல் பயிற்சி முகாமில் (Political Training for Political Educators) பங்கேற்றார்

2016இல் தாய்லாந்தில் நடைபெற்ற இளம் விவசாயத் தலைவர்களுக்கான முகாமில் பங்கேற்றார். அதே ஆண்டில் துருக்கியில் நடைபெற்ற இளைஞர் முகாமிலும் பங்கேற்றார். வங்க தேச விவசாயிகள் பெடரேஷன் சார்பில் வங்கதேசத்தில் நடைபெற்ற தெற்காசிய மாநாட்டில் பங்கேற்றார். சு008இல் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் விளிம்பு நிலை மக்களுக்காகச் செயல்படும் சர்வதேச அமைப்புகளைப் பார்வையிட்டார்

2016லிருந்து நீலகிரி குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்கள் கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றி வருகிறார். 2018லிருந்து நீலகிரி மாவட்டம் பழங்குடியினர் வளர்ச்சிக் கவுன்சில் உறுப்பினராகவும் இருந்து வருகிறார் ஷோபா.

“பெட்ட குறும்பர் என்பது நீலகிரி மாவட்டத்தில் வாழும் பழங்குடி இனமாகும். நீலகிரி கூடலூர் பகுதியில் 8 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இதேபோல, வேறு சில பழங்குடியினரும் அந்தப் பகுதிகளில் வசித்து வருகிறார்கள். அனைத்துப் பழங்குடியினரும் விளிம்பு நிலையில் உள்ளவர்கள். அந்தப் பழங்குடி இனத்தவர்களில் படிப்பறிவு பெறுவது என்பது அபூர்வமானது. அண்மைக் காலத்தில்தான் இந்தப் பழங்குடி இனத்திலிருந்து சிலராவது பட்டப் படிப்பை படித்துள்ளனர். ஆனாலும், அவர்களுக்கு அரசாங்க வேலை கிடைக்காத சூழ்நிலையில் தோட்டங்களிலும் மில்களிலும் வேலை செய்யப் போக வேண்டியுள்ளது. பழங்குடியினரின் கல்வியிலும் அவர்களது பாரம்பரிய மொழிகள் அழிந்துவிடாமல் காப்பதற்கும் பல்வேறு பணிகளைச் செய்து வருகிறோம். காடுகளைப் பாதுகாக்கும் பூர்வக் குடியினரான பழங்குடி மக்கள் கல்வி, பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ளனர்.

அவர்களது உரிமைக்காகத் தொடர்ந்து போராடி வருகிறோம். பழங்குடி மக்களின் கல்விக்காகவும் அவர்களது பாரம்பரிய மொழிகள் அழியாமல் பாதுகாப்பதற்கும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். பழங்குடி மக்களின வாழ்வாதாரம் காட்டைச் சார்ந்தது. அரசின் திட்டங்களும் பழங்குடி மக்களுக்கு சாதகமாக இருக்க வேண்டியது அவசியம். பழங்குடி மக்கள் நமது ஆள்பவர்களிடம் எதிர்பார்த்து நிற்பது சலுகையல்ல, உரிமைகள்.

அவர்கள் கண்ணியத்தோடும் மனித உரிமைகளோடும் வாழ உரிமையுள்ளவர்கள். பழங்குடியினரின் வரலாறு, அவர்களது உரிமைகள், குறித்து `’எங்கள் வனத்தின் கனவு’ என்ற புத்தகத்தை தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளிலும் நீலகிரி குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்கள் கூட்டமைப்பின் சார்பில் கொண்டு வந்து இருக்கிறோம்” என்கிறார் குரலற்றவர்களுக்காகக் குரல் கொடுத்து வரும் ஷோபா.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival