Read in : English
தஞ்சாவூருக்கு அருகே களியமேடு கிராமத்தில் ஏப்ரல் 27 அன்று நிகழ்ந்த கோயில் தேர்த்திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி மூன்று குழந்தைகள் உட்பட 11 பேர் இறந்துவிட்டனர். இந்தியாவில் ஆண்டுதோறும் பலஉயிர்களைக் காவுகொள்ளும் மதநிகழ்வுகளின் பட்டியலில் இன்று இந்தத் தஞ்சாவூர் துயரமும் சேர்ந்துகொண்டது.
தேரில் பொருத்தப்பட்டிருந்த சீரியல் மின்விளக்குகளில் ஜொலித்த ஒரு பெரிய கட்-அவுட் மேலே தொங்கிக்கொண்டிருந்த அதீத ஆற்றல் கொண்ட மின்கம்பிகளுடன் மோதி தீப்பிடித்ததுதான் விடியலுக்கு முன்பு நிகழ்ந்த மரணங்களுக்கான வெளிப்படையான காரணம். அதுவொரு நடுத்தரமான, உடையும் நிலையிலிருந்த தேர்; அதனுள் சைவக்குரவர் திருநாவுக்கரசர் என்ற அப்பர் உருவச்சிலை வைக்கப்பட்டிருந்தது. இதெல்லாம் எரிந்த தேரின் படங்கள் சொல்லும் செய்தி. விழா அமைப்பாளர்கள் உள்ளூர் பிரார்த்தனை மன்றத்தினர் என்று ஊடகச்செய்திகள் சொல்கின்றன.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநில ஆளுநர் ஆர்.என்.ரவி, மற்றும் ஒன்றிய அரசு அமைச்சர்கள், பாஜக, அஇஅதிமுக நிர்வாகிகள் ஆகியோர் இந்தத் துயரச்சம்பவத்திற்கு தங்கள் இரங்கல்களையும், வருத்தத்தையும் தெரிவித்திருக்கிறார்கள். வழமையான கண்ணீர் அஞ்சலிகளையும் தாண்டி, இறந்துபோனவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.எட்டு லட்சம் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த எட்டு இலட்சத்தில் மாநிலஅரசுப் பங்கு ரூ. 5 இலட்சமும், பிரதமர் கொடுக்கும் ரூ. 2 இலட்சமும், அஇஅதிமுகவின் பங்கு ரூ. 1 இலட்சமும் அடங்கும்.
சம்பிரதாயமான இரங்கல் வாசகங்களுக்கு அப்பால் யோசித்துப் பார்த்தால், நாட்டில் நடக்கும் மதச்சடங்குக் கூட்டங்களில், விபத்துகள், குறிப்பாக தீவிபத்துகளும் தள்ளுமுள்ளுகளும் ஒரேபாணியில் வடிவம் மாறாமல் நிகழ்கின்றன என்பது புரியும்.
தேரில் பொருத்தப்பட்டிருந்த சீரியல் மின்விளக்குகளில் ஜொலித்த ஒரு பெரிய கட்-அவுட், மேலே தொங்கிக்கொண்டிருந்த அதீத ஆற்றல் கொண்ட மின்கம்பிகளுடன் மோதி தீப்பிடித்ததுதான் விடியலுக்கு முன்பு நிகழ்ந்த இந்த மரணங்களுக்கான வெளிப்படையான காரணம்.
இந்த வருடம் ஜனவரி 1-ஆம் தேதி அதிகாலை காட்ராவில் வைஷ்ணவி தேவிக் கோயிலில் நிகழ்ந்த தள்ளுமுள்ளில் 12 பேர் இறந்த துயரச்சம்பவத்திற்கு பிரதமர் ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவித்தார். ஏப்ரல் 12 அன்று திருப்பதி திருமலைக் கோயிலில் இலவசத் தரிசன டிக்கெட்டுகள் வாங்க ஏற்பட்ட கூட்டநெரிசலில் நல்லவேளையாக மூன்றுபேர் மட்டுமே காயமடைந்தனர்.
இந்தியாவில் 79 சதவீத கூட்டநெரிசல்கள் மதச்சடங்குக் கூட்டங்களிலும், புனித யாத்திரைகளிலும் நிகழ்வதாக ஓர் ஆய்வு சொல்கிறது. மதநிகழ்வுகளில் ஏற்படும் கூட்ட மரணங்களுக்கு தஞ்சாவூர் ஒரு களமாகவே இருந்திருக்கிறது. புகழ்பெற்ற தஞ்சைப் பெரியகோயிலில் 1997-ல் நிகழ்ந்த ஒரு தீவிபத்தில் 50 பேர் உயிரிழந்தனர்.
இப்போதைய களியமேடு துயரம் ஒப்பீட்டளவில் ஆகப்பெரியது இல்லைதான். தேருடன் இணைக்கப்பட்டிருந்த பெரிய கட்-அவுட் ஆபத்தானது என்ற போதிலும் தேரோட்டத்தை அதிகாரிகள் கவனத்தில் கொண்டிருக்கவில்லை என்பது நிதர்சனம். இதுவோர் சிறிய விழா; ஆனால் ஏற்பட்டிருக்கும் பாதிப்போ பெரியது. இந்தச் சோகநிகழ்விற்கு உள்ளூர்க் காவல்துறையை அரசு கேள்வி கேட்டே ஆகவேண்டும். ஏனென்றால் முன்கூட்டியே திட்டமிடப்படும் இந்தமாதிரி நிகழ்வுகள் காவலர்களின் கவனத்திற்கு வந்திருக்க வேண்டும். மேலும் தேரோட்டத்தின் போது மின்சார இடைநிறுத்தம் செய்யாத மின்துறை அதிகாரிகளையும் இந்த அவலநிகழ்வுக்குப் பொறுப்பாக்க வேண்டும்.
மதஸ்தலங்களில் கூடும் பெருங்கூட்டங்களில் இருக்கும் தெளிவான ஆபத்துகளை மனதில் வைத்துக்கொண்டு, மாநிலஅரசு அபாயம் குறைக்கும் ஒரு கட்டமைப்பை வடிவமைத்திருக்கிறதா என்ற ஓர் அடிப்படைக் கேள்வி அரசின் முன்பு வைக்கப்படுகிறது. தேசிய குற்ற ஆவணக் காப்பகம் கோவிட்டுக்கு முன்பான 2019-ஆம் ஆண்டில் ‘மதஸ்தலங்களுக்கு அருகே’ நடந்த சாலை விபத்துகளில் 4,309 மரணங்களையும், 13,612 பேர் காயம் அடைந்ததையும் பட்டியலிட்டிருக்கிறது. மதஸ்தலங்களைச் சுற்றியுள்ள சாலைகளில் பாதுகாப்பு அம்சத்தின்மீது கவனம் குவிக்க வேண்டிய அவசியம் இதன்மூலம் புரிகிறது.
இறந்துபோனவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ. எட்டு லட்சம் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த எட்டு இலட்சத்தில் மாநில அரசுப்பங்கு ரூ. 5 இலட்சமும், பிரதமர் கொடுக்கும் ரூ. 2 இலட்சமும், அஇஅதிமுகவின் பங்கு ரூ. 1 இலட்சமும் அடங்கும்.
மேலும் கூட்டநெரிசல் தள்ளுமுள்ளு, நெருப்பு, நீரில் மூழ்குதல் ஆகிய அபாயங்களும் இருக்கின்றன. இதற்கு இணையாக தமிழ்நாட்டின் ஆகப்பெரிய நகர்ப்புறமயமான நிலஅமைப்பு மேலும் மேலும் மக்கள்தொகைப் பெருக்கத்திற்கு ஆளாகிக் கொண்டிருக்கிறது. அதனால் நகர்ப்புற இடங்களில் பொதிந்திருக்கும் ஆபத்துகளும் பெருகுகின்றன.
ஆனால் தொடர்ந்துவந்த அரசுகளும், காவல்துறை உட்பட எல்லா அதிகார மையங்களும் மதத்தின் பெயரால் நடக்கும் ஆக்ரமிப்புகளைக் கண்டுகொள்வதில்லை. மின்சார உட்கட்டமைப்போடு மோதும், பெருவாரியான மக்களை ஈர்க்கும் உள்ளூர் விழாக்களையும் அவர்கள் கண்டுகொள்வதில்லை. தெருவோரத்து மதக்கட்டுமானங்களில் கட்-அவுட்டுகளுக்காக நடக்கும் மின்சாரத் திருட்டை அவர்கள் மெளனமாக அனுமதிக்கிறார்கள். இந்த மாதிரியான ஜனரஞ்சகக் கொள்கை ஆபத்தானது என்று பல விபத்துகள் நிரூபித்திருக்கின்றன.
தொடர்ந்துவந்த அரசுகளும், காவல்துறை உட்பட எல்லா அதிகார மையங்களும் மதத்தின் பெயரால் நடக்கும் ஆக்ரமிப்புகளைக் கண்டுகொள்வதில்லை. மின்சார உட்கட்டமைப்போடு மோதும் பெருவாரியான மக்களை ஈர்க்கும் உள்ளூர் விழாக்களும் கண்டுகொள்ளப்படுவதில்லை. தெருவோரத்து மதக்கட்டுமானங்களில் கட்-அவுட்டுகளுக்காக நடக்கும் மின்சாரத் திருட்டு மெளனமாக அனுமதிக்கப்படுகிறது.
மதத்தின் பெயரால் நிகழும் ஆக்ரமிப்புகளைக் கண்டுகொள்ளாமல் விடும் விட்டேத்தியான மனப்பான்மைக்காக அரசுகளை உச்சநீதிமன்றமும், உயர்நீதி மன்றங்களும் கடிந்திருக்கின்றன. 2016-ஆம் ஆண்டு தீர்ப்பு ஒன்றில், உச்சநீதிமன்றம் அந்தமாதிரியான சட்டத்திற்குப் புறம்பான கட்டுமானங்களைக் ’கடவுளுக்கு அவமானம்’ என்று அழைத்திருக்கிறது. ஆனால் அரசியல் கட்சிகள் பொதுவெளி ஆக்ரமிப்புகளை அனுமதிப்பது என்னமோ ஒரு பெரிய ஒழுக்கமாகப் பார்க்கின்றன. இப்படிப்பட்ட தனியார் சுதந்திரம் பேணும் ஆட்சிமுறை, கட்டுப்படுத்தப்படாத, உயிரைக்கூட காவுகொள்ளும் மதம்சார்ந்த விழாக்கொண்டாட்டங்களை வளரவிட்டிருக்கிறது.
தஞ்சாவூரில் இன்று நடந்த அவலமரண நிகழ்வு, ஜனங்களைத் திருப்தி செய்யும் கொள்கையை விட பொதுமக்கள் பாதுகாப்புக்கு அதிகமுன்னுரிமை கொடுக்க தமிழக அரசைத் தூண்டிவிட வேண்டும். விஞ்ஞானரீதியிலான ஆபத்து குறைக்கும் நடைமுறை விதிகளைக் கடைப்பிடித்தால் மட்டுமே மதச்சடங்குக் கூட்டங்கள் அனுமதிக்கப்படும் என்று அரசைக் கறாராக ஆணையிட வைக்கட்டும் இந்தத் தஞ்சாவூர் துயரநிகழ்வு. அந்த நடைமுறை விதிகளை வலியுறுத்துவதில் அதிகாரிகளுக்கும் பெரும்பங்கு உண்டு.
Read in : English