Read in : English

அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்த மாணவி கே. ரோஜா (28) தற்போது சென்னை லயோலா கல்லூரியில் பிளாண்ட பயாலஜி அண்ட் பயோ டெக்னாலஜி துறையில் பிஎச்டி ஆய்வுப் பட்டப் படிப்பைப் படித்து வருகிறார். இருளர் பழங்குடியினரில் பிஎச்டி பட்டப் படிப்பில் சேர்ந்து படிக்கும் முதல் பெண் இவர்தான்.

இருளர் பழங்குடியினரில் ஏற்கெனவே பிஎச்டி பட்டம் பெற்றவர் சாலையம்பாளையத்தைச் சேர்ந்த த.சக்திவேல். விழுப்புரம் மாவட்டத்தில் செங்கல் சூளை தொழிலாளர்களின் நிலைமை குறித்து ஆய்வு செய்து பொருளாதாரத்தில் பிஎச்டி பட்டம் பெற்றவர் அவர்.

பழங்குடி இனத்தைச் சேர்ந்த, ஏழைக் குடும்பத்தில் பிறந்த ரோஜா பிஎச்டி ஆய்வுப் படிப்பு வரை படிக்க வந்துள்ளது குறித்த தனது வாழ்க்கைக் கதையை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்துள்ள மரூர் கிராமத்தில் பிறந்தேன். Ðபரம்பரை பரம்பரையாகப் பள்ளிக்கூடத்தையே எட்டிப் பார்க்காத குடும்பம் என்னுடையது. அவரது அப்பா கலிவரதனும் அம்மா குமாரியும் பள்ளிப் படிப்பைக்கூட படிக்கவில்லை. அந்த அளவுக்குக் குடும்பம் ஏழ்மை நிலையில் இருந்தது. இருவருக்கும் செங்கல் சூளையில்தான் வேலை. அந்த வருமானத்தில்தான் எனது தம்பி தங்கைகளையும் சேர்த்து ஐந்து பேர் கொண்ட குடும்பம் நடக்க வேண்டும்.

இந்த அளவுக்கு சிரமமான சூழ்நிலையில், Ñமரூரில் உள்ள அரசுத் தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை பாட்டி வீட்டில் தங்கிப் படித்தேன். பள்ளி ஆசிரியைகள் வளர்மதியும் வசந்தியும் நான் படிப்பதற்கு ஊக்களித்து வந்தார்கள். எப்படியாவது நன்றாகப் படித்து நல்ல வேலைக்குப் போக வேண்டும் என்று சொல்லி அந்த சின்ன வயதிலேயே என்னைப் படிக்கத் தூண்டியவர்கள் அவர்கள்.

ஐந்தாவது படித்து முடித்தும், ஆறாவது படிக்க மரூரிலிருந்த 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ரெட்டணை கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளிக்குச் செல்ல வேண்டும். எனது படிப்பு அத்துடன் தடைப்பட்டு விடுமோ என்று நினைத்தேன். ஆனால், என்னைத் தொடர்ந்து படிக்க வைத்தார்கள். சொந்த ஊரிலிருந்து காலையில் 7 மணிக்குப் பஸ்ஸில் போய்விட்டு மாலையில் 6 மணிக்கு பஸ்ஸில் திரும்பி வர வேண்டும். பள்ளிப் படிப்பு முழுக்க தமிழ் வழியில்தான் படித்தேன். 2008ஆம் ஆண்டில் எஸ்எஸ்எல்சி தேர்வை எழுதி, அதில் 500க்கு 275 மதிப்பெண்கள் பெற்றேன். எனக்கு தாவரவியல் பாடத்தில் ஆர்வம் அதிகம். எனவே, பிளஸ் ஒன் வகுப்பில் தாவரவியல், விலங்கியல், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்தேன். 2013இல் நடைபெற்ற பிளஸ் டூ தேர்வில் 1200க்கு 772 மதிப்பெண்கள் பெற்றேன்.

பேராசிரியர் கல்யாணி சாரின் கடும் முயற்சிக்குப் பிறகுதான் எனக்கு பழங்குடியினருக்கான சாதிச் சான்றிதழ் கிடைத்தது. அதனால் எனக்கு இரண்டாம் ஆண்டிலிருந்து கல்வி உதவித் தொகை கிடைத்தது. அதனால் கல்லூரியில் தொடர்ந்து படிக்க முடிந்தது.

பிளஸ் டூ முடித்து விட்டு விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசுக் கல்லூரியில் பிஎஸ்சி தாவரவியல் படிப்பில் சேர விணப்பித்தேன். எனக்கு பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் கிடைக்கவில்லை. சாதிச் சான்றிதழ் கிடைத்தால்தான் எனக்கு கல்வி உதவித் தொகை கிடைக்கும். அந்த சூழ்நிலையில் கல்லூரி முதல்வர் எனக்கு, பிஸ்சி தாவரவியல் படிப்பில் இடம் கொடுத்தார். அரசுக் கல்லூரி விடுதியில் தங்கிப் படித்தேன்.

பேராசிரியர் கல்யாணி சாரின் கடும் முயற்சிக்குப் பிறகுதான் எனக்கு பழங்குடியினருக்கான சாதிச் சான்றிதழ் கிடைத்தது. அதனால் எனக்கு இரண்டாம் ஆண்டிலிருந்து கல்வி உதவித் தொகை கிடைத்தது. அதனால் கல்லூரியில் தொடர்ந்து படிக்க முடிந்தது.

கல்லூரியில் இங்கிலீஷ் மீடியம் என்றாலும் தேர்வுகளைத் தமிழில் எழுத அனுமதித்தார்கள். அதனால் எனக்குப் படிப்பதில் பிரச்சினை இல்லை. 2013இல் பிஎஸ்சி பட்டப் படிப்பில் 62 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றேன். அதையடுத்து, முதுநிலைப் பட்டப் படிப்பில் சேர்ந்து படிக்க வேண்டும் என்று விரும்பினேன். குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை அதற்கு இடம் கொடுக்கவில்லை.

எம்எஸ்சி படிப்பில் 82 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றேன். எங்களது கல்லூரியில் எங்களது பாடப்பிரிவில் நான்தான் முதல் மாணவி.

எனவே, பெருந்துறையில் உள்ள சாயநூல் கம்பெனியில் லேப் டெக்னிஷியனாகப் போய் சேர்ந்தேன். மாதம் ரூ.12 ஆயிரம் சம்பளம். எனது சாப்பாட்டுக்கும் வீட்டுக்கும் கொடுத்தது போக மீதம் உள்ள பணத்தைச் சேர்த்து வைத்தேன். எப்படியும் தொடர்ந்து படிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். ஒராண்டு சேர்த்த அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு 2015ஆம் ஆண்டில் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் எம்எஸ்சி தாவரவியல் படிப்பில் சேர்ந்தேன். எம்எஸ்சி படிப்பும் ஆங்கில வழியில்தான். ஆங்கில வழியில் தேர்வு எழுத வேண்டும். பாடங்கள் புரிந்தாலும்கூட, ஆங்கிலத்தில் எழுதுவற்கு படாதபாடுபட்டேன். ஆனால் அரியர்ஸ் எதுவும் வைக்கவில்லை. கொஞ்ச நாள் சிரமமாக இருந்தது. அப்புறம் என்னை தயார்படுத்திக் கொண்டு படித்தேன். எம்எஸ்சி படிப்பில் 82 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றேன். எங்களது கல்லூரியில் எங்களது பாடப்பிரிவில் நான்தான் முதல் மாணவி.

அதைத் தொடர்ந்து பலரது உதவியுடன் 2017இல் சென்னை மாநிலக் கல்லூரியில் எம்பில் படிப்பில் சேர்ந்து படித்தன். அங்கு Ethnobotanical study on Irulas Community of Vettavalam hills of Thiruvannamalai District, Tamilnadu என்ற தலைப்பில் ஆய்வை மேற்கொண்டேன்.

படிப்பை அத்துடன் விட்டுவிடக்கூடாது. பிஎச்டி படிக்க வேண்டும் என்று நினைத்தேன். தற்போது லயோலா கல்லூரியில் பிளாண்ட பயாலஜி அண்ட் பயோ டெக்னாலஜி துறையில் பிஎச்டி படித்து வருகிறேன். எனது ஆய்வுத் தலைப்பு: Antidiabetic and Antilipidemic activity of medicinal plants in invitro , invivo and insilico methods. .பேராசிரியர் அகஸ்தியன் மேற்பார்வையில் பிஎச்டி ஆய்வை மேற்கொண்டு வருகிறேன்.

கல்வி உதவித் தொகை வழங்குவதற்காக அகில இந்திய அளவில் பல்கலைக்கழக மானியக் குழு நடத்திய தேர்வை எழுதிய 750 பேரில் 24வதாகத் தகுதி பெற்றேன். எனவே, எனக்கு தற்போது பல்கலைக்கழக மானியக் குழு வழங்கும் ஃபெல்லோஷிப் மாதம் ரூ.38 ஆயிரம் கிடைத்து வருகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் பிஎச்டி ஆய்வை முடித்து விடுவேன். அப்புறம் கல்லூரியில் வேலைக்குச் சேர வேண்டும். அல்லது ஆய்வு நிலையங்களில் வேலைக்குச் சேர வேண்டும். அடுத்து என்ன என்பது பற்றி தீவிரமாக யோசிக்கவில்லை. முதலில் பிஎச்டி ஆய்வுப் படிப்பை நன்றாக முடிக்க வேண்டும் என்பதுதான் முதல் நோக்கம் என்கிறார் ரோஜா.

Share the Article

Read in : English

Why we always find lots of cashews on top of Deepavali mixture why tangedco need to pay us for damaging household appliances why eating on banana leaves is healthier What the Tamil Nadu Organic policy needs what is the real story of onam festival