Read in : English
பொதுவாக கோயில் தேர்த்திருவிழாவின் போது தமிழ்நாடு மின்வாரியத்தின் தரமான இயங்குவிதி என்பது ஊர்வலம் போகும் வீதிகளில் மேலே தொங்கும் கேபிள்களில் மின்சாரத்தை நிறுத்திவிடுவதுதான் என்று சொன்னார் பி. முத்துசாமி. அவர் தமிழ்நாடு மின்சாரக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் முன்னாள் பொறியியல் இயக்குநர்.
ஒரு கோயில் தேர்த்திருவிழாவை நடத்துவதற்கான அனுமதியை மின்வாரியம்தான் தரவேண்டும் என்பது விதி. அனுமதி வழங்கிய பின்பு தேர் ஊர்வலத்தின் போது மேலே ஆடும் மின்கம்பிகளில் மின்னுயிர்ப்பு இல்லை என்பதை மின்வாரியம் உறுதிப்படுத்திக் கொள்ளும் என்று அவர் மேலும் கூறினார்.
புதன்கிழமை (ஏப்ரல் 27) அன்று காலை தஞ்சாவூருக்கு அருகே கலிமேட்டில் நடந்த கோயில் தேர்த்திருவிழாவில் மின்சாரம் ஓடிக்கொண்டிருந்த மின்கம்பிகளைத் தேர் தொட்டதால் மூன்று குழந்தைகள் உட்பட 11 பேர் மின்சாரம் தாக்கி இறந்திருக்கிறார்கள்; பலர் காயமடைந்திருக்கிறார்கள். அந்த வயர் உயரழுத்த கம்பி என்று செய்திகள் சொல்கின்றன. ஒரு திருப்பத்தில் வளைந்து செல்வது சிரமமாக இருந்ததால் தேர் சற்று பின்னோக்கி வர வேண்டியதாயிற்று. அப்படி பின்னால் வரும்போதுதான் மேலிருந்த மின்கம்பிகள் தேர்மீது பட்டன என்று சொன்னது ஒருசெய்தி.
மின்வாரிய அதிகாரிகள் உட்பட அரசு அதிகாரிகளுக்கு இந்தக் கோயில் தேர் ஊர்வலம் பற்றி சரியான முன்தகவல் இல்லை; அல்லது தகவலே இல்லை என்பது தெரிகிறது. அல்லது அரசு அதிகாரிகளிடமிருந்த அலட்சியம்தான் இந்த விபத்திற்குக் காரணமாகியிருக்கலாம்.
பொதுவாக கோயில் தேர்த்திருவிழாவின் போது தமிழ்நாடு மின்வாரியத்தின் தரமான இயங்குவிதி என்பது ஊர்வலம் போகும் வீதிகளில் மேலே தொங்கும் கேபிள்களில் மின்சாரத்தை நிறுத்திவிடுவதுதான்.
ஒரு கோயில் தேர்த்திருவிழாவை அனுமதிக்கும்போது, குறிப்பிட்ட கிராமத்தில் இருக்கும் தாழ்வழுத்த மின்கம்பிகளை அணைத்துவிட வேண்டும் என்பது தரமான இயங்குவிதி என்றார் முத்துசாமி. ஒருவேளை மின்கம்பிகள் உயரழுத்தம் கொண்டவையாக இருந்தால், அதாவது அதிக ஆற்றல் மின்சாரத்தைச் சுமந்துகொண்டு பல கிராமங்களுக்கு மின்வினியோகம் செய்யும் வயர்களாக இருந்தால், மின்வாரியம் மாற்று ஏற்பாடு ஒன்றைச் செய்யவேண்டும். மற்ற கிராமங்களுக்கு மின்சார வினியோகத்தைத் தொடர்ந்து செய்துகொண்டு, அதேசமயம் குறிப்பிட்ட கிராமத்தில் செல்லும் கோயில்தேர் வீதிகளில் மட்டும் இருக்கும் கேபிள்களின் மின்னோட்டத்தை நிறுத்திவிடலாம் என்று கருதினார் அவர்.
விபத்தின் கடுமையைப் பார்த்தால், மேலிருந்த கேபிள் உயரழுத்த வயராகத்தான் இருக்க வேண்டும் என்றார் அவர்.
உயரழுத்த வயர்கள் 3.3 கிலோவோல்ட் அளவுக்கு உயர்ந்த ஆற்றல் மின்சாரத்தைச் சுமக்கும் வல்லமை கொண்டவை. இந்த வயர்களின் ஏற்படும் மின்கசிவு மிகவும் ஆபத்தானது. அல்லது தேர் போன்ற ஏதாவது ஒருபொருள் அந்த வயர்களில் பட்டுவிட்டால் அந்தப் பொருளுக்குள் மின்சாரம் பெருமளவில் பாய்ந்துவிடும். உயரழுத்த கேபிள்கள் மின்சாரத்தை மின்நிலையங்களிலிருந்து உபநிலையங்களுக்குக் கொண்டுவருகிறது. உபநிலையங்களில் மின்சாரத்தின் ஆற்றல் மட்டுப்படுத்தப்பட்டு வீடுகளுக்கு மின்சாரம் தாழ்வழுத்த கம்பிகள் மூலம் வழங்கப்படுகிறது.
கோயில் தேரால் தொடமுடிகிற அளவுக்கு உயரத்தில் அந்த மின்கம்பிகள் இருந்திருக்க வேண்டும் என்றார் முத்துசாமி. அதனால்தான் அந்த மாதிரியான ஊர்வலங்களுக்கு மின்வாரியத்தின் அனுமதி கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. அப்போது மின்சாரத்தைக் குறிப்பிட்ட பகுதியில் அணைத்துவிட வசதியாகவும் இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
அந்த வயர்கள் தளர்ந்து இறுக்கம் இழந்திருக்கலாம் என்பது போன்ற கேள்விகளும் எழுப்பப்படுகின்றன. ஆனால் அவை எல்லாம் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை.
சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்சன் குரூப்பில் இருக்கும் முது ஆராய்ச்சியாளரான விஷ்ணு ராவ், தரைக்கடியில் புதைக்கப்படும் கேபிள்கள் பற்றிய சாத்தியத்தை ஆராய்ந்தால் என்ன என்று இந்தத் துயரநிகழ்ச்சி கேள்வி எழுப்புகிறது என்று கருத்து சொன்னார். பூமிக்கடியிலான கேபிள்கள் பாதுகாப்பானவை; அபாயம் குறைந்தவை. என்றாலும் ஒரு சின்ன சிக்கல் அதிலும் உண்டு. பூமிக்கடியில் புதைத்த கேபிள்கள் மூலம் மின்சாரம் வினியோகிக்கப்படும் சென்னை போன்ற மாநகரங்களில் அடிக்கடி நிகழ்வது போல, கேபிளில் பழுது வந்தால் சாலைகளை அடிக்கடி தோண்ட வேண்டியிருக்கும்.
மேலே திறந்துகிடக்கும் மின்கம்பிகளுக்குப் பதில் காற்றுவெளிப் பொட்டல மின்கம்பி (ஏரியல் பண்டுல்டு கேபிள் – ஏபிசி) மின்கடத்திகளைப் பயன்படுத்தும் பாதுகாப்பான தொழில்நுட்பம் உலகம் முழுவதும் பேர்பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த ஏபிசி மின்கடத்திகளில் மெல்லிய வயர்கள் ஒன்றுபோல இணைக்கப்பட்டிருப்பதால் தஞ்சாவூரில் நடந்ததைப் போன்று விபத்து எதுவும் நிகழ வாய்ப்பில்லை.
பூமிக்கடியிலான கேபிள் அதிகச் செலவை உண்டாக்கும்தான். ஆனால் அதற்கேற்ற வருமானமும் மாநகரங்களில் வரத்தான் செய்கிறது என்றார் முத்துசாமி. ஆனால் கிராமங்களில் பூமியடிக் கேபிள் புதைப்பது சாத்தியமில்லாமல் இருக்கலாம்.
புயலடிக்கும் அபாயம் கொண்ட கடலோரப் பகுதிகளில் மேலே பொருத்திய கேபிள்களைப் பூமிக்கடியில் மாற்றிவிடுவதற்கான திட்டம் ஒன்று உலக வங்கி உதவியுடன் தீட்டப்பட்டிருக்கிறது. கடலோர இடர் அபாயம் குறைக்கும் திட்டம் என்று அதற்குப் பெயர். ஆனால் இந்தத் திட்டத்தின் இலக்கு கடலூர், நாகப்பட்டினம், மற்றும் வேளாங்கண்ணி ஆகிய ஊர்கள் மட்டுமே.
மேலே திறந்துகிடக்கும் மின்கம்பிகளுக்குப் பதில் காற்றுவெளிப் பொட்டல மின்கம்பி (ஏரியல் பண்டுல்டு கேபிள் – ஏபிசி) மின்கடத்திகளைப் பயன்படுத்தும் பாதுகாப்பான தொழில்நுட்பம் உலகம் முழுவதும் பேர்பெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த ஏபிசி மின்கடத்திகளில் மெல்லிய, தனித்த பாதுகாப்பான வயர்கள் ஒன்றுபோல இணைக்கப்பட்டிருப்பதால் தஞ்சாவூரில் நடந்ததைப் போன்று விபத்து எதுவும் நிகழ வாய்ப்பில்லை.
அந்த மின்கடத்திகள் உண்மையிலே பாதுகாப்பானவை; பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்படுகின்றன; ஆனால் என்ன அதிக அவை விலை கொண்டவை என்றார் முத்துசாமி.
Read in : English